Advertisment

தீராத நோய் தீர்க்கும் சிவ வழிபாட்டு ரகசியம்! -பொ. பாலாஜிகணேஷ்

/idhalgal/balajothidam/secret-worship-shiva-cures-incurable-diseases-b-balajiganesh

கோவில்களுக்குச் சென்று மனதார இறைவனை வேண்டி வழிபடுவது நமது உடல்நலமும், நமது குடும்ப நலமும் நலமாக- நிம்மதியாக இருக்க வேண்டுமென்றுதான். ஆனால் நோய் நொடியில்லாமல் இருந்தால் மட்டுமே கோவில்களுக்குச் செல்லமுடியும்; இறைவனை வழிபடமுடியும்.

Advertisment

ஆனால் இன்றைய சூழ்நிலையில் நோய்கள் இல்லாத மனிதன் இல்லை. அனைவரது வீட்டிலும் மாத்திரைகள் வைப்பதற்கென்று தனி அலமாரி இருக்கிறது. இதில் அனைவருக்கும் தேவையான மாத்திரைகளை வைத்துள்ளார்கள். மாத்திரை இல்லாமல் ஒரு மனிதன் தூங்குவது என்பதுகூட இன்று கடினமாக உள்ளது. இவ்வாறான ந

கோவில்களுக்குச் சென்று மனதார இறைவனை வேண்டி வழிபடுவது நமது உடல்நலமும், நமது குடும்ப நலமும் நலமாக- நிம்மதியாக இருக்க வேண்டுமென்றுதான். ஆனால் நோய் நொடியில்லாமல் இருந்தால் மட்டுமே கோவில்களுக்குச் செல்லமுடியும்; இறைவனை வழிபடமுடியும்.

Advertisment

ஆனால் இன்றைய சூழ்நிலையில் நோய்கள் இல்லாத மனிதன் இல்லை. அனைவரது வீட்டிலும் மாத்திரைகள் வைப்பதற்கென்று தனி அலமாரி இருக்கிறது. இதில் அனைவருக்கும் தேவையான மாத்திரைகளை வைத்துள்ளார்கள். மாத்திரை இல்லாமல் ஒரு மனிதன் தூங்குவது என்பதுகூட இன்று கடினமாக உள்ளது. இவ்வாறான நோய்கள் நம்மைவிட்டு விலக சிவன் கோவிலுக்குச் செய்யவேண்டிய பரிகாரம் பற்றிதான் இங்கு தெரிந்துகொள்ளப் போகிறோம்.

பொதுவாகவே கோவிலுக்குச் சென்றுவரும்பொழுது அங்குள்ள ஏழை எளியவர்களுக்கு, நம் கையிலுள்ள பணம் அல்லது பழங்களை தானமாகக் கொடுப்பது அனைவரின் வழக்கமாகும். இவ்வாறு அடுத்த வேளைக்கு உணவுகூட கிடைக்காதவர்களுக்கு தானம் செய்வது நமக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கிறது.

ss

Advertisment

இவ்வாறு கோவிலுக்குச் சென்றுவரும் பொழுது பிறருக்கு தானம் செய்வதே நமக்கு அதிர்ஷ்டமாக அமைகிறதல்லவா? அதுபோல கோவிலுக்கு தானம் கொடுக்கும்பொழுது நமது நோய் நொடி கள் முற்றிலுமாகத் தீர்ந்துவிடுகிறது. அவ்வாறு சிவன் கோவிலுக்கு பொருட்களை தானமாகக் கொடுக்க, தீராத நோய்கள் உடனே தீரும்.

பொதுவாகவே சிவன் கோவில் என்றால் அங்கு பிரசாதமாகக் கொடுக்கப்படுவது விபூதி தான். இந்த விபூதி சிவன் கோவிலுக்கு வரும் அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கப்படும். எனவே சிவன் கோவிலுக்குச் செல்லும்பொழுது சுத்தமான பசும் சாணத்தில் செய்யப்பட்ட விபூதியை வாங்கி ஒரு மூட்டையாகக் கட்டிக்கொண்டு, அதனை சிவன் கோவில் பூசாரியிடம், இது கோவிலுக்குக் கொடுக்கப்படும் தானமென்று சொல்லிக் கொடுக்கவேண்டும்.

அடுத்ததாக முப்பெரும் தெய்வங்களும் வாசம்செய்யும் விசேஷமான அரச மரத்திலிருந்து எடுக்கப்படும் ஒரு பொருளை தானமாக வழங்க சிறப்புப் பலன்கள் கிடைக்கிறது. அதாவது யாகங்கள் செய்யும்பொழுது அதில் சேர்க்கப்படும் குச்சியில் ஒன்றுதான் அரசமரக் குச்சி. தப்பித்தவறி யும் இந்த அரச மரத்திலிருந்து விழும் குச்சியை வீட்டில் சுடு தண்ணீர் போடுவதற்கோ அல்லது சமைப்பதற்கோ அடுப்பெரித்துப் பயன்படுத்தக் கூடாது.

இவ்வாறு செய்வது பாவம் செய்வதற்கு சமமாகும்.

எனவே அரசமரக் குச்சிகளை நாட்டுமருந்துக் கடைகளில் வாங்கியோ அல்லது உங்கள் வீட்டிற்கு அருகில் அரசமரம் இருந்தால் மரத்திலிருந்து தானாக விழும் குச்சியை சேகரித்து, காயவைத்து அதனை ஒரு கட்டுபோல் கட்டியோ கோவில் பூசாரி யிடம் தானமாகக் கொடுக்கவேண்டும். இவ்வாறு கொடுப்பது கோடி புண்ணியங்களை சேர்க்கிறது.

அடுத்ததாக விசேஷ நாட்களில் இரட்டை இழைக் கோலம் போடுவதற்கு பச்சரிசி மாவைப் பயன்படுத்த வேண்டும். இந்த பச்சரிசி மாவை கோவிலுக்குச் செல்லும்பொழுது எடுத்துச் சென்று அங்கு ஒரு ஓரத்தில் சிறிய கோலம் போட்டுவர, கோவிலுக்குள் இருக்கும் ஈ, எறும்புகள் அதனை சாப்பிட்டால் உங்கள் உடல்நலம் விரைவில் குணமாகும்.

bala041122
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe