விஷ கண்ட தோஷம் தீர்க்கும் எளிய பரிகாரங்கள் -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்

/idhalgal/balajothidam/simple-remedies-poisoning

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்'.

மனிதப் பிறவியில் ஒழுக்கம் எந்த அளவுக்குப் பேணப்பட வேண்டுமென்று அய்யன் திருவள்ளுவர் மேற்கண்ட குறளில் அறிவுறுத்தியுள்ளார். சில மனிதர்கள் அந்த நியதியிலிருந்து விலகி, ஒழுக்கமின்றி வாழ்கின்றனர். இப்படிப் பட்டவர்களின் ஜாதகம் எத்தகையது என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்குரிய கிரகத்துடன், 6-ஆம் வீட்டிற்குரிய கிரகமும், சுக்கிரனும் சேர்ந்து காணப்பட்டால், அவர் ஒழுக்கக் கேடுடையவராக வாழ்வார். அவரு

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்'.

மனிதப் பிறவியில் ஒழுக்கம் எந்த அளவுக்குப் பேணப்பட வேண்டுமென்று அய்யன் திருவள்ளுவர் மேற்கண்ட குறளில் அறிவுறுத்தியுள்ளார். சில மனிதர்கள் அந்த நியதியிலிருந்து விலகி, ஒழுக்கமின்றி வாழ்கின்றனர். இப்படிப் பட்டவர்களின் ஜாதகம் எத்தகையது என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்குரிய கிரகத்துடன், 6-ஆம் வீட்டிற்குரிய கிரகமும், சுக்கிரனும் சேர்ந்து காணப்பட்டால், அவர் ஒழுக்கக் கேடுடையவராக வாழ்வார். அவருக்கு அந்த தசையோ, புக்தியோ, அந்தரமோ நடக்கும் போது, ஒழுக்கக் கேட்டிற்கு ஒத்துழைக்கும் பெண்களால் ஆபத்து ஏற்படும். மேலும் அந்த கிரகங்களுடன் ராகு- கேது கூடினால் அவர் விஷ ஜந்துகளால் ஆபத்தை அடைவார். அதாவது சர்ப்ப தோஷத்தை அடைகிறார். இரண்டா மிடத்தில் சூரியன் இருந்தாலும், பார்த்தாலும், இரண்டாமிடம் சூரியனின் வீடாக இருந்தாலும் அவர் விஷத்தால் பீடையை அடைவார். அதாவது அந்த ஜாதகர் விஷ தோஷத்தை அடைகிறார். இவ்வாறு ஜாதகம் அமையப்பெற்றவர்களுக்கு ஒழுக்கக்கேட்டிற்கு ஒத்துழைக்கும் பெண்களால் ஆபத்து வரும் என்பதை அறியவேண்டும். (மனைவியால் ஆபத்து வராது).

ss

பெண்களாலும், விஷத்தாலும், சர்ப்பத்தாலும் பீடையை அடையும் அமைப்புடைய ஜாதகர்கள் தங்கள் தோஷம் மாற கீழ்க்கண்ட எளிய பரிகாரங்களைச் செய்து தோஷநிவர்த்தி பெற்று நிம்மதியாக வாழலாம்.

பரிகாரம்- 1

மேற்சொன்னபடி ஜாதகம் அமையப்பெற்ற ஆண்களை மணம் முடித்துக்கொண்ட பெண்கள் தீர்க்கசுமங்கலிலியாக வாழ்ந்திடவும், கணவருக்குப் பிற பெண்களாலோ, விஷத்தாலோ, விஷ ஜந்துகளாலோ தோஷம் வராமல் இருக்கவும், பீடை அகன்றிடவும்- சர்வ வல்லமை படைத்தவரும், இல்லம் சீர்பெற பெரும் உதவிபுரிபவருமான ஆஞ்சனேயரை சரணடையவேண்டும்.

27 சனிக்கிழமைகள் தொடர்ந்து ஆஞ்சனேயரை தரிசித்து, மஞ்சள் திரியிட்டு விளக்கேற்றுப வர்களுக்கு, மேற்கண்ட தோஷத் தால் ஏற்படும் பீடை விலகும். வெளியூர் சென்றிருந்தால் அந்த ஊரிலுள்ள ஆஞ்ச னேயருக்கு விளக்கேற்றலாம். (பெண்களுக்கு தொடர்ந்து எப்படி 27 வாரம் விளக்கேற்ற முடியுமென்ற சந்தேகம் வரும்.

அவ்வாறான காலகட்டத்தில் அவர்கள் பிள்ளைகளோ, குடும்பத் திலுள்ள மற்ற உறுப்பினர்களோ விளக்கேற்றலாம்). ஆஞ்சனேயர் தரிசனம் ஒழுக்கத்தையும், விஷ ஜந்து பீடையையும், சர்ப்ப தோஷத் தையும் மாற்றிவிடும்.

பரிகாரம்- 2

திருமணமாகாத பத்து வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக் காக, அவர்களது பெற்றோர் ஆஞ்சனேயருக்கு தொடர்ந்து 27 வாரத்திற்கு மஞ்சள் திரிபோட்டு நெய் விளக்கேற்றிவர தோஷம் மாறும். ஒழுக்கக் கேடும் வராது.

பரிகாரம்-3

ஆலயம் சென்று தரிசிக்க முடியாதவர்கள்,

"ஓம் ரீம் ராம் ராம் ஆஞ்சநேய ராம் ராம்

மம சர்வ சத்துரு சங்கட நாசய நாசய

ராம் ராம் ஸ்ரீம் ஓம்'

என்னும் துதியை தினமும் காலையில் ஒரேநேரத்தில் ஒன்பது முறை பாராயணம் செய்துவர நன்மைகள் கிடைக்கும்.

செல்: 94871 68174

bala270320
இதையும் படியுங்கள்
Subscribe