சென்ற இதழ் தொடர்ச்சி...

தனுசு

ராசிக்கு சிறந்த நாட்கள்: 5, 6, 15, 16, 24, 25. பாதக நாட்கள்: 12, 13, 14, 20, 21, 26, 27.

மூலம்: பொதுவில் தனுசு ராசியினருக்கு சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகியவர்கள் நட்பானவர்கள்தான். மூவரும் 11-ல் இருக்கிறார்கள். மனைவியின் தங்கைக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தால், ஒரு வெள்ளி மோதிரம் அளியுங்கள். அவர்கள் திருமணம் தடையின்றி நடைபெறும். நீங்கள் அவர் களுக்கு அணிவிக்கும் மோதிரம் வாழ்வை செப்பனிட வைக்கும் என்கிறது அனுபவ சாஸ்திரம்.

Advertisment

மூல நட்சத்திரத்தின் அதி தேவதை தென்மேற்கு திசையின் கடவுளும், அஷ்டதிக் பாலகர் களில் ஒருவருமான நிருதி. பெண் மூலம் நிர்மூலம் என்பது தவறான சொல்.

பூராடம்: இரண்டாவது வாரம் சந்திரனின் மகிமை ஆச்சரியப்பட வைக்கும். நேர்காணல், தேர்வு, மீட்டிங், கான்பரன்ஸ் என எதில் தலையிட்டாலும் வெற்றி உங்கள் பக்கம்தான். 14, 15 தேதிகள் நல்லவையல்ல. தெரிந்தே தவறு செய்ய மனம் உந்துதல் தரும். ராகு தன்னந்தனியாய் மிதுனத்தில்- ராசியிலேயே கேது, சனி இருப்பதால் குடுமி யுடன் ஆறு தேங்காயை வாங்கி, திருஷ்டி சுற்றி ஓடும் நீரிலோ, விநாயகப் பெருமானுக்கோ அர்ப்பணித்தால் தீமைகள் அகலும். இம்மாதம் 21 வயதில் திருமணம் ஈடேறினால் நிச்சயமாகப் பரிகாரம் தேவை.

உத்திராடம் 1-ஆம் பாதம்: உங்களு டைய சொந்த ஜாதகத்தில் பூமிகாரகன் அங்காரகன் ஆட்சி, உச்சம் பெற்றோ அல்லது நட்பு பெற்றோ அல்லது 4, 9-ஆம் இடங்களிலோ இருந்தால், பூர்வீகச் சொத்து சிக்கலில் இருந்தால் இம்மாதம் வந்துவிடும். உங்களுடைய அதிர்ஷ்ட தேவதையான சுப்பிர மணியர், விக்னேஸ்வரரை வணங் குங்கள். பொதுவில் இப்போது 4, 5, 10, 12, 18, 40 வயதெனில் ஆரோக்கியக் குறைகள் வந்து மறையும். 24, 25 தேதிகளில் உணவில் கட்டுப்பாடு தேவை. தெய்வ நம்பிக்கை, தெய்வீக ஈடுபாடு உங்களை அரணாகக் காத்துக்கொள்ளும். குரு விருச்சிகத்தில் இருப்பதால் அரசுக்கு எதிராக பொய்சாட்சி கூடாது.

Advertisment

மகரம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 7, 8, 9, 17, 18, 19, 26, 27. பாதக நாட்கள்: 1, 2, 15, 16, 22, 23, 28, 29.

உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: ராகு, ராசிக்கு 6-ல்; சுக்கிரன், புதன், செவ்வாய், சூரியன் சிம்மத்தில்- அதாவது ராசிக்கு எட்டில். தாய்- தந்தையர் உங்களால் பெருமையடையப் போகிறார்கள். "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்' எனறு பெருமை பெறலாம். ராகுவும் பெருமை சேர்த்துத் தரப்போகிறார். இரண்டாவது வாரம் வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. 24, 25 தேதிகளில், மனைவியின் சொல்படி உணவு உட்கொள்வது நன்று. மாதத்தின் கடைசியில் 26, 27 தேதிகளில் பெரிய முதலீடுகள் வேண்டாம். 30-ஆம் தேதி பர்த்டே பார்ட்டி முகம் மலரச் செய்யும். சிலரை போதை நிலைகுலையச் செய்யும்.

122

திருவோணம்: மாதத்தின் முதல் வாரமே வரவைக் கடந்த செலவினங்கள் தொடராக வரும். பயணத்தில் நான்கு சக்கர வாகனங்களும் பிரச்சினைகளைத் தரலாம். மூன்றாவது வாரம் குரு பகவான் பணத்தின்மூலம் நிறைவைத் தருவார். 20, 21 தேதிகளில் நிம்மதியான தன்மை வெளிப்படும். ராசிக்கு 12-ல் சனியும் கேதுவும். வருமானமாக வந்த பணம் மாயமாகும். பத்து பாதாம் பருப்பை கருப்பு எள்ளுடன் கருப்புத்துணியில் முடிந்து, தென்கிழக்கு பாகத்தில் இருட்டான இடத்தில் வைத்துக்கொண்டால் வருமானம் காப்பாற்றப்படும். திருகு கள்ளியின் சிறு துண்டினை மேற்கில் தொங்கவிடுவதும் சிறப்பானது.

அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்: சனி பகவான், மனைவியின் உடல் ஆரோக் கியத்தைக் கெடுப்பார். எதை உட்கொண்டாலும் கசப்புச்சுவை தெரியவரும். இரவில் திடீர் தலைவலி, காய்ச்சல் தெரியவந்தால், அவை ஐந்து நாட்களுக்குமேல் தொடர்ந்தால் கருப்பு நிற சேவலுக்கு உணவூட்ட, சனியின் தொல்லை அகலும். இடுப்பு அல்லது அந்தரங்க உறுப்பில் மச்சம் இருந்தால் இம்மாதம் அவசர புத்தி கூடாது. இம்மாதம் கூறவேண்டிய அவிட்ட நட்சத்திர காயத்ரி மந்திரம்:

"ஓம் அக்ர நாதாய வித்மஹே

வசூபரீதாய தீமஹி

தந்நோ ச்ரவிஷ்டா ப்ரசோதயாத்.'

கும்பம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 1, 2, 10, 11, 20, 21, 28, 29. பாதக நாட்கள்: 3, 4, 17, 18, 19, 24, 25, 30.

அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள்: நீங்கள் அமைதியாக இருப்பவர்கள்தான். ஆனால் இம்மாதம் சிறு குறுக்கீடுகள், எதிர்வாதங்கள், பின்னடைவுகள் மனம் நிலைகுலையச் செய்யும். முதல் வார இறுதிக்குப் பின்தான் கணவன்- மனைவியரிடையே ஒற்றுமை தெரியவரும். 12, 14 தேதிகளில் எதையும் பயமின்றி எதிர்கொள்வீர்கள். சந்திரனின் இருக்கை சரியில்லை. சூதாட்டம் வேண்டாம். இம்மாதம் கிணற்றை மூடி அதன்மேல் வீடு கட்டக்கூடாது. வயதில் மூத்தோரை பாதம்தொட்டு வணங்கவேண்டும். வீட்டின் அருகே எட்டிய தூரத்தில் கிணறு, குட்டை இருந்தால், நவதானியமும், சிறிது பசும்பாலும் ஊற்றுதல் நன்று.

சதயம்: இம்மாதம் இரண்டாவது வாரம் உங்களுடைய முழுத் திறமையையும் காட்டவேண்டிய சவாலான சூழ்நிலை. 19, 21 தேதிகளில் கலந்துகொள்ளப்போகும் குதூகல விழாக்களில் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். 22, 23 தேதிகளில் எல்லாவற்றுக்கும் விடை கிடைத்துவிடும். சூரியனின் வீட்டில் சுக்கிரன். திருமணத் தரகர்கள், பியூட்டி பார்லர் நடத்துவோர் பின்னடைவை எதிர்கொள்ள நேரிடும். வெள்ளைப் பசுவுக்கு புல் தருதல் கூடாது. சிவப்புநிறப் பசுவைப் பேணவும். நீலநிறப் பூவை அசுத்தம் நிறைந்த கூவம் போன்ற ஆற்றில் போடுதல் நன்று. ஒற்றைக் கண் நபர்களுக்கு உதவி செய்வது சாலச் சிறந்தது.

பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்: இம்மாதக் கடைசியில் குடும்ப "கெட்டுகதர்'- ஒன்றுசேரும் நிகழ்வு ஆனந்தத்தைத் தரும். உங்கள் நடத்தையைப் பிறர் பார்த்து ஆச்சரியப்படப் போகிறார்கள். இம்மாதம் அரசு சார்ந்த தொல்லைகள் தூசி தட்டப்பட்டு விஸ்வரூபம் எடுக்கும். அதனை சூரியன், செவ்வாய் முறியடிப்பார்கள். எந்த வேலையையும் தொடங்கும்முன் சிறு துண்டு இனிப்பை வாயில் போட்டுக்கொண்டு பின் ஆரம்பிக்கவேண்டும். கருப்புநிறப் பசு, கொம்பில்லா நான்குகால் பிராணிகளுக்கு உணவூட்டல் நன்று. செவ்வாயை சாந்தி செய்ய தங்கை மகளுக்குத் தகுந்த உதவி புரிவது நன்று. உங்கள் குல, இன தர்மத்துக்கு எதிராக செயல்படக்கூடாது. ஒரு சிறு சமசதுர வெள்ளித்துண்டு வைத்துக் கொள்ளவும்.

மீனம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 3, 4, 12, 13, 14, 22, 23, 30. பாதக நாட்கள்: 5, 6, 20, 21, 26, 27.

பூரட்டாதி 4-ஆம் பாதம்: அபிலாஷைகள் நிறைவேறும்விதமாக வேண்டிய பொருட்களை வாங்கிக் குவிக்கலாம். மாணவர்கள், அரசு மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு விரும்பும் எண்ணம் நிறைவேறும். தாய்- தந்தையர் குழந்தைகளைப் பலவிதத்திலும் ஊக்கப் படுத்தலாம். 4-ல் இருக்கும் ராகுவுக்காக 400 கிராம் கொத்தமல்லித்தழை அல்லது பாதாம் பருப்பை திருஷ்டிசுற்றி நீர்நிலையில் போடவேண்டும். தனுசில் இருக்கும் சனிக்காக பார்வையற்ற பத்துபேருக்கு தான தர்மம் நன்று. புலால் மறுப்பதும் நல்லது. கேதுவுக்காக சின்னஞ்சிறு குழந்தைகளைக் கஷ்டப்படுத்துதல் கூடாது. (பாலியல் தொந்தரவு). கேதுவுக்குப் பிடிக்காது.

உத்திரட்டாதி: குடும்ப விவகாரங்களில் மனம் சிதறல் கூடாது. 10, 11 தேதிகளில் லாபகரமான சூழ்நிலை வலுவில் வரும். இத்துடன் உடல் உபாதையும் உண்டு. 22, 23 தேதிகளில் அரசுரீதியாக சலுகைகள் பெறலாம். மனைவி அரசு உத்தியோகம் பார்ப்பவர் எனில் நல்லவை நடக்கும். பூஜையறையில் கங்கை நீர் இருத்தல் சூரியனை மகிழ்விக்கும். கால்கிலோ கோதுமை அல்வா தானம் நல்லது. குழந்தைகளுக்கு இம்மாதம் பிறந்த நாள் கொண்டாடினால் உப்பு கலந்த பண்டம் பரிமாறல் நன்று. செவ்வாய் தோஷம் போக, ஆண் குழந்தைக்குப் பரிசாக தங்க மோதிரம் அணிவிப்பதைத் தவிர்த்தல் நன்று. ரேவதி: இம்மாதக் கடைசியில் கணவன்- மனைவியரிடையே பாசம், நேசம் அதிகரிக்கும். குடும்பம் சார்ந்த பல யோசனைகள் வெற்றிக்கு வழிவகுக்கும். உல்லாசப் பயணமும் உண்டு. சினிமா, தொலைக்காட்சித்துறையில் ஈடுபட் டோருக்கு ஏற்றம் தரும் மாதம். மாதக்கடைசியில் உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். வியாபாரத்திலும் வெற்றியை எதிர்பார்க்கலாம். குரு விருச்சிகத்தில் இருப்பதால் தினமும் குருவை வணங்குதல் சிறப்பானது.

கொஞ்சம் பச்சரிசியை மஞ்சள் துணியில் முடித்து திருஷ்டிசுற்றி நீர்நிலையில் போடலாம். போதைப் பழக்கம் வியாழனன்று வேண்டாம்.

செல்: 93801 73464