Advertisment

எண்ணியதை ஈடேற்றித் தரும் யட்சினி வசிய ரகசியம்! - மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/secret-yatshinis-residence-fulfills-expectations-melmaruvathur-s-kalaivani

னிதனின் வாழ்க்கைப் பயணத்தில் ஆதிமுதல் அந்தம்வரை, ஆரம்பம்முதல் முடிவுவரை பற்பல சுவாரசியமான நிகழ்வுகளைக் கடந்து வரவேண்டிய சூழ்நிலை இயல்பாகவே அமைந்துவிடுகிறது.

Advertisment

அதில் ஒன்றுதான் தன்னைப்பற்றி அறிந்துகொள்ளுதல். அதாவது, தனக்கு நிகழவிருக்கும் நல்வினை- தீவினை மற்றும் தனது படைப்பின் நோக்கம் எதற்காக என்பதுபற்றி அறிந்துகொள்வதில் மனிதர்கள் அதீத ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர்.

Advertisment

இதற்கு ஆதாரமான அறிவியல் கலைதான் ஜோதிடம், ஜாதகம், கைரேகை, குறி கூறுதல் போன்றவை. இதில் ஏதாகிலும் ஒன்றினை அல்லது இரண்டு மூன்றை ஒவ்வொரு மனிதரும் நிச்சயம் கடந்துவந்தே ஆகவேண்டும். இது அவர்களின் சம்மதம் இல்லாமல்கூட நிகழலாம்.

இதிலொரு ஆச்சரியமும் புதைந்திருக்கும். ஜோதிடர்கள் எப்படி ஒருவரின் ஜாதகப் பலனை, வாழ்க்கை நிகழ்வை நூறு சதவிகிதம் உண்மையாகக் கூறுகின்றனர் என்றால், அதற்காக ஒவ்வொருவரும் ஒரு வழியினைத் தேர்ந்தெடுத்து அதன்மூலம் மக்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

sse

அதில் ஒன்றுதான் ஜக்கம்மா குறி சொல்வது. இவர்களுக்கு ஜாதகம் கணிப்பதுபோல் பெரிய கணக்கோ, ஆழ்ந்த கணிதமோ கிடையாது. ஆனால் இவர்கள் எப்படி ஒரு கருங்காலி கட்டையினை வைத்துக் கொண்டு மனிதர்களின் பலனை உரைக்கின் றார்கள் என்று பார்க்கும்பொழுது பல ஆச்சரியமூட்டும் தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன.

ஜக்கம்மாதேவி என்பவர் தொட்டியம் நாயக்கர் இன மக்களால் வணங்கப்படும் குலதெய்வம். இந்த தொட்டிய நாயக்கர் இனத் தில் சிலர் குறிசொல்லுதல், கோடாங்கி, அருள் வாக்களித்தல், குடுகுடுப்பை சொல்லுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். இவர் கள் அனைவருக்கும் ஜக்கம்மாதான் குல தெய்வம்.

இந்த ஜக்கம்மா காளிதேவியின் அவதார மென்றும், இவர் போச்சம்மா, பொம்மம்மா, போராளம்மா, எல்லம்மா என்ற வேறுசில பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

மேலும் ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், ராஜ கம்பள சமுதாயத்தைச் சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் இந்த ஜக்கம்மாதான் குலதெய்வமாக இருந்துள் ளார். இவர்களுடைய அரண்மனை அமைந் திருந்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டைப் பகுதியில் ஜக்கம்மாவுக்கு ஒரு கோவிலும்

னிதனின் வாழ்க்கைப் பயணத்தில் ஆதிமுதல் அந்தம்வரை, ஆரம்பம்முதல் முடிவுவரை பற்பல சுவாரசியமான நிகழ்வுகளைக் கடந்து வரவேண்டிய சூழ்நிலை இயல்பாகவே அமைந்துவிடுகிறது.

Advertisment

அதில் ஒன்றுதான் தன்னைப்பற்றி அறிந்துகொள்ளுதல். அதாவது, தனக்கு நிகழவிருக்கும் நல்வினை- தீவினை மற்றும் தனது படைப்பின் நோக்கம் எதற்காக என்பதுபற்றி அறிந்துகொள்வதில் மனிதர்கள் அதீத ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர்.

Advertisment

இதற்கு ஆதாரமான அறிவியல் கலைதான் ஜோதிடம், ஜாதகம், கைரேகை, குறி கூறுதல் போன்றவை. இதில் ஏதாகிலும் ஒன்றினை அல்லது இரண்டு மூன்றை ஒவ்வொரு மனிதரும் நிச்சயம் கடந்துவந்தே ஆகவேண்டும். இது அவர்களின் சம்மதம் இல்லாமல்கூட நிகழலாம்.

இதிலொரு ஆச்சரியமும் புதைந்திருக்கும். ஜோதிடர்கள் எப்படி ஒருவரின் ஜாதகப் பலனை, வாழ்க்கை நிகழ்வை நூறு சதவிகிதம் உண்மையாகக் கூறுகின்றனர் என்றால், அதற்காக ஒவ்வொருவரும் ஒரு வழியினைத் தேர்ந்தெடுத்து அதன்மூலம் மக்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

sse

அதில் ஒன்றுதான் ஜக்கம்மா குறி சொல்வது. இவர்களுக்கு ஜாதகம் கணிப்பதுபோல் பெரிய கணக்கோ, ஆழ்ந்த கணிதமோ கிடையாது. ஆனால் இவர்கள் எப்படி ஒரு கருங்காலி கட்டையினை வைத்துக் கொண்டு மனிதர்களின் பலனை உரைக்கின் றார்கள் என்று பார்க்கும்பொழுது பல ஆச்சரியமூட்டும் தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன.

ஜக்கம்மாதேவி என்பவர் தொட்டியம் நாயக்கர் இன மக்களால் வணங்கப்படும் குலதெய்வம். இந்த தொட்டிய நாயக்கர் இனத் தில் சிலர் குறிசொல்லுதல், கோடாங்கி, அருள் வாக்களித்தல், குடுகுடுப்பை சொல்லுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். இவர் கள் அனைவருக்கும் ஜக்கம்மாதான் குல தெய்வம்.

இந்த ஜக்கம்மா காளிதேவியின் அவதார மென்றும், இவர் போச்சம்மா, பொம்மம்மா, போராளம்மா, எல்லம்மா என்ற வேறுசில பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

மேலும் ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், ராஜ கம்பள சமுதாயத்தைச் சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் இந்த ஜக்கம்மாதான் குலதெய்வமாக இருந்துள் ளார். இவர்களுடைய அரண்மனை அமைந் திருந்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டைப் பகுதியில் ஜக்கம்மாவுக்கு ஒரு கோவிலும் உள்ளது.

இதைச் சார்ந்துள்ள எட்டயபுரம் உள் ளிட்ட பகுதியினரே இப்படி குறிகூறுவதில் பெரும்பான்மையினராக இருக்கின்றனர்.

இவர்களின் மூதாதையர்கள், ஒரு குழந்தை பிறந்த பன்னிரண்டு வயதிற்குள் அவர்களுக் கேற்ற ஏதாவதொரு நாற்பத்தெட்டு நாளைத் தேர்ந்தெடுத்து, இந்த வாக்குகூறும் சாங்கி யத்தை இவர்களுக்குத் தொடங்கிவைக்கின் றனர். இவர்களின் கையி-ருக்கும் கருங் காலிக் கட்டை ஜீவகாந்த ஆற்றலைத் தக்க வைத்துக்கொள்ளும் வல்லமை வாய்ந்தது. இதன் துணைகொண்டும் தங்களின் மூதாதையர் மற்றும் குலதெய்வத்தின் துணைகொண்டுமே இவர்களால் பிறரின் எதிர்காலத்தைக் கணிக்க முடிகிறது.

கருங்காலி மரத்திதற்கு மின்காந்த ஆற்றலை சேமிக்கும் திறனுண்டு. இதன் மரத்துண்டுகளை கோவில் குடமுழுக்கின் போது கலசத்தை நிலைநிறுத்தப் பயன் படுத்துகிறார்கள் என்பதை வைத்தே இதன் சக்தியை நம்மால் உணரமுடியும். பிரபஞ்சத்திலுள்ள ஆற்றலை இது தம்முள் ஈர்த்துள்ளதால் கருவறையிலுள்ள விக்ரகத்தின் அடியில் பதிக்கப்படும் தகடு களுடன் கருங்காலியையும் இணைத்துப் பதிக்கும் வழக்கம் இன்றுவரை இருந்து வருகிறது. அது, அந்த சக்தியுடன் கலந்து அபரிமிதமான சக்தியை வழங்குகிறது என்பது சித்தர்களின் கண்டுபிடிப்பு.

அந்தக் காலத்தில் வீடு, சொத்து ஆகிய வற்றை இழந்தவர்கள், கருங்காலி மரத்தை வெட்டிவந்து அந்த விறகில் குலதெய்வத் திற்குப் பொங்கல் வைத்து, எரிந்த கட்டை யிலிருக்கும் சாம்பலை எடுத்துத் திருநீறாகப் பூசிவர அவர்களின் பிரச்சினைகள் தீர்ந்த தாகக் கூறுகின்றனர்.

இத்தகைய ஆற்றல்மிக்க கருங்காலிக் கட்டையைதான் குறிகூறுபவர்கள் பயன்படுத்திவருகின்றனர். இதைவைத்து நம் எண்ணத்தை ஈர்க்கும் விஷயத்தில் ஈடுபட்டு, நம் மனதிலிருப்பதை நம்மிடம் வெளிப்படுத்துகின்றார்கள்.

இங்கே ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், சாமியாடி குறி கூறுபவர்கள், தங்களிடம் வருபவர்களின் கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் எப்படி கூறுகின்றனர் என்ற விஷயத்தைப் பார்த்தால், இவர்கள் தங்களுக்கென்று ஒரு தெய்வத்தை உபாசனை செய்து வைத்துக்கொள்கின்றனர். அதுமட்டுமல் லாமல் யட்சினிகளையும் வசியப்படுத்தி வைத்துக்கொள்கிறார்கள்.

யார் இந்த யட்சினிகள்? அனைத் தையும் கூறக்கூடிய வல்லமை பொருந்திய, தெய்வமல்லாத தேவதைகள்தான் யட்சினிகள். எந்த ஒன்றினாலும் அளந்து விடமுடியாத அற்புத ஆற்றல் படைத்த வர்கள்தான் இந்த யட்சினி கள். இவர்கள் யக்ஷர் கள் என்று கூறக்கூடியவர் களின் பெண் பாலினத்த வர்கள். இவர்கள் மொத்தம் அறுபத்து நான்கு வகையினர் உள்ளனர். இவர்கள் அனைவருமே சாதுவானவர்கள் அல்ல; சில யட்சினிகளை குடும்பத்துடன் வாழும் மனிதர்கள் கையாளவே முடியாது. அந்த அளவுக்கு ஆக்ரோஷமானவர்கள்.

இந்த யட்சினி வசியத்தின்மூலம் முக்காலத்தையும் கூறும் வல்லமையும், சித்துகள் போன்றவையும் பலிதமாகும்.

இங்கே குறி கூறுபவர்கள், சாமியாடிகள், குடுகுடுப்பை சொல்பவர்கள் என்று அனைவருமே ஏதாவதொரு யட்சினியையோ அல்லது இரண்டு யட்சினிகளையோ வசியம்செய்து வைத்துள் ளவர்கள்தான். இவர் களின் வாக்கானது இந்த யட்சினி சக்தியின் ஆற்றலால்தான் வெளிப் படுகிறது.

ஜோதிடம், பிரசன்னம் ஆகியவை கணிதத்தின்மூலம் கையாளப்படுகிறது. இதிலும் ஒருசிலர் யட்சினிகளை வசியம்செய்து வைத்துக்கொண்டு மேலும் மேலும் தங்களது வளர்ச்சியை ஆழப்படுத்திக் கொண் டுள்ளனர்.

மலையாளத்தில் பேய்களை யட்ச சக்திகள் என்ற பெயரில் அழைக்கிறார்கள். ஆனால், யட்சினிகளுக்கும் பேய்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

கடவுளின் படைப்பில் மிருகங்கள், பறவை கள், மனிதர்கள் என்று பல்வேறு இனவகை இருப்பதுபோல் யட்சினி என்பதும் ஒருவகை உயிரினம்தான். அது, கண்ணுக்குத் தெரியாதது. கண்ணுக்குத் தெரியாமலிருப்பதால் அவை இல்லையென்று ஆகிவிடாது.

தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள் என்ற வார்த்தைகளை நாம் பலமுறை கேட்டிருப்போம். இந்த யட்சினிகளும் அப்படி ஒரு இனம்தான். சாஸ்திரங்கள் இவர்களுக்கு சூட்சும தேகிகள் என்னும் பெயரைக் கொடுத்துள்ளது. அதாவது கண்ணுக்குத் தெரியாத உடம்பு என்று பொருள்.

இந்த உலகத்தில் நம் கண்ணுக்குத் தெரியாத பல நிகழ்வுகளும், பொருட்களும், சக்திகளும் நாம் அறியமுடியாத நிலையில் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. நமது கண்களால் பார்க்கக்கூடிய வெளிச்சம் ஒரு எல்லைக்குட்பட்டதே. அந்த எல்லையை மீறிய அதீத வெளிச்சத்தையோ அல்லது குறைவான வெளிச்சத்தையோ நம்மால் பார்க்கமுடியாது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. நமக்கு இங்கொரு சந்தேகம் வரும். யட்சினிகள் ஒருவகை

இனம்; ஆனால், யட்சினியை அறிந்தவர்கள் அவை அறுபத்து நான்கென்று கூறுகிறார் கள். இது கடவுளால் படைக்கப்பட்ட ஒரு இனமென்றால் வெறும் அறுபத்துநான்கு யட்சினிகள்தான் இருக் கிறார்களா என்ற கேள்வி வரும்.

உதாரணமாக, ஜோதிட சாஸ்திரத்தில் இருபத்தேழு நட்சத்திரங்கள் என்று கூறுகிறோம். வானத்தில் வெறும் இருபத்தேழு நட்சத்திரங்கள் மட்டுமா உள்ளன? எண்ணிக்கையில் அடங்காத கோடான கோடி நட்சத்திரங்கள் இருக்கின்றன. இந்த இருபத்தேழு நட்சத்திரங்கள் என்பது இருபத்தேழு நட்சத்திர மண்டலங்கள் என்று பொருள்.

வான்வெளியில் இருபத்தியேழு நட்சத்திர மண்டலங்களாக பல்கிப் பெருகி ஆக்கிரமித்திருக்கின்றன. அதேபோன்றுதான் அறுபத்துநான்கு வகை யட்சினிகளும்.

கருணை யட்சினி, கர்ண பிசாசினி என்று தொடங்கி சாமுண்டி, ஹம்சா, ஷோபனா என்று இன்னும் தொடர்ந்து மந்தாகினி என்று யட்சினிகள் இருக்கின்றனர்.

இவர்கள் ஒவ்வொரு வகையிலும் பல்லாயி ரம் யட்சினிகள் அடங்கியிருக்கின்றனர்.

இது ஒரு மாபெரும் அளப்பரிய சூட்சும சக்தியாக இந்த உலகத்தில் இருந்துகொண்டி ருக்கின்றன.

கருணை யட்சினி, வசிய மந்திர யட்சினி என்பது எதையும் யாரையும் வசியப்படுத்தும் வினோதமான தேவதையாகும். இதனை நாற்பத்தெட்டு நாட்கள் தொடர்ந்து நினைத்து பூஜிப்பவர்களுக்கு கேட்டது கிடைக்குமென்பது ஐதீகம்.

யட்சினி தேவதையை வணங்குவதற்கு வசதியாக ஒரு அறையைத் தேர்வுசெய்து கொள்ளவேண்டும். அந்த அறையானது மற்றவர்கள் நுழையாதவண்ணம் அமைந் திருக்கவேண்டும். அறையானது தூய்மை யாகவும் நல்ல மணமுடனும் இருக்க வேண்டும். ஒரு சீரான கும்பம் வைத்துக் கொள்ள வேண்டும். பச்சரிசியை வாழையிலை மீது பரப்பி, அதன்மீது கும்பத்தை வைத்து மாவிலைகளைச் செருகி, தேங்காய் ஒன்றை குடுமி பிடுங்காமல் அதில் வைக்கவேண்டும். மங்களகரமான மஞ்சள், குங்குமம், சந்தனம், புஷ்பங்களை அங்கே இடம்பெறச் செய்வதோடு, ஊதுபத்தி ஏற்றி வைக்கவேண்டும். சுமுன்னதாகவே செவ்வரளியின் உதிரிப் பூக்களை எடுத்து வந்து தாம்பாளத்தில் குவித்து வைத்துக் கொள்ளவேண்டும். கிழக்கு முகமாக அமர்ந்து, பீடத்தையும் கும்பத்தையும் பார்த்து மந்திரம் ஜெபிக்க, யட்சினி தேவதை தோன்றும் என்பது ஐதீகம்.

பூஜைக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகியவை ஏற்ற நாட்களாகும். இந்நாட்களில் அந்திக் கருக்கலில் சாம்பிராணி புகைபோட்டு படையல் போடவேண்டும். படையலில் பொங்கல், பாயசம், வடை, சுண்டல், அதிரசம், அப்பளம், கொழுக்கட்டை இடம்பெறவேண்டும்.

இப்போது யட்சினியில் ஒன்றான கருணை யட்சினியின் மூலமந்திரத்தைப் பார்க்கலாம். "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ரோம் கர்ண பிசாசினி கரந்தே மே கதய ஸ்வாகா' என்று, பத்மாசனம் போட்டு நிமிர்ந்து உட்கார்ந்து, கண்களை மூடிக்கொண்டு யட்சினி தேவதையை நினைத்து நூற்றெட்டு அல்லது ஆயிரத்தெட்டு முறை ஓசையின்றி இந்த மந்திரத்தை உருவேற்றிவர வேண்டும். இதன்வழியாக அற்புத சக்தியும் சித்துகளும் நம் கைவசமாகும் என்பது உண்மை.

ஒரு ஜோதிடரோ அல்லது குறி சொல்பவர்களோ இந்த யட்சினிகளில் ஒருவரை வசியம்செய்து வைத்துக் கொள்ளும்பொழுது, அவரிடம் ஜாதகம் பார்க்கவருபவர் எதற்காக வருகிறார்- என்ன கேள்விகளோடு வந்திருக்கிறார்-

அவரைப்பற்றி தகவல் என்ன என்பதை யெல்லாம் அவர் ஜாதகத்தைப் பார்க்காம லேயே சொல்லிவிடுவார்.

இதை அந்த யட்சினி, ஜோதிடரின் தோளில் அமர்ந்து அவரது காதில் சொல்லிவிடும். ஆனால் அந்த யட்சினி மற்றவர்களின் கண்களுக்குத் தெரியாது.

இதனால் அந்த ஜோதிடரிடம் வரும் வாடிக்கையாளர்கள் அந்த ஜோதிடர் மீது முழுமையான நம்பிக்கை கொண்டு விடுவார்கள்.

யட்சினிகள் நமக்கு வரவிருக்கும் ஒருசில ஆபத்துகளையும் முன்கூட்டியே அறிந்து சொல்லக் கூடியவையாகவும், எச்சரிக்கை செய்பவையாகவும், நமக்கு சமிக்ஞைகளின் மூலமும் குரலின் மூலமாகவும் தெரியப் படுத்துபவையாகவும், நம்மை நெறிப்படுத்தி வழிநடத்துபவை யாகவும் இருப்பவை.

இத்தகைய யட்சினியை வசியப்படுத்திக் கொண்டு குறி சொல்பவர்களும், சாமியாடி களாக வாழ்பவர்களும், ஜோதிடம் பார்ப்பவர்களும் இன்றும் இங்கே உள்ளனர்.

இவர்கள்தான் நாம் ஜோதிடம் பார்க்க அவர்களிடம் போனவுடன், நாம் எதற்காக வந்திருக்கிறோம்- எந்த கேள்விகளோடு வந்திருக்கிறோம் என்பதையெல்லாம் நம்மைப் பார்த்த நொடியிலேயே கூறி நம்மை பிரம்மிக்க வைப்பவர்களாக உள்ளனர்.

செல்: 80563 79988

bala251122
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe