திங்கட்கிழமையன்று சிவபெருமானை வழிபட்டால் சிறப்பான திருமண வாழ்க்கை அமையும்.
புராண காலத்தில் அன்னை பார்வதி, சிவபெருமானைக் கணவனாகப் பெற திங்கட் கிழமை விரதமிருந்தாள். அப்போது சிவன் நேரில் தோன்றி வரமருளினார். "பெண்களின் ஜாத கத்தில் தோஷமிருந்தால், அவர்கள் திங்கட் கிழமை சிவனை வழிபட்டால் நல்ல கணவன் அமைவான்' என்ற வரமே அது.
ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் சரியில்லை யென்றால் திருமணத்தடை ஏற்படும். சுக்கிரன் பாவகிரகத்துடன் இருந்தாலும் திருமணத் தடை உண்டாகும். சனி பகவான் லக்னத்தில் இருந்தால், சனியின் 7-ஆவது பார்வை 7-ஆம் பாவத்திற்கு இருக்கும். அதனால் திருமணத் தடை உண்டாகும்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 12-ஆவது பாவத்தில் சூரியன் இருந்தாலும்; செவ்வாய் லக்னம் அல்லது 4, 7, 8, 12-ல் இருந்தாலும் திருமணத்தடை ஏற்படும்.
செவ்வாய், பாவகிரகத்துடன் இருந்தால் திருமணம் நிச்சயம் செய்யப்படும் வேளையில் பிரச்சினைகள் ஏற்படும்.
செவ்வாய், ராகு, சூரியன் சேர்ந்து 4, 8, 12-ல் இருந்தால் திருமண ஏற்பாடுகள் செய்யப் படும்போது வீட்டில் பிரச்சினைகள் ஏற்படும். யாருக்காவது உடல்நலம் பாதிக்கப்படும். பணப்பிரச்சினை உண்டாகும். அதனால் திருமணத்தில் தடை ஏற்படும்.
சில பெண்களுக்கு மனதில் நினைக்கும் கணவன் கிடைக்காமல் போவதற்குக் காரணம்- அவர்களுடைய ஜாதகத்தில் 7-ஆம் பாவத்திலிருக்கும் பாவகிரகங்கள்தான். 7-ஆம் பாவத்தில் ராகு அல்லது கேது இருந்து, 8-ஆம் பாவத்தில் சூரியன், செவ்வாய் அல்லது செவ்வாய், சனி இருந்தால், திருமணத் தடை உண்டாகும். திருமணம் நிற்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.
4-ஆவது பாவத்தில் சூரியன், சுக்கிரன் இருந்து, அதற்குக் கேந்திரத்தில் சனி இருந்தால் திருமணத்தடை உண்டாகும்.
2-ஆம் பாவம் கெட்டுப்போய் அல்லது 2-ஆம் பாவத்தில் பாவகிரகம் இருந்து, 7-ஆம் பாவத்திற்கு அதிபதி பலவீனமாக அல்லது அஸ்தமனமாக இருந்தால் திருமண விஷயத்தில் தடை ஏற்படும். திருமணம் நடந்தாலும் பிரச்சினைகள் உண்டாகும்.
ஒரு வீட்டின் தென்மேற்கு திசையில் கழிவுநீர் அறை அல்லது கிணறு இருந்தால் அங்கு திருமணத்தடை இருக்கும்.
ஒரு வீட்டின் கிழக்கு மத்திய பாகத்தில் அல்லது வடகிழக்குப் பகுதியில் சமையலறை இருந்தால் அந்த வீட்டில் திருமணத்தடை ஏற்படும்.
ஒரு வீட்டின் வடகிழக்கு துண்டிக்கப் பட்டிருந்தால், அங்கு வசிக்கும் திருமண வயதிலிருப்பவர்கள் தென்மேற்கு திசையில் படுத்தால் திருமணத்தடை ஏற்படும். ஒரு வீட்டிற்குத் தெற்கில், தென்கிழக்கில் பிரதான வாசல் இருந்து அங்கு நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந்தால் திருமணத்தடை உண்டாகும்.
ஒரு வீட்டிற்கு தென்கிழக்கு வாசல் இருந்து, திருமண வயது கொண்ட ஆணோ பெண்ணோ தென்மேற்கு திசையில் படுத்தால் அவர்களுக்கு திருமணத்தில் தடை உண்டாகும்.
ஒரு வீட்டிற்கு எதிரே காலி யான இடம் அல்லது மைதானம் அல்லது பெரிய தோட்டம் இருந்து, அந்த வீட்டிலிருக்கும் ஆணுக்கோ பெண்ணுக்கோ செவ்வாய் தோஷம் இருந்தால் அவர்களுக்குத் திருமண தடை உண்டாகும்.
ஒரு வீட்டின் பிரதான வாசல் மேற்கு மத்திய திசையில் இருந்து, அதற்கு நேரெதிரில் கிழக்கு மத்திய பகுதியில் கிணறு இருந்தால், அங்கிருப்பவர்களுக்கு திருமணத்தடை உண்டா கும். செவ்வாயும் ராகுவும் அவர்களுடைய ஜாதகத்தில் சரியான நிலையில் இருக்காது.
ஒரு வீட்டின் வடமேற்கில் பிரதான வாசல் இருந்து, திருமண வயதிலுள்ள ஆண் அல்லது பெண்ணின் படுக்கையறை தென்கிழக்கில் இருந் தால், அவர்களுக்குத் திருமணத் தடை ஏற்படும்.
பரிகாரங்கள்
பெண்கள் திங்கட்கிழமை காலையில் குளித்துவிட்டு, ஒரு செம்பில் நீர், ஒரு பாத்திரத் தில் பால் எடுத்து வில்வம் அல்லது எருக்கம்பூ, சிவப்பு மலர், பச்சரிசி, குங்குமம், மஞ்சள் ஆகிய வற்றுடன் சிவனுக்கு பால், நீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். சிவனுக்கு மலர் களால் அலங்காரம் செய்து, "நமசிவாய' மந்திரத் தைக் கூறவேண்டும். குறைந்தபட்சம் 16 திங்கட் கிழமை இந்த பூஜையைச் செய்தால் ஜாதகத் திலுள்ள தோஷங்கள் நீங்கி, திருமணம் நடக்கும்.
ஆண்கள் திங்கட்கிழமை சிவனை வழிபட்டு "தாய் பார்வதியைப் போன்ற ஒரு மனைவி எனக் குக் கிடைக்க வேண்டும்' என்று வேண்டிக் கொள்ள, நிச்சயம் நல்ல மனைவி அமைவாள்.
செல்: 98401 11534