வாழ்க்கையென்பது ஒரு நதியின் ஓட்டத்தைப் போன்று, திட்டமிடமுடியாத ஒன்று. அதேசமயம் ஒரு எதிர்பார்ப்பை நோக்கிய பயணம் என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்தப் பயணத்தில் உழைப்பும் ஊதியமும் உடன்பிறந்த பிறவிகள். உழைத்தால் மட்டுமே ஊதியம் கிடைக்கும். சிறிய முயற்சியில் அதிக வருமானம் பெறுபவர்களும் உண்டு. கடுமையாகப் பாடுபட்டு சொற்ப ஊதியம் பெறுபவர்களும் உண்டு. எல்லாம் விதித்தபடிதான் நடக்குமென்ற பொதுவான கருத்திருந்தாலும், விதியை மதியால் வெல்லமுடியும் என்னும் சூட்சுமமும் உலகை ஆண்டுகொண்டுதானே இருக்கிறது!
ஒருசிலரின் வாழ்க்கைப் படைப்பு, கடவுளின் நேரடி கண்காணிப்பில் இருப்பதுபோல் தோன்றும். ஏ.டி.எம் மெஷின்போல் பணம் கொட்டும். இவர்களது படைப்பில் வேறு ஏதோவொரு கூடுதல் விசேஷம் இருப்பதுபோன்ற மாயை இருக்கும். இவை ஒருபுறம் இருந்தாலும், பலருக்கு நாள் முழுவதும் உழைத்தும் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்யமுடியாத சூழல் நிலவும். சில குடும்பங்களில் பணத்தின் சுவடே தெரியாது. இவர்களைப் பார்க்கும்போது ஜோதிடம் இவர்களுக்கு பலிக்குமா? பலிக்காதா? இவர்களுக்கு எந்த கிரகமும் நன்மை செய்யாதா என்ற கேள்வி எழும். எது எப்படியிருந்தாலும் குறைந்த உழைப்பில் அதிக வருமானம் பெறுவதே அனைவரின் விருப்பமாகும்.
ஜோதிட ரீதியாக குறைந்த உழைப்பில் அதிக வருமானம் பெறுபவர் யார்? அதிக உழைப்பில் குறைந்த வருமானம் கிடைப்பது யாருக்கு? அதிக வருமானம் பெறுவதற்கான எளிமை யான பரிகாரங்கள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
தர்மகர்மாதிபதி யோகம்
ஜோதிட சாஸ்திரத்தில் பலவிதமான யோகங்கள் கூறப்பட்டுள்ளன. அதில் ஒரு மனிதன் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றுவாழ முதல்தரமான யோகமாகக் கூறப்பட்டிருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். காலபுருஷ தத்துவப்படி, காலபுருஷ லக்னம் மேஷமாகும். அதற்கு ஒன்பதாம் வீடான தனுசு தர்ம ராசியாகும்.
பத்தாம் வீடான மகரம் கர்ம ராசியாகும்.
காலபுருஷ ஒன்பதாமதிபதி, தர்மாதிபதி யான குருவுக்கும் கர்மாதிபதியான சனிக்கும் எந்த வகையில் சம்பந்தம் இர

காலபுருஷ ஒன்பதாமதிபதி, தர்மாதிபதி யான குருவுக்கும் கர்மாதிபதியான சனிக்கும் எந்த வகையில் சம்பந்தம் இருந்தாலும் அது தர்மகர்மாதிபதி யோகமாகும். குரு, சனி சம்பந்தமென்பது முன்ஜென்மத்தில் செய்த பாவ- புண்ணியங்களின் அடிப்படையில் ஏற்படுவதாகும்.
தர்மம் என்றால், ஒருவர் தனது செய்கை யால் தன் குடும்பத்தினருக்கும், தன் சந்ததி யினருக்கும், தன் தலைமுறையினருக்கும் சேர்த்துவைக்கும் பாவ- புண்ணியங்கள். கர்மம் என்றால் தான் செய்த, செய்யும் தொழில்மூலம் தன் வாரிசுகளுக்கும், தன் தலைமுறையினருக்கும் சேர்த்துவைக்கும் பாவ- புண்ணியங்கள்.
ஒருவருக்கு இந்த கிரக இணைவால் வாழ்நாள் முழுவதும் புண்ணியப் பலன்கள் கிடைக்க ஜனனகால ஜாதகத்தில் குருவும் சனியும் சுப வலிமை பெறவேண்டும். நீசம், வக்ரம், அஸ்தமனமாகாமல் இருப்பதோடு "அஷ்டம, பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெறாமல் இருக்கவேண்டும். இவ்வாறு இருந்தால் நூறு சதவிகிதம் சுபத்தன்மை யுடன் வரமாக செயல்படும். இந்த கிரகச் சேர்க்கை இருப்பவர்களின் குடும்பமே கஷ்டப்பட்டாலும், ஜாதகர் மட்டும் எப்படி யும் நல்ல நிலைமைக்கு வந்துவிடுவார்.
ஜனனகால ஜாதகத்தில் குருவும் சனியும் அஷ்டம பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெற்றாலும், நீசம், அஸ்தமனம், வக்ரம் பெற்றாலும், இந்த கிரக இணைவு அசுபத் தன்மையோடு சாபமாக- பிரம்மஹத்தி தோஷமாக செயல்படும். இவர்களுக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதைப் பயன்படுத்த முடியாது.
இதில் குரு, சனி சேர்க்கை மற்றும் சமசப்தமப் பார்வை நூறு சதவிகித நற்பலன் தரும். சனி மட்டும் குருவைப் பார்ப்பதும், குரு மட்டும் சனியைப் பார்ப்பது ஐம்பது சதவிகிதப் பலன் தரும். குரு, சனி சேர்க்கையை செவ்வாய் பார்த்தாலும் அல்லது சேர்ந்தாலும், அந்த நபர் எவ்வளவு சம்பாதித்தாலும் தங்காது.
அல்லது உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது. வாழ்க்கை ஒரு போராட்ட மாக இருக்கும். மன உளைச்சல் அதிகமாகிக் கொண்டே இருக்கும்.
ஒரு ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகம் சுபத் தன்மையோடு செயல்பட்டால், சிறிய உழைப்பில் பெரும்பொருள் சேரும். அசுபத் தன்மையோடு செயல்பட்டால் சிறிய பொருளுக்கு அதிகம் உழைக்கநேரும்.
தர்மகர்மாதிபதி யோகம் மிகுந்த சுபத் தன்மையுடன் இயங்கினால், தனது உழைப்பிற் குக் கிடைக்கும் வெகுமதியைக்கூட கௌரவம் கருதி வாங்க மறுப்பவர்கள் உண்டு.
பரிகாரம்
ஜனனகால ஜாதகரீதியாக குரு, சனி சம்பந்த மானது அஷ்டம பாதக ஸ்தானத்தோடு இணைந்து மிகுதியான பொருள் பற்றாக்குறையை அனுபவிப்பவர்கள் அல்லது குரு, சனி சம்பந்தம் இல்லாமையால் உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாதவர்கள் வியாழக்கிழமை இரவு 7.00-8.00 மணிவரையிலான சனி ஓரையில் காலபைரவ அஷ்டகம் படித்துவர, உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
பரிவர்த்தனை யோகம்
இரண்டு கிரகங்கள் தங்கள் வீடுகளை மாற்றி அமர்ந்திருந்தால் அது பரிவர்த்தனை யோகமாகும். உதாரணமாக, ரிஷப ராசிக்கு அதிபதியான சுக்கிரன் கடகத்திலும், கடக ராசியின் அதிபதியான சந்திரன் ரிஷபத்திலும் இருந்தால் பரிவர்த்தனை. கன்னி ராசிக்குரிய புதன் சுக்கிரனுக்குரிய வீடான துலாத்தில் இருந்து, துலாத்துக்குரிய சுக்கிரன் கன்னியில் இருந்தால் பரிவர்த்தனை.
இப்படி கிரகங்கள் மாறி அமையும் போது, அவற்றின் வலிமையும் மிகுதியாக இருக்கும். அப்படி மாறியமைந்த கிரகங்கள் ஜாதகரின் வாழ்க்கையில் பெரும் மாற்றங் களை நிகழ்த்தும் வலிமை வாய்ந்தவை. சுபகிரகங்கள் பரிவர்த்தனைப் பெற்றிருந் தால் சுபயோகத்தையும், அசுப கிரகங்கள் பரிவர்த்தனை பெறுவது அசுபப் பலன்களையும் தரும்.
பரிவர்த்தனை பெற்ற கிரகங்களில், சுபகிரகங்களான குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள் ஒன்றையொன்று பார்க்கும்போது சுபப் பலனைத் தரும். அசுப கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது, தேய்பிறைச் சந்திரன் ஆகியவை ஒன்றையொன்று பார்க்கும்போது அசுபப் பலன்களையே தருவார்கள். குறிப்பாக செவ்வாய், சனி ஒன்றையொன்று பார்ப்பது, சூரியன், சனி ஒன்றையொன்று பார்ப்பதுபோன்ற அமைப்பிருந்தால் அளவுகடந்த கோபமும் ஆத்திரமும் மிகுந்து, மனம் தவறான வழிகளில் செல்வதால் அதிகம் உழைக்க நேரும்.
1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களுக்குரிய அதிபதிகளில் எவரேனும் இருவர் இடம்மாறி அமர்ந்திருந்தால், ஜாதகர் சொந்த வீடு, நிலபுலன்கள் அமையப்பெற்று செல்வாக் கோடு திகழ்வார்.
2-ம் இடத்தின் அதிபதியும் 11-ம் இடத் தின் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால், ஜாதகருக்கு பல வழிகளிலும் பணம் சேரும். வரும் பணத்தை என்னசெய்வதென்று தெரியாமல் செலவழிப்பார். 2-ஆமிடத்தின் அதிபதியும் 9-ஆமிடத்தின் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால், ஜாதகரை அதிர்ஷ்டம் தேடிவரும். சகல சௌபாக்கியங் களையும் அனுபவிப்பார். மிகுந்த புத்திசாலியாக இருப்பார். இவர்கள் பொதுமக்களின் அபிமானிகளாக இருப்பார்கள்.
லக்னாதிபதியும் 5-ஆமதிபதியும் பரிவர்த்தனை பெற்றால், ஜாதகருக்குப் பெயரும் புகழும் நிலைத்திருக்கும். லக்னாதி பதியும் 10-ஆமதிபதியும் பரிவர்த்தனை பெற்றால், அரசியலில், தொழிலில் புகழ்பெற்றுத் திகழ்வார்கள்.
9-ஆமதிபதியும் 10-ஆமதிபதியும் இடம்மாறி இருந்தால், ஜாதகருக்கு அதிகாரம், புகழ் தேடிவரும். கோவில், கல்வி நிலையங்கள் ஆகியவற்றைக் கட்டி சிறந்தமுறையில் நிர்வகிப்பார்.
3-ஆமிடம் எனும் உபஜெய ஸ்தானத் திற்குரிய கிரகம் 1, 2, 4, 5, 7, 9, 10, 11-ஆம் இடங்களில் இருந்து, அந்த இடங்களுக்குரிய கிரகம் 3-ஆமிடத்தில் இருந்தால், அது சுபப் பலனாக அமையும்.
ஒரு ஜாகத்தில் 9-ஆமதிபதி 9-ல் ஆட்சிபெற்று, 3-ஆமிடத்தில் கிரகங்கள் எதுவும் இல்லாதநிலையில் இருந்தால், அந்த ஜாதகரைவிட அவரது சகோதரரே உயர்ந்தநிலையை அடைகிறார். ஜாதகரும் வீரியம் மிக்கவராகிறார். இதுபோல்தான் 3-ஆமதிபதி 3-ல் ஆட்சிபெற்று, 9-ஆமிடத் தில் கிரகங்கள் எதுவுமில்லாத நிலையில், ஜாதகரே உயர்ந்தநிலையை அடையும் பாக்கியவானாகிறார்.
10-ல் லக்னரீதியான சுபகிரகம் நின்றால்- அது 4-ஆமிடமான சுக ஸ்தானத்தைப் பார்க்கும். 4-ஆமிடத்தை சுபகிரகம் பார்ப்பதால் ஜாதகர் சுகவாசியாக இருப்பார். 10 மற்றும் 4-ஆமிடத்தில் லக்னரீதியான சுபகிரகம் நின்றால், குறைந்த உழைப்பில் நிறைந்த ஊதியம் கிடைக்கும். 4-ஆமிடத் தில் பாவகிரகம் நின்று, 1-ஆமிடத் தைப் பார்த்தால் கடினமாக உழைக்க நேரும்.
2-ஆமதிபதியும் 6-ஆமதிபதியும், 6-ஆமதிபதியும் 11-ஆமதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால், ஜாதகர் தனது செல்வத்தையெல்லாம் இழக்கவேண்டிய நிலை வரும். மறைவு ஸ்தானங்களான 6, 8, 12-ஆம் இடங்களுக்குரிய கிரகங்கள் ஆட்சி, உச்சம்பெற்று பரிவர்த்தனை பெற்றால், கிரகங்கள் பாதிப்புக்குள்ளாகி ஜாதகருக்கு அசுபப் பலன்களை ஏற்படுத்தும்.
பரிகாரம்
கிரகங்களின் பரிவர்த்தனையால் வாழ்வில் முன்னேற்றக் குறைபாட்டை சந்திப்பவர்கள், பொருள்வரவில் தடை இருப்பவர்கள் சனிக்கிழமை காலை 7.00-8.00 மணி வரையிலான குரு ஓரையில் சிவபுராணம் மற்றும் கோளறு பதிகம் படித்துவர, வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.
விபரீத ராஜயோகம்
6, 8, 12-ஆமிடங்களை மறைவு ஸ்தானமென்றும், துர்ஸ்தானமென்றும் சிறப்பற்ற தாகக் கருதுகிறோம். ஆனால் இந்த யோகங் களில் இரு நிலைகள் உள்ளன. ஒன்று- வரம்புக்கு உட்பட்டதாகவும் நம்பும் வகையிலும் அமைகிறது. மற்றொன்றோ வரம்புக்கு மீறியதாகவும் நம்பமுடியாத வகையிலும் அமைகிறது. இந்த இரண்டாவது யோகம்தான் விபரீத ராஜயோகமென கூறப்படுகிறது. 6, 8, 12-க்குடையவர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு ராசியில் அமர்ந்தாலோ அல்லது ஒருவரையொருவர் சமசப்தமமாகப் பார்த்துக்கொண்டாலோ அல்லது ஒருவர் பாதசாரத்தில் மற்றவர் நின்றாலோ இந்த யோகம் முழுமையாக அமைகிறது. இதில் 8-ஆமதிபதி மட்டும் தனித்தே இந்த யோகத்தை வழங்கும் நிலையும் உண்டு.
அதாவது 8-க்குரியவர் 6-ல் நின்றால் அவர் 12-ஆமிடத்தை 7-ஆம் பார்வையாகப் பார்ப்பதால், இந்த மூன்று இடங்களும் இணைக்கப்படுகின்றன. இதேபோல் 8-க்குரியவர் 12-ல் நிற்கும்போதும் இந்த யோகம் முழுமையாக அமைகிறது. இந்த யோகம் பல்வேறு பிரபலமானவர்கள் ஜாதகத்தில் அமைந்திருக்கும்.
பரிகாரம்
ஜனனகால ஜாதகரீதியாக மறைவு ஸ்தானங் களின் அசுப வலிமையால் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் அல்லது போதிய வருமானமில்லாதவர்கள் சனிக்கிழமை காலை 9.00-10.30 மணிவரையிலான ராகு வேளையில் அல்லது ஞாயிறு மாலை 4.30 முதல் 6.00 மணிவரையிலான ராகு வேளையில் ஸ்வர்ணா கர்ஷண பைரவரை வழிபட, தாராளமான தனவரவு உருவாகும்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...