துருவ நாடியில் நட்சத்திரங்களின் யோக ரகசியம்!

/idhalgal/balajothidam/secret-yoga-stars-polar-pulse

சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

ஜோதிடர்கள் ஒருவருக்கு ஜாதகப்பலன் கூறும்போது, அவரின் பிறப்பு ஜாதகத்தில் ஒன்பது கிரகங்கள், பன்னிரண்டு ராசிகளில் அமர்ந்துள்ள நிலையினைக் கொண்டு பலன் கூறுகிறார்கள். யோகப் பலன்களைக் கூறும்போது அவருக்கு குருவும் சந்திரனும் ஒரே ராசியில் சேர்ந்திருந்தால், அவருக்கு "குருச்சந்திர யோகம்' உள்ளதென வும்; ஜென்ம லக்னத்திற்கு ஒன்பதாமிடம், பத்தாமிட அதிபதிகள் இணைந்திருந்தால், அவருக்கு தர்மகர்மாதிபதி யோகம் உள்ளதெனவும்; சூரியனும் புதனும் இணைந்து ஒரே ராசியில் இருந்தால் "புதாத்திய யோகம்' உள்ளவர் எனவும், இதுபோன்று இன்னும்பல கிரகங்களின் சேர்க்கை நிலையினைக்கொண்டு, பலவிதமான யோகங்களைக் கூறுவர்.

இவற்றை நம்பிக்கொண்டு, இதுபோன்ற யோகப் பலன்களால் தங்கள் வாழ்வில் உயர்வடைவோமென அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து பலர் வாழ்ந்துகொண்டிருக்கி றார்கள். ஆனால், நடைமுறை வாழ்வில் ஆயுள் இறுதிவரை அத்தகைய யோகப் பலன்களால் எந்த நன்மையும் அடையாமல் சிரமப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

hh

இதுபோன்ற யோகப் பலன்களில் பிறந்த வர்கள் நாடிப்பலனறிய வரும்போது, "ஐயா, என் ஜாதகத்தில் உள்ளதுபோல் யோகப் பலன்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. எந்த வயதில்- எந்த தசை, புக்தியில், எப்போது கிடைக்கும்' எனக் கேட்பவர்கள் உண்டு.

இந்த கேள்விகளுக்குரிய பதிலைத் தேடி ஆய்வுசெய்தபோது, துருவ நாடியில் இதுபோன்ற இன்னும்

இந்த கேள்விகளுக்குரிய பதிலைத் தேடி ஆய்வுசெய்தபோது, துருவ நாடியில் இதுபோன்ற இன்னும் பல கேள்விகளுக்குத் துல்லியமான வழிமுறை கூறப்பட்டுள்ளது. அவற்றை சுருக்கமாக அறிவோம்.

ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் எத்தனை நல்ல யோகங்களைத் தரும் நிலையில் கிரகங்கள் சேர்ந்திருந்தாலும், அந்த கிரகங்கள் அவரின் ஜென்ம நட்சத்திரத்திற்கு நன்மை தரும் நட்சத்திரங்களின் பாதசாரங்களில் இருந்தால் மட்டுமே, அந்த கிரகச் சேர்க்கையால் உண்டாகும் யோகப் பலன்களைத் தங்குதடையின்றி தந்து, அவர் வாழ்வில் அனுபவிக்கச் செய்யும்.

ஒருவரின் ஜாகத்தில் பாவகிரங்கள் எனக் கூறப்படுபவை, அவரின் ஜென்ம நட்சத்திரத்திற்கு அனுகூலமான நட்சத் திரங்களின் பாதசாரங்களில் இருந்தால், அந்த ஜாத கருக்கு நன்மைகளையே தந்து, வாழ்வில் உயர்வடை யச் செய்துவிடும். பாவ கிரகங்கள் அவரின் ஆயுள் வரை நன்மைகளை மட்டுமே செய்யும்.

யோகம் தரும் கிரகங்களின் சேர்க்கை அவரின் ஜென்ம நட்சத்திரத்திற்கு அனுகூலமான நட்சத்திரங் களின் பாதசாரங்களில் மட்டும் பிறப் பிலேயே இருந்துவிட்டால், அவர்கள் எவ்வளவு கெட்டவர்களாக, திருடர்களாக, ஏமாற்றிப் பிழைப்பவர்களாக இருந்தாலும் முன்னேற்றம் காண்பர்.

அரசியல், அதிகாரப் பதவிகளில் இருந் தாலும்; தொழில், வியாபரம் என எதைச் செய்தாலும் அதில் படிப்படியாக உயர்ந்து சுகம் அனுபவித்து வாழ்வார்கள். கிரகங்கள் யோகப் பலன் தரும் நிலையில் நல்லவர்கள், கெட்டவர்கள் எனப் பார்ப்பதில்லை.

ஜென்ம ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பு அவரின் ஜென்ம நட்சத்திரத்திற்கு நன்மை தராத நட்சத்திரங்களின் பாதசாரங்களில் இருந்துவிட்டால், அவர் நல்லவராக, பக்தி மானாக, கடவுள் அருள்பெற்றவராக, தானம், தர்மம் செய்பவராக, எல்லாருக்கும் உதவிகள் செய்பவராக இருந்தாலும், அவரின் வாழ்க்கையில் சிரமங்களையே அனுபவிப் பார். இவர் தானும் சிரமப்பட்டு, தன் குடும்பத் தினரையும் சிரமப்படச் செய்துவிடுவார்.

பாவகிரகங்கள் எனக் கூறப்படும் செவ்வாய், சனி, ராகு, கேது ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில், அவரின் ஜென்ம நட்சத்திரத்திற்கு அனுகூலமானநட்சத்திரங்களின் பாத சாரங்களில் இருந்தால், அவருக்கு செவ்வாய் தோஷம், காலசர்ப்ப தோஷம், ஆயுள் தோஷம் போன்ற எந்தவிதமான தோஷப் பாதிப்புகளையும் தராமல், நடைமுறை வாழ்வில் நன்மைகளையே தந்து அனுபவிக்கச் செய்யும்.

பாவகிரகங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு பிரதிகூலமான நட்சத்திரங்களின் பாத சாரங்களில் இருந்தால் இதுபோன்ற தோஷப் பாதிப்பு தந்து அனுபவிக்கச் செய்யும்.

ஒரு பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் லக்னம் அல்லது ராசிக்கு 2, 4, 7, 8, 12-ஆவது ராசிகளில் கணவனைக் குறிப்பிடும் கிரகமான செவ்வாய் இருந்தால், செவ்வாய் தோஷமுள்ள பெண் என பொதுவாகக் கூறிவிடுவார்கள். இதனால் அந்தப் பெண் பருவ வயதில் திருமணம் நடைபெறாமல் பரிதவிக்கிறார்.

பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் 2, 4, 7, 8, 12-ஆகிய ராசிகளில் இருந்தாலும், அந்தப் பெண்ணின் ஜென்ம நட்சத்திரத்திற்கு நன்மை தரும் நட்சத்திரங்களின் பாதசாரங் களில் இருந்தால், செவ்வாய் தோஷம் கிடையாது என்று துருவ நாடியில் கூறப் பட்டுள்ளது. பிறப்பு ஜாதகத்திலேயே நட்சத்திரப் பரிகாரம் பெற்று, தோஷம் நிவர்த்தியாகிவிட்டது. குடும்ப வாழ்வில் கணவன்- மனைவி பாசப்பிணைப்புடன் ஒற்றுமையாக வாழ்வார்கள். கணவனுக்கு நீண்ட ஆயுளையும், மகிழ்ச்சியான வாழ்வை யும் தந்துவிடும்.

இன்றைய நாளில் சில ஜோதிடர்கள் ஆண்களுக்கும் செவ்வாய் தோஷம் உள்ள தெனக் கூறிவிடுகிறார்கள். துருவ நாடியில் ஆண்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்றே கூறப்பட்டுள்ளது. ஆண்களின் ஜாதகத்தில் செவ்வாய் அவரின் சகோதரர்கள், ரத்த சம்பந்தமான பங்காளிகளைக் குறிப் பிடுகிறது; அவரின் மனைவியை அல்ல. மேலும், செவ்வாய் தோஷமுள்ள ஒரு பெண்ணிற்கு செவ்வாய் தோஷமுள்ள ஆணைத்தான் திருமணம் செய்துவைக்க வேண்டுமெனக் கூறிவிடுகிறார்கள். இந்த தவறான கருத்தால், ஏராளமான ஆண்கள் திருமணம் தாமதமாகித் தவிக்கிறார்கள்.

ஓர் ஆணின் ஜாதகத்தில் மனைவியைக் குறிப்பிடும் கிரகம் சுக்கிரனாகும். ஜாத கத்தில் சுக்கிரன் பாவ- தோஷ நிலையை அடைந்து, எங்கு எப்படியிருந்தாலும் அல்லது பகை, நீசம், மறைவு பெற்றிருந் தாலும்கூட, அவரின் ஜென்ம நட்சத்திரத் திற்கு அனுகூலமான நட்சத்திரங்களின் பாதசாரங்களில் இருந்தால், ஜாதகத்தி லுள்ள அனைத்துவகையான சுக்கிர தோஷங்களும் ஜாதகத்திலேயே நட்சத்திரப் பரிகாரத்தால் நிவர்த்தியடைந்து, தீமைகளைத் தராமல் பூரண நன்மைகளைத் தந்துவிடும். திருமணத்திற்குப் பின்பு சுக்கிர யோகம் செயல்பட்டு மனைவியின் அதிர்ஷ் டத்தால் வாழ்வில் உயர்வை அடைவார்.

ஒருவரின் ஜாதகத்தில் அவரின் தொழில், வேலை, பணம் சம்பாத்தியம் ஆகிய வற்றைக் குறிக்கும் சனி பகவான் தீமை தரும் இடங்களில் இருந்தாலும், அவரின் ஜென்ம நட்சத்திரத்திற்கு அனுகூல நட்சத்திரங்களின் பாதசாரங்களில் இருந்தால், அவர் எந்த சாதி, மதம், இனத் தில் பிறந்தவரானாலும், வறுமையான குடும்பத்தில் ஏழை வீட்டில் பிறந்திருந் தாலும், சனியின் அனைத்து தோஷங்களும் நட்சத்திரப் பரிகாரத்தால் நிவர்த்தியாகி, அவர் செய்யும் அனைத்துத் தொழில்களிலும் ஏராளமான பணம் சம்பாதித்து, அரசனைப் போன்று வாழ்வார். பலவிதமான தொழில் களைச்செய்து செல்வம் சேர்ப்பார்.

இராமாயணக் காவிய நாயகன் ராமரின் பிறப்பு ஜாதகத்தில் சூரியன், குரு, சனி, செவ்வாய், சுக்கிரன் ஆகிய ஐந்து கிரகங்கள் உச்சம்பெற்றும், சந்திரன் ஆட்சிபெற்றும், பலவிதமான யோகங்களை இந்த கிரகங்கள் தரும் நிலையில் பிறந்துள்ளார். ஆனால், ராமர் எந்த சுகத்தையும் நன்மைகளையும் தன் வாழ்வில் அனுபவிக்கவில்லை. மேலும், தன் மனைவி, மகன்களையும் சிரமமடையச் செய்தார். அளவில்லாத துன்பங்களையே அனுபவித்தார்கள். நல்ல பலன்களை ஆட்சி, உச்சம்பெற்ற கிரகங்கள் ராமரின் வாழ்வில் தரவில்லை. ராமர் அவதாரப் புருஷராக இருந்தும், தன் வாழ்வில் பெரும் அவதிதான் பட்டார்.

அடுத்த இதழில் துருவ நாடியில் ஜோதிடத் தெளிவு தரும் இன்னும்பல சூட்சும ரகசியங்களை அறிவோம்.

செல்: 99441 13267

bala250920
இதையும் படியுங்கள்
Subscribe