கேது தசை ஏழு ஆண்டுகள் நடக்கும். கேது தசையில் ராகு புக்தி நன்மை செய்யாது. ராகு மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து வீடுகளில் இருந்தாலும் கேது தசையில் கெடுபலன்களைத் தரும். சனிக்கிழமையன்று ராகு காலத்தில் பரிகாரம் செய்துகொள்ள வேண்டும். இனி, கேது தசையில் வரும் ஒன்பது புக்திகளுக்கான பொதுப்பலன்களைக் காண்போம்.

1. கேது தசையில் கேது புக்தி

இது மிகவும் கெடுதலான காலகட்டம். எச்சரிக் கையாக வாழவேண்டும். தனக்கு மிகவும் வேண்டிய வர்களான மனைவி, மக்கள், சகோதரர்கள்மீது வெறுப்பு உண்டாகும். புரட்டாசி மாதத்தில் சிறைப்பட நேரலாம். அந்த புரட்டாசி மாதமானது ஆயுள் பாவ விஷயத்தில் முடிவு செய்யப்பட்ட ஆண்டின் இறுதி மாதமாக இருக்குமேயானால், அம்மாதத்தில் மிகவும் பீடை உண்டாகும்.

gg

Advertisment

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

2. கேது தசையில் சுக்கிர புக்தி

மனைவியும், மக்கட்பேறும் அமைந்து மகிழ் வுண்டாகும். நினைத்த காரியமெல்லாம் கைகூடும். புக்தியின் முடிவில் தனக்கோ மனையாளுக்கோ நோய் உண்டாகி விலகும்.

Advertisment

3. கேது தசையில் சூரிய புக்தி

இருக்கும் இடம்விட்டு வெளிநாடு சென்று பிறகு திரும்ப வரநேரும். உடல்வலி, ஜுரம், தலைநோய் உண்டாகும். மனதில் குழப்பம் தோன்றும். சூரியன் லக்னத்துக்கு 3, 6, 8, 12-ல் இருந்தாலும், சூரியன் பகை ஆகியிருந்தாலும் மேற்கண்ட பலன்கள் கடுமை யாக இருக்கும். இந்த கடுமை மாறிட முப்பது நாட் களுக்கு பசு மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுத்துவர தோஷம் மாறும்.

4. கேது தசையில் சந்திர புக்தி

இந்த காலகட்டத்தில் வேறு பெண்கள்மூலம் வழக்கு, சண்டை உண்டாகும். புத்திரர்க்கு பீடை உண்டாகும். தீமைகள் வந்து விலகும். தங்க நகை, கன்று பசு சேர்க்கையுண்டு.

5. கேது தசையில் செவ்வாய் புக்தி

இந்த காலகட்டத்தில் இடையூறு, பயம் ஏற்படும். கூட்டம்கூடி சண்டையிடுதல், வழக்காடுதல், பற்பல விரோதம் உண்டாதல், எதிலும் தடை ஏற்படுதல், பெண்களால் கேடு. அதிக நெருப்பால் பயம் போன்றவை நடைபெறும். திருச்செந்தூர் சென்று முருகனை ஒருமுறையாவது தரிசித்தால் இதிலிருந்து மீண்டுவரலாம்.

6. கேது தசையில் ராகு புக்தி

இக்காலகட்டத்தில் விஷ பயம், பெண் களுக்குப் பீடை உண்டாகும். வீட்டுத் தலைவருக்கு கெடுதல் உண்டாகும். கீர்த்தி நிலைக்காது.

7. கேது தசையில் குரு புக்தி

பாதி லாபமும், அரசாங்கத்தால் நன்மையும், விஷ பயம் உண்டாகி விலகுதலும், லட்சுமியைப் போல் அழகு பொருந்திய மனையாள் சேர்க் கையும், அதிக செல்வமுண்டாதலும் நடைபெறும்.

8. கேது தசையில் சனி புக்தி

பல வகைகளில் பொருட்சேதமாகும். இடம் மாறுதல் ஏற்படும். சரீரத்தில் சொறி, சிரங்கு உண்டாகும். சந்திரன் போன்ற முகமுள்ள மனைவிக்கு நோயும், மனதில் குழப்பமும் உண்டாகி விலகும்.

9. கேது தசையில் புதன் புக்தி

இடம் மாற நேரும். தனது சுற்றத்தாரால் பயம் உண்டாகும். புத்திர சோகம், எண்ணிய காரியம் கைகூடாமை நடைபெறும். எனவே இந்த காலகட்டத்தில் அமைதிகாக்க வேண்டும்.

பரிகாரம்-1

கேது தசை, கேது புக்தியில் செய்வது நல்லது. தேங்காய்- 9, வாழைப்பழம்- 18, களிப்பாக்கு- 18, வெற்றிலை- 50 கிராம், கதம்பப் பூ- 9 முழம் ஆகியவற்றை செவ்வாய்க்கிழமையன்று எமகண்ட நேரத்தில் (காலை 9.00-10.30 மணிக் குள்) நவகிரக சந்நிதியில் கொடுத்து அர்ச்சனை செய்யவும். அர்ச்சனை செய்த பொருளை அங்கேயே கொடுத்துவிட்டு வரவும். அதற்கு முன்பு காலை 8.00-9.00 மணிக்குள் மூலவருக்கு அர்ச்சனைசெய்து, அர்ச்சனை செய்த பொருட் களை வீட்டிற்குக் கொண்டு வரலாம்.

பரிகாரம்-2

கேது தசையில் ராகு புக்தி நடப்பவர்கள் தேங்காய்- 9, வாழைப்பழம்- 18, களிப்பாக்கு- 18, வெற்றிலை- 50 கிராம், கதம்பப்பூ -9 முழம் ஆகியவற்றை சனிக்கிழமையன்று ராகு காலத்தில் காலை 9.00-10.30 மணிக்குள் நவகிரக சந்நிதியில் கொடுத்து அர்ச்சனை செய்யவும். அர்ச்சனை செய்த பொருளை அங்கேயே கொடுத்துவிட்டு வரவும். அதற்கு முன்பு காலை 8.00-9.00 மணிக்குள் மூலவருக்கு அர்ச்சனை செய்து, அர்ச்சனை செய்த பொருட்களை வீட்டிற்குக் கொண்டு வரலாம்.

செல்: 94871 68174