ரு மனிதனுடைய வாழ்க்கை அவனுடைய பூர்வஜென்ம புண்ணிய- பாக்கிய ஸ்தான வலிமைக்கேற்ப அமைகிறது. மனிதன் இப்பிறவியில் அனுபவிப்பதெல்லாம் அவனுடைய கர்மப் பலன்களேயாகும். இந்த கர்மப் பலன்களைக் கொடுக்கும் கிரகம் கர்மகாரகன் சனி. இந்தப் பலன்களை அனுப விப்பது ஜீவாத்மா. ஜீவாத் மாவைக் குறிக்கும் கிரகம் தர்மகாரகன் குரு என்ப தால், மனிதனுக்கு ஏதாவது ஒரு ஆசை எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும். ஆசைகள் அழிந்துவிட்டால் அவன் முக்தியை நோக்கிப் பயணம் செய்வான்.

மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் வசதி வாய்ப்புடன்- செல்வச் செழிப்புடன் வாழவேண்டு மென்ற ஆசை இருக்கும்.

ஒருசிலர் பிறப்புமுதல் இறப்புவரை செல்வச் செழிப்புடன் வாழ் கிறார்கள். ஒருசிலர் பிறப் புமுதல் இறப்புவரை கஷ்டத்துடன் வாழ் கிறார்கள். ஒருசிலருக்கு செல்வச்செழிப்பும் வறுமையும் மாறிமாறி வந்துகொண்டிருக்கும்.

வாழ்வில்சீரான பலனை அனுபவிப் பவர்களின் முன்னோர்கள் தங்கள் வாரிசுகளுக்கு பாக்கியப் பலன்களைத் தந்து சென்றவர்கள். வாழ்வில் அடிக்கடி ஏற்ற- இறக்கங்களை சந்திப் பவர்களின் முன்னோர்கள், பாவத்தை தன் சந்ததி யினருக்கு சேர்த்துச் சென்றுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பாவம் அவர்களு டைய சந்ததியினரை பாதிக்கச் செய்யும். அந்தப் பாவமானது தீர்க்கப்படும் வரை தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

Advertisment

தலைமுறை சாபம் இருந்தால் அடிக்கடி கஷ்டங்கள் வந்துகொண்டே இருக்கும். காலபுருஷ தர்மஸ்தான அதிபதி குரு; காலபுருஷ கர்மஸ்தான அதிபதி சனியின் சம்பந்தமே முன்னோர்களின் பாவ- புண்ணியப் பலன்களை எடுத்துச் சொல்லும். குரு, சனி சம்பந்தம் ஒருசிலருக்கு பெரும் யோகத்தையும், பலருக்கு துயரத்தையும் தருகிறது. பெரும்பாலும் தலைமுறையாகத் தொடரும் சாபத்தின் பின்னணியிலிருப்பது பிரம்மஹத்தி தோஷமே!

பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

ஒருவரது ஜாதகத்தில் குருவும் சனியும் இணைந்தாலோ, இந்த இரு கிரகங்களும் சாரப் பரிவர்த்தனை பெற்றாலோ, சமசப் தமப் பார்வை பெற்றாலோ பிரம்மஹத்தி தோஷமுள்ளது என கூறலாம். குரு, சனி சம்பந்தமே மனிதனின் எண்ண அலை களையும், கர்மப் பலன்களையும் இணைக்கும் பாலம். எனவே, பெரும்பான்மையான ஜாதகத் தில் குரு, சனி சம்பந்தம் ஏதாவது ஒருவிதத் தில் இருக்கும்.

Advertisment

இந்த கிரக இணைவு ஜாதகருக்கு யோகமா?

சாபமா என்பதை ஜாதகத்தின் 1, 5, 9-ஆம் பாவகங்கள் பெற்ற வலிமையையும்; குரு, சனிக்கு அஷ்டம, பாதக ஸ்தானங்களுடன் சம்பந்தத்தையும் வைத்தே முடிவுசெய்ய வேண்டும். குரு, சனி சம்பந்தம் மட்டுமே பிரம்மஹத்தி தோஷமாக நிச்சயம் உருவெடுக்காது. மேலும், இந்த தோஷம் தசாபுக்தி, அந்தர நாதர்களுடனும், கோட் சாரத்துடனும் சம்பந்தம் பெறும்போதே வினைப்பயனை முழுவதும் அனுபவிக்கச் செய்கிறது. தோஷம் என கூறும் இந்த கிரக சம்பந்தம், பலரின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையைத் தந்திருக்கிறது.

எத்தகைய தோஷமாக இருந்தாலும், எல்லா காலகட்டத்திலும் சாதக- பாதகப் பலனைத் தராது. அதேபோல, தோஷங் களை ஜனனகாலரீதியான தோஷம், கோட்சாரரீதியான தோஷம் என இரண்டாக வகைப்படுத்தலாம். ஜனன கால ஜாதகத்திலுள்ள தோஷம் எப்பொழுதும் 25 விழுக்காடு பலனைச் செய்துகொண்டே இருக்கும். கோட்சாரம், தசாபுக்தியுடன் சம்பந்தம் பெறும்போது 100 விழுக்காடு பலன் தரும். கோட்சார சனி, பிறப்பு ஜாதகத்திலுள்ள குருவுக்கு சம்பந்தம் பெறவேண்டும் அல்லது கோட்சார குரு, பிறப்பு ஜாதகத்திலுள்ள சனிக்கு சம்பந்தம் பெறவேண்டும்.

ss

கோட்சார குரு, சனி, ஜனன குரு, சனியுடன் சம்பந்தம் பெறும்போது மனித வாழ்வில் நடைபெறும் சுப- அசுப நிகழ்வுகளின் பட்டியலை அளவிடமுடியாது. குரு, சனிப் பெயர்ச்சிகள் பலருக்கு வாழ்வில் பெரும் திருப்புமுனையாக இருந்திருக்கின்றன.

ஜனன ஜாதகத்தில் ஒரு சம்பவம் நடப் பதற்கான யோக அமைப்பிருந்தால், கோட் சார கிரகங்கள் சம்பவத்தை நடத்திவைக்கும். ஜனன ஜாதகத்தில் இல்லாத பலனை கோட்சாரம் நடத்தித் தராது.

சனி, குரு, ராகு- கேது ஆகியவற்றின் கோட்சாரப் பலன்கள் மிகமுக்கியம்.

கோட்சார சனி, குரு, ஜனன ஜாதகத் திலுள்ள குரு, சனியுடன் சம்பந்தம் பெறும் போது குரு, சனி தசை புக்தி நடந்தால், பாவக வலிமைக்கேற்ப சுப - அசுபப் பலன்கள் நடப்பது உறுதி. குருவும் சனியும் ஜனன ஜாதகத்தில் அஷ்டம பாதக ஸ்தானத் தோடு சம்பந்தப்பட்டால் மட்டுமே அசுபப் பலன் தரும்.

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 4-11-2019 அன்று நடந்த குருப் பெயர்ச்சியால், ஜனன காலத்தில் ஜாதகத்தில் தனுசு, மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய இடங்களில் சனி நின்றவர்களுக்கு சுப- அசுப நிகழ்வுகள் மிகும்.

குரு என்பவர் ஒருவரின் விருப்பத்தை வெளிப் படுத்துபவர். சனி என்பவர் ஒருவரின் கர்மாவை உணர்த்துபவர். மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் பல்வேறு விதமான ஆசைகள் இருக்கத்தான் செய்யும்.

அவனுடைய ஆசை பலிதாகும் ப்ராரப்த கர்மா அவனுடைய ஜாதகக் கட்டத்தில் இருந்தால் கோட் சாரமும் தசாபுக்தியும் சாதகமாகும் காலத்தில் நடத்தி வைப்பார். ஒருவருடைய விருப்பமும் கர்மாவும் இணைய குரு, சனியின் ஆசி வேண்டும். எனவே பல நாள் நிறைவேறாத நியாயமான கோரிக்கை உள்ளவர்களும் ஜனன கோட்சார குரு, சனி சம்பந்தம் ஏற்படும் காலத்தில் முறையான வழிபாடு செய்யும் போது நல்ல பலன் கிடைக்கும்.

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 24-1-2020 அன்று நடக்கும் சனிப் பெயர்ச்சியால், ஜனனகால ஜாதகத் தில் மகரம், மீனம், கடகம், துலாம் ஆகிய இடங் களில் குரு நின்றவர்களுக்கு சுப- அசுப நிகழ்வுகள் மிகும்.

சுபப் பலன்கள் மிகுதியாகவும், அசுபப் பலன்கள் குறையவும் செல்லவேண்டிய திருத்தலங்கள்:

தலைமுறை சாபத்திலிருந்து விடுபட திருவி டைமருதூரிலுள்ள மகாலிங்கேஸ்வரர் ஆலயத் திற்குச் செல்லவேண்டும். இந்த ஆலயத்திற்குச் சென்றுவந்தால் தலைமுறை சாபம் நீங்கி வாழ்வில் ஏற்றம்பெறலாம். இந்த சிவாலயம் சுமார் 1,200 வருடங்களுக்குமேல் பழமையானது. இவ்வாலயம் மூன்று பிராகாரங்களைக் கொண்டது. இம்மூன்றுப் பிராகாரங்களிலும் வலம்வருதல் மிகவும் புனிதமான தாகக் கருதப்படுகிறது.

ss

அஸ்வமேதப் பிராகாரம்

இது வெளிப் பிராகாரமாகும். இந்தப் பிராகாரத் தில் கோவிலை வலம்வருதல் அஸ்வமேத யாகம்செய்த பலனைக் கொடுக்கும் என புராண வரலாறுகள் கூறுகின்றன.

கொடுமுடிப் பிராகாரம்

இது இரண்டாவதும், மத்தியிலுள்ளதுமான பிராகாரம். இப்பிராகாரத்தை வலம்வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கயிலாய பர்வதத்தை வலம்வந்ததற்குச் சமம் என கூறப்படுகிறது.

பிரணவப் பிராகாரம்

இது மூன்றவதாகவும், உள்ளே இருக்கக்கூடியது மான பிராகாரம். இப்பிராகாரத்தை வலம்வருவதால் மோட்சம் கிடைக்குமென கூறப்படுகிறது.

கும்பகோணத்திலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில், மயிலாடுதுறை செல்லும் சாலையில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

தலைமுறை சாபம் நீங்க:

கொங்கு நாட்டில் சிறப்புப் பெற்ற தலம் நட்டாற்றீஸ்வரர் கோவில். ஈரோட்டிலிருந்து கொடுமுடிவழியாக கரூர் செல்லும்வழியில் காங்கேயன் பாளையம் என்ற ஊரில் ஆற்றின் நடுவே இக்கோவில் உள்ளது. இக்கோவிலின் இருபுறமும் காவிரி ஆறு ஓடுகிறது. சாவடிப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பரிசல்துறைக்குச் சென்று நடு ஆற்றில் அமைந்துள்ள இந்தக் கோவிலுக்குச் செல்லலாம்.

செல்: 98652 20406