பெரும்பா லானவர்களுக்கு எடுத்த காரியங்க ளில் தடை உண்டாகிறது. சிலருக்கு வேலையின் துவக்கத்தி லேயே பிரச்சினை உண்டாகி முடங்கி விடும். சிலருக்கோ பாதி வேலை முடிந்த பின் தடையுண்டாகும். இன்னும் சிலருக்கு பால் திரண்டு வரும்போது பானை உடை வதுபோல், கடைசி நேரத்தில் காரியம் கெட்டுவிடும். ஒரு தொழிலைச் செய்யும் காலத்தில் ஜாதகரின் நான்காம் அதிபதி தலையிட்டால் ஆரம்பத்திலேயே உடைந்து போகும். எட்டாம் அதிபதி தொடர்பு கொண்டால் பாதியிலேயே பாழாகும். பன்னிரண்டாமதிபதி சம்பந்தப்பட்டால் முடியும் நேரத்தில் முறிந்துபோகும். இதுபோல், காரியம் கெட்டுத் தோல்வியில் துவண்டுபோனவர்களுக்கு ஒரு சுலபமான பரிகாரம் உள்ளது. அதுவே நந்தி வழிபாடு.
நந்தி வழிபாடு நற்கதியளிக்கும் என்பதே உண்மை. சிவபெருமானின் சகல அதிகாரங்களையும் பெற்றுள்ளவர் நந்திபகவான். நந்திதேவருக்கு சிவ பெருமானைப்போலவே நெற்றிக்கண்ணும், நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், இரு புஜங்களில் மான், மழுவுமுண்டு. மானும், மழுவும் வேதத்தையும், வீரத்தையும் குறிக்கின்றன. நந்தியின் நான்கு கால்களும் சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் ஆகிய நான்கு வகையான குணங்களை வெளிப்படுத்துகின்றன.
நந்தியின் வேலை தடுப்பதாகும்.
அதாவது இவர் அனுமதிபெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்திதேவரின் அனுமதி கிடைத்தால்தான் ஈசனின் அருளைப் பெறமுடியும். இவரே கயிலாயத்தின் வாயிற்காவலனாக விளங்குகிறார். தானும் நந்தியும் வேறல்ல; ஒருவரே என்று சிவபெருமானே நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதேயாகும். நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழக்கூடாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பி விட்டால்கூட சிவபெரு மானை வணங்கியதன் முழுப் பலனும் கிட்டும். சிவபெருமானின் நெற்றிக் கண் பார்வைக்கு எதிரில் நிற்க நந்தி தேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. அதனாலேயே, சிவபெருமானுக்கு எதிரில் யாரும் நிற்கக்கூடாது என்றே, நந்திதேவர் சிவனுக்கு எதிரில் காட்சியளிக்கிறார்.
கருவறைக்கு அருகே இருக்கும் நந்தியின் குறுக்கே போவதும் வீழ்ந்து வணங்குவதும் கூடாது.
நந்திக்கு இவ்வுலகத்தின் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் உண்டு. நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். பிரதோஷ காலங்களில் நந்தியைத் தவறாமல் வழிபடுபவர்களுக்கு தடைகள் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது உறுதி.
பிரதோஷ வழிபாடு
பிரபஞ்சத்தில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் பிரதோஷ காலத்தில் நந்தி தேவரை வந்தடைகின்றன. அதனால் நந்தியின் வாலைத்தொட்டு வணங்கிய பிறகே சிவதரிசனம் காணவேண்டும். பிரதோஷ காலங்களில், நந்தியின் காதுகளின் நினைத்த காரியத்தைச் சொன்னால் நடக்கும். பிரதோஷ காலங்களில் நந்திக்குதான் முதல் மரியாதை. பிரதோஷ பூஜையில் நந்திக்குதான் முதல் அபிஷேகம் நடைபெறுகி றது. பிரதோஷ காலத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவாலயத்துக்கு வந்து விடுவதால், நந்தியை வழி பட்டால் சகல தெய்வங் களையும் வழிபாடுசெய்த பலன் கிடைக்கும்.
பிரதோஷ விரதம்
வளர்பிறை, தேய்பிறை என இரு பிரதோஷ தினங்களிலும் விரதம் மேற்கொள்ளலாம். அப்படி விரத மிருக்க நினைப்போர் காலையில் எழுந்து குளித்துவிட்டு, அந்த நாள் முழுக்க "ஓம் நமசிவாய' என்னும் மந்திரத்தை ஜபிக்கலாம். சிவபுராணம் படிக்கலாம். மாலைவேலையில் சிவன் கோவிலிற்கு சென்று நந்திதேவருக்கு அறுகம்புல் மாலை சாற்றி நெய் தீபமேற்றி, சிவப்பு அரிசி, செங் கரும்பை நிவேதனம் செய்து வழிபட வேண்டும். சிவபெருமானுக்கு வில்வத் தால் அர்ச்சனை செய்வது சிறந்தது.
நந்திதேவரிடமும் சிவபெருமானிட மும் நமது குறைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கும்படி மனதார வேண்டிக் கொண்டு, சோமப் பிரதட்சணம் செய்து விரதத்தினை முடிக்கலாம். பிரதோஷ விரதத்தினை முடிக்கும்போது, அன்னதானம் வழங்குவது நல்லது.
பிரதோஷ பூஜைப்பலன்
ஞாயிறு பிரதோஷம்- சுப மங்களத்தை தரும்.
திங்கள் பிரதோஷம்- நல்லெண் ணம் தரும்.
செவ்வாய் பிரதோஷம்- கடன், நோய் அகலும்.
புதன் பிரதோஷம்- குழந்தை பாக்யம் தரும்.
வியாழன் பிரதோஷம்- திருமணத் தடை விலகும்.
வெள்ளி பிரதோஷம்- எதிர்ப்பு விலகும்.
சனிப் பிரதோஷம்- கிரகப் பீடை விலகும்.
பிரதோஷ காலம் மட்டுமின்றி, எக்காலத்தும் நாம் சிவபெருமானிடம் வைக்கும் வேண்டுதல்களை நந்தி தேவரிடம் வைத்தால்போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார்.
அதிகார நந்தி
சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கயிலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவ ராதலால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது. சிவாலயங்களில் கொடிமரத்திற்கு அருகே இந்த அதிகார நந்தி அமைக்கப்பெற்றிருக்கும். இந்த நந்திகேஸ்வரரை வணங்கினால் அரசு ஆதரவு, பதவி உயர்வு பெறலாம்.
பரிகார நந்தி
எல்லா சிவாலயங்களிலும் உள்ள நந்தி கேஸ்வரரை வேண்டினாலும் பலன் கிடைக்குமென்றாலும், சில விசேஷ பரிகார நந்திகளைத் தொழுதால் சிறப்பான பலன்களையடையலாம்.
= திருச்சி மாநகரில் நந்திக்கென்று ஒரு தனிக்கோவில் உள்ளது. இங்கு அருள் புரியும் அதிகார நந்தி, கிழக்குதிசை நோக்கிக் காட்சிதருகிறார்.
=நெய் நந்தீஸ்வரர் கோவில்- வேந்தன் பட்டி- புதுக்கோட்டை.
= திருப்புங்கூர் (நாகை) சிவலோகநாதர் சுவாமி திருக்கோவிலில் கருவறைக்கு நேராக இல்லாமல் சற்று ஒதுங்கியிருக்கும் பரிகார நந்தியை தரிசித்து நலம் பெறலாம்.
= கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் சிவபெருமானுக்கு முன்பிருக்கும் இரண்டு நந்திகளும் பரிகார நந்திகளே.
=சென்னை- திருமுல்லைவாயிலில், சிவனுக்கு எதிர்ப்புறமாய்த் திரும்பி கிழக்கு நோக்கியுள்ளது.
=திருநாங்கூர்- இங்குள்ள மதங்கீஸ்வரர் கோவிலில் நந்திதேவர் முன்னும் பின்னும் திரும்பிய நிலையில் காட்சி தருகிறார்.
= பெரிய களத்தை- கோவை- ஆதீஸ்வரர் கோவிலிலுள்ள திரும்பிய நந்தி சிறப்பு வாய்ந்தது.
=திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஜோதி நந்தியுள்ளது. இந்த நந்திமுன் தீப மேற்றி வலம்வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
= திருவாரூர் தியாகராஜர் கோவில் சந்நிதியில் ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்த படி எழுந்துநிற்கும் நிலையில் நந்தியுள்ளது. இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்துபோகும்.
= வியாக்ரபாத முனிவரின் மகளான சுயம்
பிரகாசை என்ற பெண்ணை சிவபெருமான்
பங்குனி மாத புனர்பூச நட்சத்திரத்தில் நந்திதேவருக்கு திருமழப்பாடியில் திருமணம் செய்துவைத்தார். அங்கும் வழிபடலாம்.
செல்: 98404 07209