இன்று பெரும்பாலான மக்களின் பொதுப் பிரச்சினைகளில் முக்கியமானது திருமணம். முற்காலத்தில் இத்தனை வசதிகள் இல்லையென்றா லும், திருமணம் நடத்துவதில் பெரிய சிரமங்கள் இருந்ததில்லை. ஆண்- பெண் இருவீட்டாரும் கலந்துபேசி, எல்லாம் இணங்கிவந்தபின் இருவரையும் பார்க்கவைத்து, கோவிலிலோ உறவினர் வீடுகளிலோ (சொந்தவீடு இல்லாதவர்கள்), தத்தம் வீடுகளிலோ வைத்து திருமணம் நடத்துவார்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளிலேயே பெரும்பாலும் வரன் உறுதியாகிவிடும்.
இன்று திருமணத்தகவல் மையங்கள் பெருகி விட்டன. இன்டர்நெட் தயவால் ஆணும், பெண்ணும் நேருக்கு நேர் பார்த்துப் பேசும் வாய்ப்பும் பெருகிவிட்டது. இவ்வளவு வசதிகள் இருந்தும் திருமணம் கூடிவருவதில் எத்தனையோ சிக்கல்கள். அப்படியே எல்லாம் கூடி வரும்போது ஏதாவது தடை. சிலருக்கு நிச்சயதார்த்தம் வரை வந்து நின்றுபோவது, நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்தும், திருமணத்துக்குமுன்பே யாராவது ஒருவர் திருமணத்தை நடத்தவேண்டாமென்று கூறுவது; சில துரதிர்ஷ்டசாலிகளுக்கு மணமேடையிலேயே- ஆணோ பெண்ணோ "இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை' என்று கூறுவது!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/krishnan_34.jpg)
இது ஒருபுறமென்றால் திருமணத்துக்குப் பொருத்தமான ஜாதகம் அமையாமல் போவது; நட்சத்திரம் பொருந்துகிறது என்று ஒருவர் சொன்னால், மற்றவர் இல்லையென்று நிராகரிப் பது; குறிப்பிட்ட நட்சத்திரங்கள் மட்டுமே பொருந்து மென்று சொல்லி, மற்ற நட்சத்திரங்களைப் புறக் கணித்துவிடுவது; மேலும் திருக்கணிதம்படி கணிக்கப்பட்டது, வாக்கியப்படி கணிக்கப்பட்டது என்று பஞ்சாங்க அடிப்படையில் நிராகரிப்பது; குடும்ப ஜோதிடர் கூறுவதே வேத வாக்காகக்கொண்டு, பொருந்தவில்லை என்று அவர் சொல்லிவிட்டால் வேண்டாமென்று ஒதுக்குவது; இன்னும் சமூக, பொருளாதார அந்தஸ்து என எத்தனையோ விஷயங்கள் இன்று திருமணம் தள்ளிப்போகக் காரணங்களாக இருக்கின்றன.
காரணம் எதுவாயினும், பாதிக்கப்படுவது சம்பந்தப்பட்ட ஆணோ பெண்ணோதான். பருவத்தே செய்யவேண்டிய பயிரை, காலந்தாழ்த்திச் செய்து என்ன பயன்? "சரி; இதற்கு என்னதான் வழி? பெண்ணுக்கோ ஆணுக்கோ திருமணம் நல்ல முறையில் கூடிவர என்ன செய்யலாம்' இந்தக் கேள்வி எழுவது இயல்பே. இங்கே இன்னொறும் கூற விரும்புகிறேன். பெரும்பாலான சமயங்களில் எல்லா சிறப்புகளும் இருந்தும், விடாமல் முயற்சி செய்தும் சிலருக்குத் திருமணம் அமையாது.
முன்னோர்கள் அழகாகச் சொல்லியிருக்கி றார்கள்- "அள்ளாமல் குறையாது; இல்லாமல் புகையாது' என்று! இதற்குப் பொருள், "இப்பிறவி யில் நமக்கு நேர்கின்ற நல்லவை- கெட்டவை எல்லாவற்றுக்கும் காரணம், நாம் முற்பிறவியில் செய்த பாவ- புண்ணிய வினைகளே' என்பது.
ஜோதிடமும் அதைத்தான் கூறுகிறது. ஜோதிடப் படி திருமணங்கள தாமதமாகும் காரணத்துக்கு அடிப்படையான கிரக அமைப்புகளைப் பார்க்கலாம்.
சிலருக்கு முப்பது, முப்பதிரண்டு வயதுக்கு மேல் திருமணமாகும். இதற்கு பல கிரக அமைப்பு கள் காரணமென்றாலும், கர்மகாரகன் சனி பகவான் சுக்கிரனைப் பார்க்க, ஆன்மகாரகன் சூரியன் அல்லது உடல்காரகன் சந்திரனுக்கு சனியின் சம்பந்தம் ஏற்பட்டாலோ அல்லது சந்திரன் சனியின் நட்சத்திரத்தில் அமர்ந்திருந் தாலோ மேலே சொன்னபடி திருமணம் முப்பத்திரண்டு வயது வரை தடைப்படும். சந்திரன் சனி யின் நட்சத்திரத்தில் இருந்தாலும், சந்திரன், சனி சேர்க்கை அல்லது பார்வை அல்லது எவ்வகை யிலாவது சம்பந்தம் இருந்தாலும், திருமணம் தடைப்படும் அல்லது ஏன் திருமணம் செய்தோம் என்று வருந்துப்படியாக திருமண வாழ்க்கை இருக்கும். எலியும், தவளையும் காலைக் கட்டிக்கொண்ட கதை தான்.
சிலருக்கு எப்போது திருமணமாகுமென்று தவியாய்த் தவித்தபின் திருமணம் நடக்கும். குறிப்பாக 40 வயது நடப்பிலோ அல்லது அதைக் கடந்து ஓரிரு ஆண்டுகளிலோ நடப்பதுண்டு.
இதற்கு ஜாதகரது லக்னமோ, லக்னத்தின் அதிபதி கிரகமோ சூரியனுக்கும் சனிக்குமிடையில் இருக் கும். அல்லது சனியும் சூரியனும் சமசப்த மாக- அதாவது ஒருவருக்கொருவர் 7-ஆவது வீட்டில் இருந்தால் மேலே கூறியபடி திருமணம் நடக்கும்.
சிலருக்கு அழகு, இளமை, நல்ல குடும்பம், பொருளாதார வசதி என்று எல்லாமே இருந்தும், எவ்வளவு முயற்சி செய்தாலும் ஏதாவதொரு தடை ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்.
அப்படியே நடந்தாலும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமென்பதற்கு உத்தர வாதமில்லை.
களத்திரகாரகன் சுக்கிரன் கடகத்திலோ சிம்மத்திலோ இருக்க, அவருக்கு சூரியன் மற்றும் சந்திரனின் தொடர்பு எவ்வகை யிலாவது ஏற்பட்டிருப்பதைக் காணலாம்.
சரி; எப்படியோ தாமதமானாலும் நல்ல படியாக திருமணம் நடந்துவிட்டதே என்று நிம்மதியாக சிலருக்கு இருக்க முடிவதில்லை.
இரண்டாம் திருமணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. உபயகளத்திர ஸ்தானம் என்னும் பதினொன்றாம் பாவம் பாதிக்கப் பட்டு, ஏழாமிடம் அல்லது ஏழாமதிபதியின் தொடர்பு ஏற்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
சிலருக்கு முதல் திருமணம் தோல்வி யடைந்து இரண்டாம் திருமணமாவது நல்லபடியாக அமையுமா என்றால், அதிலும் மகிழ்ச்சி மருந்துக்கும் இருக்காது. இவர்கள் ஜாதகத்தில் சுக்கிரன் பதினொன்றில் இருப்பதும், பதினொன்றுக்குடையவன் வக்ரம் பெற்றிருப்பதும் காரண மாக இருப்பதைக் காணலாம்.
இப்படி இன்னும் பல கிரக அமைப்புகளைக் கூறிக் கொண்டே போகலாம். சிலருக்கு ஜாதகப்படி இளமையிலேயே திருமணம் நடக்குமென்று கூறுவார்கள். இன்னும் சிலருக்கு இன்ன வருடம், மாதத்துக் குள் உறுதியாக நடந்துவிடும் என்று கூறியிருப் பார்கள். பெரும்பாலும் "குருபலன் வந்து விட்டது; கண்டிப்பாக நடக்கும்' என்பது தான் பலரின் அனுபவமாக இருக்கிறது. ஆனால், குரு பலன் வந்தும் திருமணம் கூடி வராமல் தவிப்பதையும் பார்க்க முடிகிறது.
காரணம், அவரவர் ஜாதகப்படி முற்பிறவி களில் செய்த கர்மவினைகளே என்று ஜோதிடம் கூறுகிறது. ஸ்திரீ சாபம், பித்ரு சாபம், புத்திர சாபம், களத்திர சாபம், சர்ப்ப சாபம், குலதேவதா சாபம் என்று தீவிரமான பிரச்சினைகளே காரணமாக இருக்கும். இதற்கு மந்திர சாஸ்திரப்படி உரிய பரிகாரங் களைச் செய்தால், அதிலிருந்து நிவாரணம் பெறமுடியும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/krishnan-t.jpg)