ன்றைய நாளில் பிள்ளைகளைப் பெற்றவர்கள், தங்கள் மகனுக்கோ மகளுக்கோ திருமண முயற்சி தொடங்கும்போது, பத்துப் பொருத்தம் உள்ளதா? நட்சத்திர- தாராபலன் பொருத்தம் உள்ளதா என ஜோதிடரிடம் கேட்கிறார்கள். ஒருசிலர், சில நட்சத்திரங்களைக் குறித்து வைத்துக்கொண்டு, இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்தான் வேண்டு மென்று தேடி அலைந்து கொண்டிருக்கின்றார்கள். பொதுவாக இவர்களை வானத்திலுள்ள நட்சத்திர மீன்களுக்குத் தூண்டில் போட்டுப் பிடிக்க அலைந்துகொண்டிருப்பவர்கள் எனலாம்.

இவ்வாறு பத்துப் பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்துகொண்ட அனைவரும் எல்லா பேறுகளையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா என்றால், இல்லை என்பதே பெரும்பாலோரின் பதிலாக உள்ளது. பத்துப் பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம் என பலன் கூறும் முறையிலேயே முரண்பாடுகள் உள்ளன. உதாரணமாக ஒன்றை அறிவோம்.

tt

பத்துப் பொருத்தங்களில் ஒன்று மாகேந்திரப் பொருத்தம். மாகேந்திரம் என்பது புராணங்களில் கூறப்படும் தேவர்களின் அரசனான இந்திரனைக் குறிப்பிடும். இந்திரன் தாம்பத்திய இந்திரிய சுகத்தில் அதிக விருப்பமுடையவன். பல பெண் களைப் புணர்ந்து அதிகமான சாபம் பெற்றவன்.

ஒரு பெண்ணுக்கு அவள் மணந்துகொள்ளும் கணவனால் முழுமையான இந்திரிய சுகங்கள் கிடைக்குமா என்பதை அறிந்துகொள்ள இந்த மாகேந்திரம் பார்க்கப்படுகிறது.

நட்சத்திர தினப்பொருத்தம், மாகேந்திரப் பொருத்தம் ஆகியவற்றுக்கிடையே உள்ள முரண்பாடுகளை அறிவோம்.

தினப்பொருத்தத்தில், பெண் நட்சத்திரத்திற்கு ஆண் நட்சத்திரம் 2, 11, 20; 4, 13, 22; 6, 15, 24; 8, 17, 26; 9, 18, 27 ஆகிய நட்சத்திரங்களாக இருந்தால் நட்சத்திர- தினப்பொருத்தம், தாராபலன் உண்டு; திருமணம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பெண் நட்சத்திரத்திற்கு ஆண் நட்சத்திரம்

1, 10, 19; 4, 13, 22; 7, 16, 25 என இருந்தால் பொருந்தாதவை; திருமணம் செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

மாகேந்திரப் பொருத்தம் உண்டா என பார்க்கும்போது, பெண் நட்சத்திரத்திற்கு 1, 10, 19; 4, 13, 22; 7, 16, 25-ஆவது நட்சத்திரமாக ஆண் நட்சத்திரம் இருந்தால் மாகேந்திரப் பொருத்தம் உண்டு என்றும்; இதில் 22-ஆவது நட்சத்திரம் மட்டும் வைநாசிகம் என்பதால், அது மட்டும் பொருந்தாது என்றும் கூறப் பட்டுள்ளது.

தாரா பலன், நட்சத்திரப் பலன் என்று கூறும்போது, ஒருவரின் 1, 10, 19-ஆவது நட்சத்திரங்கள் மற்றவருக்கு ஜென்ம தாரை என்றும், 7, 16, 25-ஆவது நட்சத்திரங்கள் வதை தாரை என்றும், இவை பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் பெண் நட்சத்திரத்திற்கு ஆணின் நட்சத்திரம் 1, 10, 19; 7, 16, 25-ஆவது நட்சத்திரங்களாக இருந்தால் மாகேந்திரப் பொருத்தம் உண்டு என்று கூறப்படுகிறது. இது முரண்பாடாக உள்ளது.

நட்சத்திரப் பொருத்தத்தில் சரியில்லாத நட்சத்திரங்கள் மாகேந்திரப் பொருத்தத்தில் பொருந்துகின்றன. நட்சத்திரப் பொருத்தம் பார்த்தால் மாகேந்திரப் பொருத்தம் இராது. மாகேந்திர பொருத்தத்தில் பொருந்துபவை நட்சத்திரப் பொருத்தத்தில் பொருந்தாது.

ஒரு பெண்ணிற்கு நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்தால், மாகேந்திரப் பொருத்த மில்லாததால், அந்தப் பெண் கணவனுடன் முழுமையாக தாம்பத்திய சுகம் அனுபவிக்க முடியாது. தாம்பத்திய சுகம் குறைந்தால், புத்திர பாக்கியத்தில் குறைவுண்டாகும். கணவன்- மனைவியிடையே சந்தேகம் ஏற்பட்டு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். இதனால் குடும்ப வாழ்வில் அமைதி குறையும்.

ஆண்- பெண் யாராவது ஒருவர் தவறான உறவில் வாழநேரிடும்.

இதேபோன்று ஒவ்வொரு பொருத்தத் தையும் மற்றொரு பொருத்தத்துடன் ஆய்வு செய்தால், எல்லா பொருத்தங்களும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டிருப்பதை அறியலாம். இதனால்தான் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்பவர்கள் வாழ்வில் முழுமையாக மகிழ்ச்சியடைய முடிவதில்லை. அதனால்தான் சித்தர் பெருமக்கள் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்யும் வழக்கத்தை மறுத்துள்ளனர்.

சித்தர்கள் கூறியுள்ள தமிழ் ஜோதிட முறையில் திருமணப் பொருத்தம் பார்க்க பல வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. அதில் ஒன்றை மட்டும் சுருக்கமாக அறிவோம்.

ஒரு ஆணின் பிறப்பு ஜாதகத்தில், அந்த ஜாதகரைக் குறிப்பிடும் உதாரண கிரகமான குருவையும், அவரது மனைவியைக் குறிப்பிடும் உதாரண கிரகமான சுக்கிரன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9; 3, 7, 11; 2, 12-ஆவது ராசிகளில் அமர்ந்துள்ள கிரகங்களையும் குறித்துக் கொள்ளவேண்டும்.

இதேபோன்று பெண் ஜாதகத்தில், அந்த ஜாதகியைக் குறிக்கும் உதாரண கிரகமான சுக்கிரன் இருக்கும் ராசியையும், அவளது கணவ னைக் குறிப்பிடும் உதாரண கிரகமான செவ்வாய் கிரகத்தையும் குறித்துக்கொள்ளவேண்டும்.

ஒரு ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் ர ôசிக்கு 1, 5, 9; 3, 7, 11; 2, 12-ஆவது ராசிகளில் எந்தெந்த கிரகங்கள் இருக்கின்றதோ, அதே கிரகங்கள் பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 1, 5, 9; 3, 7, 11; 2, 12-ஆவது ராசிகளில் இருக்க வேண்டும்.

ஆண் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 9-ல் ஒரு கிரகம் இருந்தால், அதே கிரகம் பெண் ஜாதகத் தில் 9-ல் மட்டுமே இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. அந்த கிரகம் பெண் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 1, 5, 9; 3, 7, 11; 2, 12-ஆவது ராசிகளில் எந்த ராசியில் வேண்டுமானாலும் இருக்கலாம். பொதுவாக ஆண் ஜாதகத்தில் சுக்கிரனோடு தொடர்புடைய கிரகங்கள் எல்லாம் பெண் ஜாதகத்திலுள்ள சுக்கிரனோடு தொடர்பில் இருக்கவேண்டும்; அவ்வளவுதான்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய்க்கு 1, 5, 9; 3, 7, 11; 2, 12-ஆவது ராசிகளில் எந்தெந்த கிரகங்கள் உள்ளனவோ, அதே கிரகங்கள் ஆண் ஜாதகத்தில் அதே ராசிகளில் இருக்கவேண்டும்.

மேற்கண்டமுறையில் ஆண்- பெண் ஜாதகங்களில் கிரகங்கள் அமைந்திருந்தால் பொருத்தம் உள்ளது; திருமணம் செய்யலாம்.

இதுபோன்று தமிழ் ஜோதிடமுறையில் பொருத்தம் பார்க்கும்போது, ராகு, கேது, செவ்வாய் தோஷங்களைப் பார்க்கக்கூடாது என்பது சித்தர்கள் வாக்கு.

செல்: 99441 13267