பிரசன்ன ஜோதிஷத்தில் சுவாச பலன்கள்
பிரசன்னம் என்பது-
கேள்வி கேட்ட நேரத்தின் அடிப்படையில் பலன் காணும் வழிமுறை ஆகும்.
பிரசன்ன ஜோதிஷத்தில் கேள்வியாளர், கேள்வி, கேள்வி கேட்கும் இடம், கேள்வி கேட்கும் நேரம், கேள்வி கேட்கும் நாள், முகூர்த்தம், ஹோரை, கோட்சார கிரக நியமங்கள், சகுன, தூத சேஷ்டா, நிமித்த விஷயங்களை ஆராய்ந்து பிரசன்னத்தில் பலன்கள் அளிக்கப்படுகின்றன.
பிரசன்ன ஜோதிடப் பலன்பார்க்க வேண்டி வரும் நபர் கேள்விகள் கேட்கும்போது ஜோதிடரானவர் 14 விஷயங்களை கவனிக்கவேண்டும். இதனை பிரச்சை என்பர்.
பலன் கூறும்போது பிரச்சையில் உள்ள காரணி களையும் ஆராய்ந்தே பலன் அளிக்கப்படுகிறது.
1) கேள்வி கேட்ட நேரம் - சமயம்.
2) கேள்வியாளர் நிற்கும் இடம்- திசை.
3) ஜோதிடரின் மூச்சு நிலை - ஸ்வராயு
4) ஜோதிடரின் நிலை - அவஸ்தை
5) கேள்வியாளர் தன் உடலில் எந்த பாகத்தைத் தொடுகிறார் என்பது - ஸ்பர்சம்
6) ஆருட ராசி
7) ஆருடராசி குறிப்பிடும் திசை
8) கேள்வியாளர் சொல்லும் வார்த்தையின் எழுத்துகள் - பிரச்ன அக்ஷரம்
9) கேள்வியாளரின் நிலை - ஸ்திதி
10) கேள்வியாளரின் அசைவுகள் - சேஷ்டா
11) கேள்வியாளரின் மனநிலை - மனோபாவம்
12) கேள்வியாளர் பார்க்கும் திசை அல்லது பொருள் - விலோகனம்
13) கேள்வியாளரின் ஆடை - வஸனம்
14) அந்த குறிப்பிட்ட நேரத்தில் சுற்றுப் புறத்தில் நிகழும் செயல்கள் உண்டாகும் சப்தங்கள் முதலியன - நிமித்தம்.
மேற்கண்டவாறு பதினான்கு விஷயங் களை ஜோதிடர் கவனிக்க வேண்டுமென பிரசன்ன சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அசைவும், உணர்வும், பேச்சும், நிலையும்- அது கேள்வியாளர் மற்றும் ஜோதிடர் இருவரைப் பொருத்தும் காணப் படுகிறது. இவையாவுமே கேள்விக்கான பதிலில் வெளியாகின்றன.
இவ்வாறு பிரசன்னத்தில் பல்வேறு விஷயங்களும் கவனத்தில் கொண்டு வந்து பலன்கள் அளிக்கப்படுகின்றன.
இவற்றில் நாம் காண இருப்பது ஜோதிடரின் மூச்சு நிலை- ஸ்வராயு எனப் படும் சுவாச பரிசீலனை பற்றிய பலன்கள் ஆகும்.
ஒரு ஜோதிடர் தினமும் அதிகாலையி லேயே தனது சுவாசம் பற்றி ஆராய்ந்து அறியவேண்டும். தனது சுவாசம் எந்த நாடியில் போகிறது என்பதையும், அது எந்த பூதத் தத்துவ
பிரசன்ன ஜோதிஷத்தில் சுவாச பலன்கள்
பிரசன்னம் என்பது-
கேள்வி கேட்ட நேரத்தின் அடிப்படையில் பலன் காணும் வழிமுறை ஆகும்.
பிரசன்ன ஜோதிஷத்தில் கேள்வியாளர், கேள்வி, கேள்வி கேட்கும் இடம், கேள்வி கேட்கும் நேரம், கேள்வி கேட்கும் நாள், முகூர்த்தம், ஹோரை, கோட்சார கிரக நியமங்கள், சகுன, தூத சேஷ்டா, நிமித்த விஷயங்களை ஆராய்ந்து பிரசன்னத்தில் பலன்கள் அளிக்கப்படுகின்றன.
பிரசன்ன ஜோதிடப் பலன்பார்க்க வேண்டி வரும் நபர் கேள்விகள் கேட்கும்போது ஜோதிடரானவர் 14 விஷயங்களை கவனிக்கவேண்டும். இதனை பிரச்சை என்பர்.
பலன் கூறும்போது பிரச்சையில் உள்ள காரணி களையும் ஆராய்ந்தே பலன் அளிக்கப்படுகிறது.
1) கேள்வி கேட்ட நேரம் - சமயம்.
2) கேள்வியாளர் நிற்கும் இடம்- திசை.
3) ஜோதிடரின் மூச்சு நிலை - ஸ்வராயு
4) ஜோதிடரின் நிலை - அவஸ்தை
5) கேள்வியாளர் தன் உடலில் எந்த பாகத்தைத் தொடுகிறார் என்பது - ஸ்பர்சம்
6) ஆருட ராசி
7) ஆருடராசி குறிப்பிடும் திசை
8) கேள்வியாளர் சொல்லும் வார்த்தையின் எழுத்துகள் - பிரச்ன அக்ஷரம்
9) கேள்வியாளரின் நிலை - ஸ்திதி
10) கேள்வியாளரின் அசைவுகள் - சேஷ்டா
11) கேள்வியாளரின் மனநிலை - மனோபாவம்
12) கேள்வியாளர் பார்க்கும் திசை அல்லது பொருள் - விலோகனம்
13) கேள்வியாளரின் ஆடை - வஸனம்
14) அந்த குறிப்பிட்ட நேரத்தில் சுற்றுப் புறத்தில் நிகழும் செயல்கள் உண்டாகும் சப்தங்கள் முதலியன - நிமித்தம்.
மேற்கண்டவாறு பதினான்கு விஷயங் களை ஜோதிடர் கவனிக்க வேண்டுமென பிரசன்ன சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அசைவும், உணர்வும், பேச்சும், நிலையும்- அது கேள்வியாளர் மற்றும் ஜோதிடர் இருவரைப் பொருத்தும் காணப் படுகிறது. இவையாவுமே கேள்விக்கான பதிலில் வெளியாகின்றன.
இவ்வாறு பிரசன்னத்தில் பல்வேறு விஷயங்களும் கவனத்தில் கொண்டு வந்து பலன்கள் அளிக்கப்படுகின்றன.
இவற்றில் நாம் காண இருப்பது ஜோதிடரின் மூச்சு நிலை- ஸ்வராயு எனப் படும் சுவாச பரிசீலனை பற்றிய பலன்கள் ஆகும்.
ஒரு ஜோதிடர் தினமும் அதிகாலையி லேயே தனது சுவாசம் பற்றி ஆராய்ந்து அறியவேண்டும். தனது சுவாசம் எந்த நாடியில் போகிறது என்பதையும், அது எந்த பூதத் தத்துவத்தைச் சேர்ந்தது என்ப தையும் அறிந்து கொள்ளவேண்டும் இதன் மூலம் அன்று என்னென்ன நிகழப்போகிறது என்பதையும் ஜோதிடர் முன்கூட்டியே அறிந்துகொள்ள இயலும்.
உதாரணமாக, காணாமல் போனவை பற்றிய கேள்வி வரும் சமயம் அதனை அறியும் முறையான நஷ்டப் பிரசன்னத் திலும், கேள்வி கேட்ட நேரத்தில் ஜோதி டரின் சுவாசம் எவ்வாறு அமைந்தது என்பதையும் வைத்து பலன் கூற இயலும்.
நமது இடது பக்க மூக்கினால் விடும் சுவாசம் சந்திர கலை ஆகும். இதில் வரும் காற்று குளிர்ச்சியாக அமையும்.
நமது வலது பக்க மூக்கினால் விடும் சுவாசம் சூரியகலை ஆகும். இதில் வரும் காற்று உஷ்ணமாக இருக்கும்.
இரண்டு மூக்குகளிலும் வரும் மூச்சுக்காற்றானது சுழுமுனை என்பதாகும்.
விதியை மதியால் வெல்லலாம் என்று முன்னோர் சொல்வர்.
இதன் விளக்கமானது-
இங்கு மதி என்று கூறப் படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன்.
சந்திர கலையை- மதி இடகலை, இடைக்கால் எனவும், சூரியகலையை- பிங்கலை, பின்கலை, வலக்கால் எனவும் அழைக்கப்படுகிறது.
இங்கு 'கால்' என்னும் வார்த்தை மூச்சைக் குறித்து சொல்லப்படுகிறது.
ஆகவே, இந்த சுவாசம் எனும் கால னைத்தான் "காலால் உதைத்தேன்' என வேதமகரிஷிகள் கூறுவார்கள்.
மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசத்தைக் குறைக்கப் பழகிக்கொண்டால் ஆயுள் கூடும்.
பிராணாயாமத்தின் சாராம்சமானது:
ஒரு நிமிடத்திற்கு- 15 மூச்சு.
மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு நேரம்.
மூச்சை உள்ளே தங்கவைப்பது நான்கு பங்கு நேரம்.
மூச்சை வெளியே விடுவது இரண்டு பங்கு நேரம்.
இயற்கையாக மழைக்காலங்களில் வலது பக்க மூக்கினால் சூரியகலையில் சுவாசம் உஷ்ணமாக நடைபெறும்.
அதிக வெய்யில் காலங்களில் இடது பக்க மூக்கினால் சந்திரகலையில் சுவாசம் குளிர்ச்சியாக நடைபெறும்.
ஒருவரது உடலில் உஷ்ணமும் குளிர்ச்சி யும் சமநிலையில் இல்லாமல் போகும் போதுதான் குறைபாடுகள் நேரும்.
அதன் தாக்கமாக பல உபாதைகள் நோய்களாக வெளிப்படும்.
உதாரணமாக, ஒருவருக்கு சந்திரகலை சுவாசம் குறைவுபட்டு, சூரியகலையில் உஷ்ணமாகத் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும்போது ஒரு வருடத்தில் மரணம் சம்பவிக்கும்.
அதுவே ஒரே நாசியில் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும்போது மூன்று மாதங்களில் மரணம் சம்பவிக்கும்.
ஆகவே நாம் மூச்சுப்பயிற்சியை சிறப்பாகப் பழகி செயல்படுத்தி வந்தால் ஆயுள் கூடும்.
சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும். சுவாசத்தை அடக்குவதால்தான் ஆமைகளும் பாம்புகளும் அதிக நாட்கள் உயிருடன் வாழ்கின்றன.
நம் சுவாசம் நடைபெறும் அமைப்பானது- நாம் நடக்கும்போது 16 அங்குலமும், அமர்ந்திருக்கும்போது 12 அங்குலமும், ஓடும்போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடல் உறவில் ஈடுபடும்போது 64 அங்குலமும் இந்த சுவாசமானது நடைபெறுகிறது.
16 அங்குலம் ஓடக்கூடிய சந்திர கலையை சுருக்கச் சுருக்க ஆயுள் விருத்தியாகும்.
எனவே விதி முடிவும் இந்த மதியால் விலகியே போகும்.
இங்கு காலனாகிய இறப்பை காலாகிய மூச்சுக்காற்றை சுழுமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெரு வாழ்வு அடைவதையே, "வாழ்நிலையில் வரும் ஆயுள் பாவத்தை- விதியை மதியால் தடுக்கலாம்' என்று ரிஷிகள் கூறினர்.
சுவாசத்தினால் ஏற்படும் அற்புதங்கள்
16 அங்குலம் ஓடக்கூடிய சுவாசத்தை 11 அங்குலமாகக் குறைத்தால் உலக இச்சை நீங்கும்.
10 அங்குலமாகக் குறைத்தால் ஞானம் உண்டாகும்.
9 அங்குலமாகக் குறைத்தால் விவேகி ஆவான்.
8 அங்குலமாகக் குறைத்தால் துரதிருஷ்டம் காண்பான்.
7 அங்குலமாகக் குறைத்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான்.
6 அங்குலமாகக் குறைத்தால் ஆகாய நிலை அறிவான்.
5 அங்குலமாகக் குறைத்தால் காயசித்தி உண்டாகும்.
4 அங்குலமாகக் குறைத்தால் அட்டமா சித்தி உண்டாகும்.
3 அங்குலமாகக் குறைத்தால் நவகண்ட சஞ்சாரம் உண்டாகும்.
2 அங்குலமாகக் குறைத்தால் கூடுவிட்டுக் கூடுபாய்தல் சித்திக்கும்.
1 அங்குலமாகக் குறைத்தால் ஆன்ம தரிசனம், உதித்த இடத்தில் நிலைத்தல், சமாதி நிலை, அன்னபாணம் நீங்கும்.
மேற்கண்டவாறாக சந்திரனுடைய குளிர்ச்சி யான சந்திரக் கலையை சுருக்க வேண்டும்.
கிழமைகளும் சுவாச பலன்களும்
திங்கள், புதன், வியாழன், வெள்ளி. ஆகிய கிழமைகளில் இடதுநாசி வழியே சுவாசம் வருவது சாதகமானது.
ஞாயிறு, செவ்வாய், சனிக்கிழமைகளில் வலது நாசி வழியே சுவாசம் பாய்வதும் சாதகமானது.
இவ்வாறின்றி சுவாசம் மாறுபட்டு, வலது நாசி வழியே சுவாசம் வரவேண்டிய நாட்களில் இடதுநாசி வழியே பாய்வதும், இடதுநாசி வழியே பாயவேண்டிய நாட்களில் வலதுநாசி வழியே பாய்வதும். அசுபப் பலனையே தரும்.
சுவாசம் சாதகமாகப் பாயும் நாட்களில் ஒருவருக்கு நல்ல ஆரோக்கியமான உடல் நலமும், பணவரவும், நல்ல உணவும், மற்ற பல நன்மை தரும் செயல்களும் நிகழும்.
அவ்வாறின்றி சுவாசம் பாதகமாக அமைய நேரிட்டால் நல்ல உணவு, உறக்கம் எதுவுமே கிடைக்காது. எல்லாரிடமும் சண்டை. சச்சரவு ஏற்படும். இயற்கை உபாதைகள் கழிப்பதில்கூட துன்பம் நேரிடும்.ஞாயிற்றுக்கிழமை பாதகமான சுவாசம் அமைய உடலெங்கும் வலி வேதனை தரும்.
திங்கள்கிழமை எனில் சண்டை வரும்.செவ்வாய்க்கிழமை எனில் அவருக்கோ அவரது உறவினர்க்கோ மரணம் நிகழலாம். புதன்கிழமை எனில் தொலைதூரப் பயணம் ஏற்படும்.
வியாழக்கிழமை எனில் ஏதேனும் தீங்கு நிகழும். அரசாங்கத்துக்கு ஆபத்து நேரிடும். வெள்ளிக்கிழமை எனில் எடுத்த செயல் களில் தோல்வி அடைய நேரிடும். சனிக்கிழமை எனில் பொருளாதார இழப்பு, வலிமை இழப்பு, பயிர்சேதம், நிலம் தொடர்பான வழக்குகள் ஏற்படும்.
ஞாயிற்றுக்கிழமையில் இடதுநாசி வழியே சுவாசம் வருவது கூடாது.
இவ்வாறு எட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் சாதகமற்ற முறையில் சுவாசம் வெளிப்பட்டால் தனக்கு குருவாக விளங்குபவர் அல்லது ஒரு மூத்த உறவினருக்கு துன்பமோ மரணமோ நேரிடும்.
எட்டு திங்கட்க்கிழமைகளில் சாதகமற்ற சுவாசம் வந்தால் தனது குழந்தைகள் அல்லது இளைய உறவினருக்குத் துன்பங்கள் நேரிடலாம்.எட்டு செவ்வாய்கிழமைகளில் சாதகமற்ற சுவாசம் நிகழ்வது. எதிரிகளிடம் சிறைப்பட நேரிடும்.
எட்டு புதன்கிழமைகளில் சாதகமற்ற சுவாசம் அமைந்தால் கடும் நோய் அல்லது மரணம் நேரிடலாம்.
எட்டு வியாழக்கிழமைகளில் சாதகமற்ற சுவாசம் அமைந்தால் ஒருவரின் ஆசிரி யருக்குத் துன்பம் நேரலாம் எட்டு வெள்ளிக் கிழமைகளில் சாதகமற்ற சுவாசம் நேரிட்டால்.
நிலம் தொடர்பானவற்றில் பண இழப்பு நேரிடும். எட்டு சனிக்கிழமைகளில் சாதகமற்ற சுவாசம் இருந்தால் வீடு இழப்போ அல்லது மனைவி இழப்போ நிகழும்.
எட்டு ஞாயிறு, எட்டு திங்கள் என மேலே உள்ளதை ஞாயிறிலிருந்து எட்டு நாட்கள், திங்களிலிருந்து எட்டு நாட்கள் என கணக்கிட்டு அறிதல் வேண்டும். மேலும் சுவாச ரகசியங்கள் பின்னர் காண்போம்.
செல்: 96599 69723
_______________
கடன் தீரும் காலம்!
மனித வாழ்க்கையில் சில தருணங்களில் தடங் கல்களும், போதாத காலங்களும் வரும் என்று தீர்க்கதரி சனமாகச் சொல்லிவைத்த பெரியோர்கள், அவ்வாறான பிரச்சினைகளும் தடைகளும் விலகுவதற்கான வழிமுறைகளையும் விளக்கியிருக்கிறார்கள்.
விவாக முகூர்த்தம், பிரம்ம முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம், லக்னநிர்ணய முகூர்த்தம் என்று பிரித்து வழிபாடுகளைச் செய்யச் சொன்னார்கள். இவற்றில் பலரும் அறிந்திராத மைத்ர முகூர்த்தமும் உண்டு. இது கடன்களை அடைக்க உகந்த நேரமாக உள்ளது.
கடன் தொல்லையால் மீளமுடியாமல் தவிக்கும் அன்பர்கள், இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைக் கணித்து, அந்தத் தருணத்தில் கடனில் சிறு பகுதியையாவது அடைக்க முயற்சிப்பது சிறப்பு.
கடன் கொடுத்தவர், இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்க மறுக்கிறார் எனில், சிறு சிறு தொகையாக நமது வங்கிக் கணக்கில் சேர்த்து சேமித்து, பிறகு மொத்தமாக அடைக்கலாம். அப்படி, மாதந்தோறும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் நேரமானது மைத்ர முகூர்த்தமாக இருக்கும்பட்சத்தில் வெகு சீக்கிரத்தில் பணம் சேர்ந்து, மொத்த கடனும் அடைபடும். அப்படி வங்கி கணக்கில் சேமிக்க முடியாதவர்கள் உங்களால் முடிந்த அளவு பணத்தை நீங்கள் பணம் கொடுக்க வேண்டியவரை நினைத்து சிவப்புத்துணி அல்லது சிவப்பு உண்டியலில் சேர்த்து இதே மைத்தர முகூர்த்தத்தில் சேர்த்தால் கடன் வெகு விரைவில் அடைபடும்.
மைத்ர முகூர்த்தம் ஏப்ரல் 2019 வரை
3-1-2019 வியாழன் அதிகாலை 5.12 மணிமுதல் காலை 7.12 மணிவரை;
14-1-2019 திங்கள் மதியம் 12.30 மணிமுதல் 2.30 மணிவரை;
29-1-2019 செவ்வாய் நள்ளிரவு 1.35 மணிமுதல் 3.35 மணிவரை;
2-2-2019 சனி காலை மற்றும் இரவு 7.19 மணிமுதல் 9.19 மணிவரை; மதியம் மற்றும் நள்ளிரவு 1.19 மணிமுதல் 3.19 மணிவரை;
11-2-2019 திங்கள் காலை 10.35 மணிமுதல் மதியம் 12.35 மணிவரை;
26-2-2019 செவ்வாய் இரவு 11.38 மணிமுதல் நள்ளிரவு 1.38 மணிவரை;
10-3-2019 ஞாயிறு காலை 8.49 மணிமுதல் 10.49 மணிவரை;
25-3-2019 திங்கள் இரவு 10.13 மணிமுதல் 12.13 மணிவரை;
7-4-2019 ஞாயிறு காலை 6.43 மணிமுதல் 8.43 மணிவரை.
-பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி