Advertisment

தன, குடும்ப பாவத்தின் தன்னிகரில்லா நிலை! -எஸ். விஜயநரசிம்மன்

/idhalgal/balajothidam/selfless-state-his-family-sin-s-vijayanarasimhan

பூமியில் மேடுபள்ளம், சமமான இடம் போன்றவற்றை அறிந்து நடப்பதற்கும், நடக்கும் செயல்கள் அனைத்தையும் பார்க்கவும் கண்கள் எங்ஙனம் பயன்படுகிறதோ, அதுபோல் இவ்வுலகில் மனிதராய்ப் பிறந்தவர்களுக்கு, வேதத்தில் சொல்லியிருக்கும் கிரியைகளை நன்குணர்ந்து செய்வதற்கு ஜோதி டமே முதன்மைபெற்று விளங்கு கிறது. கால அளவை நிர்ணயிக்கும் கருவியாகிய சூரியன் முதலிய கிரகங்கள், பூமியின் இந்த பாகத்தில் இந்த பலனைத் தருமென்று சொல்லுவதும் ஜோதிடமே. இதில் இரண்டாம் பாவத்தின் இணையற்ற நிலைகளைக் காண்போமா?

தனப் பலன்

Advertisment

2-ல் லக்னாதிபதி சுபகிரகமும், 3-ல் பாவியும், 4-ல் சுபர்களும் இருந் தால் ஜாதகன் தனவானாவான். 2-ல் பாக்கியாதிபதி இருக்க, லாபாதி பதி பார்க்க குறைவில்லாத செல்வ முடையவனாக இருப்பான்.

லக்னம் முதல் லக்னாதிபதி இருக்கும் ராசிவரை எண்ணி, அந்த எண்ணை லக்னாதிபதி இருக்கும் ராசியிலிருந்து எண்ண வரும் ராசி அசுப ராசியாகில் தரித்திர யோகமும், சுப வீடாகில் தனவானா கவும் ஜாதகன் இருப்பான். லக்னத் தில் சனியும், 4-ல் சந்திரனும், 7-ல் செவ்வாயும், 10-ல் சூரியன், குரு, புதன், சுக்கிரனும் கூடிநிற்கப் பிறந்த ஜாதகன் ராஜயோகத்தை அனுபவிப் பான்.

10-ல் லக்னாதிபதியும் தனாதிபதி யும், 1, 4, 7-ல் சுபகிரகங்களும் இருந்து, லக்னாதிபதியுடன் சுக்கிரன் கூடி நிற்க, ஜாதகன் சிறுவயது முதற் கொண்டே தனவானாக இருப்பான்.

Advertisment

ஜாதகருக்கு எந்தவகையில் பொருள் வருமென்பதை லக்னத்திற் கும், ராசிக்கும் 10-ஆமிடத்திலுள்ள கிரகங்களைக்கொண்டு சொல்லலாம். சூரியனாகில் தகப்பன் பொருளும், சந்திரன்- தாயார் பொருளும், சுக்கிர னானால் மனைவிமூலமாகப் பொருளும் கிடைக்கும்.

லாபாதிபதி, பாக்கியாதிபதியைப் பார்க்க, பிதுர் ரார்ஜிதமான பொருள் வந்துசேரும். 3-ஆமதிபதி பலம் மிக்கவராகி, லக்னாதிபதி பலமற்றவராக இருந்தால் சகோதரர்களின் பொருள் வந்துசேரும். தனுசு, கும்பம், மீனம், கன்னி, ரிஷபம் ஆகியவற்றில் ஒன்பது கிரகங்களும் சேர்ந்திருந்தால் ஜாதகனுக்கு கோடிகோடியாகப் பொருள் வந்துசேரும். திரிகோணத்து லக்னாதிபதி சுக்கிரனுடன் இணைந்திருந்தால், இதற்கும் மேலாக வாழ்வான் என்றறியவும்.

வித்யாபலன்

குருவும், சுக்கிரனும் 2-ல் நின்று, புதன் கேந்திர கோணங் களில் இருந்தால் ஜாதகன் அதிக வித்தையுடையவன். இவர்கள் 6, 3-ஆம் பாவங்களிலிருக்க லாபமில்லை. புதன் உச்சம்பெற்றிருந்தால் நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராயும

பூமியில் மேடுபள்ளம், சமமான இடம் போன்றவற்றை அறிந்து நடப்பதற்கும், நடக்கும் செயல்கள் அனைத்தையும் பார்க்கவும் கண்கள் எங்ஙனம் பயன்படுகிறதோ, அதுபோல் இவ்வுலகில் மனிதராய்ப் பிறந்தவர்களுக்கு, வேதத்தில் சொல்லியிருக்கும் கிரியைகளை நன்குணர்ந்து செய்வதற்கு ஜோதி டமே முதன்மைபெற்று விளங்கு கிறது. கால அளவை நிர்ணயிக்கும் கருவியாகிய சூரியன் முதலிய கிரகங்கள், பூமியின் இந்த பாகத்தில் இந்த பலனைத் தருமென்று சொல்லுவதும் ஜோதிடமே. இதில் இரண்டாம் பாவத்தின் இணையற்ற நிலைகளைக் காண்போமா?

தனப் பலன்

Advertisment

2-ல் லக்னாதிபதி சுபகிரகமும், 3-ல் பாவியும், 4-ல் சுபர்களும் இருந் தால் ஜாதகன் தனவானாவான். 2-ல் பாக்கியாதிபதி இருக்க, லாபாதி பதி பார்க்க குறைவில்லாத செல்வ முடையவனாக இருப்பான்.

லக்னம் முதல் லக்னாதிபதி இருக்கும் ராசிவரை எண்ணி, அந்த எண்ணை லக்னாதிபதி இருக்கும் ராசியிலிருந்து எண்ண வரும் ராசி அசுப ராசியாகில் தரித்திர யோகமும், சுப வீடாகில் தனவானா கவும் ஜாதகன் இருப்பான். லக்னத் தில் சனியும், 4-ல் சந்திரனும், 7-ல் செவ்வாயும், 10-ல் சூரியன், குரு, புதன், சுக்கிரனும் கூடிநிற்கப் பிறந்த ஜாதகன் ராஜயோகத்தை அனுபவிப் பான்.

10-ல் லக்னாதிபதியும் தனாதிபதி யும், 1, 4, 7-ல் சுபகிரகங்களும் இருந்து, லக்னாதிபதியுடன் சுக்கிரன் கூடி நிற்க, ஜாதகன் சிறுவயது முதற் கொண்டே தனவானாக இருப்பான்.

Advertisment

ஜாதகருக்கு எந்தவகையில் பொருள் வருமென்பதை லக்னத்திற் கும், ராசிக்கும் 10-ஆமிடத்திலுள்ள கிரகங்களைக்கொண்டு சொல்லலாம். சூரியனாகில் தகப்பன் பொருளும், சந்திரன்- தாயார் பொருளும், சுக்கிர னானால் மனைவிமூலமாகப் பொருளும் கிடைக்கும்.

லாபாதிபதி, பாக்கியாதிபதியைப் பார்க்க, பிதுர் ரார்ஜிதமான பொருள் வந்துசேரும். 3-ஆமதிபதி பலம் மிக்கவராகி, லக்னாதிபதி பலமற்றவராக இருந்தால் சகோதரர்களின் பொருள் வந்துசேரும். தனுசு, கும்பம், மீனம், கன்னி, ரிஷபம் ஆகியவற்றில் ஒன்பது கிரகங்களும் சேர்ந்திருந்தால் ஜாதகனுக்கு கோடிகோடியாகப் பொருள் வந்துசேரும். திரிகோணத்து லக்னாதிபதி சுக்கிரனுடன் இணைந்திருந்தால், இதற்கும் மேலாக வாழ்வான் என்றறியவும்.

வித்யாபலன்

குருவும், சுக்கிரனும் 2-ல் நின்று, புதன் கேந்திர கோணங் களில் இருந்தால் ஜாதகன் அதிக வித்தையுடையவன். இவர்கள் 6, 3-ஆம் பாவங்களிலிருக்க லாபமில்லை. புதன் உச்சம்பெற்றிருந்தால் நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராயும், உயர்கல்வி கற்றவராயும் இருப்பார்.

புதன் 7 -ஆமிடத்திலும், குரு சுயவீட்டில் அல்லது கேந்திர கோணங்களில் அல்லது 2- ஆம் வீட்டில் பகையற்றும் இருந்து சுபர்களால் பார்க்கப்பட்டாலும் ஜாதகர் பெரிய பண்டிதராக, வித்வானாகத் திகழ்வார்.

புதன் 2-ஆம் பாவத்தில், கேந்திரங்களில் இடம்பெற, 2-ஆமதிபதி உச்சம்பெற்று, சுக்கிரன் உபய ராசியில் ஏற, 3-ஆமிடத்தில் சுபர்கள் இருக்க, ஜாதகன் ஜோதிடம், அர்த்த சாத்திரங்களில் வல்லவனாக இருப்பான்.

2-ஆமதிபதி, குரு, சுக்கிரன் ஆகியோர் உச்சம் அல்லது மூலத்திரிகோணம் பெற்றிருக்க, அவர்களை அசுப கிரகங்கள் பாராதிருந்தால் ஜாதகன் தர்க்க சாத்திரங் களில் வல்லவனாக இருப்பான்.

லக்னத்துக்கு திரிகோணத்தில் புதன் இருந்தால் தமிழ் மொழியில் வல்லவனாக வும், செவ்வாய் இருந்தால் தெலுங்கு மொழியிலும், ராகு எனில் உருதுவிலும், குரு, சுக்கிரன் இருந்தால் எல்லா சாத்திரங் களிலும், தர்க்க சாத்திரங்களிலும் வல்லவனாக இருப்பான்.

2-ஆமதிபதியும், உச்ச புதனும் லக்னத் திலிருந்து, குரு, சனி 8-ல் நிற்க, ஜாதகன் கணிதத்தில் வல்லவனாக இருப்பான்.

dd

சூரியன், குரு லக்னமேற ஜாதகன் தனமுடையவனாகவும், புலவனாகவும் இருப்பான். சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு ஆகிய கோள்கள் லக்னத்திலிருக்க, ஜாதகன் பிரபல வித்வானாகவும், கீர்த்தியும், நற்பெயரும் பெற்று, அனைவரும் இவனிடம் வந்து பாடம்கேட்டு மகிழ்ச்சியடையக் கூடியவனாகவும் இருப்பான்.

ஜென்ம லக்னத்திற்கு இரண்டாம் பாவத்தில் சுப கிரகங்கள் இருந்தால் ஜாதகன் செல்வமுள்ளவனாகவும், சகல சம்பத்துக்களும் உடையவனாகவும் நற்சுகத்துடன் வாழ்வான். அசுப கிரகங் கள் இருந்தால் ஜாதகனுக்கு முகரோகம், பண நஷ்டம், கல்வியில் மந்தநிலை, கண்நோய் ஆகியவை ஏற்படும்.

இரண்டாமிடத்தில் சூரியன் இருக்க, ஜாதகன் சதாசர்வ காலமும் நோயுடைய வனாவான். சந்திரன் இருக்க, நல்ல குடும் பத்தில் பிறந்தவனாவான். செவ்வாய் இருக்க, அதிக கோபமுள்ளவனாகவும், துஷ்டனாகவும், தீய செலவுகள் செய்பவ னாகவும் இருப்பான். பரம்பரைச் சொத்துகள் சேரும். பூமி லாபமுண்டு. துர்போதனை உடையவன். சுபகாரியங் களில் ஈடுபடுவான்.

புதன் இருக்க, வேத சாத்திரங்கள் படிப்பதில் ஆர்வமுள்ளவனாக, ராஜ காரியங்களில் ஈடுபட்டு எக்காரியங்களை யும் வெற்றிகரமாக முடித்துக் கொடுப் பான். சகோதர- சகோதரி உள்ளவன். தானிய சம்பாத்தியம், புத்திர பாக்கிய முண்டு.

இரண்டாம் பாவத்தில் குரு இருந்தால் ஜாதகன் கையில் எப்போதும் பணம் இருந்து கொண்டே இருக்கும். தர்மகுணம் உடைய வன். இளமையிலேயே திருமணம் நடக்கும். நீதி நேர்மைக்குக் கட்டுப்பட்டு நடப்பான். பெண்களை சுலபமாக வசீகரிப்பான். திரவியத் தைப் புதைத்துவைப்பான். தற்காலத்தில் அதிகம் சேமிப்பான் என கொள்ளலாம். பாவ கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்று பலமாக இருக்காவிடில் மேற்சொன்ன பலன்கள் நடந்தேறும்.

இரண்டாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஜாதகன் போகத்தில் நாட்டமுடையவன். நற் குணமுடைய மனைவியுண்டு. அழகும், பெரிய கண்களும் உடையவர். நோயற்ற உடலை உடையவர். செல்வ வளமுண்டு. கபட எண்ணங்கள் இருக்கும். நல்ல கல்வியுண்டு.

இரண்டாம் பாவத்தில் சனி இருக்க, இரு திருமணங்கள் ஏற்படும். அற்ப ஆயுளும், நீசருடைய பயமும் இருக்கும். பரம்பரைச் சொத்துகளை அழிப்பார். பெற்றோர்களுக்கு அடங்காதவராய் இருப்பார். அபகீர்த்தி உடையவர்.

இரண்டாம் பாவத்தில் ராகு- கேது இருக்க, ஜாதகர் தயவில்லாத மனமுடைய வராக இருப்பார். விவாகம் இரண்டானாலும், புத்திரர்கள் குறைவாக இருப்பார். எப்பொழு தும் மன சஞ்சலம் உடையவர். கல்வியறிவு குறைவு. சிறுவயதில் கஷ்டங்களை அனுபவித் தாலும், பிற்காலத்தில் சுகமாக வாழ்வார்.

இரண்டாம் பாவத்தில் சுப கிரகங்களும், பாவ கிரகங்களும் இருந்தால் ஜாதகருக்கு குறைந்த அளவு வருமானமும், குறைந்த அளவு செலவுகளும் ஏற்படும். சூரியன் இருந்தால் ரத்தினம், பொன் முதலிய திரவியம் உண்டாகும்.

இரண்டாம் பாவத்தில் பௌர்ணமிச் சந்திரன் இருந்தால் ஜாதகன் சுகம் மிக்கவன். தனவிருத்தியுண்டு. பொன் திரவியங்களும் உண்டு. வாசனை, சந்தனம், கற்பூரம் முதலிய பொருள்களில் விருப்பமுடையவன். நற்பெயரும், புகழும் உடையவன். சுக்கிரனும் குருவும் இணைய, தனது குலத்திற்கும் செல்வத்திற்கும் அதிபதியாக இருப்பான். தேய்பிறைச் சந்திரனும் புதனும் அசுப கிரகங்களுடன் கூடிநின்றால் தரித்திரம் உண்டாகும்.

2-ல் சுக்கிரன் நின்று அவனைச் சந்திரன் பார்க்க, ஜாதகன் குருடனாவான். 2-ல் அங்கார கன் இருந்தால் ஜாதகன் விவசாயம், பயிர், கன்றுகாலிகளை உடையவனாக இருப்பான்.

லக்னத்துக்கு 2-ஆமிடத்தில் குரு, புதன் இருந்தாலும், சுக்கிரன் இருந்தாலும் ஜாதகன் வெள்ளி, பொன் முதலியவற்றால் செல்வந்த னாவான்.

ஜோதிடக் களஞ்சியம் கூறுவதென்ன?

"இலக்னத்திற் கதிபதியோடு

இரண்டிடத்திற் கதிபன், சுங்கன்

திக்கெனக் கூட மூன்றில்

செங்கதிர் நிற்குமாயின்

ஒக்கவே கண்ணில்லாமல்

உதிப்பானா தித்தன் அல்லால்

மைக்கனாய் மதியன் முற்றான்

மாலைக் கண்ணாகு மென்றேன்.'

ஜென்ம லக்னத்திற்கு இரண்டிற்கு அதிப னோடு ராகு, கேது சேர, அவனுக்கு சிறுவயதி லேயே மாலைக் கண் நோயாகும். பலவீனமா னாகவும், பொய் பேசுபவனாகவும் விளங்கு வான். மரியாதையில்லாதவன். அவமானத் தொழில்களைச் செய்வான் என குறிப்பிடு கிறது.

2-ஆம் பாவத்தில் சூரியன், சந்திரன் இருந்தாலும், அவனுடைய பார்வை இருந்தாலும் ஜாதகனைப் பணமில்லாத ஏழையாகச் செய்வான். 2-ல் செவ்வாயும் சுக்கிரனும் இருக்க, சூரியன், சந்திர தசையில் தரித்திரத்தையே கொடுப்பார்கள். கஷ்டம் உண்டாகும். குடும்பத்தில் உணவுக்கு வழியின்றி, கவலையும் சண்டையும் ஏற்படும்.

2-ல் செவ்வாயும், சனியும் கூடிநிற்க, ஜாதகன் மிகவும் கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கக்கூடிய நிலை ஏற்படும். தொழிலில் வரவு வந்தும் கடன்வாங்கி வாழ்க்கையை நடத்தக்கூடியவனாக இருப்பான். 2-ஆம் பாவத்தை தேய்பிறைச் சந்திரன், புதன் பார்வை செய்ய, ஜாதகன் தான் ஈட்டிய செல்வத்தையெல்லாம் நாசம் செய்வான். சந்திரன் பார்த்தாலும் இதே நிலை உண்டாகும்.

லக்னத்துக்கு 2, 4, 7 ஆகிய இடங்களில் சூரியன், புதன், சுக்கிரன் இருந்தால் ஜாதகன் எத்தனை அரசர்களோ, மந்திரிகளோ இருந்தா லும், அவர்களுக்கெல்லாம் மேலானவனாகப் புகழுடன், நல் யோகத்தில், சொல்வண்மை, திறமை, கீர்த்தி ஆகியவற்றுடன் வாழ்வான்.

2-ல் குரு இருந்து புதனால் பார்க்கப்பட்டால் ஜாதகன் பொருள்களை இழந்து பிச்சை யெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவான். 2, 7, 9-க்கு அதிபதிகள் ஆறுக்குமேல் மூன்று ராசிகளுக்குள் இடம்பெற்றாலும், 6-ஆமதி பன் பலமற்றிருந்தாலும் ஜாதகன் ஊமை யாவான்.

ராசிக்கு அதிபதியும், 2-ஆமதிபதியும், 7-ஆமதிபதியும் கூடி 7-ல் இருக்க, ஜாதகன் பலவிதமான உருவங்கள் போடும் சமர்த்தனா வான். 2-ஆம் வீட்டில் சூரியனும், நட்பு கிரகங் களும், சனியும் கூடிப் பார்த்தால் ஜாதகனு டைய தனம் போய்விடும். 2-ஆமதிபதியும், லக்னாதிபதியும் கூடி 6, 8, 12-ஆமிடங்களில் இருந்து சுபர்களால் பார்க்கப்பட்டு, 6-ல் சூரியன் இருக்க, ஜாதகரின் மகனுக்குப் பூனைக்கண் ஆகும்.

சுக்கிரன் 2-ஆமதிபதியாகி 8-ல் இருக்க, சூரியன் 6-ல் இருக்கப் பிறந்தவர்களுக்குப் பிற் காலத்தில் கண் நோயினால் கண்கள் குருடாகும். மேஷம், ரிஷபம், சிம்மம் ஆகிய ராசிகளில் சனியும், செவ்வாயும் நிற்கப் பிறந்த குழந்தை ஊனமாக கொடிசுற்றிப் பிறக்கும்.

ஜென்ம லக்னத்திற்கு பாவங்கள் நான்கிலும் பலமுள்ள கிரகங்கள் 2, 9, 10, 11 ஆகிய பாவங்களில் இருந்தால் ஜாதகன் அதிக பணமுடையவனாக- எப்போதும் வற்றாத செல்வமுடையவனராக இருப்பான்.

சிம்மம் 2-ஆம் வீடாகி, அதில் சுக்கிரன் லக்னாதிபதியோடு இணைந்திருக்க, 9-ல் செவ்வாய் திரிகோணத்தில் இருக்க, தனத் தையும் அதிர்ஷ்டத்தையும் தொழில் லாபத்தையும் அடைந்து, பூமி பாலகனாக வும் விளங்குவான்.

11-ஆம் பாவாதிபதி 4-ல் இருந்து, லக்னாதி பதியும், 4-ஆமதிபதியும் 4-ஆமிடத்தைப் பார்த்தால் ஜாதகனுக்குப் புதையல் கிடைக்கும்.

ராஜயோகத்தில் பிறந்தவர்கள் விசேஷ தன லாபம் அடைந்து மிகுந்த சம்பத்துடன் வாழ்வார்கள்.

சர்வாஷ்ட வர்க்கத்தில் பரல்கள் எந்த ராசி திக்கில் அதிகமாக உள்ளதோ அந்த திக்கில் ஜாதகனுக்கு திரவிய விருத்தி நிச்சயமாக உண்டு என்பதை அறியவும்.

சூரியன் பாவகிரகங்களுடன் கூடி பல மற்று விரய பாவத்திலிருந்தால் வலது கண் கெடும். செவ்வாய் பலமற்று விரய பாவத்திலிருந்தால் இடது கண் போகும். இருவரும் விரய பாவத்தில் இருக்க இரண்டு கண்களும் தெரியாது. சனியும் செவ்வாயும் 12-ல் இருக்க கண் ஊனம் ஏற்படும். சூரியனும் சந்திரனும் 12-ல் இடம்பெற கண் நோய் உண்டாகும்.

சூரியன், செவ்வாய், சந்திரன், சனி ஆகியோர் 2, 6, 8, 12-ல் நிற்க கண்நோய் உண்டா கும். மேற்கூறிய கிரகங்கள் கேந்திரங்களில் அல்லது திரிகோணங்களில் அல்லது ஆட்சி வீட்டில் இருந்தால் ஜாதகர் கல்வி உடையவனும், கவிபாடும் திறமையுடையவ னாகவும் இருப்பான்.

2-ஆம் பாவாதிபதியும், காரகன் குருவும் 6, 8, 12-ல் அல்லது 2-ஆம் வீட்டில் இருக்க அல்லது கேந்திர திரிகோணங்களில், பகை, நீச பாவங்களில் இருந்தாலும் கெட்ட பலன் களையே கொடுப்பார்கள்.

2-ஆம் பாவத்தில் ராகு அல்லது சூரியன் அல்லது ராகுவுக்கு இடம்கொடுத்தவன் கூடியிருக்க, 2-ஆமதிபதியின் தசை- புக்தியில் பல்லில் ரோகமுண்டாகும்.

10-ஆமதிபதி, 6-ஆமதிபதி, 2-ஆமதிபதி, சுக்கிரன் ஆகியோர் கூடியிருந்தால் ஜாதகன் அரசனது கோபத்துக்கு ஆளாகி தண்டனை அனுபவிக்க நேரும். லக்னத்தில் சனி, 2-ஆமதி பதியும், 6-ஆமதிபதியும் கூடியிருந்தால் ஜாதகன் காது செவிடாகும். அப்படி இல்லை யென்றால் காதில் நோய் உண்டாகும். இவர்கள் கேந்திரம் பெற நன்று. நன்மையே நடக்கும். காதுகளில் பிரச்சினை இராது.

மேலே கண்ட இணைவுகளை வைத்து ஜாத கனின் குடும்பம், நேத்திரம், செல்வவளம், ஏழ்மை, கண்நோய் என பலநிலைகளைப் பற்றி ஆராய ஜோதிடர்களுக்கு இக்கட்டுரை வழி காட்டியாக அமையும் என்றெண்ணி நிறைவு செய்கிறேன்.

bala150722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe