னித இனத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அற்புத வரம்தான் மரம். மரங்கள் இல்லையெனில் மனித ஜீவனே இல்லையென்று உறுதிபடக் கூறலாம். எல்லா மரங்களையும் மிகப்பெருமையாக "விருட்சம்' என்ற சொல்லால் அழைப்பதற்கு முக்கிய காரணம்- "மனித இனத்தை வளரச் செய்து காப்பது' என்று பொருள் கொள்ளப்படுவதுதான்.

சுவாசத்தில் தடைவந்தால் துளசி இலை, கற்பூரவல்- இலையை நுகர்ந்தால் சரியாகிவிடும் என்று அறிந்துகொண்ட மனிதர்களுக்கு, வாழும்போது தடைகளும் சோதனைகளும் வந்தால், அந்த இலையில் நமது கோரிக்கைகளை எழுதிக் கேட்டால் வெற்றி கிடைத்துவிடும் என்ற தேவரகசியம் மறந்துபோய்விட்டது.

பொதுவாக விருட்ச சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் ஒரு பரிகார மரம் உண்டென்பது எல்லாருக்கும் தெரியும். அந்த மரத்தை வீட்டில் வைத்து வளர்ப்பதால் அவர்கள் வாழ்க்கையில் வெற்றியும், குழந்தைகளுக்கு எதிர்கால வளர்ச்சியும் கிடைக்குமென்பது உண்மை.

உதாரணத்திற்கு, திருவோண நட்சத்திரக் காரர்கள் வெள்ளெருக்கு மரத்தை நட்டு பிரதிட்டாபனம் செய்து வணங்கிவந்தால் நோய் நீக்கம், சோதனைகளில் வெற்றி, தடை யில்லாத பணவரவு, ஆயுள் நிலைத்தன்மை ஆகிய சுபப்பலன்கள் உண்டாகும்.

Advertisment

வெள்ளை குமிழ், குமிடி, கும்புளம், குமடு தேக்கு என்று தமிழ்ப்பெயர் கொண்ட இந்த மரத்திற்கு அர்க்கா, சூரிய பத்திரம் என்று பெயர். விருட்சங்களைத் தகுந்த ஆன்மிகப் பகுப்பாய்வு செய்து தெரிந்து கொள்ளாமல், அரைகுறையாக பூஜை செய்த தற்கால மாந்ரீகர்களும் சோதிட ஆய்வர்களும் பலன் கிடைக்காமல் தோற்று விலகிவிட்டனர். ஒரு வீட்டில் வைக்கப் படும் விருட்சத்தின் இலைகள் காற்றில் அசையும் போது துர்சக்திகள் விலகுகின்றன.

விருட்சங்களின் இலைகளால் நமக்கு என்ன பயன்? அவற்றை எப்படிப் பயன் படுத்த வேண்டும் என்பதைக் காண்போம்.

இலைகளின் மகத்துவம்

Advertisment

இந்த உலக வாழ்க்கையில் எல்லாருக்கும் தினமும் ஒரு சோதனை, பிரச்சினைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு ஆலயங்களுக்குச் சென்று பல பரிகாரங்களைச் செய்கிறோம். அதேபோல் நமக்கு வரும் சோதனைகளைத் தீர்க்கும் அபூர்வ சக்தி குறிப்பிட்ட சில விருட்சங்களின் இலைகளுக்கு இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. ஆனால் தெரியாமலே பயன்படுத்துகிறோம்.

பழங்காலத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடத்தும்போது, ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும். வாழ்க்கை ஒப்பந்தத்தைப் பனை ஓலையில் எழுதி இருவீட்டாரும் மாற்றிக் கொண் டார்கள். இதையே "முகூர்த்த ஓலை' எழுதுதல் என்றனர்.

இந்த மணவாழ்க்கை நிலைத்து நின்றது. இக்காலத்தில் விருப்பப்படி எழுதிப் பெற்றுக்கொள்வதால் அவர்கள் வாழ்க்கை பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. பனை ஓலையில் எழுதப்பட்ட ஜாதகத்தை வைத்திருப்போர் வாழ்க்கை வளமோடு தொடங்கி, பல வெற்றிகளையும் பதவிகளையும் பெற்று மங்களகரமாக விளங்கியது என்பதை அறியவேண்டும்.

திருமணத் தாம்பூலத்தில் திருமகள் அருள் சுரக்கும் வெற்றிலை, துளசி பூஜைக்கு, அரசாணிக்காலில் அரச இலை, அழகுக்கும் அழைப்பிற்கும் விருந்திருக்கும் வாழை இலை, மணமேடையில் "மா' என்னும் மகாலட்சுமி அமர்ந்திருக் கும் மாவிலை, தோஷங்களை நீக்கும் புரசு இலை என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்த இலைகள் சிலவற்றில் நாம் வேண்டுதல்களை எழுதிவைத்து வணங்கி வந்தால் அவை பலன்களைப்பெற தூண்டுகின்றன.

திருமூல நாயனார் தனது திருமந்திரப் பாடலில்-

"யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி'

என்று மூன்று பெரும் வாசகத்தை இருபொருள்பட, வியக்கும்படி செய்தி கூறியுள்ளார்.

இந்த உலகத்தில் இறைவனுக்கென்று எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு கடவுளுக்கும் சக்தியூட்டும் பச்சிலை இருக்கிறது. அதையே இலை என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த இலையை இனம்கண்டு பயன்படுத்தினால் எளியோருக்கும் ஏற்றங்கள் சித்திக்கும்.

பசுவுக்கு உணவாக இலைகளின் தொகுப்பான (அகத்திக் கீரை) கீரைகளைக் கொடுப்பதால் நமக்குப் பாவங்கள் களையப் படும். இங்கே சிவபெருமானை இறைவன் என்றும், சக்தி தேவியைப் பசு என்றும் உவமையாகக் கூறுகிறார். உணவு உண்ணும் நேரத்தில் நாம் பிறருக்கும் ஒரு பிடி கொடுத்தால் அது எல்லாருக்கும் பசியாறும்படி செய்து, அவ்வாறு செய்பவனை வாழவைக்கும் என்றார். இறைவடிவங்களுக்கென்று பச்சிலை கொடுக்கப்பட்டது- தாவரங்கள், மூலிகைகள் தொடர்புடைய நூல்களில் விவரித்துச் சொல்லப்பட்டுள்ளன.

விநாயகர் அருள்நிறை இலைகள்

வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானை குறிப்பிட்ட இலைகளால் பூஜை செய்வதால் காரியசித்தி உண்டாகும் என்று மகரிஷிகள் எழுதி வைத்தார்கள். வடமொழியில் இந்த இலைகளைப் "பத்திரம்' என்பர். பத்திரம் என்றால் நம் இல்லத்தைக் குறிப்பிடும் சான்று எனலாம். அதையே வேதங்கள், "நம்மைக் காத்து ரட்சிக்க பகவானிடம் அருள் பெற்றுத் தருபவை' என்று பெருமைபடக் கூறுகின்றன.

rr

விநாயகப் பெருமானின் தேவதா வசிய விதியின்படி, அவரது 21 நாமங்களுக்குரிய இலைகளை ஒரு வருடத்திற்கு பிரதி செவ்வாய், வெள்ளி, சதுர்த்தி நாளில் அர்ச்சனை செய்து வணங்கிவந்தால், செய்துவரும் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சியும் பணவரவும் ஏற்படும்.

குறிப்பாக 21-ஆவது மூர்த்தியாகக் குறிப்பிடப்பட்டவர் கௌரீ புத்ரர்' என்னும் நாமத்திற்கு உரியவர்; ராஜ விருட்சம் என்ற அரச இலையை ஏற்பவர்.

விருட்சங்கள் தரும் பத்திரங்களின்மேல் நமக்குத் தேவையான- நியாயமான பலன்களை எழுதி வைத்து, விதிமுறைப்படி பூஜைசெய்து வந்தால் அவை உரியகாலத்தில் நிறைவேறிவிடும்.

ராஜவிருட்ச இலை மகத்துவம்

கிராமப் புறங்களிலும் சாலையோரங் களிலும் அரசமரம் மிக உயரமாக வளர்ந்து இலைகளை உதிர்த்துக் கொண்டிருக்கும். அவை சேர்ந்துவிட்டால் குப்பைபோல் எரித்துவிடுவார்கள். பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பரிகார மரமே அரசு.

வட நூலார் இதை ஸ்ரீ விருட்சம், பிப்பலம், அஸ்வத்தம் என்ற பெயர்களில் வழிபடுவர். தாவரவியலில் "எண்ஸ்ரீன்ள் தங்ப்ண்ஞ்ண்ர்ள்ஹ' என்றும், தெலுங்கு மொழியில் ரவி மரம் எனவும், மலையாளத்தில் அரையல் என்றும் சொல்வார்கள்.

மகத்துவம் மிக்க அரச மரத்தை அமாவாசையும் திங்கட்கிழமையும் சேரும் நாளில் 108 முறை வலம் வந்து-

"ஓம் மூலதோ ப்ரம்ம ரூபாய

மத்யதோ விஷ்ணு ரூபிணே

அக்ரத: சிவரூபாய விருட்சராஜாயதே நம.'

என்று துதித்து வணங்குவது வழக்கம். ஆனால் "ஆயுர்பலம் யசோவர்ச்ச...' என்று தொடங்கி, "மேதத் சுகீபவேத்' என்ற வாக்கியம் வரை 11 துதிகள் உள்ளன.

அரச மரம் தன்னை முறைப்படி வழிபடுவோர்க்குத் துயரத்தை நீக்கி வளம் கொடுக்கும் கற்பக விருட்சம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இதன் ஒவ்வொரு இலையும் காம்பு பாகத்தை கீழ்வைத்துப் பார்த்தால் அரசவை சாமர வடிவமாகவும், மேலே தூக்கிப் பார்த்தால் இதய வடிவமாகவும் தெரியும். பெரிய இலையைக் காப்புக்கட்டி எடுத்து, மூலிகை சாபநிவர்த்தி செய்து, சுப காலத்தில் பால், பன்னீர், சந்தன அபிஷேகம் செய்து, அதன் மேல் பெயர், தங்கள் வேண்டுதலை எழுதி பூஜையறையில் வைத்து தியானம் செய்தல் வேண்டும்.

கடன் தீர்வு, தனயோகம் வருவதற்கு வெள்ளிக்கிழமைகளில் எழுதிவைத்து, அரச இலையை தெய்வமாக மதித்து துதியைக் கூறவேண்டும். மூன்று நாட்கள் கழித்து இலையைச் சுருட்டி கிழிந்துவிடாமல் மஞ்சள் நூலைச் சுற்றி வைக்கவேண்டும்.

புதுவாழ்வு தரும் பூவரசு

விருட்ச சாஸ்திரப்படி சௌமிய ஆண்டிற்கான பரிகார மரம்தான் பூவரசு. ஒரு வீட்டில் பூவரசு தானாக வளர்ந்திருந்தால், அதை வெட்டிவிடாமல் வளரச் செய்து உத்திரம், நிலைகளுக்குப் பயன்படுத்தலாம். சனிக்கிழமை சனி ஓரையில் எள் ஊறவைத்த நீரை ஊற்றி, அதன் எள்ளை எருமை மாட்டிற்கு கொடுத்து விடுவதால் கொடிய நோய்களும் விலகுவது உறுதி.

ஒருவர் ஜாதகத்தில் குரு தசை ராகுபுக்தி நடக்கும்போது பூவரசு மரத்திற்குக் கருப்பு உளுந்து நீரை செவ்வாய்க்கிழமையன்று விட்டு, விருட்ச பூஜை செய்து நலம்பெறலாம். சக்தி வாய்ந்த பூவரசு இலையில் ஞாயிறு, செவ்வாய்க் கிழமையன்று, கடன் திரும்பவும், செல்வநிலை சென்றது திரும்பவும் விருட்ச பூஜாவிதியைப் பின்பற்றி பெயர் எழுதி வழிபடவேண்டும்.

அரசபதவி தரும் ஆல விருட்சம்

விழுதுகளால் தாங்கப்பட்டு நெடிதுயர்ந்து நிற்கும் ஆலமரத்தை சக்தி வாய்ந்த தெய்வ மரம் என்பார்கள். ஆலமரத்திலிருந்து வடியும் பால் பல மருந்துகளுக்கு ஆதாரமாக விளங்குவதுபோல, அதன் இலை அரசு அலுவல் தொடர்பான சாதகங்களைக் கொடுக்கிறது. இதன் இலைகள் சக்தியை உள்வாங்கும் தாமிரத் தகடுக்கு ஒப்பானது.

குரு பகவானையும் இந்திரனையும் பிரம்மதேவரையும் வணங்கி, பெயருடன் "அரச பதவி கிடைக்கவேண்டும்' என்று எழுதி வணங்கி வரவேண்டும். இதற்காக குரு மூல மந்திரமும் பிரம்மாஸ்திரமும் ஐந்திராஸ்திர மூலமந்திரமும் சிறப்பாகச் செயல்படுகின்றன.

காசு சேர்க்கும் கல்லாலம்

இன்றைய காலகட்டத்தில் பண வருவாய் இல்லாமல் பலர் கஷ்டப்படுவதும், வாங்கிய கடனைத் திரும்ப செலுத்த இயலாமல் துன்பப்படுவதும் சாதாரண நிகழ்வாகிவிட்டது. இந்த அவலநிலையைப் போக்கி எப்போதும் கையில் பணம் சேர்வதற்குக் கைகண்ட பரிகார பூஜையாகச் சொல்லப்பட்டிருப்பது கல்லால விருட்ச வழிபாடு. கல்லால மரத்தில் ஆண், பெண், மலடு என மூன்று இருக்கிறது. இவற்றில் பெண்வகை இலையே ஐஸ்வர்யத்தைக் கொடுக்கும். பெண்வகை கல்லால மரத்திற்கு விருட்சப் பூஜையைச் செய்து, அதன் இலையை எடுத்து வந்து பால், சந்தனம், மஞ்சள், பன்னீர் விட்டுத் துடைத்து, அதில் பூஜைசெய்து பலன் வேண்டுவோர் பெயர் எழுதி, சௌபாக்கிய லட்சுமி தியானம் கொல்லி சந்தனம், குங்குமம், மலரிட்டு வணங்கவேண்டும்.

"ஓம் ஹேம வர்ணாம் விசாலாட்சீம்

லக்ஷ்மீம் பத்மாசனஸ்திதாம்

ஹஸ்தத்வயே க்ருஹீதாப் ஜாம்

சோபிதாம் ஹேம வஸ்த்ரகாம்!

ஹஸ்தீ சுண்டாக்ர கும்பாப்யாம்

சிச்யமான சிரோருகாம்

ப்ரசாரிதபத த்வந்த்வாம்

பத்மபத்ர நிபேக்ஷணாம்

பார்ச்வத்வயே ச

கன்யாப்யாம் சாமராப்யாம் விசேஷத

வீஜ்யமானாம் மகாலக்ஷ்மீம்

விசாலாம் விஷ்ணு வல்லபாம்'

மகாலட்சுமி தேவி கல்லால இலையில் நித்ய வாசமாக இருந்து அருள்தர, மூர்த்தி ரகஸ்ய துதியாக சக்திவாய்ந்த மூலத் தியானமாக இதைப் பயன்படுத்த வேண்டும். அட்சர பேதமின்றி சொல்வதால் பலன் விரைவில் கிட்டும் என்கிறது பூஜாரகஸ்யம்.

விருட்சங்களின் இலைகளை வழிபட்டு ஐஸ்வர்யங்களைப் பெறுவோம்.

செல்: 95511 84326