கிரகங்கள் மனிதனை, அவரவர் கர்மவினைக்குத் தக்கவாறு ஆட்டிப் படைக்கின்றன. இவ்வுலகில் உன்னதமான பிறவி மனிதப் பிறவியேயாம். ஏனெனில், இவ்வுலகப் படைப்பில் பகுத்தறிவென்பது மானிடப் பிறவிக்கு மட்டுமே உரித்தானது.
தர்ம, அர்த்த, காம, மோட்சம் வாயிலாக, ஒவ்வொரு ஆன்மாவும் பேரின்ப வீட்டை அடையும்பொருட்டு, நமது முன்னோர் களும் முனிவர்களும் பல அரிய வேதசாத்திர நூல்களை நமக்கு அளித்துள்ளனர். அத்தகைய நூல்களில், "அதர்வண வேதம்', "சத்பத ப்ராம்ணா', 'மனு ஸ்மிருதி' மற்றும் புராண இதிகாச நூல்கள் குறிப்பிடத் தக்கவையாகும். இவைனைத் திலுமே முக்கியமாக சமூகத் தேவைகள் மற்றும் திருமண விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramakrishnan_3.jpg)
பொருள், இன்பம் என்னும் இரு கரைகளுக்குக்கிடையே ஒடும் தர்மம் எனும் நீர்ப்போக்கில் சென்று, மோட்சம் எனும் பேரின்பப் பெருவீட்டை அடையவேண்டும். "சத்பத ப்ராம்ணா' வில், "மனைவியும், குழந்தைகளுமின்றி ஒருவரது வாழ்க்கை முழுமையடைவதில்லை' எனக் குறிப்பிடப்படுகிறது. பண்டைய நூல்கள் கூறும் பதினாறுவித ஸம்ஸ்காரங்களில் (சோடஸ) திருமணமும் ஒன்று. பராசரர் காலத்தில் (கி. மு. 3000) திருமணகாலமே வாழ்க்கையின் மைய நிகழ்வாகக் கருதப்பட்டது. எல்லா நாகரிகங்களிலும் மனைவியைப் பாதுகாப்பது கணவனின் கடமையென்றும், மனைவி மதக் கடமைகளை சரிவரக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. முகூர்த்த நூல்களில் கூறப்பட்டுள்ள பதினாறு ஸம்ஸ்காரங்கள்:
1. நிஷேகம்- முதலிரவு
2. கர்பாதானம்- கருத்தரிப்பு
3. பும்ஸவனம்- கருவுக்குப் பால்பிரிவு தருதல்
4. சீமந்தம்- கருவுக்கு உயிரளித்தல்
5. ஜாதக கர்மா- தோஷம் நீக்குதல் (குழந்தைக்கு)
6. நாமகரணம்- பெயர் சூட்டுதல்
7. தோளாரோகணம்- தொட்டிலில் இடல்
8. அன்னப் பிரஸன்னம்- உணவூட்டுதல்
9. கர்ணவேதம்- காது குத்துதல்
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramakrishnan1.jpg)
10. சௌளம்- முடியெடுத்தல்
11. அக்ஷராப்பியாசம்- எழுத்தறிவித்தல்
12. உபநயனம்- பூணூல் அணிவித்தல்
13. விவாகம்- திருமணம் (பிரம்மச்சரியம், குடும்பவிரதம், கன்யாதானம், உத்தானம் (பாணிக்கிரகணம்), சப்தபதி (அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல்)
14. நித்தியகர்மா- அன்றாடக் கடமைகள்
15. கிரஹஸ்தாஸ்ரமம்- இல் வாழ்க்கை நடைமுறை, வானப்ரஸ்தம் (பற்றற்ற வாழ்வு)
16. அபரக்கிரியைகள்- அந்திமக் கடன்கள் ஆகியவையாகும்.
திருமணத்தைப் பற்றிப் பேசும்போது 7-ஆமிடம் மாய உலகைக் கோடிட்டுக் காட்டுகிறது. 7-ஆம் வீடு, எந்தவொரு வீட்டிலிருந்தும் முடிவுறும் வீடாகிறது. உடல் லக்னம் எனில் உடல் இணைவுறும் இடமென்று ஏழாமிடத்தைக் கொள்ளலாம். எனவே திருமணத்தை 7-ஆம் வீட்டுடன் தொடர்புபடுத்தலாம் அல்லவா? மேலும் 7-ஆம் வீடு காமத் திரிகோணத்தில் அமைகிறது. ஜாதக நிலைகளை ஆராய கீழ்க்கண்ட ஜாதகத்தை எடுத்துக்கொள்வோம். இது இராம கிருஷ்ண பரமஹம்சரின் ஜனன ஜாதகமாகும்.
இதில் களத்திரகாரகன் சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் உச்சநிலையில் உள்ளார். (7-ஆம் வீட்டுக்கு 8-ஆம் வீடு). அவருக்கு இடங்கொடுத்த குரு 5-ல் வக்ரமடைந்து, ஜாதகருக்கு இனியபேச்சு மற்றும் கவிதைத் திறனையளித்து காதல் உணர்வுகளைக் குறைத்தார். சுக்கிரன் உணர்வுகளை அதிகரித்து, அவர் தன்னுடைய மனைவியை தேவியின் அவதாரமாகவும், புனிதத் தாயாகவும் கருதவைத்தார்.
காமத்திரிகோண வீடுகளில், லக்னத்தில் சூரியன், 7-ஆம் வீடு கிரகமின்றி, 5-ஆம் வீட்டில் சாத்வீக குணமுடைய 11-ஆமதிபதி குரு அமர்ந்துள்ளார். குரு, 5-ஆமதிபதி புதனைப் பார்க்கிறார். 9-ல் உச்ச சனி வக்ரமாகியுள்ளார். சனி லக்னாதி பதியானதால், அவருடைய பக்தி மற்றும் ஞானமார்க்கத்தை பறைசாற்றுகிறது. மோட்ச ஸ்தானமான 12-ஆம் வீட்டில் 3-ஆமதிபதி செவ்வாய் அமர்ந்து அவரை ஞானியாக்கியது.
சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகியவற்றின் பரஸ்பரத் தன்மைகள், புனித முனிவரின் உள்மனதை குறி காட்டுகிறது. குருவின் பூரட்டாதி நட்சத்திரத்திலுள்ள சந்திரன் கும்பத்தில் அமர்வு மற்றும் அதன் அதிபதி சனி உச்சமாகி தர்ம வீடான 9-ல் இருப்பது அவரின் ஞானசக்தியை குறிகாட்டுவதோடு, காமத்தைவிட்ட நிலையையும் காட்டுகிறது.
காலபுருஷ தத்துவப்படி 7-ஆம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிரன், காம உந்துதலில் சிக்கலைத் தருகிறார். 5-ஆம் வீடு ஆரூட லக்னமாகி அங்கு குரு அமர்ந்திருப்பது தர்மத்தைப் பரப்பப் பிறந்தவர் என்பதை குறிகாட்டுகிறது.
கடகம் உபபாத லக்னமாகி, அதற்கு 7-ஆமிடத்தில் உச்ச செவ்வாயின் அமர்வு, அவருடையை ஞானமார்க்கத்திற்கு அவரது மனைவியும் உதவக் காரணமானது.
ரிஷபம் தாரபாதாவாகி, அதற்கு 7-ல் கேது அமர, உடல் தொடர்பற்ற மணவாழ்க்கையைத் தந்தது.
7-ஆமதிபதி லக்னத்தில் இடம்பெற்றுள்ளது. சீக்கிர மற்றும் நிலையான திருமண வாழ்வைத் தந்தது. ஜாதகர் தனது 23-ஆவது வயதில் ஆறு வயதுச் சிறுமி சாரதாவை மணந்தார்.
லக்னாதிபதி மற்றும் 7-ஆமதிபதிக்கு இடங்கொடுத்தவனுமான சனி பாக்கிய ஸ்தானத்தில் இருப்பது, மணமான நிலையில் தூய்மையான ஞானியாகவும் இருக்கச் செய்தது. சந்திரன் மற்றும் சுக்கிரனின் 2/12 நிலை, ஞானிக்கு உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் தன்மையைத் தந்தது.
எனவே, எல்லா நாகரிகங்களிலும் மனைவியைப் பாதுகாப்பது கணவனின் கடமையென்றும், மனைவி மதக் கடமைகளை சரிவரக் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டதன்படி நடந்த தல்லவா?
செல்: 63836 25384
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/ramakrishnan-t.jpg)