Advertisment

தாம்பத்திய உறவுகளின் சாஸ்திர உண்மை! -பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை

/idhalgal/balajothidam/shastra-truth-marital-relations-pandit-map-child

ண்- பெண் இருவருக்கும் திருமணம் நடைபெற்றபின் முதலிரவு முதன்வை வாய்ந்தது. வாழ்க்கை முழுவதும் நினைவில் நிற்கும் அந்த நாள் சீராக அமைவது சிறப்புடையதாகும். சிலர் திருமணமான அன்றே நேரம் காலம் பார்க்காமல் மண்டபத்திலேயே முதலிரவை நிர்ணயம் செய்துவிடுவதுமுண்டு. ஒவ்வொரு இனத்தவரும் அவரவர்களின் வயது முதிர்ந்த அனுபவசாலிகள் கூறும் இலக்கணத்தை நடைமுறைப்படுத்துவார்கள்; அதுவும் உண்டு.

நேராக சாஸ்திரத்தைப் பார்ப்போம்.

Advertisment

ரோகிணி, உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகியவை தாம்பத்தியத்திற்கு யோகமான நட்சத்திரங்கள்.

s

திங்கள், புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகள் உகந்தவை.

சனி, செவ்வாய், ஞாயிறு ஒதுக்கப்பட வேண்டிய நாட்கள். சதுர்த்தசி, அஷ்டமி, நவமி, சதுர்த்தி, அமாவாசை, பௌர்ணமி ஏற்ற

ண்- பெண் இருவருக்கும் திருமணம் நடைபெற்றபின் முதலிரவு முதன்வை வாய்ந்தது. வாழ்க்கை முழுவதும் நினைவில் நிற்கும் அந்த நாள் சீராக அமைவது சிறப்புடையதாகும். சிலர் திருமணமான அன்றே நேரம் காலம் பார்க்காமல் மண்டபத்திலேயே முதலிரவை நிர்ணயம் செய்துவிடுவதுமுண்டு. ஒவ்வொரு இனத்தவரும் அவரவர்களின் வயது முதிர்ந்த அனுபவசாலிகள் கூறும் இலக்கணத்தை நடைமுறைப்படுத்துவார்கள்; அதுவும் உண்டு.

நேராக சாஸ்திரத்தைப் பார்ப்போம்.

Advertisment

ரோகிணி, உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகியவை தாம்பத்தியத்திற்கு யோகமான நட்சத்திரங்கள்.

s

திங்கள், புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகள் உகந்தவை.

சனி, செவ்வாய், ஞாயிறு ஒதுக்கப்பட வேண்டிய நாட்கள். சதுர்த்தசி, அஷ்டமி, நவமி, சதுர்த்தி, அமாவாசை, பௌர்ணமி ஏற்ற திதிகளல்ல. இருவரின் ஜென்ம நட்சத்திரம், அதற்கு 10, 19-ஆவது நட்சத்திரம் ஆகாத நட்சத்திரங்களாகும். துவாதசி திதியும் ஏற்றதல்ல.

Advertisment

ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், மீனம் ஏற்ற லக்னங் களாகும்.

உடலுறவுக் காலத்தில் அமையும் கிரகநிலைகளும் யோகங்களைத் தருமாம். இதனைக் கடைப்பிடித்தால் கருத்தரிப்பு மையத்தை நாடாதிருக்க சாஸ்திரம் வழிகோளும். வாடகைத் தாயையும் நாடாதிருக்கலாம்.

சூரியனும் குருவும் ஆண் ராசியில் இருக்கும் நேரம் லக்னமாக அமைந்தால் ஆண் குழந்தை பிறக்குமாம்.

லக்னத்தில் சனி இருந்து, செவ்வாயும் சந்திரனும் இணைந்து சனியைப் பார்த்தால் குறைப்பிரசவம். தாய்க்கும் உடல்நலக்கேடு வரும். லக்னத்தில் சந்திரன் பாவிகளுக்கிடையே இருந்து, சுபரின் பார்வையில்லாமல் இருந்தால் குறைப்பிரசவம்.

சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் ஆட்சியாகவும், குரு 1, 5, 9-லும் இருக்கும் காலத்தில் உறவுகொண்டால் ஆண் குழந்தை பிறக்கும்.

லக்னம் பெண் ராசியாகி, அதில் சுக்கிரன் இருந்து சந்திரன், செவ்வாய், புதன், குரு ஆண் ராசியிலிருந்தால் இரட்டைக் குழந்தைப் பிறக்கும். லக்னம் பெண் ராசியாகி, சந்திரன், செவ்வாய், குரு, சூரியன் பெண் ராசியிலிருந்தாலும் இரட்டைக் குழந்தைப் பிறக்கும்.

மூன்றாமின குழந்தை

லக்னத்தில் புதன், சந்திரன் இருந்து செவ்வாய் பார்ப்பது; சூரியன் பெண் ராசி, லக்னத்தில் இருந்து. புதன் சனியால் பார்க்கப்படுவது; கடகம் அந்த லக்னமாக அமைந்து, அதில் சந்திரன் இருந்து, அதை செவ்வாய், சனி பார்ப்பது; லக்னத்திற்கு 5, 9-ல் செவ்வாய் இருந்து அதை பாவ கிரகங்கள் பார்ப்பது.

குழந்தைப் பிறப்பு சார்ந்த நுட்பமான அக்கால ரகசியங்கள்

வீட்டுக்கு விலக்காகி நீராடியபின் நான்கு நாட்கள் உடலுறுவைத் தவிர்ப்பது நலம். 5-ஆவது நாளில் உடலுறவு கொள்வதால் பெண் கரு உதயமாகுமாம். 6-ஆவது நாளில் உறவு கொள்வதால் ஆண்கரு உற்பத்தியாகுமாம்.

7-ஆவது நாளில் உறவுகொண்டால் பெண்மகவு பிறக்குமாம். 8-ஆவது நாளில் கூடினால் ஆண் குழந்தைப் பிறக்குமாம். 9-ஆவது நாளில் உறவுக்குக் கிடைப்பது பெண் குழந்தையாம். 10-ஆவது நாளில் ஆண் குழந்தை. 11-ஆவது நாளில் பெண். 12-ஆவது நாள் ஆண். 13-ஆவது நாள் பெண். 14-ஆவது நாள், 15-ஆவது நாள் உறவில் மகன் பிறப்பான். 16-ஆவது நாளும் செல்வ மகன்தான் பிறப்பானாம்.

சிலருக்கு கணவன்- மனைவி ஜாதகத்தில் சந்தான பாக்கியத்திற்கான 5, 10, 12-ஆம் இடம் போதிய வலுவில்லாமல் காணப்பட்டால் குழந்தைப் பிறக்க காலதாமதமாகலாம்.

சுலபமான பரிகாரம்

மனைவி மாதவிடாய்க் காலம் வந்த நான்கு நாட்களுக்குப் பின், 5-ஆம் நாள் ஆலயம் சென்று, சிறிது குங்குமப்பூ வாங்கி இரு பொட்டலமாகப் பிரித்து மஞ்சள் துணியில் முடிந்து, இறைவனிடம் மனக் குறையைக் கூறி ஒரு பொட்டலத்தை உண்டிய-ல் போட்டுவிட்டு, மற்றொன்றை வீட்டிற்குக் கொண்டுவந்து பத்திரமாக வைத்து வணங்கி வரவேண்டும். கருவுற்றுப் பிரசவமானபின் இரண்டாவது பொட்டல முடிச்சை அதே கோவில் உண்டியலில் போடுவதால் மனக்குறை தீரும்.

ஒவ்வொரு வாரமும் வியாழனன்று காலை பாதம் கீர் பருகவேண்டும். மாலை திராட்சை சாறு பருகவேண்டும். கருப்பை சீரடையும்.

"த்யாநாதி கால ஸம்ஜாப்ய

பக்த ஸந்தான பாக்கியதா/

மத்யாஹ்ன கால ஸந்தர்ப்யா

ஜயஸம்ஹார ஸூ-நீ//'

என்னும் மந்திரத்தை இயன்ற அளவு ஜெபிப்பது நன்று.

"ஆபிருப்யக்ரோ வீர ஸ்ரீப்ரதோ

விஜயப்ரத/

ஸர்வ வஸ்யகரோ கர்ப்ப

தோஷஹா புத்ர பௌத்ரதா//'

என்னும் மந்திரத்தைப் பெண்கள் பாராயணம் செய்தால் சுகப்பிரசவம் நடக்கும்

செல்: 93801 73464

bala200924
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe