மழைக்குறி காட்டும் சகுனங்கள்! -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/signs-rain-siddharthasan-sundarji-jeevanadi-influence-study-astrologer

"வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.'

பூமியில் மழை பெய்தால்தான் உலகில் வளம் கொழிக்கும். எனவே மழை நீர்தான் அமிர்தம் என்று உணர்ந்துகொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர் பெருமான்.

"நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழி-

தான்நல்கா தாகி விடின்.'

இந்த பூமியில் மழைபொழிய தெய்வங்களும் மழைக்குரிய தேவதைகளும்தான் காரணமென்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அது தவறான கருத்தாகும். இந்த பூமி யிலுள்ள கடல்நீரானது சூரியனின் வெப்பத்தால் ஆவியாகி, அது வானில் மேகமாக உருமாறி, மீண்டும் அது மழையாகப் பெய்யாவிட்டால் கடல்நீரின் அளவும் பூமியின் வளமும் குறைந்துவிடும். இன்றைய ஆராய்ச்சியாளர் களும் திருவள்ளுவர் சொன்ன கருத்தை உண்மையென்று ஏற்றுக்கொண்டுள்ளனர்.

"சிறப்

"வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.'

பூமியில் மழை பெய்தால்தான் உலகில் வளம் கொழிக்கும். எனவே மழை நீர்தான் அமிர்தம் என்று உணர்ந்துகொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர் பெருமான்.

"நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழி-

தான்நல்கா தாகி விடின்.'

இந்த பூமியில் மழைபொழிய தெய்வங்களும் மழைக்குரிய தேவதைகளும்தான் காரணமென்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அது தவறான கருத்தாகும். இந்த பூமி யிலுள்ள கடல்நீரானது சூரியனின் வெப்பத்தால் ஆவியாகி, அது வானில் மேகமாக உருமாறி, மீண்டும் அது மழையாகப் பெய்யாவிட்டால் கடல்நீரின் அளவும் பூமியின் வளமும் குறைந்துவிடும். இன்றைய ஆராய்ச்சியாளர் களும் திருவள்ளுவர் சொன்ன கருத்தை உண்மையென்று ஏற்றுக்கொண்டுள்ளனர்.

"சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.'

மழை பெய்யாமல் பொய்த்துப்போனால் மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள் மட்டுமின்றி, வானுலகிலுள்ள தேவர்களுக்கும்கூட படையல், திருவிழா, பூஜை என எதுவுமில்லாமல் போகும் என்பது வள்ளுவர் வாக்கு.

aa

இயற்கை நிகழ்வுகளான மழை, புயல், நிலநடுக்கம் போன்ற எல்லா நிகழ்வுகளும் திடீரென்று ஏற்படுவதல்ல. அவை உண்டாகப்போவதை முன்னரே நாம் அறிந்துகொள்ள, முன்னெச்சரிக்கை தந்துவிட்டுதான் அவை செயல்படுகின்றன. இன்றைய நாளில் நவீன கருவிகள்மூலம் மழை, புயல் போன்றவை வருவதற்கு முன்பே அதை அறிந்து கூறுகின்றனர். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் வாழ்ந்த சித்தர்களும் ஞானிகளும் வானில் தோன்றும் நிகழ்வுகள்மூலமும், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் நடைமுறைச் செயல்கள்மூலமும் மழை, புயல் போன்றவை உண்டாகப்போவதை முன்னரே அறிந்துகொள்ளும் வழிமுறைகளைக் கண்டறிந்து கூறியுள்ளனர்.

மழை வருவதற்கு முன்னர் வானில் உண்டாகும் இயற்கை நிகழ்வுகள் குறித்து ஆதித்தமிழர்கள் அனுபவத் தில் அறிந்து கூறியதை இங்கு காண்போம்.

ஆனி மாதம் ஆறாவது நாள் இடி இடித்தால் ஆறு மாதங்களுக்கு மழை இல்லை.

ஆவணி மாதம் ஆறாவது நாள் இடி இடித்தால் நல்ல மழை பொழியும்.

கோடையில் இடியும் மழைக்காலத்தில் மின்னலும் ஏற்பட்டால் நல்ல மழை தரும்.

மாலைப்பொழுதின் மின்னல்- விடியற் காலையில் மழை.

மழைக்காலத்தில் இடியும், கோடைகாலத் தில் மின்னலும் இருந்தால் மழை இல்லை.

காலை மோடமும் (மூட்டம்) கழுதை வாடையும் மாலைத் தென்றலும் மழை இல்லை.

அடிவானம் கருக்கின் அப்போதே மழை.

ஆகாயம் மணற்கொளித்திருந்தால் (மேகங்கள் திட்டுத் திட்டாக இருந்து பின்ன ஒன்று சேர்தல்) அப்போதே மழை.

ஆடி மாதம் கீழ்க்காற்றும், ஆவணி மாதம் மேற்காற்றும் வீசினால் கனவிலும் மழை இல்லை.

வடகாற்று அடித்தால் வந்துவிடும் மழை.

அந்தி கிழக்கு, அதிகாலை மேற்கு- கொரடு போட்டால் (வானவில்) வராத மழை வந்துவிடும்.

மேல்தலை வில்லு (வானவில்) போட்டால் கீழ்ப்பகுதி மழை; கீழ்த்தலை வில்லு போட்டால் மேற்பகுதி மழை.

ஆனி மாதம் கொரடு போட்டால் ஆவணியில் மழை இல்லை.

காலை செவ்வானம் கருக மழை; அந்தி செவ்வானம் அப்போதே மழை.

வானம் அதிர்ந்து குமுறினால் அப்போதே மழை.

ஆடி அமாவாசையில் மழை பெய்தால், அடுத்த அமாவாசைவரை மழை இல்லை.

ஆனி மாதம் வானம் குமுறினால் அறுபது நாட்களுக்கு மழை இல்லை. அஸ்வினி, கார்த்திகை நட்சத்திர நாட் களில் இடி இடித்தால் ஆறு கார்த்திகைக்கு மழை இல்லை.

அகல் வட்டம்- பகல் மழை.

வடக்கே வானம் கருத்தால் மழை வரும்.

ஆடி, ஆவணி மாதங்களில் கீழ்க்காற்றும், ஐப்பசி மேல்காற்றும் வீசினால் மழை இல்லை.

வானில் நிலவைச்சுற்றி சிவப்பு நிற வளையம் தோன்றினால் மழை வரும்.

வடகிழக்கில் மின்னல் தோன்றினால் மழை வரும். சந்திரன் களங்கமாக கோழியின் கண்போன்ற நிறத்தில் இருந்தால் மழை வரும்.

இரவில் இடி முழங்கினாலும், பகலில் மின்னல் தோன்றினாலும், கிழக்கு திசையிலிருந்து குளிர்காற்று வீசினாலும் மழை வரும்.

ஆதித் தமிழ்மக்கள் தங்களுடன் இணைந்து வாழ்ந்த மிருகங்கள், பறவைகள் போன்றவற்றின் செயல்கள்மூலமும் மழை வருவதை முன்கூட்டியே அறிந்திருந்தனர். அதை அடுத்த இதழில் காண்போம்.

செல்: 99441 13267

bala191121
இதையும் படியுங்கள்
Subscribe