Advertisment

கடன், நோய், எதிரி தொல்லை தீர்க்கும் எளிய பரிகாரங்கள்!

/idhalgal/balajothidam/simple-remedies-debt-relief-disease-pandemic

னித வாழ்வில் அன்றாடம் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை சுப நிகழ்வு, அசுப நிகழ்வு என இரண்டாகப் பிரிக்கலாம். ஒருசிலருக்கு சுப நிகழ்வு தொடரும். ஒரு சிலருக்கு அசுப நிகழ்வு தொடரும். இன்னும் சிலருக்கு சுபமும் அசுபமும் பிணைந்த பிணைப்பாக வாழ்க்கை இருக்கும். சுப நிகழ்வு ஏற்படும்போது மனதிற்கு இன்பம் தரும். அசுப நிகழ்வு மனவருத்தம் தருகிறது. சுபத்தை மட்டும் அனுபவிக்க விரும்பும் மனம் அசுபத்தை ஏற்காது. இது மனித இயல்பு.

Advertisment

சிலருடைய வாழ்க்கை நடைமுறையைப் பார்க்கும் போது, இவர்களுடைய ஜாதகத்தில் நவகிரகமும் சுபமாக இருக்குமோ? முக்கியமாக சுப வலிமை பெற்ற கிரகம் மட்டுமே இருக்குமோ? அசுப வலிமை பெற்ற கிரகங்கள் ஜாதகக் கட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டதோ என்று எல்லாரையும் வியக்கவைக்கும். இன்னும் சிலரது வாழ்க்கையைப் பார்க்கும்போது சுப நிகழ்வுகளே கேள்விக்குறியாகும்.

Advertisment

perumal

மிகக்குறிப்பாக, கடன் என்ற ஒரு நிகழ்வு மனித குலத்தையே நடுநடுங்கச் செய்கிறது. ஒருசிலர், "அரசாங்கத்திற்கே கடன் இருக்கிறது! எனக்கு இருந்தால் என்ன?' என்று யதார்த்தமாக வாழ்க்கையை நகர்த்து கிறார்கள். இந்த கடன் மட்டுமா நடுங்கச் செய்கிறது? úôஜதிடத்தில் 6-ஆம் பாவகம் எனப்படும் ருண, ரோக, சத்ரு ஸ்தானம் செய்யும் வேலையும் ந

னித வாழ்வில் அன்றாடம் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை சுப நிகழ்வு, அசுப நிகழ்வு என இரண்டாகப் பிரிக்கலாம். ஒருசிலருக்கு சுப நிகழ்வு தொடரும். ஒரு சிலருக்கு அசுப நிகழ்வு தொடரும். இன்னும் சிலருக்கு சுபமும் அசுபமும் பிணைந்த பிணைப்பாக வாழ்க்கை இருக்கும். சுப நிகழ்வு ஏற்படும்போது மனதிற்கு இன்பம் தரும். அசுப நிகழ்வு மனவருத்தம் தருகிறது. சுபத்தை மட்டும் அனுபவிக்க விரும்பும் மனம் அசுபத்தை ஏற்காது. இது மனித இயல்பு.

Advertisment

சிலருடைய வாழ்க்கை நடைமுறையைப் பார்க்கும் போது, இவர்களுடைய ஜாதகத்தில் நவகிரகமும் சுபமாக இருக்குமோ? முக்கியமாக சுப வலிமை பெற்ற கிரகம் மட்டுமே இருக்குமோ? அசுப வலிமை பெற்ற கிரகங்கள் ஜாதகக் கட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டதோ என்று எல்லாரையும் வியக்கவைக்கும். இன்னும் சிலரது வாழ்க்கையைப் பார்க்கும்போது சுப நிகழ்வுகளே கேள்விக்குறியாகும்.

Advertisment

perumal

மிகக்குறிப்பாக, கடன் என்ற ஒரு நிகழ்வு மனித குலத்தையே நடுநடுங்கச் செய்கிறது. ஒருசிலர், "அரசாங்கத்திற்கே கடன் இருக்கிறது! எனக்கு இருந்தால் என்ன?' என்று யதார்த்தமாக வாழ்க்கையை நகர்த்து கிறார்கள். இந்த கடன் மட்டுமா நடுங்கச் செய்கிறது? úôஜதிடத்தில் 6-ஆம் பாவகம் எனப்படும் ருண, ரோக, சத்ரு ஸ்தானம் செய்யும் வேலையும் நடுங்கவைக்கும் அளவுக்குள்ளது. ருணம் என்றால் கடன், ரோகம் என்றால் நோய், சத்ரு என்றால் எதிரி. காலபகவான் எழுதிவரும்காலக்கணக்கில் ருண, ரோக, சத்ரு ஸ்தான பாவகத்தில் இருப்பு பூஜ்ஜியமாக வரும்வரை பிறவி தொடரும்.

கடன் என்றால் பணத்தால் வரும் கடன் என்று பலர் தவறாக முடிவு செய்கிறார்கள். பிறவிக்கடன்- அதாவது ஊழ்வினையே பிறப்புக்குக் காரணம். உதாரணமாக, இரு நண்பர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் வசதி படைத்தவர். மற்றவர் வசதி குறைந்தவர் என்று வைத்துக்கொள்ளலாம். இரண்டாம் நபர் தன் நண்பரின் எல்லா செயல்களுக்கும் உடனிருந்து உடலுழைப்பைத் தருகிறார்.

முதல் நபர் இரண்டாம் நபரின் உழைப்பை அனுபவித்துவிட்டு அவருக்கு கைம்மாறு செய்யாவிட்டால், அவருடைய கர்மக் கணக்கில் பாவப்பலன் கூடும். இரண்டாம் நபரின் உழைப்பிற்கு ஈடான உதவியை முதல் நபர் செய்யும்வரை இருவருக்கும் பிறவி தொடரும் என்பதே நிதர்சனமான உண்மை. இப்பொழுது அந்த இரண்டு நண்பர்களும் மறுபிறவி எடுக்கும்போது முதல் நபர் தன் கணக்கை நேர்செய்ய தன் உழைப்பை இரண்டாவது நபருக்குக் கொடுக் கும்விதமாகவே பிறப்பு அமையும்.

மனிதர்கள் வாழ்வில் நடக்கும் எந்த செயலும் மூன்றுவிதமாக மட்டுமே இருக்கும். இதை ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தோடு ஒப்பிடுவோம்.

1. குறுகியகாலப் பிரச்சினை.

2. நீண்டகாலப் பிரச்சினை.

3. விட்டுவிட்டு வரும் பிரச்சினை.

ஒருவடைய வாழ்நாளில் நடைபெறும் பிரச்சினைகளில், சில குறிப்பிட்ட காலத்தை மட்டும் வழிநடத்தும்- நீண்ட காலத்தை வழிநடத்தும்- ஏன் வாழ்நாள் முழுவதும் வழிநடத்தும்- விருந்தினர்போல் சிலகாலம் வந்து சரியாகும்- மீண்டும் வரும், சரியாகும் என்று ருண, ரோக, சத்ரு ஸ்தானப் பலன்களை மூன்றுவிதமாகப் பிரிக்க லாம். எதனால் இந்த பாகுபாடு?

ராசிக் கட்டத்தை நம் ஜோதிட முன் னோடிகள் சரம், ஸ்திரம், உபயம் என மூன்று பிரிவாகப் பிரித்திருக்கிறார்கள். (ராசிக்கட்டம் காண்க).

parigaramசரம் என்பது நகரும் தன்மையைக் குறிக்கும். ஸ்திரம் என்பது நிலையாக இருக்கும் தன்மையைக் குறிக்கும். உபயம் என்பது இரு தன்மைகளையும் குறிக்கும்.

ஒரு ஜாதகத்தில் ஒருவருடைய 6-ஆம் அதிபதி சர ராசியுடன் சம்பந்தம் பெறும் போது ருண, ரோக, சத்ரு ஸ்தான இயக்கம் பலம்குறைந்ததாக இருக்கும். வந்த தடமும் இருக்காது; போன தடமும் தெரியாது.

அதாவது 6-ஆம் அதிபதி அல்லது 6-ல் நின்ற கிரகத்தின் தசாபுக்தி, அந்தர காலங்களில் மட்டும் சிறு பாதிப்பு இருக்கும். மற்ற நேரங்களில் எந்த பாதிப்பும் இருக்காது. 6-ஆம் அதிபதி அல்லது 6-ல் நின்ற கிரகம் மேஷம், கடகம், துலாம், மகர ராசிகளுடன் சம்பந்தம் பெறும்போது கடன், நோய்ப் பிரச்சினைகளிலிருந்து எளிதாக விடுதலை கிடைத்துவிடும். இவர்களுடைய ஜாதகத்தில் 1, 5, 9- ஆம் பாவ வலிமையும் சிறப்பாக இருக்கும். 6-ஆம் அதிபதியின் தசையோ அல்லது 6-ல் நின்ற கிரகத்தின் தசையோ வராதபோது வாழ்க்கையில் துன்பம் என்றால் என்னவென்றே தெரியாத அமைப்பினர் பாக் கியசாலிகள். பாதிப்பு இருக்கும் காலங்களில் இஷ்ட, குல, உபாசனை தெய்வ வழிபாட்டுடன் எளிதாகக் காலத்தைக் கடத்திவிடலாம்.

ஒருவருடைய 6-ஆம் அதிபதி அல்லது 6-ல் நின்ற கிரகம் ஸ்திர ராசியுடன் சம்பந் தப்பட்டிருந்தால் வாழ்நாள் முழுவதும் ருண, ரோக, சத்ரு ஸ்தான இயக்கம் இருந்து கொண்டே இருக்கும். இவர்களில் பலர் தவறான முடிவெடுப்பது அல்லது தலை மறைவு வாழ்க்கை வாழ்வது என்று மீள முடியாத துயரத்தில் இருக்கிறார்கள். 6-ஆம் அதிபதி அல்லது 6-ல் நின்ற கிரகம் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்ப ராசியாக இருந்தால் வாழ்நாள் முழுவதும் ருண, ரோக, சத்ரு ஸ்தா னத் தாக்கம் இருந்துகொண்டே இருக்கும்.

இவர்களுக்கு 1, 5, 9-ஆம் பாவ வலிமை இருக் காது. தீராத கடன், தீர்க்க முடியாத நோய், எதிரித் தொல்லையால் அவதிப்படுவார்கள்.

ஒரு கடனைத் தீர்ப்பதற்குள் அடுத்த கடன் முளைத்துவிடும். புதிய கடன் முளைத்துக் கொண்டே இருப்பவராக இருந்தால், அரசுடமை வங்கியில் நீண்ட காலத்திற்குத் தவணை செலுத்தக்கூடிய - அவரவர் தகுதிக் கேற்ப கடன் வாங்கித் தவணை செலுத்தி வந்தால் நிச்சயமாகத் தப்பிக்கமுடியும். வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடும் விதமான நோய்த்தொல்லைகள் இருந்தால், மிகப்பெரிய மருத்துவமனைக்கு அருகில் குடியிருப்பை மாற்றிக்கொள்ள வேண்டும். அல்லது மருத்துவமனையிலுள்ள விநாய கரை செவ்வாய், சனி ஆகிய நாட்களில் வணங்க வேண்டும். மேலும் இந்த அமைப்புள்ள வர்களுக்கு குடியிருப்புக்கு அருகிலுள்ளவர் களால் எப்பொழுதும் சண்டை சச்சரவு இருந்துகொண்டே இருக்கும். இதற்குப் பரிகாரமாக தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு மிளகை சாப்பிட்டுவர நல்ல பலன் தெரியும். வேறு ஏதாவது காரணத்தினால் சத்ருக்கள் தொல்லை அதிகமானால் ஞாயிறு மாலை ராகுகால வேளையில், பைரவருக்கு மிளகு தீபமேற்றிவர நல்லமாற்றம் தெரியும்.

அத்துடன் 6-ஆம் அதிபதி அல்லது 6-ல் நின்ற கிரகம் உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனத்துடன் சம்பந்தம் பெற்றால் ருண, ரோக, சத்ரு ஸ்தான இயக்கம் விட்டுவிட்டு இருக்கும். சில நேரங்களில் சரியாகும், சில நேரங்களில் தாக்கம் தரும். இவர்களுடைய ஜாதகத்தில் லக்னம் வலிமையாக இருக்கும். இந்தப் பிரிவினர் நித்திய பிரதோஷ வேளையில் லட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும்.

12 லக்னத்தாருக்கான பலன்களை வரும் வாரத்தில் பார்க்கலாம்.

செல்: 98652 20406

bala071218
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe