ராஜவாழ்வு பெற ரகசிய தந்திரங்கள்! - கே. குமார சிவாச்சாரியார்

/idhalgal/balajothidam/secret-tactics-k-kumara-sivacharya

வேதங்கள் என்னும் வாழ்வியல் தர்மங்களும், ஆகமம் என்னும் இறைவனையடையும் வழிகாட்டியும் இருக்கும்போது மனிதர்கள் ஏன் மீளமுடியாத துயரத்தில் சிக்கித் தவிக்கிறார்கள்?

"நமது மூளையில் ஆன்மிக சிந்தனைகள் நிலைத் திருந்தால் அதிசயிக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படு கின்றன' என்று ஆன்ட்ரூ நியூபெர்க் என்பவர் தனது ஆராய்ச்சியின் வாயிலாக வெளியிட்டார். ஆன்மிகத் தால் பல்வேறு உயர்நிலைகளை அடைந்த மகான்களை அழைத்துவந்து, அவர்கள் உடலில் காமாக்கதிர்களை வெளித்தள்ளும் ஒருவித ரசாயனக் கலவையை ஊசியின்மூலம் செலுத்தி, அதிகமாக ரத்தம் பரவும் பகுதிகளைக் கணினியில் கண்டார். எந்த பாகத்தில் அதிகமாக ரத்தம் பரவுகிறதோ அங்கே மூளை ஆற்றலுடன் செயல்படுவதாகக் கண்டறிந்தார்.

தியானம், மந்திர ஜெபம் செய்வதால் ஆன்மிக உணர்வுகள் அதிகமாகும். அப்போது மூளையில் அமைந் திருக்கும் ஆறு இதழ்களும் வலிமைவாய்ந்த ஆன்ம சுகத்தை அனுபவிக்கின்றன. இதனால் அவர்களுக்கு நன்மைகள், பேறுகள், புகழ், உயர்நிலைகள், செல்வச் சேர்க்கைகள், அபரிமிதமான ஆற்றல் வருவது நூறு சதவிகிதம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டது.

கடவுள் நினைவால் மூளைத்திறன் வெளிப்படும்

கடவுள் சிந்தனை என்பதும், அதைப் பயன்படுத்துகிற வழிமுறையும் மதங்கள் என்ற பெயரால் மாற்றத்துடன் இருந்தாலும், எல்லா மதத்தவருக்கும் உயர்வைத் தரும். வியத்தகு தகவல், கடவுளைப்பற்றி நினைக்கின்றபோதே மூளையின் எட்டு பாகங்களில் நல்ல எண்ணச் சுற்றுகள் உருவாகின்றன. மனித மூனையில் கடவுள் சிந்தனை பற்றிய ஆராய்ச்சியில் ஐவகை உண்மைகள் வெளிவந்தன.

1. கடவுளை இடைவெளியின்றி எந்தப் பெயரி லேனும் நினைத்து தியானிப்பவர், மூளையின் ஆற்றலை அதிகமான மாற்றத்திற்கு உட்படுத்துகிறார்.

2. பிரான்சு தேசத்தில் கூடியிருந்த புத்த குருநா தர்கள், கன்னியாஸ்த்ரீகளை ஐந்தாண்டுகள் தனியஎறை யில் ஆய்வுக்கு உட்படுத்தி அதிசயமான தகவல் களை வெளியிட்டு வியப்பில் ஆழ்த் தினார். இதன்படி மூளையின் ஒவ்வொரு பகுதியும் கடவுளைப் பற்றிய வித்தியாசமான கருத்தைப் பதிவு செய்துகொள்கிறது.

3. கடவுள் என்பவர் உருவத்தாலும், குணநலன்களாலும் வேறுபட்டவர் என்றும், அவர் மதிப்பில், செயல்படு வதில் நம்மைவிட உயர்ந்தவர் என்றும் உட்பொருளைக் கற்பித்துக்கொள்கிறோம். அவர் இன்ற

வேதங்கள் என்னும் வாழ்வியல் தர்மங்களும், ஆகமம் என்னும் இறைவனையடையும் வழிகாட்டியும் இருக்கும்போது மனிதர்கள் ஏன் மீளமுடியாத துயரத்தில் சிக்கித் தவிக்கிறார்கள்?

"நமது மூளையில் ஆன்மிக சிந்தனைகள் நிலைத் திருந்தால் அதிசயிக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படு கின்றன' என்று ஆன்ட்ரூ நியூபெர்க் என்பவர் தனது ஆராய்ச்சியின் வாயிலாக வெளியிட்டார். ஆன்மிகத் தால் பல்வேறு உயர்நிலைகளை அடைந்த மகான்களை அழைத்துவந்து, அவர்கள் உடலில் காமாக்கதிர்களை வெளித்தள்ளும் ஒருவித ரசாயனக் கலவையை ஊசியின்மூலம் செலுத்தி, அதிகமாக ரத்தம் பரவும் பகுதிகளைக் கணினியில் கண்டார். எந்த பாகத்தில் அதிகமாக ரத்தம் பரவுகிறதோ அங்கே மூளை ஆற்றலுடன் செயல்படுவதாகக் கண்டறிந்தார்.

தியானம், மந்திர ஜெபம் செய்வதால் ஆன்மிக உணர்வுகள் அதிகமாகும். அப்போது மூளையில் அமைந் திருக்கும் ஆறு இதழ்களும் வலிமைவாய்ந்த ஆன்ம சுகத்தை அனுபவிக்கின்றன. இதனால் அவர்களுக்கு நன்மைகள், பேறுகள், புகழ், உயர்நிலைகள், செல்வச் சேர்க்கைகள், அபரிமிதமான ஆற்றல் வருவது நூறு சதவிகிதம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டது.

கடவுள் நினைவால் மூளைத்திறன் வெளிப்படும்

கடவுள் சிந்தனை என்பதும், அதைப் பயன்படுத்துகிற வழிமுறையும் மதங்கள் என்ற பெயரால் மாற்றத்துடன் இருந்தாலும், எல்லா மதத்தவருக்கும் உயர்வைத் தரும். வியத்தகு தகவல், கடவுளைப்பற்றி நினைக்கின்றபோதே மூளையின் எட்டு பாகங்களில் நல்ல எண்ணச் சுற்றுகள் உருவாகின்றன. மனித மூனையில் கடவுள் சிந்தனை பற்றிய ஆராய்ச்சியில் ஐவகை உண்மைகள் வெளிவந்தன.

1. கடவுளை இடைவெளியின்றி எந்தப் பெயரி லேனும் நினைத்து தியானிப்பவர், மூளையின் ஆற்றலை அதிகமான மாற்றத்திற்கு உட்படுத்துகிறார்.

2. பிரான்சு தேசத்தில் கூடியிருந்த புத்த குருநா தர்கள், கன்னியாஸ்த்ரீகளை ஐந்தாண்டுகள் தனியஎறை யில் ஆய்வுக்கு உட்படுத்தி அதிசயமான தகவல் களை வெளியிட்டு வியப்பில் ஆழ்த் தினார். இதன்படி மூளையின் ஒவ்வொரு பகுதியும் கடவுளைப் பற்றிய வித்தியாசமான கருத்தைப் பதிவு செய்துகொள்கிறது.

3. கடவுள் என்பவர் உருவத்தாலும், குணநலன்களாலும் வேறுபட்டவர் என்றும், அவர் மதிப்பில், செயல்படு வதில் நம்மைவிட உயர்ந்தவர் என்றும் உட்பொருளைக் கற்பித்துக்கொள்கிறோம். அவர் இன்றும் அறியமுடியாத யுக புருஷராகி விடுகிறார்.

4. எந்த மனிதருக்கும்- மதநம்பிக்கையே இல்லாவிட்டாலும் தியானம், துதிகூறுதலால் உடல்நலமும், உள்ளத்தில் இனம்புரியாத புத்துணர்வும் பெறுவது உண்மையே.

5. ஒருவரது நீண்டகால தியானப் பயிற்சி அவரது மூளையின் செயல்திறனை முற்றிலுமாக மாற்றிவிடுகிறது. ஆன்மாவிற்குள் ஊடுருவி ஆனந்த நிலையை ஏற்படுத்திவிடுகிறது.

வெற்றிச் சிகரத்தில் ஆன்மிக சிந்தனையாளர்கள்

இன்றைய காலகட்டத்தில் ஆன்மிகத்தால், அது தந்த தியானத்தால் வெற்றி கண்டவர்களை ஏளனம்செய்யக் காரணம், அவர்கள் அந்த ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்தியதால் வந்த வினையென்று கூறலாம். குறிப்பாகச் சொன்னால், ஆன்மிகவாதிகளுக்கு மூன்று வகை "ஈ'-க்களில்தான் அதிக ஆற்றல் உண்டாகிறது.

Congnition-அறிவு என்னும் பேராற்றல். உலக நடப்பு மற்றும் இறைவன் பற்றிய செய்திகளைப் பக்குவமாக எடுத்துச்சொல்வது.

Communication- தகவல் தொடர்புத்திறன். இது வெறும் செய்திப் பரிமாற்றமல்ல. தான் அனுபவித்த நேரடிக்காட்சிகள்,ஆத்ம அனுபவங்களைப் பிறர்முன் கொண்டுவந்து புரியவைத்துப் பழக்கப்படுத்துதல்.

Creativity- படைக்கும் தனித்திறன். உலகிலுள்ள பொருட்கள்மீது பிறர் சொன்னவற்றை அப்படியே எடுத்துக்கூறாமல், தன் மூளையின் ஆற்றலைப் பயன்படுத்தி இறைவன் பற்றிய ஆக்கத்தையோ, அபூர்வமான பொருளையோ வித்தியாசமாக உருவாக்கி அளித்தல். கடவுள் பற்றி நினைத்து தியானம், மந்திர அப்பியாசம், ஜெபம் செய்வதால் மேற்சொன்ன மூன்றும் பேராற்றலாக மனதிற்குள் வந்து துணிவு, தன்னம் பிக்கை, செயல்திறனை ஆன்மாவுக்குள் பதித்துவிடுகின்றன.

இவ்வாறு ஆழ்ந்த ஆன்மிக அனுபவத்தில் நம்பிக்கை வைத்து தியானம் செய்தவர்களே கடந்த நூற்றாண்டுகளில் உலக சமாதானத்திற் கான நோபல் பரிசுகளைப் பெற்றுள்ளார்கள். அன்னை தெரசா, தலாய் லாமா, பிஷப் டெஸ்மாண்ட், மார்ட்டின் லூதர்கிங் ஆகியோர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப் பட்டனர். இதற்கு அடிப்படைக் காரணம் நல்ல கடவுள் பற்றினைத் தங்கள் மனதில் பதித்த தால் உருவான தயை என்னும் வியத்தகு உணர்வே.

மந்திரம் செய்த வித்தைகள்

ஜெர்மனியைச் சேர்ந்த கிளாட்னி என்ற ஒலியியல் இசை வல்லுநர் 1787-ஆம் ஆண்டு மந்திர ஒலியலைகளும், வயலின் இசையதிர்வு அலைகளும் என்ன செய்யும் என்பதைத் தனது "ஹஸ்ரீர்ன்ள்ற்ண்ஸ்ரீள்'-என்ற ஒலியியல் விஞ்ஞானத்தால் கண்டுபிடித்தார். சல்லடையால் சலித்தெடுக் கப்பட்ட மண்துகளை தகட்டின்மேல் வைத்து, ஒரு இணைப்பு (க்ஷர்ஜ்) ஏற்படுத்தி, அவர் வாசிக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் அவை பல எந்திர வடிவங்களை வரைந்திடக் கண்டார். எதிர்காலத்தில் இவையே "கால்டினி ப்ளேட்ஸ்' என்று பெரும்புகழைப் பெற்றன.

இயற்பியல் பொருளை அதிர்வுகள் பாதித்து வடிவம் தருகின்றன என்று கண்டு பிடித்த கிளாட்னியை அரசன் நெப்போலியன் அவைக்கு அழைத்துப் பாராட்டி, அவருக்கு ஆறாயிரம் பிராங்குகளைப் பரிசாக அளித்தார்.

ஒலியலைகளால் மணல் துகள்களில் பல வடிவங்கள் ஏற்படுவதை உறுதிசெய்பவருக்கு மூன்றாயிரம் பிராங்குகள் பரிசு கிட்டும் என்று அரசர் அறிவித்தபோது, 1816-ஆம் ஆண்டில் சோபிக் ஜெர்மேன் என்ற பெண்மணி போட்டியில் வென்று பரிசைத் தட்டிச் சென்றார்.

இப்படிப்பட்ட ஆய்வுகளிலிருந்து ஒரு உண்மை நமக்குத் தெரியவருகிறது- மந்திர ஒலி என்பது உடலைச் செம்மைப்படுத்திச் செயல்படவைத்து வாழ்க்கையில் செழுமையும் யோகங்களும் பெற உதவும் சாதனம் என்று.

rr

மகரிஷிகள் வெளிப்படுத்திய மந்திரங்கள்

இறை நாமங்களைக் கூறும் மந்திர ஒலிகளின் திறனையும், அதன் சூட்சும மான சக்தியையும் மகரிஷிகள் வானில் வெளிப்பட்ட சூட்சும ஒலியோடு இணைத்துக் கண்டு நமக்குப் பயன்படும்படி கற்பித்தனர்.

இதனால் மந்திர திருஷ்டாக்கள் எனப் பட்டனர்.

உச்சரித்தல், நியமம் (கட்டுப்படல்), உபகரணம், நம்பிக்கை ஆகிய நான்கையும் அடிப்படைத் தேவைகளாகக் குறிப்பிட்டுக் கூறினர். எந்த மந்திரத்தை எப்போது, எந்த காலத்தில் ஒலித்தால் அவை நமக்கு சௌபாக்கியம் தரும் என்பதை ஒலி, சந்தஸ் வகையாகப் பிரித்துத் தொகுத்து, குரு- சீடர் வழியாகக் கற்பித்தனர். உதாரணமாக, காயத்ரீ மந்திர அதிர்வுகளை ஆராய்ந்து, ஒரு நொடிக்கு 1,680 கிலோமீட்டர் அதிர்வலைகளை ஏற்படுத்தி சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்துகிறது என்ற உண்மையை அமெரிக்க விஞ்ஞானி ஸ்ட்ராங்னர் கண்டறிந்து வெளிப்படுத்தினார். கிளாட்னிக்குப் பிறகு ஹான்ஸ் ஜென்னியும் இந்த ஆய்வைச் செய்து உணர்த்தினார்.

காயத்ரீ மந்திரம் மட்டுமின்றி, நான்கு வேதமந்திரங்களையும் குரு உபதேசத்துடன் ஜெபித்தால் நாம் கேட்கும் வரங்களைப் பெற்றுச் சிறக்கலாம்.

ஓம் எனும் மாமருந்து

இந்திய தேசத்தின் பெருநகரங்களில் ஒரு காலகட்டத்தில் பெருவணிகம் செய்வோரும், தொழிற்கூடங்களை இயக்குவோரும் மிகப்பெரிய நஷ்டத்திற்கு ஆளாகினர். இதற்குக் காரணம், அதில் வேலை செய்யும் ஆட்கள் "ஹைபர் டென்ஷ'னுக்கு ஆளாகி, சரியாக வேலை செய்யாததுதான் என்று கண்டுபிடித்தனர். உளவியல்ரீதியிலான மனஅழுத்தத்தைப் போக்க, "ஓம்' என்னும் மந்திர ஒலியைத் தொடர்ந்து ஜெபம்போலக் கூறச்செய்தனர். சிலகாலங்கள் சென்றபிறகு உற்பத்தி அதிகமாகி வணிகம் நல்ல லாபமீட்டும் நிலைக்கு வந்துவிட்டது. ஓம் என்ற உச்சரிப்பு மனிதனின் உச்சந்தலைமுதல் உள்ளங்கால்வரை நல்ல "பாசிடிவ்' அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது அனுபவத்தில் உணரப்பட்டது. ஓம் என்னும் மந்திர ஒலியே நமக்கு "டென்ஷனை'க் குறைத்துவிடும் மாமருந்தாகும்.

இல்லங்களில் கஷ்டம் ஏற்படுத்தும் ஒலிகள்

இன்றைய காலகட்டத்தில் ஒருவேளை உணவில்லாமல் இருந்தாலும் இருப்பார்கள்- டி.வி., கைபேசி இல்லாமல் ஒரு நிமிடம்கூட இருக்கமாட்டார்கள். அதில் வருகிற காட்சிகளால் வெளியாகும் குமுறல்கள், அழுகைகள், சோக இசைகள், ஒப்பாரிகள், மிரட்டுதல்கள், சாவு மேளங்கள் வீட்டின் எல்லா மூலைமுடுக்குகளிலும் பரவி, "நெகடிவ் எனர்ஜி'களை (துர்சக்திகளை) உட்புகுத்தி, லட்சுமி கடாட்சத்தை, வளம்தரும் திருசக்திகளை வீட்டைவிட்டே விரட்டிவிடுகின்றன. இதனால் பணவரவு நின்றுபோய் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு, கணவன்- மனைவி பிரிவு, கடன்களால் அவதிப்படுதல், தொழில்நட்டம் ஏற்படுகிறது. மேலும், மன நிலை பேதலிப்பு ஏற்படுவதோடு குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடுகிறது. இது சமீபத்திய குடும்ப நலம் பேணும் நிறுவனத்தின் ஆராய்ச்சி முடிவு. எனவே சிறிய அளவு (டெசிபல்) ஒலியலைகளை மட்டுமே வெளிவரும்படி, சாந்தமான நிகழ்ச்சிகளையும், காலை நேர ஆன்மிக நிகழ்ச்சி, மந்திரங்களுடன் இறைவன் அருள்தரும் காட்சி, தியானம், மந்திரப் பயிற்சிகளையும் காணப் பழகவேண்டும்.

சுபிட்சம் தரும் மந்திர ஒலிப்பரவல்!

ஒலியியல் விஞ்ஞானம் வளர்ந்த நிலையிலுள்ளபோது, நாசா அதில் முன்னேற்றம் கண்டு 20 டெசிபல் ஒலியை 14 மீட்டர் எஃகு ஒலிப்பான் (நற்ங்ங்ப் ஐர்ழ்ய்) வழியே வெளிப்படுத்தினால் கான்கிரீட் தகடையே துளையிடும் என்று கண்டுபிடித்தது.

கலிபோர்னிய இளம் விஞ்ஞானி ஒருவர் வினாடிக்கு ஆறு கோடி அதிர்வுகளையுடைய ஒலியை ஓர் அறையில் ஏற்படுத்தியபோது அங்கிருந்த பஞ்சுப்பொதிகள் தீப்பிடித்து எரிந்துவிட்டன.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை- வேதமந்திரங்களை அவற்றின் ஒலியளவின்படி தெரிந்துகொண்டு, வீட்டின் பூஜையறையில் சொல்லிவருவ தாலும், ஜெபம் செய்வதாலும் கடுமை யான சோதனை, கடன் பிரச்சினை, வறுமை, பணவரவின்மை, நவகிரக தசாபுக்தியால் உண்டாகிற இடர்கள், துன்பங்கள் யாவும் விலகிவிடுவதுடன், துர்சக்திகளும் அகன்றுவிடும் என்று அறிவோமாக.

தியானம்- ஜெபம்- தந்திரம்

பூஜையறையில் எல்லாரது வீடுகளிலும் ஒரு பிரார்த்தனையை முன்வைத்து பூஜை, ஜெபம் நடைபெறுகிறது. ஆனால் அதற்கான பலன் கிடைக்கவில்லையென்று வேதபண்டிதரையோ, பூஜகரையோ அழைத்து மந்திரங்களைக் கூறச்செய்து யக்ஞங்களைச் செய்யவைக்கிறோம். இதைச் செய்யவருகிற பண்டிதர், வீட்டுக்கு நலம்தரும் மந்திர வாசகங்களைச் சரியான டெசிபல் ஒலியில் கூறும் தந்திரமுறை தெரிந்தவராக இருக்கவேண்டும். தந்திரம் என்பதற்கு முறைப்படி உச்சரிக்கும் முறை என்று பொருள்.

இதற்கு "ஆத்ம தியானா' என்னும் இல்லத்தில் ஜெபம் செய்யும் தந்திரத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். மானசீகம்- மனதினுள் சொல்வது; உபாம்சு- உதடு மட்டுமே அசைக்கக் கூடியதாய் சொல்வது; வைகரீ- மந்திர சப்தம் வெளியில் கேட்கும்படி செய்யும் இறைவன் சந்நிதான பூஜை.

மனதுள் ஜெபிப்பதனால் மகிழ்ச்சியான வாழ்வை செல்வசுகத்தோடு அள்ளிக்கொடுப் பதுதான் மந்திரங்கள், ஜெபங்கள். "மன்னாத் த்ராயதே இதி மந்த்ர:' என்பது விதி.

27 நட்சத்திரங்களில் பிறந்த அனைவரும் முதலில் செய்யவேண்டியது அவரவர் நட்சத்திர தேவதா மந்திரத்தை அதன் ஒலியோடு தியானிக்கப் பழகுங்கள். ராசிக்கான சூட்சும ஒலி மூலமந்திரத்தை அறிந்து ஜெபமாகச் செய்ய இன்றே தொடங்குங்கள். உரிய ஒலி அளவிலான மந்திரங்கள் இல்லத்தில் தினமும் ஒலிக்கப் பட்டால், இந்த உலகில் கொட்டிக்கிடக்கும் செல்வங்களைப் பெற்று வாழலாம். தியானம், ஜெபம் மூல மந்திரங்களை அறிந்துசெய்வதுதான் தந்திரம். ஜனன ஜாதகத்தை ஆராய்ந்து சந்திரன், குரு அமர்ந்த இடத்தை வைத்து அறியவேண்டும். மந்திர ஒலியால் மகேசனை நினைந்து மகாபாக்கியங்களைப் பெறுவீராக!

செல்: 91765 39026

bala221119
இதையும் படியுங்கள்
Subscribe