ற்போதைய காலகட்டத்தில் கொரோனா எனும் கொடிய நோய் பெரும் தாக்கம் கொடுத்து, உலகமக்கள் அனைவரையும் கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறது.

ஜோதிட விதிப்படி, எப்போதெல்லாம் செவ்வாய், சனி, ராகு சம்பந்தம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் கூட்டுமரணம் எனும் பெருவாரி மரணம் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

2019- டிசம்பர் மற்றும் 2020- ஜனவரியில், தனுசு ராசியில் சூரியன், குரு, கேது, சனி, சுக்கிரன் எனும் ஐந்து கிரகக்கூட்டமும் ராகுவின் பார்வையில் அமர்ந்திருந்தது.

2020- பிப்ரவரி, மார்ச் மாதத்தில் சனி, செவ்வாய், குரு, கேது எனும் நான்கு கிரகங்களும் ராகுவின் பார்வையில், தனுசு ராசியில் இருந்தன.

Advertisment

2020- டிசம்பர் மாதம் செவ்வாய் மேஷ ராசிக்குச் சென்று தனது எட்டாம் பார்வையால் கேதுவை எரித்தார். 2021- பிப்ரவரி மாதம், செவ்வாய் ரிஷப ராசி சென்று, அங்குள்ள ராகுவுடனும், கேந்திர இணைவாக சனியுடனும் சம்பந்தம் கொண்டார்.

2021- ஏப்ரல் மாதம் செவ்வாய் மிதுன ராசிக்கு நகர்ந்து, அங்கிருந்து எட்டாம் பார்வையால் சனியைத் தொட, சனி தனது கோணத்தில் ராகுவைத் தொடர்புகொண்டார்.

2021- ஜூன் மாதம் செவ்வாய் கடக ராசிக்கு மாறுவார். மறுபடியும் செவ்வாய், சனி, ராகு இணைவு ஏற்படும்.

Advertisment

s

பின் 2021- ஜூலை தொடக்கத்தில் செவ்வாய் சிம்மம் செல்வார்.

அப்போதும் தனது நான்காம் பார்வையால் கேதுவைத் தொடுவார்.

இப்போது இதனை எழுதும் சிற்றறிவுடைய அடியேனுக்கும், படிக்கும் பேரறிவு கொண்ட தங்களுக்கும் அலுப் பும், எரிச்சலும் தோன்றுகிறதல்லவா?

இருப்பது 12 கட்டங்கள். ஓடுவது ஒன்பது கிரகங்கள். இவர்கள் இந்த ராசிக் கட்டங்களுக்குள் நகரும்போது, ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாமல் இருக்கமுடியுமா? இடித்துக்கொள்ளாமல் இருக்க இயலுமா?

முறைத்துக் கொள்ளா மல் இருப்பார்களா? வருடம்முழுக்க மாதக் கணக்கு கிரகங்கள் நகரும்போது பார்வை, இணைவு, சம்பந்தம் கண்டிப்பாக ஏற்படத்தான் செய்யும். அப்படியாயின், சுமார் நூறு வருடங்களாக இல்லாத, இந்த அதிகபட்ச மரணங்கள் எவ்விதம், யாரால் நிகழ்கின்றன? இதற்கு முழுக்க முழுக்க ஜோதிடமே முழு முதற் காரணம் என்றும் சொல்ல இயலவில்லை.

இதற்கு விடையை தேவி மஹாத்மியம் உறுதிபட உரைக்கிறது. தேவிக்கும் அசுரனுக்கும் நடந்த போரில் ஒரு நிகழ்வு நடக்கிறது. தேவி நிறைய அசுரர்களைக் கொன்றபின், ரக்தபீஜன் என்னும் அசுரன் தேவியுடன் யுத்தத்திற்கு வந்து சேர்ந்தான்.

அப்போது, தேவி வஜ்ரத்தால் அவனை அடித்தாள். அப்போது, அவன் உட--ருந்து ரத்தம் பெருகிற்று. அந்த ஒவ்வொரு துளி ரத்தமும், அவனைப் போலவே வீரிய மும் பலமும் கொண்ட அசுரர்களாக மாறின. ரத்தத்தில் தோன்றிய அவ்வசுரர்கள், மிக பலத்துடன் தேவியுடன் யுத்தம் செய்தனர்.

தேவி தனது பலவித ரூபத்துடன் அவனை அடிக்க, அவனிடமிருந்து பெருகிய ரத்தத்தால் ஆயிரக்கணக்கான அரக்கர்கள் உண்டாயினர். அந்த அதிகபட்ச அசுரர் களால் உலகமே வியாபிக்கப்பட்டது. இதனைக்கண்ட தேவர்கள் மிக அதிக பயத்தை அடைந்தனர்.

சண்டிகா தேவி, காளியிடம், "உன் வாயை அகலத் திறந்து கொள். எனது தாக்குத லால் உண்டாகும். ரத்த பிந்துகளை உனது வாயால் ஏற்றுக்கொள் வாய். இதனால் இந்த அசுரன் ரத்தமிழந்து நாசமடைவான்'' என்றாள்.

அதேபோல் காளி யும் ரத்தத்தை ஏற்றுக் கொள்ள, ரக்தபீஜன் ரத்தமே இல்லாமல் பூதலத்தில் வீழ்ந்தான். ஆம், எப்போதெல்லாம் உலகில் அடங்கா துன்பம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் காளி தோன்றி சம்ஹாரம் செய்கிறாள்.

கிராமங்களில், கொடைவிழா என்று எல்லை, காவல் காளிக்கு நடத்துவார்கள். அப்போது, இரவில் அதற்கென்று விரதமிருப்பவர்கள் சூறையிடுவார்கள். அப்பொருட்கள் பூமியிலேயே விழாது என்பர். அதனை யாரும் பார்க்கக்கூடாது; எல்லாரும் கதவைத் தாழிட்டு, வீட்டிற்குள் அடங்கியிருக்கவேண்டுமென கூறுவர்.

சரி; இப்போதைய காளியின் சம்ஹாரம் யாரை நோக்கி? எது குறித்து?

இப்போதும் உலகம் முழுக்க அசுரர்கள் பெருகி நிறைந்துள்ளனர். ஆம்; குழந்தைகளைக்கூட விட்டுவைக்காத கொடூரர்கள், லஞ்சம் கொடுக்காவிட்டால் வேலையே நடக்காது எனும் நிலை, பணத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் ராட்சசர்கள், ஆண்- பெண் எனும் பேதமில்லாமல் செய்யப்படும் அட்டூழியங்கள், பொய் கூறத் தயங்காத மக்கள், பெண்கள்மீது நடக்கும் வன்முறைகள், தண்ணீரையும், காற்றையும் நஞ்சாக்கும் நிறுவனங்கள், கல்நெஞ்சான மருத்துவமனைகள், இல்லற துரோகங்கள், கொலைப்பாதகம், கோவில்களில் நடக்கும் அநியாயங்கள், லாபத்துக்காக செய்யும் அநீதிகள் என இன்னும் இன்னும் இன்னும் பாதகப்பட்டியல் நீண்டு, பாதகர்களால் உலகம் நிரம்பிவிட்டது.

இவ்வளவு அசுரர்களைக் காண சகிக்காத காளி கிளம்பிவிட்டாள். தனது ருத்ர தாண்டவத்தை ஆரம்பித்துவிட்டாள். பேயாட்டம் ஆடுகிறாள். கண்ணில் கண்டதையெல்லாம் வாரி விழுங்குகிறாள்.

நல்லவர்- கெட்டவர், வயது வித்யாச மின்றி விழுங்குகிறாள். அவளுடைய கோபம் எல்லை மீறிவிட்டது. அடக்கு வார் இல்லை. அவளுடைய எல்லையில்லா ஆர்ப்பரிப்புக்குமுன் எந்த கருணை மனுவும் எடுபடவில்லை.

முன்பு காளி இப்படி அடங்கா கோபத்துடன் ஆர்ப்பரித்தபோது, அனைவரும் மிக பயந்து சிவனை வேண்ட, சிவனும் அம்மையின் முன் விழுந்துவிட்டார். காளி அடுத்த அடி எடுக்கும் போது, கா-ன் அருகில் இருந்த சிவனைப் பார்த்து அப்படியே குளிர்ந்து போனாளாம்.

அதுசரி; இப்போது சிவனை அழைக்க லாம் என்றால், அவர் மாயானத்தில் அல்லவா கடும் பணிச்சுமையில் இருக்கிறார்?

அப்படியாயின் இந்த கொடூரத்தைத் தணிப்பவர்தான் யார்? சித்தர்கள். ஆம்; சித்தர்களால் மட்டுமே இந்த உலகினை ஆர்ப்பரிக்கும் காளியிடமிருந்து காப்பாற்ற முடியும். சித்தர்களை வேண்டுவோம். உங்கள் ஊரிலுளள எந்த சித்தர் சமாதியாயினும், அங்கு சென்று விளக்கேற்றி, உலக நன்மைக்காக அமைதியாக வேண்டுங்கள். இது ஒன்றுதான் இப்போதைய பரிகாரம்.

சீரடி பாபவே சீக்கிரம் காப்பாற்று.

ஸ்ரீராகவேந்திரரே இரக்கம்கொள்.

காஞ்சிப் பெரியவரே கருணை காட்டுங்கள்.

பதஞ்ச- முனிவரே பார்த்துக்கொள்ளுங்கள்.

அகத்தியரே ஆதரவு தாருங்கள்.

திருமூலரே திரும்பிப் பாருங்கள்.

குதம்பைச் சித்தரே குறிப்பால் உணர்த்துங்கள்.

கோரக்கரே கூப்பிட்ட குரலுக்கு வாருங்கள்.

தன்வந்திரியே தயவுசெய்யுங்கள்.

கொங்கணரே கொடை அருளுங்கள்.

சட்டைமுனியே சட்டென்று வாரும்.

வான்மீகரே வருத்தப்படச் செய்யாதீர்.

நந்தீஸ்வரரே நற்பயன் தாரும்.

இடைக்காடரே இடையூறு தகரும்.

மச்சமுனியே மறுவாழ்வு தாரும்.

கருவூரரே கருத்தூன்றி கவனியும்.

போகரே பொல்லாவினை அகற்றும்.

பாம்பாட்டிச் சித்தரே பழுது வாழ்வு நீக்கும்!

நீங்கள் உடனடியாக உங்கள் ஊர் அருகிலுள்ள சித்தர் ஆலயம், சித்தர் பீடம் போன்றவற்றைச் சுத்தம்செய்து விளக்கேற்றி வழிபாடு செய்யவும். இது உலக நன்மைக்காக கண்டிப்பாக செய்யவேண்டும்.

இந்த சித்தர் பெருமக்களால்தான் வாரி விழுங்கிக்கொண்டிருக்கும் காளியிடமிருந்து உலகத்தைக் காப்பாற்றமுடியும்!

செல்: 94449 61845