சுக்கிர தசை சுமார் 20 ஆண்டுகள் நடக்கும். பொதுவாக சுக்கிர தசையில் அனைவருக்கும் நல்ல பலன்களே நடக்கும். சுக்கிரன் நீசமானவர்கள் மட்டும் பரிகாரங்கள் செய்வதன்மூலம் நல்ல பலன்களை அடையலாம்.
1. சுக்கிர தசையில் சுக்கிர புக்தி
இந்த காலகட்டத்தில் நல்ல ஆபரணங்கள், உயர்ரக வாகனங்கள் சேரும். மரியாதை கிட்டும். இதுவரையுள்ள துன்பம் நீங்கி இன்பம் பெருகும். பொருட்களின் சேர்க்கை ஏற்படும். ஐப்பசி மாதத்தில் வம்சத்தில் துக்கம் உண்டாகும் நிலையும் ஏற்படும்.
2. சுக்கிர தசையில் சூரிய புக்தி
துன்பமும், தனக்குறைவும், அரசாங்கத்த
சுக்கிர தசை சுமார் 20 ஆண்டுகள் நடக்கும். பொதுவாக சுக்கிர தசையில் அனைவருக்கும் நல்ல பலன்களே நடக்கும். சுக்கிரன் நீசமானவர்கள் மட்டும் பரிகாரங்கள் செய்வதன்மூலம் நல்ல பலன்களை அடையலாம்.
1. சுக்கிர தசையில் சுக்கிர புக்தி
இந்த காலகட்டத்தில் நல்ல ஆபரணங்கள், உயர்ரக வாகனங்கள் சேரும். மரியாதை கிட்டும். இதுவரையுள்ள துன்பம் நீங்கி இன்பம் பெருகும். பொருட்களின் சேர்க்கை ஏற்படும். ஐப்பசி மாதத்தில் வம்சத்தில் துக்கம் உண்டாகும் நிலையும் ஏற்படும்.
2. சுக்கிர தசையில் சூரிய புக்தி
துன்பமும், தனக்குறைவும், அரசாங்கத்துடன் பகையும், மனைவி, மக்கள் பிரிவும், பலருடன் வழக்கும், தெய்வ விரோதமும், உற்றார் பகையும் உண்டாகும். எனவே கவனமாக நடந்துகொள்ளவேண்டும்.
3. சுக்கிர தசையில் சந்திர புக்தி
நினைத்த காரியங்கள் கைகூடும். மகிழ்ச்சி நிறைந் திருக்கும். இன்பந்தரும் பெண் களுடன் சேர்க்கை உண்டாகும். இதனால் மனையாளுடன் வெறுப்பு ஏற்படும். எனவே ஏகபத் தினி விரதனாய் இருப்பது நல்லது. ஒன்பது திங்கள்கிழமை விரத மிருந்து வர நன்மை உண்டாகும்.
4. சுக்கிர தசையில் செவ்வாய் புக்தி
நினைத்தபடி பூமி லாபம் அமையும். பெண்களால் இழப்பு வரலாம். இஷ்ட தேவதையைப் பூஜிப்பர். இருவர் மூலம் பகை யுண்டாகும். கண் அல்லது சரீரத்தில் நோய்கள் உண்டாகி விலகும்.
5. சுக்கிர தசையில் ராகு புக்தி
இந்த புக்தியில் முனிவரைப் போன்று தவம் செய்தலும், புத்திரர்களால் அதிக கலகம் உண்டாதலும், மருந்து சாப்பிடுவதால் பித்தம் தலைக்கேறி அங்குமிங்கும் அலைவதும் நடை பெறும். பின்பு விலகும்.
6. சுக்கிர தசையில் குரு புக்தி
தானியம் போன்றவற்றால் லாபம் கிட்டும். பிராமணர்களால் மிக வசதியுண்டாகும். ரேவதி, உத்திர நட்சத்திரக் காலங்களில் வருத்தம் உண்டாதலும் நடைபெறும்.
7. சுக்கிர தசையில் சனி புக்தி
மூல நோயினால் கை, கால் உபாதைகளும், பின்னர் அந்த நோயிலிலிருந்து மீளுதலும் நடக்கும். உணவைக் கண்டால் விஷம்போல வெறுக்குமளவு அன்ன துவேஷம் உண்டாகும்.
8. சுக்கிர தசையில் புதன் புக்தி
மனைவி, மக்களால் சிறப்பு கிட்டும். பொருள் உண்டாகும். கல்வி, ஞானம் சிறக்கும். பாடும் திறமை கூடும். சிவந்த நிறமுள்ளவரால் பல நன்மைகள் உண்டாகும் காலம்.
9. சுக்கிர தசையில் கேது புக்தி
இந்த காலகட்டத்தில் துஷ்ட மிருகத்தால் துன்பம் உண்டாகும். மனைவிக்கு நோய் உண்டாகும். வீட்டில் விஷம் தீண்டி மீளநேரும்.
பரிகாரம்- 1
சுக்கிர தசையில் சுக்கிரன் நீசமானால், நாய்க்கடி மற்றும் துஷ்ட மிருகத் தாக்குதலிலிருந்து காப்பாற்றிக்கொள்ள சுக்கிர பகவான் கவசம் சொல்ல வேண்டும்.
"சுக்கிர மூர்த்தி சுபமிக யீவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க் கருளே'
என்று தினசரி சொல்லிவர மேற்கண்ட துன்பம் நீங்கும் சுகம் பெருகும்.
பரிகாரம்- 2
சுக்கிரன் நீசமாகி இருப் பவர்கள் 27 வெள்ளை மொச் சைப் பயறு எடுத்து வெள் ளைத்துணியில் முடிந்து, அவரவர் தலையணையில் வைத்துத் தைத்து படுத்து றங்க வேண்டும்.
செல்: 94871 68174