Advertisment

சனிபகவானின் ஆலயத் தரிசனம்! - சூரியஜெயவேல்

/idhalgal/balajothidam/shani-bhagavans-temple-darshan-suriyajayvel

கும்பகோணம்- வலங்கைமான் சாலையிலுள்ள குருஸ்தலமான ஆலங்குடியில் ஆபத் சகாயேஸ்வரர் திருக்கோவி-ல் காகத்துக்குப் பதில் கருடனை வாகனமாகக்கொண்டு தரிசனம் தருகிறார்.

Advertisment

* கும்பகோணம்- கதிராமங்கலம் சாலையிலுள்ள திருக்கோடிக்காவல் தலத்தில் சனிபகவான் பால சனீஸ்வரராகக் காட்சியளிக்கிறார்.

* தென்காசி- மதுரை சாலை யிலுள்ள இலத்தூரில் ஸ்ரீமதுநாதர் திருக்கோவிலில் தனிச்சந்நிதியில் அபய ஹஸ்த நிலையில் கைகளைக் காட்டிய படி காட்சிதருகிறார்.

* திருச்செந்தூரில் கோவிலில் சனீஸ் வரர் மட்டும் 4 அடி உயரத்தில் கிழக்கு நோக்கிய நிலையில் காக்கை வாகனத் தில் காட்சிதருகிறார்.

Advertisment

* கோவை- பாலக்காடு சாலை யிலுள்ள நவகிரக மலையாளதேவி துர்க்கா பகவதியம்மன் ஆலயத்தில் சனிபகவான் வலது காலை காகத்தின்மீது வைத்து அருள்பாலிக்கும் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது.

ss

* பெரும்பாலும் தனித்தே காட்சிதரும் சனி பகவான் அபூர்வமாக சில தலங்களில் தம்பதி சமேத ராக காட்சியளிக்கிறார். அரக்கோணம்- திருத்தணி பாதையிலு

கும்பகோணம்- வலங்கைமான் சாலையிலுள்ள குருஸ்தலமான ஆலங்குடியில் ஆபத் சகாயேஸ்வரர் திருக்கோவி-ல் காகத்துக்குப் பதில் கருடனை வாகனமாகக்கொண்டு தரிசனம் தருகிறார்.

Advertisment

* கும்பகோணம்- கதிராமங்கலம் சாலையிலுள்ள திருக்கோடிக்காவல் தலத்தில் சனிபகவான் பால சனீஸ்வரராகக் காட்சியளிக்கிறார்.

* தென்காசி- மதுரை சாலை யிலுள்ள இலத்தூரில் ஸ்ரீமதுநாதர் திருக்கோவிலில் தனிச்சந்நிதியில் அபய ஹஸ்த நிலையில் கைகளைக் காட்டிய படி காட்சிதருகிறார்.

* திருச்செந்தூரில் கோவிலில் சனீஸ் வரர் மட்டும் 4 அடி உயரத்தில் கிழக்கு நோக்கிய நிலையில் காக்கை வாகனத் தில் காட்சிதருகிறார்.

Advertisment

* கோவை- பாலக்காடு சாலை யிலுள்ள நவகிரக மலையாளதேவி துர்க்கா பகவதியம்மன் ஆலயத்தில் சனிபகவான் வலது காலை காகத்தின்மீது வைத்து அருள்பாலிக்கும் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது.

ss

* பெரும்பாலும் தனித்தே காட்சிதரும் சனி பகவான் அபூர்வமாக சில தலங்களில் தம்பதி சமேத ராக காட்சியளிக்கிறார். அரக்கோணம்- திருத்தணி பாதையிலுள்ள மங்கம்மாபேட்டை என்ற தலத்தில் சனிபகவான் தனி சந்நிதியில் இடது தொடைமீது மனைவி நீலாதேவியை அமர்த்திக்கொண்டு திருக்கல்யாணக் கோலத்தில் 5 அடி உயரத்தில் காட்சிதருகிறார். இப்படிக் காட்சிதரும் அமைப்பை, "கல்யாண சனி முகூர்த்தம்' என்பார்கள். ப் விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் பாதையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கல்பட்டு கிராமத்தில் சனிபகவானின் விக்கிரகம் நின்ற நிலையில் தனித்துக் காணப்படுகிறது.

ப் கும்பகோணம்- வடமட்டம் பேருந்து பாதை யில் ஒன்று கிலோமீட்டர், தொலைவிலுள்ள கோனேரி ராஜபுரம், சிவன் கோவிலில் மேற்குப் பார்த்த நிலையில் உள்ளார். திருநள்ளாறு செல்லும்முன் நளனும் அவன் மனைவியும் இத்தலத்துக்கு வந்து சனி பகவானை வழிபட்டு அனுக்ரஹம் பெற்றுள்ளனர்.

ப் மற்ற தலங்களில் கறுப்பு வஸ்திரம் தரித்திருக்கும் சனிபகவான் இங்கு மட்டும் வெள்ளையாடை அணிந்து அருள்பாலிக்கிறார். இவருக்கு வெள்ளை எள்ளால் ஆன எண்ணெயில் தீபமேற்றி வழிபடவேண்டும்.

ப் ஆடுதுறை அருகிலுள்ள சூரியனார்கோவிலில் சனி பகவான் மனைவியர் இருவரு டன் தனிச்சந்நிதியில் வாகனமின்றி அருள்புரிகிறார்.

ப் மயிலாடுதுறை அரு கிலுள்ள கூறைநாடு ஸ்ரீ புனு கீஸ்வரர் கோவிலில் சனி பகவானுக்குத் தனிவிமானம், தனிக்கும்பம், தனிச்சந்நிதி உண்டு. இவர் சிவப்பு நிறக் கல்லில் காட்சிதருகிறார்.

ப் திருச்சி தெப்பக்குளத்துக்கு அருகிலுள்ள நாகநாத சுவாமி கோவிலில் சனிப் பெயர்ச்சியன்று சனிபகவான் சுவாமியுடன் வீதிஉலா வருகிறார்.

ப் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் பொங்குச்சனி என்ற பெயரில் தனிச்சந்நிதியில் நின்ற நிலையில் அருள்புரிகிறார்.

ப் பொதுவாக நவகிரகங்கள் நின்ற நிலை யிலேயே எங்கும் காணப்படும். ஆனால், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் சனிபகவான் நவகிரக சந்நிதியில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.

ப் புதுச்சேரி- கோரிமேடு அருகே உள்ள மொரட்டாண்டியில் 27 அடி உயரத்தில் பஞ்சலோக விவேகும் சனீஸ்வரர் அருள் பாலிக்கிறார் ப் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார் கோவிலில் ராம நாதேஸ்வர் பர்வதவர்த்தினி கோவிலில் சனிபகவான் இரண்டு மனைவியருடன் மாந்தி, குளிகன் என இரு பிள்ளைகளுடன் குடும்பசகிதமாக மங்கலசனீஸ்வரர் என்ற பெயரில் தரிசனம் தருகிறார் அவருக்கு எதிரில் காக வாகனம் துஜ ஸ்தம்பமாக உள்ளது. நாச்சியார். கோவில் வண்டிப்பேட்டை நிறுத்தத்தில் மங்கல சனீஸ்வரர் கோவில் எனக் கேட்டால் சொல்வார்கள்.

ப் மயிலாடுதுறை அருகே உள்ள வழுவூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனிபகவான் தனித்த நிலையில் சகல தோஷங்களையும் (ஏழரைச்சனி, அட்டமச்மசனி போன்ற) நிவர்த்தி செய்யும் அருள் மூர்த்தியாக விளங்கு கிறார்! இக்கோவிலில் சனிபகவான் வாகனமான காகம் நாம் விளக்கேற்றும் தீபத்தின் எண் ணெயை குடிக்கும் நிகழ்வு அற்புதமானது!

ப் தேனி மாவட்டம் குச்சனூர் திருத்தலத் தில் சனிபகவான் சுயம்புவாக அருள்பாலிக் கிறார்.

ப் சேலம்மாவட்டம் சங்ககிரியில் சோமேஸ் வர ஆலயத்தில் சந்தேஸ சனிபகவான் தேவியுடன் உள்ளார். தரிசனம் செய்யவேண்டிய ஆலயங்கள்.

ப் சனி தோஷங்களால் பாதிக்கப்பட்ட வர்கள் சனிபகவான் கோவிலில் நல் லெண்ணெய் தீபமேற்றி, எள் முடிச்சு விளங்கேற்றி வழிபடுவதால் தொழல் வளம், துன்பங்கள் தீரும், திருமணத்தடை நீங்கும், சகல வளங்களும் கிடைக்கும்.

ப் சனிபகவான் முல மந்திரம்

"ஓம் சனீஸ்வராய நம.'

தினமும் காலை வேலையில் குளித்துவிட்டு சுத்தமான ஆடை அணிந்து இந்த மந்திரத்தை ஜெபித்தால் சனிபகவான் நலம் தருவர்.

ப் சனி பகவான் காயத்ரி மந்திரம்

"ஓம் காக த்வஜாய வித்மஹே

கட்க ஹஸ்தாய தீமஹி

தந்நோ மந்த: பிரசோதயாத்'

மேற்கண்ட காயத்ரி மந்திரத்தை தினமும் ஒன்பது முறையோ இருபத்தேழு முறையோ உள்ளார்ந்த பக்தியுடன் பாராயணம் செய்தால் சனிபகவான் மிகவும் மகிழ்ந்து கடன் தொல்லைகளையும், தீராத நோய்களையும் தீர்ப்பார்; எல்லா வளங்களையும் தருவர்.

தினம் கூறினால் நன்மை கிட்டும் முனிவர்கள் தேவர் ஏனை முர்த்திகள் முதலானோர்கள் மனிதர்கள் சகலவாழ்வு கள் மகிமையல்லால் வேறுண்டோ?

கனிவு தெய்வம் நீயே

கதிர்சேயே காகம் ஏறும்

சனிபக வானே போற்றி

தனியனேத் கருள்செய் வாயே

செல்: 96006 07603

bala131023
இதையும் படியுங்கள்
Subscribe