வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையையும் மகாலட்சுமி யையும் வழிபட்டுவந்தால் வீட்டில் பிரச்சினைகள் தீரும். கணவன்- மனைவி உறவு சீராகும். பிள்ளைகள் பெற்றோர் பேச்சைக் கேட்பார்கள். மனபயம் நீங்கும். பணவரவு பெருகும். வழக்குகள் முடிவிற்கு வரும்.
ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் சரியில்லையென்றால், அவரின் குடும்பத்தில் பெண்கள் சந்தோஷமாக இருக்க மாட்டார்கள். வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்காது. கணவன்- மனைவிக்கிடையே பிரச்சினை இருக்கும். எவ்வளவு முயற்சித்தாலும் பகைவர்கள் குறையமாட்டார்கள்.
ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் அஸ்தமனமாகவோ, நீசமாகவோ இருந்தால், அதிலும் குறிப்பாக சனி, சூரியன், புதன் அல்லது சனி, சூரியன், சுக்கிரன் 12-ஆவது பாவத்தில் இருந்தால், அந்த குடும்பத்திற்கு பெண் சாபம் உண்டாகியிருக்கும். பலரின் குடும்பங்களில் அத்தை (தந்தையின் சகோதரி) பிரசவ காலத் தில் இறந்திருப்பார். சனி, சூரியன், ராகு, சுக்கிரன் 6, 8, 12-ல் இருந்தால், அந்த வீட்டில் ஏதாவது பெண் தற்கொலை செய்திருப்பார். அங்கிருக்கும் சிலருக்கு திருமணமே நடக்காது.
அதனால் அவர்கள் மனநோயால் பாதிக்கப்படுவார்கள்.
ஒரு ஜாதகத்தில் ராகு, சுக்கிரன் 2, 3-ல் இருந்தால், கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. தேவையில்லாமல் சண்டைய
வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையையும் மகாலட்சுமி யையும் வழிபட்டுவந்தால் வீட்டில் பிரச்சினைகள் தீரும். கணவன்- மனைவி உறவு சீராகும். பிள்ளைகள் பெற்றோர் பேச்சைக் கேட்பார்கள். மனபயம் நீங்கும். பணவரவு பெருகும். வழக்குகள் முடிவிற்கு வரும்.
ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் சரியில்லையென்றால், அவரின் குடும்பத்தில் பெண்கள் சந்தோஷமாக இருக்க மாட்டார்கள். வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்காது. கணவன்- மனைவிக்கிடையே பிரச்சினை இருக்கும். எவ்வளவு முயற்சித்தாலும் பகைவர்கள் குறையமாட்டார்கள்.
ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் அஸ்தமனமாகவோ, நீசமாகவோ இருந்தால், அதிலும் குறிப்பாக சனி, சூரியன், புதன் அல்லது சனி, சூரியன், சுக்கிரன் 12-ஆவது பாவத்தில் இருந்தால், அந்த குடும்பத்திற்கு பெண் சாபம் உண்டாகியிருக்கும். பலரின் குடும்பங்களில் அத்தை (தந்தையின் சகோதரி) பிரசவ காலத் தில் இறந்திருப்பார். சனி, சூரியன், ராகு, சுக்கிரன் 6, 8, 12-ல் இருந்தால், அந்த வீட்டில் ஏதாவது பெண் தற்கொலை செய்திருப்பார். அங்கிருக்கும் சிலருக்கு திருமணமே நடக்காது.
அதனால் அவர்கள் மனநோயால் பாதிக்கப்படுவார்கள்.
ஒரு ஜாதகத்தில் ராகு, சுக்கிரன் 2, 3-ல் இருந்தால், கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. தேவையில்லாமல் சண்டையிடுவார்கள்.
ராகு, சுக்கிரன், செவ்வாய் 4, 7, 8-ல் இருந்தால், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சிலர் விவாகரத்தான அல்லது விதவைப் பெண்ணைத் திருமணம் செய்வார்கள்.
ஜாதகத்தில் சூரியன், ராகு, செவ்வாய் லக்னம் அல்லது 4, 7, 8, 12-ல் இருந்தால், இல்வாழ்க்கையில் நிறைவிருக்காது. கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. இறந்து விடலாமா அல்லது வீட்டைவிட்டுப் போய்விடலாமா அல்லது துறவு பூண்டுவிடுவோமா என்றெல்லாம் எண்ணங்கள் உண்டாகும்.
சூரியன், சனி, செவ்வாய் லக்னம், 7, 8-ல் இருந்தால், வியாபாரம் சரியாக நடக்காது. மனதில் மகிழ்ச்சி இருக்காது. ரத்தக் கொதிப்பு ஏற்படும்.
ஒரு வீட்டின் தென்மேற்கு திசை காலியாக இருந்து, அந்த வீட்டின் பிரதான வாசல் தென்கிழக்கில் இருந்தால், அங்கு பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். இல்வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. அதே தென் மேற்கில் நீர்த்தொட்டி, கிணறு இருந்தால், அங்கு நோயின் பாதிப்பு இருக்கும். நீரிழிவு நோய் உண்டாகும். அவ்வாறு இருந்தால் அவர்களுக்கு சுக்கிரன், ராகு சரியில்லை என்று பொருள். 5-ஆம் பாவாதிபதி கெட்டுப் போயிருந்தால், அவர்களுடைய பிள்ளைகள் பெற்றோரின் பேச்சைக் கேட்கமாட்டார்கள். 5-ஆம் அதிபதி ராகுவுடன் 6, 8, 12-ல் இருந்தால், தேவையற்ற செலவுகள் உண்டாகும். வீட்டில் நிம்மதி இருக்காது.
ஒருவரின் ஜாதகத்தில் 5-ஆம் பாவத்தில் கேது, சனியுடன் இருந்தால், அவர் சந்தோஷமாக இருக்கமாட்டார். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவாது. தொழில் செய்யும் இடத்தில் பல பிரச்சினைகள் உண்டாகும்.
5-க்கு அதிபதி 6-ல் இருந்து, அதை பாவகிரகம் பார்த்தால், அந்த ஜாதகரின் வாரிசுக்கு சிறிய விபத்து நடக்க வாய்ப்பிருக்கிறது. 5-க்கு அதிபதி லக்னாதிபதியுடன் 12-ல் இருந்தால், அவருக்கு பித்ருசாபம் இருக்கும். பிள்ளைகள் சரியாக இருக்கமாட்டார்கள். சிலருக்கு வாரிசே இருக்காது. வருமானத்திற்காக சிலர் வெளியூரைத் தேடிச் செல்வார்கள்.
ஒரு வீட்டின் மேற்கு திசை அதிக காலியாக இருந்து, அதில் அவசியமற்ற பொருட்களைச் சேர்த்துவைத்தால், அந்த ஜாதகருக்கு தன் மனைவியின்மீது காரணமின்றி கோபம்வரும். சிலர் மனைவியை அடிப்பார்கள். அவர்களின் ஜாதகத்தில் ராகு 8-ல் இருந்து, 7-க்கு அதிபதி 10 அல்லது 12-ல் இருந்தால், மனதில் சந்தோஷமே இருக்காது.
ஒரு வீட்டின் கிழக்கு அல்லது வடகிழக்கில் கழிவறை இருந்தால் அல்லது சலவைசெய்யப் பயன்படும் இயந்திரம் இருந்தால் அல்லது தேவையற்ற பொருட்கள் அங்கு தேக்கி வைக்கப்பட்டிருந்தால், அங்குள்ளவர்களுக்கு திடீரென நோய் வரும். பண வசதி இருக்காது. ராகுவால் பிரச்சினை உண்டாகும். அதனால் நீதிமன்றம், வழக்கு என்று அலைவார்கள்.
ஒரு வீட்டில் கணவன்- மனைவி உறவு சரியில்லையென்றால், அந்த ஜாதகருக்கு சுக்கிரன் சரியில்லையென்று பொருள். சுக்கிரன், ராகு அல்லது செவ்வாயுடன் இருந்து, அதை பாவகிரகம் பார்த்தால், அந்த வீட்டில் கணவனும் மனைவியும் எப்போதும் சண்டை யிடுவார்கள்.
ஒரு வீட்டின் தெற்கு திசையில் முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தால், அங்கு கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது.
பரிகாரங்கள்
இந்த குறைகள் இருப்பவர்கள் வெள்ளிக் கிழமையன்று விரதமிருக்க வேண்டும். அன்று மாலையில் துர்க்கை ஆலயத்திற்குச் சென்று தேங்காய், சிவப்பு மலர் ஆகியவற்றை வைத்து தீபமேற்றி வழிபட வேண்டும். "ஓம் சுக்ராய நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை கூறலாம்.
அதன்மூலம் கணவன்- மனைவி உறவு சீராகும்.
பிள்ளைகள் பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் இருந்தால், வெள்ளிக்கிழமையன்று துர்க்கைக்கு எலுமிச்சம்பழ மாலையை அணிவிக்க வேண்டும். பணவரவுக்கு மகாலட்சுமியின் ஆலயத்திற்கு வெள்ளிக்கிழமை சென்று குங்குமம், வெள்ளைநிற மலர் வைத்து வழிபடவேண்டும்.
செல்: 98401 11534
தேய்பிறை அஷ்டமியில் மகாபைரவர் யாகம்!
வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலகமக்கள் நலன்கருதி, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 25-6-2019 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை மகா காலபைரவர் யாகத்துடன் நவ பைரவர் யாகம் நடைபெறுகிறது.
இந்த யாகத்தில் பங்கேற்பதன்மூலம் சித்தர்களின் அருளாசி கிடைக்கும். இடி, மின்னல், எரிமலை, பூகம்பம், நிலநடுக்கம், புயல், கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கைப் பேரழிவுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும், காட்டு மிருகங்கள், விஷ ஜந்துகளால் ஏற்படும் பயம் நீங்கும். மாந்திரீக தோஷம், துர்தேவதைகளின் சேஷ்டைகள் அணுகாது, சகல நோய்களும் குணமாகும். எண்ணிய காரியங்களில் வெற்றிபெறலாம். சகல சம்பத்தும் திருமகள் திருவருளால் கிடைக்கும். சர்வ ஜனவசியம் கிடைக்கும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் பெறலாம். சத்துருகள் சரணடைவார்கள்.
இந்த யாகத்தைத் தொடர்ந்து, மகா காலபைரவருக்கு நவ கலச திருமஞ்சனமும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறவுள்ளன. தேய்பிறை அஷ்டமியில் நடைபெறும் மகா காலபைரவர் யாகத்தில் பக்தர்கள் பங்கேற்று பைரவர் அருளுடன் குருவருள்பெற அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு:
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை- 632 513.
வேலூர் மாவட்டம், தொலைபேசி: 04172- 230033, 230274. அலைபேசி: 94433 30203
. Email : danvantripeedam@gmail.com