ராகு- கேதுக்கள் கிரகங்களல்ல. அவை நிழல்கள். இந்த நிழற்கிரகங்கள் சூரிய- சந்திரர்களின் சுற்றுவட்டத்தில், அவர்கள் இணையும் வெட்டுப்புள்ளிகள் ஆகும். ராகு- கேது இருவரும் மிகப்பெரிய பாம்புகள்; ட்ராகன்ஸ்- டேமன்ஸ் என விவரிக்கப் படுகின் றன. அவர்களுக்கென சிறப்புத் தகுதிகள், குணங் கள் உள்ளன. இதன்காரணமாக அவை ஒரு ஜாதகனின் வாழ்க்கையில், எதாவதொரு விதத்தில் அழிவை, தடைகளை மற்றும் கொடுமைகளைத் தரவல்லன.
இயற்கை அசுபர்களான அவர்கள், கால சர்ப்ப தோஷம், சண்டாள யோகம் போன்ற அனுகூலமற்ற யோகங்களைத் தருகின்றன.
சண்டாளன் என்றால் சமூகத்தில் எந்தவொரு இடமுமற்ற கீழ்த்தரமான நபர் என்று பொருள். இந்த நிழல் கிரகங்களுடன் இணையும் கிரகத்தின் இயற்கை குணம், அது இருக்கும் ராசி ஆகியவை மிகவும் பாதிப்படைகின்றன. ராகு- கேதுக்கள் தாங்கள் இருக்கும் இடங்களை அழிக்கின்றன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/murugan-t.jpg)
எனவே, ஒரு வீட்டில் அவற்றின் அனுகூலமற்ற தீய குணங்களால் அவற்றின் வருகை வரவேற்கத்தக்கதல்ல. அவை தன்னுடன் இணையும்- பார்க்கும் கிரகங்களின் தன்மை களை விஷமாக்கிவிடுகின்றன. அவை இடம் பெறும் வீடும் அவற்றால் பாதிக்கப் படுகின்றன.
இணைந்த கிரகங்களின் தன்மையைப் பொருத்து, ராகு- கேதுக்கள் தங்கள் நல்ல அல்லது தீய தன்மைகளுக்குத் தங்களை மாற்றிக் கொள்கின்றன. துர்ஸ்தானங் களில் இருக்கும் கிரக இணைவுகள் பாதிப்பை மேலும் அதிகரிக்கின்றன. கிரக இணைவுகளின்படி ஏற்படும் பலன்களைக் காண்போம்.
ரவி சண்டாள யோகம்
சூரியனுடன் நிழல் கிரகங்களின் இணவு ஜாதகரின் தந்தைக்கு ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்துவதோடு, ஜாதகருக்கு ஆயுள் குறைவையும், சந்தோஷக் குறைவையும் ஏற்படுத்துகிறது.
சந்திர சண்டாள யோகம்
சந்திரனுக்கு எதிரிகளான நிழல் கிரகங்களின் இணைவு, சந்திர சண்டாள யோகத்தை ஏற்படுத்துகிறது. அவற்றின் சந்திரனின்மீதான தாக்கம் மிக மோசமானதாகவே அமைகிறது. ஜாதகரின் தாய்க்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, ஜாதகரின் மனதிலும், உடல் நிலையிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. மேலும், ஜாதகரை ஏழ்மையில் தள்ளிவிடுகிறது. பிறருக்கு வேலைசெய்யும் வேலையாளாகவும், மதங்களை வெறுப்பவராகவும், தீய செயல் களைச் செய்பவராகவும் ஆக்கிவிடுகிறது.
குஜ சண்டாள யோகம்
செவ்வாயுடனான நிழல் கிரகங்களின் இணைவு மிகவும் அபாயகரமானதாகக் கருதப்படுகிறது. சந்தோஷமற்ற வாழ்க்கை யையும், அவசரமான- அஜாக்கிரதையான- தேவையற்ற வேகமான குணத்தையும், நியாயத்திற்குப் புறம்பான குணத்தையும் உடையவராக்கிவிடுகிறது. மேலும், வினோத மனப்பாங்குள்ள- திடச்சித்தமில்லாத- கொடூரமான குணம் கொண்டவராகவும் ஆக்கிவிடுகிறது. இந்த இணைவு ஜாதகருக்கு விபத்துகளையும், தற்கொலை எண்ணத் தையும் தந்துவிடுகிறது. 9-ஆமிடத்தில் ஏற்படும் கேது, செவ்வாய் இணைவு மிகவும் மட்டமான, மூர்க்க குணமுடைய எதிரிகளை உருவாக்கிவிடுகிறது.
புதன் சண்டாள யோகம்
புதன் அறிவுக்கும், நினைவுக்கும் காரகராவார். அவருடன் நிழல் கிரகங்கள் இணையும்போது ஜாதகரை தந்திரக்காரராகவும், கபடதாரியாகவும், ஏமாற்றுக்காரராகவும், திருட்டுத்தனம் உடையவராகவும் மாற்றிவிடுகிறது.
ஜாதகர் மிகுந்த காம இச்சை உடையவராக உருவெடுக்கிறார்.
குரு சண்டாள யோகம்
குருவுடனான ராகு- கேதுக்களின் இணைவு ஜாதகரை ஆச்சாரமற்ற, அனா சாரம் உடையவராகவும், எதற்கும் அவரை நம்ப முடியாதவராகவும் ஆக்கிவிடுகிறது. ஒரு பெண்ணின் ஜாதகத்தில் அது மோசமான பலன்களைத் தருகிறது.
ஜாதகியை ஏழ்மையில் தள்ளி, நிம்மதியற்ற மனதையும், அமைதியற்ற வாழ்க்கையையும் தந்துவிடுகிறது.
சுக்கிர சண்டாள யோகம்
சுக்கிரனுடன் இணையும் நிழல் கிரகங்கள் ஜாதகரின் குணத்தையும், ஆரோக்கியத்தையும் பாதிப்படையச் செய்கிறது. ஜாதகரின் தாய் மற்றும் சகோதரியின் ஆரோக்கியத்திலும் கைவைக்கிறது. ஆயுள் குறைவும் பெண்ணின் ஜாதகத்தில் வைதவ்யம் எனும் விதவைக் கோலத்தையும் அளிக்க இந்த யோகம் காரணமாகிறது.
சனி சண்டாள யோகம்
சனி, செவ்வாய் இணைவு தரும் அபாயகரமான பலனுக்குச் சமமான பலனைத் தரக்கூடிய இணைவே நிழல் கிரகங்களின் சனியுடனான இணைவென்றால் மிகையாகாது. இது ஜாதகரை முரட்டுத்தனம் மிக்க கோபக்காரராகவும், இரக்கமற்றவராகவும், மலட்டுத்தன்மை மிக்கவராகவும், சண்டைக்காரராகவும், திட சித்தமற்றவராகவும் ஆக்கிவிடுகிறது. மேலும் ஜாதகர் அடிக்கடி விபத்துக்கு ஆளாவதோடு, கவலையற்ற- அஜாக்கிரதையான- யோசனை யில்லாத- இழிவான மனிதனாகவும் ஆக்கி விடுகிறது.
செல்: 97891 01742
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-11/murugan-t.jpg)