Advertisment

கை நிறைய வருமானம் தரவைக்கும் சனிபகவான் வழிபாடு! -பொ. பாலாஜிகணேஷ்

/idhalgal/balajothidam/shani-bhagavan-worship-handy-income-data-b-balajiganesh

நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றால், நல்ல தொழில் செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் வருமானம் தரக்கூடிய நல்ல வேலைக்கு செல்லவேண்டும். இந்த இரண்டையும் நிர்ணயிப்பது நம்முடைய ஜாதக கட்டத்தில் இருக்கும் சனிபகவான் தான்.

Advertisment

சனி பகவானின் ஆசி கிடைத்தால் தான் நமக்கு கைநிறைய வருமானம் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபமும் கிடைக்கும். செய்யும் தொழில் ஓஹோ என முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்றால், குலதெய்வத்தின் ஆசிர்வாதமும் கிடைக்க வேண்டும். சனிபகவான் ஜாதகக் கட்டத்தில் நமக்கு சாதகமாக இல்லை என்றால், குல தெய்வத்தின் ஆசிர்வாதமும் நமக்

நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றால், நல்ல தொழில் செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் வருமானம் தரக்கூடிய நல்ல வேலைக்கு செல்லவேண்டும். இந்த இரண்டையும் நிர்ணயிப்பது நம்முடைய ஜாதக கட்டத்தில் இருக்கும் சனிபகவான் தான்.

Advertisment

சனி பகவானின் ஆசி கிடைத்தால் தான் நமக்கு கைநிறைய வருமானம் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபமும் கிடைக்கும். செய்யும் தொழில் ஓஹோ என முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்றால், குலதெய்வத்தின் ஆசிர்வாதமும் கிடைக்க வேண்டும். சனிபகவான் ஜாதகக் கட்டத்தில் நமக்கு சாதகமாக இல்லை என்றால், குல தெய்வத்தின் ஆசிர்வாதமும் நமக்குக் கிடைக் காது. இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட என்ன தான் செய்வது. சனி பகவானின் அருளை நாம் பெற வேண்டும். சனி பகவானின் அருளைப் பெற நாம் செய்யவேண்டிய ஒரு சில எளிய பரிகாரங்கள் இதோ உங்களுக்காக.

saturn

கை நிறைய வருமானம் கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம் தொடர்ந்து வாரம் தோறும் வரக் கூடிய சனிக்கிழமைகளில் பின் சொல்லக் கூடிய பரிகாரங்களை மாற்றி மாற்றி செய்து கொள்ளுங்கள். இது பரிகாரம் என்று சொல்வதை விட உங்களுடைய பழக்கவழக்கங் களாக இதை மாற்றிக் கொள்ளுங் கள்.

சனிக்கிழமைகளில் கருணைக் கிழங்கு சமைத்து சாப்பிட வேண்டும். சனிக்கிழமையில் எள்ளு சேர்த்து சாப்பிடலாம். எள்ளு மிளகாய் பொடி, எள்ளு பர்ஃபியை அடிக்கடி சாப்பிடலாம். நாள் கிழமை பார்க்காமல் எள்ளு சேர்த்த உணவினை சாப்பிட்டு வரும்போது சனிபகவானால் நமக்கு தினசரி வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்காது. இது ஆரோக்கியத்திற்கும் நல்லது தரக்கூடியதுதான். தினமும் ஒரு கருப்பு நிற பேரிச்சம்பழமும் சாப்பிடலாம்.

சனிக்கிழமைகளில் பீட்ரூட் சமைத்து சாப்பிடலாம். இந்த பழக்க வழக்கங்களை எல்லாம் கொண்டு வந்தால் உங்களுக்கு சனிபகவானால் ஏற்படும் தோஷங்கள் விலகி சனியின் தாக்கம் குறைந்து வருமானத்தில் இருக்கும் தடைகள் விலகும். அது மட்டுமில்லாமல் வாரம்தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதும் சனி தோஷம் விலக உதவியாக இருக்கும்.

இதோடு சேர்த்து சனிக் கிழமைகளில் கருநீல நிறத்தில் ஆடை அணிந்து கொள்வதும் சனி பகவானின் ஆசிர்வாதத்தை பெற்று தரும். இதோடு சேர்த்து தினமும் குலதெய்வத்தை வழிபாடு செய்து வாருங்கள். குலதெய்வத்தின் அனுகிரகமும் சனி பகவானின் ஆசிர்வாதமும் சேர்ந்து உங்கள் வாழ்க்கையில் நிறைய நன்மைகள் நடக்க தொடங்கி விடும்.

ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வது, சனி பகவானின் அருளை நமக்கு பெற்று தரும் என்பது எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். ஊனமற்றவர்கள் இருக்கக்கூடிய ஆசிரமங்கள் எவ்வளவோ நம்முடைய நாட்டில் இருக்கிறது.

அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். சரிதான் உங்களுக்கே வருமானம் இல்லை. தொழில் சிறந்து நடக்கவில்லை, கையில் வேலையும் இல்லை. எப்படி வருமானம் இல்லாமல் உதவி செய்வது.

பணத்தை வைத்துதான் உதவி செய்யவேண்டும் என்ற அவசியம் கிடையாது. பணம் அல்லாமல் இப்படிப் பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய உதவி நிறைய இருக்கிறது. அப்படி உடல் அளவில் உங்களால் ஏதாவது உதவி செய்ய முடியும் என்றால் அந்த ஆசிரமத்திற்கு சென்று ஒருநாள் சேவை செய்துவிட்டு வரலாம். அதுவும் உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.

செல்: 9842550844

bala020224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe