பணி போவதால் பிணி வருகிறதா? பிணி போவதால் பணி வருகிறதா? இந்த கேள்வி ஒவ்வொருவருடைய மனதிலும் இருக்கிறது. படித்து முடித்து பெரிய வேலையில்அமர்ந்து சொகுசாக வாழவேண்டுமென்ற கற்பனையில் மிதந்துகொண்டிருக்கும் இன்றைய இளைய சமுதாயம், அத்தகைய வேலை கிடைக்காதபோது மனம் நொந்து, கிடைத்த வேலையை கடமையே என்று செய்துவருகிறார்கள்.
மேலும் சிலர் கிடைத்த அந்த வேலையைத் தக்கவைப்பதிலும் சிரமப்படுகிறார்கள். அப்படியே தக்கவைத்துக்கொண்டாலும் அதில் வரும் வருமானம் போதாமலே உள்ளது. வேலையும் திருப்தியில்லாமல், சம்பளமும் போதாமல் ஒரு இயந்திர வாழ்க்கை வாழத் தள்ளப்படுகிறார்கள்.
சரி; வேலைதான் சரியாக அமையவில்லை. வாழ்க்கைத் துணையாவது திருப்திகரமாக அமைத்துக்கொள்ளலாம் என்றால் அதற்கும் பலருக்கு தடை வருகிறது. ஏனெனில் நல்ல வேலையில் உள்ள ஒருவரைத்தான் ஒரு பெண்ணோ ஆணோ தேர்ந்தெடுத்து வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள்.
இதிலும் பலர் கிடைத்த வரனை தேர்ந்தெடுத்துக்கொண்டு இயந்திர வாழ்க்கை வாழப் பழகிக்கொள்கிறார்கள். இப்படி இயந்திரமாகத்தான் வாழ வேண்டுமா?
தொழில்
நாம் ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெறுவதே தொழில். நாம் உழைப்பைக் கொடுத்து, ந

நாம் ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெறுவதே தொழில். நாம் உழைப்பைக் கொடுத்து, நம் தேவைகளைப் பூர்த்தி செய்வதற் கான பணத்தைப் பெறுவதே தொழில் என்பதாகும்.
ஒருசிலருக்கு குறைந்த உழைப்பில் நிறை வான சம்பளம். சிலருக்கு நிறைந்த உழைப்பில் குறைவான சம்பளம். ஒருசிலருக்கு உழைப் பிற்கேற்ற ஊதியம். இதில் நாம் எந்த வகையைச் சார்ந்தவர்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
தொழிலில் இரண்டு பிரிவுதான். அதாவது நாம் மற்றவர்களுக்கு வேலை தருகிறோமா அல்லது மற்றவர் சொல்லும் வேலையைச் செய்கிறோமா என்பதுதான். இதை நாம் கண்டிப் பாக அறிந்துகொள்ள வேண்டும். எப்படி யெனில் நாம் நம் ஜாதகக் கட்டத்திலுள்ள கிரக நிலையின் தன்மையை உணர்ந்து, அதற் குண்டான வேலையைச் செய்தால் நம் உழைப் பிற்கேற்ற ஊதியத்தைப் பெறமுடியும்.
சொந்தத் தொழில் செய்பவர்
10-ஆம் அதிபர் பலம்பெற வேண்டும். 10-ஆம் இடத்தை குரு போன்ற சுபகிரகம் பார்க்க வேண்டும். அல்லது 10-ஆம் அதிபதியைகுரு அல்லது சுக்கிரன் பார்க்கவேண்டும்.
10-ஆம் அதிபதி கேந்திர ஸ்தானங்களில் அல்லது திரிகோணத்தில் இருந்தாலும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. 2-ஆம் அதிபதியும், 10-ஆம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் செய்கின்ற தொழில் சிறப்பாக இருக்கும். தொழில் அல்லது கல்விக்கூடம் வைத்தும் பொருள் ஈட்டுவார். 5-ஆம் அதிபரும், 10-ஆம் அதிபரும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் பிள்ளைகள் அல்லது ஆன்மிகத்தின் மூலமாக பணம் சம்பாதிப்பார்.
9-ஆம் அதிபரும், 10-ஆம் அதிபரும் பரிவர்த்தனை பெற்றால் அற்புதமான பலன்கள் உண்டு. 9 என்பது பாக்கிய ஸ்தானம், தந்தை ஸ்தானம். தந்தையாலும் முன்னோர்களாலும் பணம் வரும். மேலும் சிலவற்றை அனுபவிக்கச் செய்வதும் 9#ஆம் இடமே. பணம், பெயர், புகழ், விருதுகள் அமையும் 9#ஆம் இடம் வலுவாக இருப்பவர்கள் அனைத்தையும் அனுபவித்து மகிழ்வார்கள். 10-ஆம் அதிபதி, 11-ஆம் அதிபதி பரிவர்த்தனை, பார்வை பெறுவதும் யோகமே. எந்தத் தொழிலை எடுத்தாலும் லாபம் ஈட்டுவார். மேலும் இவர்களுக்குத் தெரியாத தொழிலில்கூட லாபம் கிடைக்கும்.
நல்ல தசாகாலங்களில் தீயவர் பார்வையின்றி இருப்பின் கண்டிப்பாக சொந்தத் தொழில் செய்து நிறைய பொருளீட்டுவார்கள். 10-ஆம் அதிபர் 3, 6, 8, 12 போன்ற இடங்களில் மறைந்திருந்தால், இவர்கள் யாரிடமாவது வேலை செய்வது சிறப்பு.
பரிகாரம்
பொதுவாகப் பரிகாரம் என்பதை சிலர் நம்ப மறுக்கின்றனர். மேலும் சிலர் பரிகாரத்தைக் கடமையே என்று செய்கின்றனர். மற்றவர்கள் அலட்சியப்படுத்துகின்றனர். பரிகாரம் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு, பின்னர்தான் அதன் பயனைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது நம் ஜாதகக் கட்டத்தில் ஒன்பது கிரகங்கள் 12 ராசிகளில் பரவியுள்ளன. இதில் எந்த கிரகம் பலவீனமாக உள்ளதோ அந்த கிரகத்தை வலிமை கொண்டதாக மாற்ற வேண்டும்.
அப்போது அந்த கிரகம் அதன் வேலையை சிறப்பாகச் செய்யும். பரிகாரம் என்றதும் பெரிய யாகங்கள், ஹோமங்கள் என்று எண்ணவேண்டியதில்லை. கிரகங்களின் மந்திரத்தைச் சொன்னாலே போதும். மந்திரம் நமக்கு வாயில் வராதே என யோசிக்க வேண்டாம். கடவுளின் நாமத்தைச் சொல்வதே மந்திரமாகும். இந்த மந்திரத்தை நாம் சொல்லும்போது- அதாவது கடவுளின் நாமத்தைச் சொல்லும் போது அந்த ஒலியானது காற்றின்மூலம் பிரபஞ் சத்தையடைந்து நமக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கும். வேலையிலோ தொழி-லோ மேன்மையடையலாம்.
சில எளிமையான நவகிரகப் பரிகாரம்
பொதுவாக தொழில் ஸ்தானம் பாதிப் படைவது ஒன்பது கிரகங்களின் அடிப்படையில் தான் வருகிறது. அதையறிந்து அந்தந்த கிரகத்தின் பரிகாரங்களைச் செய்துகொள்ளலாம்.
சூரியப் பரிகாரங்கள்
சிவனை வழிபடுதல். கோதுமை தானம் செய்தல். ஆதித்ய ஹிருதய மந்திரத்தைப் படித்தல். சூரியனார்கோவில் வழிபாடு செய்தல்.
சந்திரப் பரிகாரங்கள்
அரிசி, நெல் தானம் செய்தல். அம்மனை வழிபடுதல். அமாவாசை, பௌர்ணமி நாளில் விரதமிருத்தல். லலிதா சகஸ்ரநாமம் சொல்லுதல்.
செவ்வாய் பரிகாரங்கள்
கந்தசஷ்டிக் கவசம் படித்தல். துவரை தானம் செய்தல். வைத்தீஸ்வரன் கோவில் தரிசனம் செய்தல். சஷ்டி, கிருத்திகை விரதம் அனுஷ்டித்தல்.
புதன் பரிகாரங்கள்
விஷ்ணுவை வழிபாடு செய்தல். விஷ்ணு கவசம் பாராயணம் செய்தல். பச்சைப்பயறு தானம் செய்தல்.
குரு பரிகாரங்கள்
தட்சிணாமூர்த்தியை வழிபடுதல். கொண்டைக்கடலை தானம் செய்தல். குரு கவசம் பாராயணம் செய்தல். திருச்செந்தூர் முருகனை வழிபடுதல்.
சுக்கிரப் பரிகாரங்கள்
மகாலட்சுமியை வழிபடுதல். மொச்சை தானம் செய்தல். சந்திர அஷ்டோத்திரம் படித்தல். ஸ்ரீரங்கநாதரை ஸ்ரீரங்கத்தில் தரிசனம் செய்தல்.
சனி பரிகாரங்கள்
திருநள்ளாறு சென்று மூலவரை தரிசித்தல். எள் தானம் செய்தல். சனி அஷ்டோத்திரம் பாராயணம் செய்தல்.
ராகு பரிகாரங்கள்
திருநாகேஸ்வரம் சென்று ராகுவை வழிபடுதல். உளுந்து, செருப்பு தானம் செய்தல். ராகு அஷ்டோத்திரம் படித்தல்.
கேது பரிகாரங்கள்
விநாயகர், சித்திரகுப்தரை வழிபடுதல். கொள்ளு தானம் செய்தல். விநாயகர் அகவல், கவசம் படித்தல்.
டி. ஜெய்ந்தி
செல்: 98414 12523