Advertisment

பண விரயத்தைத் தடுக்கும் வெள்ளி மோதிரப் பரிகாரம்! -கவிதா பாலாஜிகணேஷ்

/idhalgal/balajothidam/silver-ring-remedy-prevents-wasting-money-kavita-balajiganesh

நாம் நல்லமுறையில் பாடுபட்டு சம்பாதித்த பணம் நம் கையில் தங்காமல் வீண் விரயமாகிக்கொண்டே இருந்தால் எப்படி முன்னேற முடியும். பணம் செலவழியாமல் கையில் தங்கினாலே போதும்; நம் பிரச்சினைகளை ஓரளவுக்கு சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கையில் தங்காமல் செலவாவது ஒருபுறம் இருந்தாலும், சுற்றி இருப்பவர்களின் பொறாமை யும், பொச்சரிப்பும் பாதி நம் முன்னேற்றத்திற்குத் தடையாகி விடும். நாம் எப்படியெல்லாம் பாடுப்பட்டுப் பணத்தை சேர்க்கி றோம் என்று நமக

நாம் நல்லமுறையில் பாடுபட்டு சம்பாதித்த பணம் நம் கையில் தங்காமல் வீண் விரயமாகிக்கொண்டே இருந்தால் எப்படி முன்னேற முடியும். பணம் செலவழியாமல் கையில் தங்கினாலே போதும்; நம் பிரச்சினைகளை ஓரளவுக்கு சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கையில் தங்காமல் செலவாவது ஒருபுறம் இருந்தாலும், சுற்றி இருப்பவர்களின் பொறாமை யும், பொச்சரிப்பும் பாதி நம் முன்னேற்றத்திற்குத் தடையாகி விடும். நாம் எப்படியெல்லாம் பாடுப்பட்டுப் பணத்தை சேர்க்கி றோம் என்று நமக்குதான் தெரியும். ஆனால் அடுத்தவர் கள், 'இவர்களுக்கென்ன... நன்றாக சம்பாதிக்கிறார்கள்' என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடுவார்கள்.

Advertisment

அடுத்தடுத்து நமக்கு செலவுகள் வந்துகொண்டு, இப்படிப்பட்ட பார்வையால் நமக்கு ஏற்படும் வீண் விரயங் களைத் தடுக்கவும், நல்ல முறையில் சம்பாதிக்கும் பணம பன்மடங்கு பெருகவும்தான் இந்த வெள்ளி மோதிரப் பரிகாரம். அதை எப்படி செய்யவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

silver

இந்தப் பரிகாரம் செய்வதற்கு நமக்கு வெள்ளி மோதிரம், பச்சைக் கற்பூரம், வெற்றிலை, ஒரு சிறிய கண்ணாடிக் கிண்ணம் மட்டும்தான் தேவை. நீங்கள் வாங்கும் வெள்ளி மோதிரம் உங்கள் சுட்டுவிரலுக்குப் பொருந்தும்படியாக இருக்கவேண்டும். மற்ற விரல்களில் போடக் கூடாது.

இந்தப் பரிகாரத்தை வியாழனன்று இரவு சாப்பிடும் முன்பு நாம் செய்யவேண்டும். அதாவது வெள்ளிக் கிழமைக்கு முதல் நாள் இரவே இந்த பரிகாரத்தை நாம் செய்து முடித்துவிடவேண்டும். இந்தப் பரிகாரம் செய்ய முதலில் ஒரு சின்ன கண்ணாடிக் கிண்ணம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் வாங்கிவந்த வெள்ளி மோதிரம், ஒரு துண்டு பச்சைக் கற்பூரம் போடவும்.

அதன்பிறகு ஒரு வெற்றிலை. இந்த வெற்றிலையைக் காம்புநீக்கி இந்த கிண்ணத்தின்மேல் மூடிவிட வேண்டும்.

வெற்றிலையின் காம்புப் பக்கம் பூஜையறையில் வலது பக்கமாக சுவாமி படத்தைப் பார்த்தபடி வைத்துவிடுங்கள்.

இந்த பொருட்கள் வியாழன் இரவு முழுவதும் பூஜையறையில் அப்படியே இருக்கட்டும். மறுநாள் வெள்ளிக் கிழமை காலையில் எழுந்து குளித்து முடித்து நீங்கள் வேலைக்குச் செல்லும்முன், உங்கள் குலதெய்வத்தை வணங்கிவிட்டு பூஜையறையிலுள்ள மோதிரத்தை சுட்டுவிரலில் அணிந்துகொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் சம்பாதிப்பவர் யாரோ அவர் விரலில் இந்த மோதிரம் இருக்கும்படி பார்த்துக் கொள் ளுங்கள். இதில் ஆண்- பெண் என்ற பாகுபாடில்லை. இருவருமே சம்பாதித்தாலும், இருவரும் போட்டுக் கொள்ளலாம்.

இந்தப் பரிகாரத்தைச செய்யத் தொடங்கிய சில நாட்களிலே உங்களுக்கு நல்ல மாற்றங்கள் தெரிய வரும். நல்லமுறையில் சம்பாதித்து வீண் விரயமாகாமல் உங்கள் பணத்தைப் பலமடங்கு பெருக்கி நல்லதொரு வாழ்க்கையை வாழுங்கள்.

செல்: 98425 50844

bala310323
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe