12 ராசி, 27 நட்சத்திரத்தினருக்கு செப்டம்பர் மாதப் பரிகாரங்கள்! -பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை

/idhalgal/balajothidam/september-treatments-12-stars-27-stars-pundit-map-pillai

மேஷம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 5, 6, 15, 16, 24, 25. பாதக நாட்கள்: 1, 2, 7, 8, 9, 22, 23, 28, 29.

அஸ்வினி: இம்மாதம் முதல் வாரமே பிறருடைய உதவியால் அசையா சொத்து விவகாரங்கள், வியாபாரம் யாவும் சிறப்பான முன்னேற் றத்தைத் தரும். ஆரோக் கியக்குறைகள் அகலும். கணவன்- மனைவியிடையே 5, 6 தேதிகளில் மனபேதம் அதிகரிக்கும். ராசிக்கு 3-ல் ராகு. தீவிர கருத்துக் கூறும் எழுத்தாளர்களுக்குக் கெடுதல். 23 வயதிலிருக்கும் மகளிருக்கு இம்மாதம் வரன் தேடல் வெற்றியைத் தராது. வலது கை மோதிர விரலில் வெள்ளி மோதிரம் அணிதல் நல்லது. நான்கு கட்டு கொத்தமல்லிக் கீரையை திருஷ்டிசுற்றி நீர்நிலையில் போடல் நன்று. திங்கட்கிழமை மிக நன்று.

பரணி: மூளை பலத் தைத் தீவிரப்படுத்தி எப்படி யாவது பணவரவைப் பெருக்கப் போகிறீர்கள். 12, 14 தேதிகளில் அதற்கான புதுப்பாதை தெரியவரும். 17, 19-ல் எதிரிகளின் சவாலை சமாளிக்கவேண்டும். 9-ல் கேது, சனி- பணிபுரியும் பெண்களுக்குப் பணிமாற்றம், இடமாற்றம் வரும். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் தடைப்பட்டால் 7-க்குமேல் குழந்தை பெற்ற மாதரிடம் ஆசிர்வாதம் வாங்கினால் அனுக்கிரகம் கிடைக்கப்பெறும். சனி 9-ல் இருப்பதால் அறிமுகமில்லா விருந்தினரை இரவில் தங்கிச்செல்ல அனுமதிப்பது கூடாது. உடைந்த பர்னிச்சர்களையும், ஓடாத கடிகாரங்களையும் அகற்றிவிடல் நன்று.

கிருத்திகை 1-ஆம் பாதம்: நேரம் என்பதுதான் கடவுளால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரே மூலதனம். இம்மாதம் அதன் முக்கியத்துவம் தெரியவரும். கடைசி வாரம் கவலைகள் தலைவிரித்தாடும். இருப்பினும் 26, 27 தேதிக்குமேல் விடுதலை. எழுத்தாளர்களுக்கும் குடும்ப மாதர்களுக்கும் நல்ல செய்திகள் தொடர்ந்துவரும். சிம்மத்தில் நால்வர் இருப்பதால், உங்கள் புகழ் குடும்பத்தில் உயர்வாகப் பேசப்படும். ஆனால் சுக்கிரன் நிலையால் குழந்தைகளின் கல்வி விவகாரத்தால் மதிப்பு, மரியாதை குறையநேரும். பால், பச்சரிசி, வெள்ளி உலோகம் ஆகியவற்றை தானம் செய்தால் சுக்கிரன் கெடுதலைத் தவிர்த்துவிடுவார். திருமணமாகி தற்போது 5-ஆவது மாதம் எனில் பணவரவு உண்டு.

ரிஷபம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 7, 8, 9, 17, 18, 19, 26, 27. பாதக நாட்கள்: 3, 4, 10, 11, 24, 25, 30.

கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள்: அட்டகாசமான முதல் வாரம். வீட்டை எப்படியெல்லாம் சிங்காரிக்கலாம் என மனம் அலைபாயும். அந்நிய நாட்டில் மகன், மகள் சம்பாதித்தால் பக்கத்துணையாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சாதனை படைக்கலாம். 2-ல் இருக்கும் ராகு, சூரியனின் பாதிப்புகள் அகல பார்வையற் றோருக்கு தானம் நன்று. குரு விருச்சிகத்தில் இருப்பதால் ஆடவர்கள் பிறர் மாதுமேல் மையல் கொள்ளல் கூடாது. பெண்கள், துறவிகளை இம்மாதம் தரிசிப்பதைத் தவிர்ப்பது நன்று. சனி 8-ல் இருப்பதால் செல்வந்தர்கள் கிளப்புகளில் சூதாட்டத்தைத் தவிர்ப்பது நல்லது.

ரோகிணி: இம்மாதம் 12, 13, 14 தேதிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். ஸ்திரமான முன்னேற்றம் தெரியவரும். வெளிநாட்டிலும் வியாபாரம் நிம்மதியைத்தரும். ராகு மிதுனத்தில் இருப்பதால், எந்த மின்சார உபகரணங்களையும் இலவசமாகப் பெறுவது கூடாது. சுக்கிரன் 4-ல். வசதி படைத்த ஆண்கள் சனியின் பக்கபலத்துடன் பெண் மோகத்தால் பாதை மாறலாம். ஒரு சின

மேஷம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 5, 6, 15, 16, 24, 25. பாதக நாட்கள்: 1, 2, 7, 8, 9, 22, 23, 28, 29.

அஸ்வினி: இம்மாதம் முதல் வாரமே பிறருடைய உதவியால் அசையா சொத்து விவகாரங்கள், வியாபாரம் யாவும் சிறப்பான முன்னேற் றத்தைத் தரும். ஆரோக் கியக்குறைகள் அகலும். கணவன்- மனைவியிடையே 5, 6 தேதிகளில் மனபேதம் அதிகரிக்கும். ராசிக்கு 3-ல் ராகு. தீவிர கருத்துக் கூறும் எழுத்தாளர்களுக்குக் கெடுதல். 23 வயதிலிருக்கும் மகளிருக்கு இம்மாதம் வரன் தேடல் வெற்றியைத் தராது. வலது கை மோதிர விரலில் வெள்ளி மோதிரம் அணிதல் நல்லது. நான்கு கட்டு கொத்தமல்லிக் கீரையை திருஷ்டிசுற்றி நீர்நிலையில் போடல் நன்று. திங்கட்கிழமை மிக நன்று.

பரணி: மூளை பலத் தைத் தீவிரப்படுத்தி எப்படி யாவது பணவரவைப் பெருக்கப் போகிறீர்கள். 12, 14 தேதிகளில் அதற்கான புதுப்பாதை தெரியவரும். 17, 19-ல் எதிரிகளின் சவாலை சமாளிக்கவேண்டும். 9-ல் கேது, சனி- பணிபுரியும் பெண்களுக்குப் பணிமாற்றம், இடமாற்றம் வரும். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் தடைப்பட்டால் 7-க்குமேல் குழந்தை பெற்ற மாதரிடம் ஆசிர்வாதம் வாங்கினால் அனுக்கிரகம் கிடைக்கப்பெறும். சனி 9-ல் இருப்பதால் அறிமுகமில்லா விருந்தினரை இரவில் தங்கிச்செல்ல அனுமதிப்பது கூடாது. உடைந்த பர்னிச்சர்களையும், ஓடாத கடிகாரங்களையும் அகற்றிவிடல் நன்று.

கிருத்திகை 1-ஆம் பாதம்: நேரம் என்பதுதான் கடவுளால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரே மூலதனம். இம்மாதம் அதன் முக்கியத்துவம் தெரியவரும். கடைசி வாரம் கவலைகள் தலைவிரித்தாடும். இருப்பினும் 26, 27 தேதிக்குமேல் விடுதலை. எழுத்தாளர்களுக்கும் குடும்ப மாதர்களுக்கும் நல்ல செய்திகள் தொடர்ந்துவரும். சிம்மத்தில் நால்வர் இருப்பதால், உங்கள் புகழ் குடும்பத்தில் உயர்வாகப் பேசப்படும். ஆனால் சுக்கிரன் நிலையால் குழந்தைகளின் கல்வி விவகாரத்தால் மதிப்பு, மரியாதை குறையநேரும். பால், பச்சரிசி, வெள்ளி உலோகம் ஆகியவற்றை தானம் செய்தால் சுக்கிரன் கெடுதலைத் தவிர்த்துவிடுவார். திருமணமாகி தற்போது 5-ஆவது மாதம் எனில் பணவரவு உண்டு.

ரிஷபம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 7, 8, 9, 17, 18, 19, 26, 27. பாதக நாட்கள்: 3, 4, 10, 11, 24, 25, 30.

கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள்: அட்டகாசமான முதல் வாரம். வீட்டை எப்படியெல்லாம் சிங்காரிக்கலாம் என மனம் அலைபாயும். அந்நிய நாட்டில் மகன், மகள் சம்பாதித்தால் பக்கத்துணையாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சாதனை படைக்கலாம். 2-ல் இருக்கும் ராகு, சூரியனின் பாதிப்புகள் அகல பார்வையற் றோருக்கு தானம் நன்று. குரு விருச்சிகத்தில் இருப்பதால் ஆடவர்கள் பிறர் மாதுமேல் மையல் கொள்ளல் கூடாது. பெண்கள், துறவிகளை இம்மாதம் தரிசிப்பதைத் தவிர்ப்பது நன்று. சனி 8-ல் இருப்பதால் செல்வந்தர்கள் கிளப்புகளில் சூதாட்டத்தைத் தவிர்ப்பது நல்லது.

ரோகிணி: இம்மாதம் 12, 13, 14 தேதிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். ஸ்திரமான முன்னேற்றம் தெரியவரும். வெளிநாட்டிலும் வியாபாரம் நிம்மதியைத்தரும். ராகு மிதுனத்தில் இருப்பதால், எந்த மின்சார உபகரணங்களையும் இலவசமாகப் பெறுவது கூடாது. சுக்கிரன் 4-ல். வசதி படைத்த ஆண்கள் சனியின் பக்கபலத்துடன் பெண் மோகத்தால் பாதை மாறலாம். ஒரு சின்ன வெள்ளி டப்பாவில் (இர்ஷ்) தேனை நிரப்பி வீட்டுமனையில் தென்கிழக்கில் புதைப்பது நன்று. வரவேண்டிய கடன் தொகையும் வசூலாகும். கடைகளில் தின வருவாயும் அதிகரிக்கும். மனைவியின் ஆரோக்கியம் சீரடைய எல்லோ சபையர் மோதிரம் அணியலாம்.

மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்: 17, 18, 19 தேதிகளில் உபரியாக வருமானம் வரும். தேவையற்ற பொறுப்புகளைத் தவிர்க்கவும். மனைவியிடம் பொய் சொல்வதால் பெரும் பிரச்சினை உருவாகும். தூரப் பயணங்கள் வருமானத்தை அதிகரிக்கும். நல்ல முதலீடுகள் லாபத்தைப் பெற்றுத்தரும். மாதக்கடைசியில் எதையோ எண்ணி, அதுவே சந்தேகக்குறியாக மாறி கவலையைப் பெருக்கும். 30-ஆம் தேதி நடைபெறும் குடும்ப வைபோகம் மனநிறைவாகும். புதனை சரிசெய்ய பஞ்சவண்ணக்கிளி, வெள்ளாட்டுக்கு உணவூட்டலாம்.

மிதுனம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 1, 2, 10, 11, 20, 21, 28, 29. பாதக நாட்கள்: 5, 6, 12, 13, 14, 26, 27.

parigaram

மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள்: மாதத்தில் முதல்வாரம் 4-ஆம் தேதிவரை உஷார் நிலையில் செயல்படவேண்டும். பிறரால் ஏமாற்றமடையலாம். வாரக்கடைசியில் வரவுக்கான நல்ல தருணங்கள் அமையும். 9-ஆம் தேதி பகலுக்குப்பின் சில வியாபாரப் பேச்சுகள் பின்னடைவைத் தரும். 12, 13 தேதிகளில் பணிப்பெண்களுக்கு நல்ல சந்தர்ப்பம் நாடிவரும். வயோதிகர்களுக்கு ஓய்வூதியம், இன்சூரன்ஸ் போன்றவை மனநிறைவாகும். ராசியிலேயே ராகு இருப்பதால், 42 வயதை எட்டியவர்கள் இனி நல்லவற்றை எதிர்பார்க்கலாம். நிலத்தை தூய்மை செய்வோருக்கு பருப்பு வகைகளை, தானமளிப்பது நல்ல பரிகாரம். மூன்று நாட்கள் தொடர்ச்சியாகத் தருதல் நன்று.

திருவாதிரை: பொதுவில், இந்த நட்சத்திரத்தார்க்கு துன்பத்திற்குப் பின்தான் இன்பம் மிகையாகும். நீங்கள் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களை வாடகைக்கு அமர்த்துதல் கூடாது. பெண் நாய் வளர்க்கலாம். இதை நடைமுறைப் படுத்தாதிருந்தால் வாஸ்து தோஷமாகும். இம்மாதம் குழந்தைகள் சார்ந்த கவலை கூடுதலாகும். 22, 23 தேதிக்குமேல் குடும்பமே குதூகலமடையும். சனி 7-ல் இருப்பதால் கெட்ட பழக்கம் எதுவும் வேண்டாம். கருப்புநிறப் பசுவுக்கு உணவூட்டல் நன்று. அதிக காலம் வீடு நிம்மதியற்றுக் காணப்பட்டால், ஏழு துவாரமுள்ள புல்லாங்குழலில் தேனை நிரப்பி, தென்கிழக்கில் பள்ளம் தோண்டி அதனுள் வைத்து மூடிவிடல் நன்று. சுக்கிரன் அருள்புரிவார்.

புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்: மார்க்கெட்டிங்- அதாவது விற்பனைப் பிரிவில் பணிபுரிவோர் மிக உன்னிப்பாக கவனமுடன் செயல்படவேண்டும். பொருளின் தரம் சீராக இல்லையென 17, 19 தேதிகளில் அவை திரும்பிவரும் வாய்ப்புள்ளது. குழந்தைகளின் கல்வி சார்ந்த கவலை மிகும். மாதத்தின் கடைசி வாரம் பணவரவு அதிகமாகும். யாரையும் நம்பவேண்டாம். வாகனங்களை இரவல் கொடுப்பது கூடாது. விருந்து உபசாரம் மகிழ்வைத்தரும். ராசிக்கு 6-ல் குரு பகவான் உள்ளார். குங்குமப்பூவை அரைத்து திலகமிடல் நன்று. தந்தையுடன் வாழ்வோருக்கு நற்பலன் மிகுதியாகும். ராகுவின் வேகம் தணிய கோமேதக மோதிரம் அணிதல் நன்று.

கடகம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 3, 4, 12, 13, 14, 22, 23, 30. பாதக நாட்கள்: 1, 2, 7, 8, 9, 15, 16, 28, 29.

புனர்பூசம் 4-ஆம் பாதம்: மாதத்தின் முதல் வாரமே அற்புதமானதாக அமைந்துவிடும். வியாபாரிகளுக்கு மட்டும் பின்னடைவு வரும். பெண்களுக்கு இரண்டாவது வாரம் குடும்ப பாரம் கவலையைத் தரும். எல்லா சூழ்நிலையும் சீராகத் தென்படவில்லை. மிக மிக கவனம் தேவை. ராசிக்கு 12-ல் ராகு இருப்பதால் நான்கு நாட்கள் சமையற்கூடத்திலிருந்து ஒருவேளை உணவுண்ணவும். வருமானத்தில் சிறுபங்கை மகளுக்கோ, சகோதரிக்கோ கொடுப்பது நல்ல பரிகாரம். புதனையும் குருவையும் புதன், வியாழக்கிழமைகளில் வணங்கிவந்தால் நல்லவை நடக்கும். 28 வயதில் இருப்போர் இம்மாதம் திருமணத்தைத் தவிர்க்கவும்.

பூசம்: தொழிலாளர்கள் 17, 19 தேதிகளில் உத்தியோக உயர்வு, விரும்பிய இடமாற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சியாக இருக்கலாம். பெண்களுக்கு 22, 23 தேதிகள் கவலை தரும். ராசிக்கு 6-ல் சனி, கேது இணை கிறார்கள். மூத்த மகன் அனுசரணையாகச் செயல்படுவார். ஒரு எவர்சில்வர் தட்டில் நல்லெண்ணெய் நிரப்பி, உங்கள் முக பிம்பத்தை அதில் பார்த்தபின் செடியின் வேரில் ஊற்றவேண்டும். இப்போது வயது 40, 48 எனில் சொந்த சம்பாத்தியத்தில் இம்மாதம் வீட்டு வேலை ஆரம்பிப்பது கூடாது. நீண்டநாள் எலும்பு சார்ந்த தொல்லை இருந்தால் "ஷூ' தானம் செய்தல் நல்லது. சனி சாந்தியடைவார்.

ஆயில்யம்: இம்மாதக் கடைசி வாரம் எண்ணிய எண்ணங்கள் அத்தனையும் நிறைவேறும். வேலைப்பளு அதிகரிக்கும். தொழிலாளர்களை மேலதிகாரிகள் உயர்வாகப் புகழ்வார்கள். தொழிற்கூடங்களில் பணிபுரிவோர் குடும்பமாக உல்லாசப்பயணம் செல்லும் சூழ்நிலை மனநிறைவு தரும். இம்மாதம் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களிடமிருக்கும் "ஈகோ' வெளிப்பட்டால் கேடான விளைவுக்கு வழிவகுக்கும். இம்மாதம் இரவில் குங்குமப்பூ கலந்த பால் அருந்துதல் கேதுவைத் திருப்தியடையச் செய்யும். மகனிடம் இம்மாதம் எந்த உதவியும் பெற இயலாது.

சிம்மம்

ராசிக்கு சிறந்த நட்கள்: 5, 6, 15, 16, 24, 25. பாதக நாட்கள்: 3, 4, 10, 11, 17, 18, 19, 30.

மகம்: அரசு சார்ந்த எந்த வில்லங்கங்கள் இருந்தாலும் அத்தனையும் சாதகமாக அமையும். வியாபாரத்தில் தன்னிறைவு தெரியவரும். 5, 6 தேதிகளில் அசையா சொத்து வாங்க- விற்க நல்ல தருணம். விருந்தினர் வருகை, உடல் அசதியை ஏற்படுத்தும். சிம்ம ராசியில் நால்வர் இருக்கிறார்கள். எனவே நல்லவையே நடக்கும். சுக்கிரன் மட்டும் பாராமுகமாக இருக்கிறார். எனவே இப்போது வயது 25 எனில், இம்மாதம் திருமண முயற்சிகள் பெண்களுக்கு வெற்றியைத் தராது. திருமணமான ஆடவர்கள் பகலில் உடலுறவு கூடாது. தண்ணீரில் தயிரைக் கலந்து வெள்ளிக்கிழமை நீராடல் சிறப்பானது. கருப்பு நிறப் பசுவுக்கு புல் தருதல் நன்று.

பூரம்: தடைகள் நீங்கி விரும்பிய உத்தி யோகம் கிடைக்கப்பெறும். சக பணியா ளர்களுடன் நெருக்கமான உறவு மகிழ்வைத் தரும். கூட்டு வியாபாரம் வெற்றிக்கான பாதையை அமைத்துவிடும். 10, 11 தேதிக்குமேல் எல்லா பணிகளும் சிறப்பாக நிறைவுபெறும். ராசிக்கு 5-ல் சனி இருப்பதால், குடும்பத்தார் சொத்தை வாங்கல்- விற்றலில் உஷாராக செயல்படவும். ஒரு இரும்புக் கடாயில் எள்ளை வைத்து கருப்புத் துணியால் மூடி இருட்டான இடத்தில் வைக்கவும்.

உத்திரம் 1-ஆம் பாதம்: உடன்பிறப்பை நேசிப்பவர்கள். எதிரிகளை வெல்லும் திறன் உடையவர்கள். இம்மாத அதிர்ஷ்டக் கிழமைகள் ஞாயிறு, புதன். அதிர்ஷ்ட நேரம் மாலை. 22, 23-ஆம் தேதிகளில் எங்கேயோ எப்போதோ சிக்கிய பணம் வந்துவிடும். 24, 25 தேதிகளில் சிறு சலனம் ஏற்பட்டாலும் 28, 29 தேதிக்குமேல் குரு, சந்திரன் மனஅமைதிக்கு வழிவகுப்பார்கள். அல்லிமலர், ஆம்பல் மலரால் சந்திரன், பார்வதியை வணங்குவதால் வீடு, வாகனம் போன்றவற்றின்மேல் இருந்த பேராசை கைகூடும். காஞ்சிபுரம் நெல்லுக்காரத்தெரு, அரிசாபந் தீர்த்தார் திருக்கோவிலிலும் வணங்கலாம்.

கன்னி

ராசிக்கு சிறந்த நாட்கள்: 7, 8, 9, 17, 18, 19, 26, 27. பாதக நாட்கள்: 5, 6, 12, 13, 14, 20, 21.

உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: வீடு தேடிவரும் விருந்தினரை வேண்டா வெறுப்பாக உபசரிப்பது கூடாது. 5, 6 தேதிகளில் செலவினம் அதிகமாகும். ஷேர் மார்க்கெட் வேண்டாம். 12, 13, 14 தேதிகளில் பணவரவு திருப்தியைத் தரும். மூன்றாவது வாரம் ஆரோக்கியப் பின்னடைவு வரலாம். இம்மாதம் பெண் குழந்தை பிறந்தால் யோகம். கேது அறிவை வாரிவழங்குவார். குழந்தைகளுக்கு கல்வித்தடை ஏற்பட்டால் குடும்ப புரோகிதருக்கு உதவி புரிதல்வேண்டும். சர்க்கரை வியாதியுடன் இருக்கும் தாயாரை உன்னிப்பாக கவனிக்கவேண்டும். குழந்தைக்கு நெடுநாள் ஆரோக்கியக்குறை இருந்தால் ஆற்று மணலைக் காயவைத்து நெற்றியில் பொட்டு வைக்கலாம்.

ஹஸ்தம்: நோய்வாய்ப்பட்ட வயோதிகர்கள் இருந்தால் இம்மாதம் அவர்கள்மீது கவனம் வேண்டும். 17, 19 தேதிகள் கவலைக்கு வழிவகுக்கும். தொழிலாளர்கள், மாணவர்கள், வியாபாரிகளுக்கு 22, 23 தேதிகள் பல மாற்றங்களை உருவாக்கித் தரும். எல்லா சூழ்நிலையும் கவலை தரும்விதமாக இருந்தால், அதிதேவதை மந்திரம் சிறப்பைப் பெற்றுத் தரும்.

"ஸவிதா ரமஹம் வந்தே ஸப்தாஸ்வ

ரதவாகனம்,

பத்மாஸனஸ்தம் சயோஷம் ஹஸ்த நக்ஷ்த்ர தேவதாம்'

என்னும் மந்திரத்தை காலை, மாலை கூறிவந்தால் சுபிட்சம் பெறலாம்.

சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்: மாதத்தின் கடைசி வாரம் மிக பிசியாகக் காணப்படுவீர்கள். 26, 27 தேதிகளில் விரயம் தவிர்க்கமுடியாது. பிறருக்காக அவர்கள் பின்னிய வலையில் அகப்படநேரும். உணவில் கட்டுப்பாடு கடைப்பிடிக்கவேண்டும். நெடுநாட்களாக பணமுடை இருந்தால் தொட்டாற்சிணுங்கிச் செடியின் வடக்கு நோக்கிச்செல்லும் கிளையை அல்லது வேரை எடுத்துவந்து காயவைத்து, வெள்ளி உலோகத் தாயத்தில் வைத்துக் கட்டிக்கொண்டால் எல்லாவித அல்லலும் மறைந்துவிடும்.

துலாம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 1, 2, 10, 11, 20, 21, 28. பாதக நாட்கள்: 7, 8, 9, 15, 16, 22, 23, 29.

சித்திரை 3, 4-ஆம் பாதங்கள்: பணவரவு வந்தும் உங்களுடைய அபிலாஷைகள் கட்டுப்படுத்தப்படாமல் இருக்கும். 11-ல் சூரியன் மற்றும் செவ்வாய் இணைகிறார்கள். இம்மாதம் முன்கோபம் வேண்டாம். பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகள் விளையாட்டு மைதானத்தில் கவனமுடன் செயல்படவேண்டும். அடுக்கு மாடி வீட்டுக்குப் பணம் கட்டியிருந்தால் இம்மாதம் சாவி கைக்கு வந்துவிடும். காவல்துறை, கண்காணிப்புத்துறையினருக்கு நெருக்கடி உச்சத்தை எட்டும். பெண்களுக்கு, மாத விடுப்பின்போது ரத்தப்போக்கு மிகையாகும். ஞாயிறன்று ஒருபொழுது உப்பு கலவா உணவுண்ண வேண்டும். சூரிய நமஸ்காரம், அங்காரகனை வழிபடல் சிறப்பு.

சுவாதி: உங்களைச் சுற்றி எதிரிகள் இருந்தால், இம்மாதம் அஞ்சுவார்கள். 9, 11 தேதிகள் சோம்பலோடு, மனஉளைச்சலைத் தரும். மாணவர்கட்குப் பெருமிதமான மாதம். புதனும் சுக்கிரனும் 11-ல் இருப்பதால் காதலருக்கு பொருளாதாரப் பேச்சு தடையாகத் தென்படும். புதன்கிழமை பெருமாள் கோவில் சென்று ஆண்டவனிடம் முறையிட்டால் எல்லாம் வெற்றி. கலைஞர்களுக்கு அறுவடைக்காலம். முன்பு ஆற்றிய பணிக்கான ஊதியம் இம்மாதம் திருப்திகரமாக வந்துவிடும். தடை ஏற்பட்டால் ஒரு வெண்கலக்கிண்ணம் வாங்கி, பாதாம் பருப்பை நிரப்பி கோவிலுக்கு சமர்ப்பித்துவிடவும். எல்லாமே வெற்றி.

விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்: 23, 24 தேதிகளில் பரஸ்பரப் பேச்சுவார்த்தையால் நல்லவை நடக்கும். மாணவர்கள், அரசுப்பணியாளர்களுக்கு நடக்கப்போகும் தேர்வு, நிச்சய வெற்றியைப் பெற்றுத்தரும். மாதக்கடைசியில் சுக்கிரனின் ஆசியால் திடீர் பணவரவு மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும். சூரியன் சிம்மத்தில் இருந்துவருவதால், புலால் மறுப்பது நன்று. மூன்று பாதாம் பருப்பு, மூன்று சிவப்பு முள்ளங்கியை தலையணை அடியில் வைத்துத் தூங்கி, மறுநாள் மாட்டுக்கு கொடுத்தாலோ, நீர்நிலையில் போட்டலோ சந்ததிகள் தழைத்தோங்கும். நீண்ட ஆயுள்.

விருச்சிகம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 3, 4, 12, 13, 14, 22, 30. 23, 30. பாதக நாட்கள்: 10, 11, 17, 18, 19, 24, 25.

விசாகம் 4-ஆம் பாதம்: எல்லாவித எதிர்விளைவுகளும் உங்களை இம்மாதம் தாக்கத் தயங்கும். எனினும் சந்திரனின் வேகம் சீராகத் தெரியவிலலை. 10-ஆம் தேதிவரை சதிவலையில் விழாதிருக்க 8-ல் இருக்கும் ராகுவை சரிக்கட்ட ஒரு சமச்சதுர வெள்ளி உலோகத்துண்டை பர்சில் வைத்துக்கொள்ளவும். மின்சாரத் துறையில் பணிபுரியும். மண்ணைக் குழிதோண்டும் ஊழியர்கள் கவனமுடன் செயல்படவேண்டும். அண்ணன்- தம்பியுடன் இம்மாதம் உல்லாசப்பயணம் போவதைத் தவிர்ப்பது மிக நன்று. பணத்தை வசூல் செய்யப்போகும் ஏஜண்டுகள், நீலம், கருப்பு ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது.

அரசு ஊழியர்கள் பிறர்மீது தப்புக்கணக்கு போடல் கூடாது.

அனுஷம்: மூன்றாவது வாரம் புது வாகனம், புது வீடு வாங்க மனம் ஆசையைத் தூண்டும். இம்மாதம் பிறரிடம் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுவதைவிட சொந்தமாக செயல்படவேண்டும். 23-ஆம் தேதிக்குமேல் முயற்சிகள் வேண்டாம். பொதுமக்கள் சேவைக்கு பால், அரிசி தானம் செய்தால் புதன் பொருளாதார மேம்பாட்டை அதிகரிப்பார். ராசியிலேயே குரு இருப்பதால் வியாழக்கிழமை பிரவுன் அல்லது இருவண்ணம் கலந்த பசுவுக்கு புல் அல்லது மஞ்சள் வாழைப் பழம் தருவதால் குருவருள் பெறலாம். வீட்டிலுள்ள குழந்தைகளின் கல்வித் தடை அகன்று படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

கேட்டை: 26, 27 தேதிகளில் அலுவலகப் பணியாளர்கள் உயரதிகாரிகளைப் பெருமைப்படுத்தினால் பதவி உயர்வுக்குத் தடைகள் இருக்காது. இம்மாதக்கடைசியில் வேலை வாங்கித் தரவோ, இடமாற்றத்திற்கு பிறரை நாடவோ முயற்சித்தால் ஏமாற்றமே பரிசாகக் கிடைக்கப்பெறும். ஆடவர்கள், பெண்டிரை மதித்து நடப்பதால் சுக்கிரன் அருளைப் பெறலாம். இரும்பு உபகரண விற்பனை அதிக லாபம் தரும். தோல் சார்ந்த வேதனை மிகுதியானால், கருப்பு நிற நான்கு கால் பிராணிக்கு உணவூட்டல் நன்று. சிம்மத்தில் சுக்கிரன், சூரியனுடன் இருப்பதால் அந்தரங்க உறுப்பினை பால் அல்லது தயிர் கலந்த நீரால் சுத்தம் செய்தால், மலட்டுத்தன்மை போகும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 93801 73464

bala300819
இதையும் படியுங்கள்
Subscribe