ன்றைய உலகில் பணம் இருந்தால்தான் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் இருக்கும். பணமென்பது பல வகையில் வரும். சிலருக்கு பூர்வீக வழியில் பண உதவிகள் இருக்கும். சிலர் கஷ்டப்பட்டு உழைத்துதான் சம்பாதிக்கவேண்டிய நிலை இருக்கும். ஒருசிலருக்கு திடீர் லாபத்தால் தன லாபம், பொருள் வரவுண்டாகும். திடீர் தன வரவில் பல வகையுண்டு. அதாவது பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், கொடுக்கல்- வாங்கல் என ஏதாவதொரு வகையில் அனுகூலம் அடைகிறார்கள்.

ஜோதிடரீதியாக பங்குச் சந்தைமூலம் எதிர்பாராத தனச் சேர்க்கை யாருக்கு ஏற்படுகிறதென்று பார்த்தால், நவகிரகங் களில் சாயா கிரகமான ராகு இதற்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறார். ஜென்ம லக்னத் திற்கு அல்லது சந்திரனுக்கு உபஜெய ஸ்தானங்கள் 3, 6, 11 ஆகும். அதில் குறிப்பாக லாப ஸ்தானமான 11 மற்றும் 6-ல் அமையும் கிரகங்கள் திடீர் அதிர்ஷ்டத்தை உண்டாக்குகிறது. உபஜெய ஸ்தானங் களில் பாவ கிரகங்கள், சுப கிரகங்களின் பார்வையுடன் அமைகின்றபோது திடீர் தனயோகம் உண்டாகிறது.

stockmarket

Advertisment

நவகிரகங்களில் குரு தனகாரகன் என்பதால், ஒருவர் ஜாதகத்தில் குரு வலுவாக அமையப் பெற்றவர்கள் கொடுக்கல்- வாங்கல், பணத்தை முதலீடு செய்வதன்மூலம் தன லாபத்தை அடைவார்கள். அதுவே குரு நீசம் அல்லது வக்ரகதியில் இருந்தால் கொடுக்கல்- வாங்கல், பணத்தை முதலீடு செய்யும் விஷயங்களில் நஷ்டத்தையடைய நேரிடும்.

ஜென்ம லக்னத்திற்கு அல்லது சந்திரனுக்கு 6-ஆம் வீட்டதிபதியும் 11-ஆம் வீட்டதிபதியும் பலம்பெற்று, அதில் ராகு அமையப்பெற்றவர்கள் பங்குச் சந்தைமூலமாக தன லாபத்தை அடையமுடியும்.

ஜென்ம லக்னத்திற்கு அல்லது சந்திரனுக்கு 6, 11-க்கு அதிபதிகள் வலுப்பெற்று, எந்த கிரகம் சேர்க்கை பெற்றிருக்கிறதோ அந்த கிரகம் சார்ந்த துறைகளில் ஒருவர் முதலீடு செய்தால் நல்ல லாபத்தை அடையமுடியும்.

லக்னத்திற்கு அல்லது சந்திரனுக்கு 6, 11-க்கு அதிபதிகள் வலுப்பெற்று, உடன் சூரியன் வலுவாக இருந்தால் அரசு சார்ந்த துறைகளில் முதலீடு செய்வதன்மூலம் எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.

லக்னத்திற்கு 6,11-க்கு அதிபதிகள் வலுப்பெற்று, உடன் சந்திரன் வலுவாக இருந்தால் உணவுப் பொருட்கள், நீர்நிலை, ஏற்றுமதி- இறக்குமதி தொடர்புடைய துறைகளில் முதலீடு செய்வதன்மூலம் அனுகூலங்கள் ஏற்படும்.

லக்னத்திற்கு அல்லது சந்திரனுக்கு 6, 11-க்கு அதிபதிகள் வலுப்பெற்று, உடன் செவ்வாய் வலுவாக இருந்தால் பூமி, விவசாய நிலங்கள், நெருப்பு சார்ந்த தொழில் செய்யும் நிறுவனங்களில் முதலீடு செய்வதன்மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

லக்னத்திற்கு அல்லது சந்திரனுக்கு 6, 11-க்கு அதிபதிகள் வலுப்பெற்று, உடன் சுக்கிரன் வலுவாக இருந்தால் கலை, சினிமா, ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் பங்குச் சந்தைமூலம் முதலீடு செய்தால் அதிர்ஷ்டத்தை அடையலாம்.

லக்னத்திற்கு அல்லது சந்திரனுக்கு 6, 11-க்கு அதிபதிகள் வலுப்பெற்று, உடன் புதன் வலுவாக இருந்தால் கல்வி நிறுவனங் கள், கம்ப்யூட்டர், தகவல் தொடர்புத் துறை களில் முதலீடு செய்தால் தனலாபம் கிடைக்கும்.

லக்னத்திற்கு அல்லது சந்திரனுக்கு 6, 11-க்கு அதிபதிகள் வலுப்பெற்று, உடன் குரு வலுவாக இருந்தால் நிதி நிறுவனங் களில் முதலீடு செய்தால் தனலாபம் கிடைக்கும்.

லக்னத்திற்கு அல்லது சந்திரனுக்கு 6, 11-க்கு அதிபதிகள் வலுப்பெற்று, உடன் சனி வலுவாக இருந்தால் இரும்பு, தொழில்நுட்பம், எண்ணெய் தொடர்புத் துறைகளில் முதலீடு செய்தால் தனலாபம் கிடைக்கும்.

ஜென்ம லக்னத்திற்கு 6, 11-ல் பாவிகள் அமையப்பெற்று அதன் தசாபுக்தி நடைபெறுகின்றபோது திடீர் தனயோகம் உண்டாகிறது.

6, 11-க்கு அதிபதிகள் யோகத்தை உண்டாக்குவார்கள் என்றாலும், அவர் களுடன் விரயாதிபதி சேர்க்கை பெறுவது, பாதகாதிபதி சேர்க்கை பெறுவது போன்ற அமைப்புள்ளவர்கள், குரு வக்ரம் அல்லது நீசம் பெற்றவர்கள் பங்குச் சந்தை போன்றவற்றில் முதலீடு செய்யாமலிருப்பது மிகவும் உத்தமம்.