சென்னையிலுள்ள எனது நாடி ஜோதிட நிலையத்திற்கு, சுமார் 38 வயதுடைய ஒரு பெண், தனது 10 வயது மகளுடன் பலன் கேட்க வந்திருந்தார்.
அந்தப் பெண் "மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தங்களிடம் ஜீவநாடியில் பலன் கேட்டேன். அப்போது அகத்தியர், என் வாழ்க்கை நல்லவிதமாக அமைய சில வழிமுறைகளைக் கூறினார். ஆனால் அதை நான் நம்பாமல், நடைமுறை வாழ்வில், கடைப் பிடிக்காமல், என் மன விருப்பம்போல் செயல்பட்டு வாழ்ந்தேன். இப்போது பல கஷ்டங்களுடன் வாழ்கிறேன். இந்த சிரமங் களிலிருந்து விடுபடவும், இழந்ததை மீண்டும் அடையவும், என் வருங்கால வாழ்வு நல்ல முறையில் அமையவும் அகத்தியரிடம் வழி கேட்டு வந்துள்ளேன்'' என்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vethi.jpg)
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றிப் பலன்கூறத் தொடங்கினார்.
"இவளின் இப்பிறவி வாழ்க்கை விதி நிலையை முன்பே கூறியும், அந்த வழிமுறைகளை அலட்சியப்படுத்தி வாழ்ந்த தால், இப்போது அவதியுற்று வாழ்வதாகச் சொல்கிறாள்.
இப்போதும் நான் கூறுவ தைக் கேட்டுக் கடைப்பிடித்து வாழ்வாளா?'' என்றார்.
"அகத்தியர் கூறியபடி வாழாமல் பல அல்லலுக்கு ஆளாகிவிட்டேன். இப் போது அனுபவத்தில் அறிந்து மனம் திருந்திவிட்டேன். இனி அவர் கூறுவதையே கடைப்பிடித்து வாழ்வேன்'' என்றார் அந்தப் பெண்.
"இவள், அரசு வேலை யில் நல்ல சம்பளத்தில் பணியாற்றுகிறாள். கல்லூரி யில் படிக்கும் காலத்திலேயே ஒருவனைக் காதலித்து, தன் பெற்றோர், குடும்பத்தி னரை எதிர்த்துத் திருமணம் செய்துகொண்டாள். அவன் ஆண்மைக் குறைவுள்ளவன். அதனால் அவன்மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்காதென்பதை அறிந்து, இவள் செயற்கை மருத்துவம்மூலம் இந்தப் பெண் குழந்தையைப் பெற்றுக் கொண்டாள். இந்தக் குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளில், கணவனைவிட்டுப் பிரிந்து தனித்து வாழ்கிறாள்.
ஒருவன், தன்னை மணம் புரிந்துகொள்ள ஆசைப்படுவதாகக் கூறி, அவனைத் திருமணம் செய்துகொண்டால் இந்த மணவாழ்க்கையாவது நல்லபடியாக அமையுமா என்று அவனைப் பற்றி அறிந்து கொள்ள இரண்டு வருடத்திற்குமுன்பு நாடியில் பலன்கேட்க வந்தாள்.
"அவன் கலைத்தொழில் செய்பவன். பொய் சொல்வான்; ஏமாற்று வேலைகள் எல்லாம் செய்வான். பார்ப்பதற்கு சாது போன்று இருப்பான்; ஆனால் வஞ்சகன். பார்வையிலும் பேச்சிலும் நல்லவன் போல் தெரிவான். நடிப்பில் மிக வல்லவனாக இருப்பான்' என்று அவன் குணத்தைப் பற்றிக் கூறினேன்.
இவன் இதற்குமுன்பு இரண்டு பெண்களிடம் பழகி அவர்களிடமிருந்த பணத்தை ஏமாற்றி வாங்கிக்கொண்டு, அவர்களைவிட்டு விலகிவிட்டான். அந்தப் பெண்கள் தமிழ்நாட்டை விட்டுச் சென்று, இப்போது வடநாட்டில் வசித்து வருகிறார்கள். இப்போது இவளைப் பற்றியும், இவளிடமுள்ள பணத்தையும் நன்கு அறிந்து கொண்டு, இவளையும் குழந்தையையும் ஆயுள்வரைக் காப்பாற்றுவேன் என்று பொய் சத்தியம் செய்து, "நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம்' என்று கூறுகிறான். "உண்மையில் பணத்தைப் பறிக்கவே நாடகமாடுகிறான். அவன் நம்பத் தகுந்தவன் அல்ல. அவனைவிட்டு விலகு. உன்னையும், உன் குழந்தையையும், பணத்தை யும் காப்பாற்றிக்கொள்' என்று அன்றே கூறினேன்.
அன்று யான் கூறியதை அலட்சியம் செய்து, அவனைத் திருமணமும் செய்து கொண்டாள். அவனும் எதற்காக இவளைத் திருமணம் செய்தானோ, அதைச் சரியாகச் செய்தான். இவள் சேமித்து வைத்திருந்த பணத்தையெல்லாம் ஏமாற்றி வாங்கிவிட்டான். இப்போது இவளின் மாத சம்பளத்தைத் தவிர வேறு எதுவுமில்லையென்று தெரிந்தவுடன், இவளைப் பார்ப்பதையும், வீட்டிற்கு வருவதையும் குறைத்துக்கொண்டான். இவள் இப்போது, அன்று நான் கூறியது தான் தன் வாழ்வில் நடந்தது என்று உணர்ந்து, அவளிடம் இழந்த பணம் திரும்பக் கிடைக்குமா? தன் வருங்கால வாழ்க்கை நிலை என்ன என்பது குறித்து அறிந்துகொள்ள இப்போது வந்துள்ளாள்.
இவள் இழந்த பணம் திரும்பக் கிடைக்காது; தரமாட்டான். இனிவரும் வாழ்வில் இவள் பணம், பொருளைக் காப்பாற்றிக் கொண்டு கஷ்டமில்லாமல் வாழச் சொல். இவளுக்கு நிம்மதியான குடும்ப வாழ்க்கை இப்பிறவியில் கிடையாது. எந்த ஆணையும் நம்பி ஏமாந்துவிட வேண்டாம். சிவத்தின் உறவு நீக்கி, சக்தியை மட்டுமே அனுபவித்து வாழவேண்டும் என்பதைப் புரிந்து வாழட்டும்.
இந்தப் பிறவியில் இவளுக்கு மன்னன் சுகமில்லையடா, மண வாழ்வு ஏக்கமடா. எத்தனைப்பேர் இணைந்தாலும் இன்ப சுகமில்லை. இவளுக்கு இதுதான் கடைசிப் பிறவி. இனி பூமியில் பிறவி இல்லை. இவள் அனுபவிக்கப் பிறந்தவள் அல்ல. ஊழ்வினையை அனுபவித்துத் தீர்த்து முடிக்கவே பிறந்தவள் என்ற விதியைத் தெரிந்துகொள்ளட்டும்'' என்று கூறி ஓலையிலிருந்து மறைந்தார்.
"அகத்தியர் அன்று கூறியதை அலட்சியப் படுத்தியதால், இன்று அவதிபடுகிறேன். என் பிறப்பின் ரகசியத்தையும், நிகழ்வுகளுக்குக் காரணத்தையும் அறிந்துகொண்டேன். இனி என் மகளுக்காகவே வாழ்வேன். அவள் வாழ்க்கையும், என் வாழ்க்கையைப்போல் அமைந்துவிடாமல் இருக்க கவனமாக செயல்படுவேன்'' என்று கூறி விடைபெற்றுச் சென்றார்.
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-10/vethi-t.jpg)