சென்ற இதழ் தொடர்ச்சி...

திருமணம் நடந்தபின்பு வரும் பிரச்சினைகளை நான்காக வகைப்படுத்தலாம். அவை:

1. அறம் சார்ந்த பிரச்சினைகள்

அறம் என்பது மனம், கல்வி, புத்திசாலித்தனம், முடிவெடுக்கும் திறன், நியாயம், தர்மம் போன்றவை.

Advertisment

அதாவது நாம் எடுக்கும் முடிவு குடும்பத்திற்கு ஒத்துப்போகாமல் வரும் பிரச்சினைகள்.

2. பொருள் சார்ந்த பிரச்சினைகள்

பணம், வீடு, வாகனம், தொழில் போன்ற பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகள்.

3. இன்பம் சார்ந்த பிரச்சினைகள்

காதல், காமம், ஆடம்பரம், லாபம் போன்ற உடல் சார்ந்த மனமும், மனம் சார்ந்த உடலிலினாலும் ஏற்படும் பிரச்சினைகள்.

4. மோட்சம் சார்ந்த பிரச்சினைகள்

இறப்பு, மறுபிறப்பு தொடர்பான பிரச்சினைகள். சாதாரண மனித வாழ்க்கையில் இது இடம்பெற வாய்ப்பில்லை. காரணம், யாரும் இறந்தபின்பு சொர்க்கமா நரகமா, மோட்சமா, மறுபிறப்பா என்பதற்கு மட்டும் சண்டை போட்டுக்கொள்ள மாட்டார்கள்.

1. அறம் சார்ந்த பிரச்சினைகள் - 1, 5, 9.

2. பொருள் சார்ந்த பிரச்சினைகள் - 2, 6, 10.

3. இன்பம் சார்ந்த பிரச்சினைகள் - 3, 7, 11.

4. மோட்சம் சார்ந்த பிரச்சினைகள்- 4, 8, 12.

Advertisment

lakshmi

பிரச்சினைகள் எப்பொழுது வருமென்று தெரிந்தால்தான் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்ய ஏதுவாக இருக்கும். ஜோதிடம் என்பது எதிர்கால வாழ்க்கைக்கான வழிகாட்டி. எந்த காலகட்டங்களில் நாம் எவ்வாறு நடந்துகொள்ளப்போகிறோம் அல்லது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று கூறுவதுதான் ஜோதிடம். அந்த காலகட்டங்களை தசா, புக்தி, அந்தரக் கணிதத்தில் தெரிந்துகொள்ளவேண்டும்.

கணவனுக்கும் மனைவிக்கும் தனித்தனியாக நடக்கும் தசா, புக்தி, அந்தர, அதிபதிகளின் சேர்க்கை சுபமானால் பிரச்சினைகளுக்குரிய தீர்வு கிடைத்துவிடும். இல்லையென்றால் சிறு விவாதம்கூட பெரிய பிரச்சினையாகி பிரிவென்ற நிலைவரை வந்துவிடும்.

சிலசமயம் என்ன பிரச்சினை- எதற்காகக் கோபப்படுகிறார்கள் என்பதே தெரியாத நிலையில் எந்த தசா புக்தி, அந்தரம் நடக்கிறதோ அதன் காரகத்துவங்களில்தான் கோபம் வரும்.

அறம் சார்ந்த தசா, புக்தி, அந்தர காலகட்டங்களில் தீர்த்த யாத்திரை போவதும், பொருள் சார்ந்த காலகட்டங்களில் பொருளாதார சக்திக்குத் தகுந்தவாறு சிறு பொருளாவது பரிசாகக் கொடுப்பதும் சிறந்த பரிகாரம்.

இன்பம் சார்ந்த தசாபுக்திக் காலங்களில் பொருளாதார சக்திக்குத் தகுந்த பொழுதுபோக்கு இடம், சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லுதல், தம்பதியினர் கருத்துப் பரிமாற்றத்திற்கு அதிக நேரம் செலவிடுதலே தகுந்த தீர்வு.

அதைவிடுத்து எதற்கெடுத்தாலும் பரிகாரம் என்று அலைந்தால் வாழ்வே வெறுப்பாகும்.

இவ்வாறு செய்தால் குடும்பத்தில் வரும் பிரச்சினைகள் சில நாட்களில் சரியாகிவிடும். பிரிவுவரை செல்லாது.

இதுதான் ஜோதிடம் கூறும் தீர்வு.

ஏக நட்சத்திரம் பொருத்தலாமா?

ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், திருவோணம் இந்த ஆறு நட்சத்திரங்களும் ஆண், பெண் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக வருமானால் உத்தமம் என்றும்; அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் இந்த பத்து நட்சத்திரங்கள் மத்திமம் என்றும், சில குறிப்பிட்ட நட்சத்திரங்களை இணைக்கலாம் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஏக நட்சத்திரங்களை இணைப்பதால் இருவருக்கும் ஒரே தசையாக வருவதுடன் ரஜ்ஜுப் பொருத்தம் அமையாது. ஏக நட்சத்திரத்தில் திருமணம் சிறப்பான வாழ்வைத் தரும் வாய்ப்பு குறைவு.

ஏக ராசியினர் திருமணம் செய்யும்போது கருத்தொற்றுமை அதிகமாக இருக்கும். இதைப்போல் ஒரு வரன் அமைவது பெரிய கொடுப்பினை என்றாலும், வருட கிரகங்கள் கோட்சாரத்தில் ஒரே ராசியில் சஞ்சரிக்கும்போது சுபமும், அசுபமும் 200% உறுதி என்ற கருத்தை மறக்கக்கூடாது.

மேலும் ஆணின் நட்சத்திரத்திற்குப் பின் பெண்ணின் நட்சத்திரம் இருத்தல் மிக முக்கியம்.

மூலம் 1-ஆம் பாதம் மட்டுமே மாமனாருக்கு ஆகாது. 2, 3, 4 பாதங்கள் தோஷமில்லை. ஞாயிற்றுக்கிழமை பிறந்த மூல நட்சத்திரத்திற்கு நான்கு பாதமும் தோஷமே. ஆயில்யம் 1-ஆம் பாதம் மாமியாருக்கும், கேட்டை 1-ஆம் பாதம் மூத்த மைத்துனருக்கும், விசாகம் 4-ஆம் பாதம் இளைய மைத்துனருக்கும் ஆகாது என்ற பொதுவான கருத்து இருந்து வருவதால், இந்த நட்சத்திரப் பெண்களுக்கும் தீர்வு தரமுடியும்.

மூல நட்சத்திரப் பெண்களுக்கு மாமனார் இல்லாத வரனும், ஆயில்ய நட்சத்திரப் பெண்ணிற்கு மாமியார் இல்லாத வரனும், கேட்டை, விசாக நட்சத்திரப் பெண்ணிற்கு மைத்துனர் இல்லாத வரனும் தேர்வு செய்வதே தீர்வு.

திருமணத்திற்கு மணப்பெண் பற்றாக்குறையாகவுள்ள இந்த காலத்தில், நட்சத்திரப்பெயரைச் சொல்லி பெண்களின் வாழ்க்கையை வீண் செய்யக்கூடாது. இளைஞர்கள் இதுபோன்ற பெண்களைத் தேடி வாழ்க்கை கொடுக்கவேண்டும்.

உங்கள் திருமண வாழ்வு கற்கண்டாய் இனிக்கும் என்பது நூறு சதவிகிதம் உறுதி.

ஒரு வீட்டிற்கு ஒரு ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ உள்ள இந்த காலத்தில் மைத்துனர் எங்கிருந்து வருவார்?

தலைப்பிள்ளைகள் ஜாதகத்தைப் பொருத்தலாமா, கடைசிப் பிள்ளைகள் ஜாதகத்தைப் பொருத்தலாமா என்பதெல்லாம் தேவையில்லா விவாதம்.

சந்திரன் குரு அல்லது சுக்கிரனோடு சேர்ந்தாலும், பார்க்கப்பட்டாலும், மூலம், ஆயில்யம், கேட்டை, விசாக நட்சத்திர தோஷம் நிவர்த்திபெறும்.

மேலும் ஆணுக்கு எந்த நட்சத்திரமும் தோஷம் கிடையாது.

ஆண்- பெண் ஜென்ம நட்சத்திர நாளில் திருமணம் செய்வது சிறப்பல்ல.

திருமணமாகாத பெண் பிள்ளைகளை வீட்டின் வடமேற்கு அறையில் கிழக்கே தலைவைத்துப் படுக்கச் செய்தால் விரைவில் திருமணம் நடக்கும்.

ஆண் ஜாதகமோ பெண் ஜாதகமோ எந்தப் பிரச்சினை இருந்தாலும் சிறப்பான முகூர்த்த லக்னம் எல்லா தோஷத்திற்கும் சிறந்த பரிகாரம் ஆகும்.

இன்னும் சுருக்கமாக, முகூர்த்த லக்னத்திற்கு 11-ல் சூரியன் இருந்தால் சகல தோஷ நிவர்த்தி.

திருமணப் பொருத்தம் பார்க்கும் போது ஆண்- பெண்ணின் உடல் மற்றும் உயிர் எண்ணிற்கேற்ற யோகமான தேதிகளில் பிறந்தவர்களைத் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

ஒவ்வொரு பிரச்சினையையும் இவ்வாறு புரிந்து, காலகட்டங்களை உணர்ந்து செயல்பட்டால் எல்லா நாளும் இனிய நாளாகவே அமையும்.

செல்: 98652 20406