Advertisment

மண வாழ்வை உடனே நிறைவேற்றும் மங்கல பூஜா ரகசியம்! -கே. குமார சிவாச்சாரியார்

/idhalgal/balajothidam/secret-mangala-pooja-will-fulfill-marriage-life-immediately-k-kumara

ளம் வயதில் சிறு பெண்களும் ஆண் பிள்ளைகளும் கிராமப்புறங்களில் தென்னந்தோப்பு, மாந்தோப்புகளில் துள்ளித் திரிந்து விளையாடுவார்கள். பெண் பூப்படைந்ததும் அவள் சில கட்டுப்பாடுகளுக்கு ஆளாகி கன்னி என்னும் பெயருடன் பாதுகாக்கப்படுகிறாள்.

Advertisment

சில ஆண்டுகள் கழித்து அவளுக்கு நல்லதொரு வாழ்க்கைத் துணையை அமைத்துத் தர மிகவும் சிரமப்படுகிறார்கள் பெற்றோர்கள். திருமணம் கூடிவர தடையேற்பட்டால் பல கோவில்களுக்கும் சென்று தெய்வப் பரிகாரங்களைச் செய்கிறார்கள்.

தேங்காய் என்னும் தெய்வீகப் பொருள்

"பிள்ளையைப் பெத்தா கண்ணீரு; தென்னையைப் பெத்தா இளநீரு' என்னும் சொல்வழக்கை சிலர் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆண் பிள்ளையைப் பெற்றெடுத்துவிட்டால் அவன் நம்மை எதிர்காலத்தில் நிழலாக இருந்து காப்பாற்றுவான் என்று ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்களாம் பெற்றோர்கள்.

தென்னையை வளர்த்தால் அது தன் உடல் பாகங்களிலிருந்து கீற்று, துடைப்பம், சாரம் அமைக்க பலகை, சிறுபாலம் இட நீள்பலகை, இளநீர், கயிறு தயாரிக்க நார், சுவையான சமையலுக்குப் தேங்காய் என பலவற்றையும் தரும்.

Advertisment

தென்னை மரம் கொடுக்கும் தேங்காயா னது உலக வடிவமாகப் பார்க்கப்படுகிறது. ஒரு தாம்பூலத் தட்டில் தேங்காய், வாழைப் பழம், வெற்றிலைப் பாக்கு, மலர்ச்சரம் வைத்துக் கொடுப்பது மனநிறைவைத் தருகிறது.

வடநூலார் தெய்வீகத் தேங்காயை "பூரணபலம்' என்று சொல்வதற்குக் காரணம், அதை தெய்வமாக வழிபட்டால் பலன் பூரணமாகக் கிடைக்கும் என்பதால்தான். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்போது விநாயகரை மஞ்சளில் பிடித்து, இரண்டு மஞ்சள் பூசிய தேங்காயை முன்வைத்து தொடங்குவது விதி. கலசம் ஒன்றை நிலைநிறுத்தும்போது, தேங்காயைக் குடுமியுடன் கலசத்தில் நிற்கவைத்து, சந்தனம், குங்குமமிட்டு வைத்தால் அதற்குப் பூரணகும்பம் என பெயர் வருகிறது.

ஆகமங்கள் கூறும் தேங்காய் மகிமை

கும்பாபிஷேக காலத்தில் யாகசாலை வேதிகைகளில் பல கலசங்கள் வைக்கும்பொழுது, தேங்காயில் பிரம்மதேவன் மற்றும் அஷ்ட வித்யா ஈஸ்வரர்கள் எழுந்தருளியிருப்பதாக ஆலய பிம்ப பிரதிஷ்டா கிரமம் கூறுகிறது. திருமண மேடையில் மணமகன்- மணமகள் கைகளில், முகூர்த்தம் தொடங்கும் முன்பாக மஞ்

ளம் வயதில் சிறு பெண்களும் ஆண் பிள்ளைகளும் கிராமப்புறங்களில் தென்னந்தோப்பு, மாந்தோப்புகளில் துள்ளித் திரிந்து விளையாடுவார்கள். பெண் பூப்படைந்ததும் அவள் சில கட்டுப்பாடுகளுக்கு ஆளாகி கன்னி என்னும் பெயருடன் பாதுகாக்கப்படுகிறாள்.

Advertisment

சில ஆண்டுகள் கழித்து அவளுக்கு நல்லதொரு வாழ்க்கைத் துணையை அமைத்துத் தர மிகவும் சிரமப்படுகிறார்கள் பெற்றோர்கள். திருமணம் கூடிவர தடையேற்பட்டால் பல கோவில்களுக்கும் சென்று தெய்வப் பரிகாரங்களைச் செய்கிறார்கள்.

தேங்காய் என்னும் தெய்வீகப் பொருள்

"பிள்ளையைப் பெத்தா கண்ணீரு; தென்னையைப் பெத்தா இளநீரு' என்னும் சொல்வழக்கை சிலர் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆண் பிள்ளையைப் பெற்றெடுத்துவிட்டால் அவன் நம்மை எதிர்காலத்தில் நிழலாக இருந்து காப்பாற்றுவான் என்று ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்களாம் பெற்றோர்கள்.

தென்னையை வளர்த்தால் அது தன் உடல் பாகங்களிலிருந்து கீற்று, துடைப்பம், சாரம் அமைக்க பலகை, சிறுபாலம் இட நீள்பலகை, இளநீர், கயிறு தயாரிக்க நார், சுவையான சமையலுக்குப் தேங்காய் என பலவற்றையும் தரும்.

Advertisment

தென்னை மரம் கொடுக்கும் தேங்காயா னது உலக வடிவமாகப் பார்க்கப்படுகிறது. ஒரு தாம்பூலத் தட்டில் தேங்காய், வாழைப் பழம், வெற்றிலைப் பாக்கு, மலர்ச்சரம் வைத்துக் கொடுப்பது மனநிறைவைத் தருகிறது.

வடநூலார் தெய்வீகத் தேங்காயை "பூரணபலம்' என்று சொல்வதற்குக் காரணம், அதை தெய்வமாக வழிபட்டால் பலன் பூரணமாகக் கிடைக்கும் என்பதால்தான். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்போது விநாயகரை மஞ்சளில் பிடித்து, இரண்டு மஞ்சள் பூசிய தேங்காயை முன்வைத்து தொடங்குவது விதி. கலசம் ஒன்றை நிலைநிறுத்தும்போது, தேங்காயைக் குடுமியுடன் கலசத்தில் நிற்கவைத்து, சந்தனம், குங்குமமிட்டு வைத்தால் அதற்குப் பூரணகும்பம் என பெயர் வருகிறது.

ஆகமங்கள் கூறும் தேங்காய் மகிமை

கும்பாபிஷேக காலத்தில் யாகசாலை வேதிகைகளில் பல கலசங்கள் வைக்கும்பொழுது, தேங்காயில் பிரம்மதேவன் மற்றும் அஷ்ட வித்யா ஈஸ்வரர்கள் எழுந்தருளியிருப்பதாக ஆலய பிம்ப பிரதிஷ்டா கிரமம் கூறுகிறது. திருமண மேடையில் மணமகன்- மணமகள் கைகளில், முகூர்த்தம் தொடங்கும் முன்பாக மஞ்சள் தேங்காயைக் கையில் வைத்தே காப்புக் கட்டுதல் செய்வர். யாகபூஜை நடத்தும் வேத விற்பன்னர்களும் சிவாச்சாரியார்களும் ரக்ஷா பந்தனம் என்னும் காப்பு அணியும்போது, தேங்காயை வைத்துக்கொண்டுதான் மஞ்சள் கயிறு கட்டிக்கொள்வர்.

dd

பிள்ளையார் கோவில்களில் விடலை விடுதல், சூரைத்தேங்காய் உடைத்தல், சிதறுகாய் போடுதல் என்று தேங்காயைத் தரையில் உடைக் கும்போது, தங்களது பாவங்கள் அனைத்தும் சிதறி விலகுவதாக பக்தர்கள் எண்ணுதல் வேண்டும்.

திருமணக் கால கிரியைகள் தொடக்கத்தில், ஒருசில சமூகத்தவர் காசியாத்திரை நடத்தும்போது மஞ்சள் துணியில் தேங்காயைக் கட்டி மணமகன் வலக்கையில் கட்டி, விசிறி, புத்தகம், குடையோடு அனுப்பு வதும், திரும்பும்போது சோபனத் தேங்காய் என்னும் இரண்டு மஞ்சள் தேங்காய்களை வருங்கால மாமனார் கொடுத்து வரவேற்பதும் வழக்கத்தில் இருப்பதைப் பார்க்கலாம். தொடர்ந்து வரும் சடங்குகளில் தோல் மட்டும் உரிக்கப்பட்ட மட்டைத் தேங்காயைத் தட்டில் வைத்து, மஞ்சள், குங்குமப் பொட்டிட்டு, தாலியை அதில் சுற்றிவைத்து முகூர்த்த மந்திரம் கூறுவது வேத பண்டிதரின் பணியாக உள்ளது.

மாங்கல்ய தாரணம் என்னும் தாலிகட்டுதல் ஆனபிறகு தோஷங்கள் விலக அரிசி இடும்போது, தேங்காயுடன் அரிசி சேர்த்துதான் விடுவார்கள்.

தாலியைத் தேங்காயில் சுற்றுவது ஏன்?

"உலக வடிவான தேங்காய் இது. உங்கள் வாழ்க்கையைத் தொடங்கி வைத்து எல்லா தெய்வங்களையும் அழைத்து ஆசீர்வதிக்கச் செய்கிறது. நல்லதையும் தீயதையும் எதிர் கொள்ளும்போது கவனமாக செயல்பட்டு உங்கள் மங்களகரமான- மகிழ்ச்சியான வாழ்வைத் தொடரவேண்டும்' என்னும் வாழ்க்கைத் தத்துவத்தை சொல்வதற்காகவே.

தேங்காயின் ஆன்மிக ரகசியம் சற்று வித்தியாசமாக உள்ளது. நம்மைச் சூழ்ந்துள்ள அகங்காரம் என்னும் ஆணவ ஓட்டினை சிதறச் செய்தால், வெண்மையான பரம்பொருள் என்னும் முக்தி நிலையைக் காணலாம் என உணர்த்துகிறது. ஒருமுறை விநாயகரிடம் சிவபெருமான், "இந்த உலகத்தின் உன்னதமான பொருள் ஒன்றை காணிக்கையாகத் தர விரும்புகிறேன்; கேள்' என்றதற்கு, விநாயகரோ முக்கண்ணுடைய சிவனாரின் தலையையே காணிக்கையாகக் கேட்டுவிட்டார். சிவ பெருமான் தனது அம்சமாகிய தேங்காயைக் கொடுத்து விட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன.

கோவில்களில் தேங்காய் உடைப்பதன் காரணம்

தேங்காயில் நார்கள், ஓட்டில் மூன்று கண்கள், அதனுள் தூய தேங்காய்ப் பருப்பு, சுவையான நீர் ஆகியவை உள்ளன. நார்கள் மனிதர்கள் செய்யும் குற்றங்களை சுட்டிக்காட்டுகின்றன. ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களால் குற்றங் கள் செய்கின்றனர். இவற்றை உணர்த்துவது தேங்காய் ஓட்டில் காணப்படும் மூன்று கண்கள். மும்மலங்களை நீக்கினால் நம் உள்ளம் தேங்காய்ப் பருப்புபோல வெள்ளையாக மாறிவிடும். அந்த வெள்ளை உள்ளம் சுவையான நீர் போன்ற இறைவனின் பேரின்பத்தை அனு பவிக்கும் என்னும் உண்மையைச் சொல்லவே.

யாக பூஜைகள் நடக்கும் சமயத்தில் செந்நிறப் பட்டுக்குள் கொப்பரைத் தேங்காயைக் கட்டி அக்னியில் இட்டபிறகு யக்ஞம் பூர்த்தியடைகிறது. இதற்குப் பூரணாகுதி என்று பெயர்.

மஞ்சள் தேங்காய் தரும் மனம்போல் மாங்கல்யம்

ஒரு பெண்ணுக்குத் திருமணமென்பது வாழ்வில் பொன்னான ஒரு தருணம். ஜனன ஜாதகப்படி அந்த சுப வைபவம் நடக்காமல், நவகிரகங்களின் சரியான பார்வையில்லாமல் தடைப்பட்டால், மஞ்சள் படுத்திய தேங்காய் அதை நடத்தி வியக்கவைக்கிறது. ஆனால் இதில் நம்பிக்கை என்பது மிகமிக அவசியம். தங்கள் வீட்டில் ஆண்- பெண்கள் 23 வயதுமுதல் 30 வயதுவரை திருமணத்திற்காகக் காத்திருந்து, திருமணத் தடைநீக்கும் பல கோவில்களுக்குச் சென்றுவந்தும் நடைபெறாவிட்டால், இந்த மங்கல நிகழ்ச்சி அதை நடத்திவிடும்.

மஞ்சள் தடவிய பெரிய தேங்காய் ஒன்றில் விரலி மஞ்சள் கட்டிய தாலிக்கயிற்றை குடுமி பாகத்தில் சுற்றி, சந்தனம், குங்குமம் மூன்று இடங்களில் வைத்து, சிவப்பு அல்லது மஞ்சள் நிற மலர்ச்சரம் சாற்றி ஒரு பித்தளைத் தட்டில் சாய்வாக வைத்து, பூஜையறையில் தீபமேற்றி வைக்கவேண்டும். முதலில் மஞ்சள் பிள்ளையார் பூஜை. "ஓம் கம் கணபதயே நம' என்று 16 முறை கூறியபின், "ஓம் ஹூம் கம் ஹரித்ரா கணபதயே மம மாங்கல்ய பாக்கியம் குருதே நம' என்று மூன்றுமுறை கூறியபின் இஷ்டதெய்வ தியானம், குலதெய்வ தியானம், மந்திரங்களை ஜெபித்து, ஒரு மண்டல காலம் என்னும் 48 நாட்கள் வாசனை மலர் சாற்றி வழிபட்டு வரவேண்டும். வைணவ முறையில் ஆண்டாள் நாச்சியார்போல, சைவத்தில் இறைவனிடம் திருமணப்பேறு பெற்று துர்க்கையாக மாறி, பிறகு கார்த்தியாயினியாக வந்தருளும் அன்னையை தேங்காயில் நினைக்கவேண்டும்.

"ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் காத்யாயனி மகாமாயே

மகா யோகின்யதீஸ்வரி நந்தகோப சுதம்

தேவம் அதிசீக்ரம் பதிம் மே குருதே நம'

என்னும் திருமணம் தந்தருளும் சக்திவாய்ந்த மூல மந்திரத்தை 16 முறை ஜெபித்தால் விரைவில் பலன் கிடைத்துவிடும். ஆண்- பெண்களின் ஜாதகப்படி குரு, சுக்கிர ஹோரைகளில் இந்த பூஜையைத் தொடங்குவதும், அருகிலுள்ள அம்மன் கோவில்களில் பூஜைசெய்து எடுத்துவருவதும் சீக்கிரம் பலன் தந்துவிடும் ரகசியத் தகவல்.

ஆலய குடமுழுக்கு விழா, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்குப் பெரியோர்கள் வரும்போது பூரணகும்ப வரவேற்பில் தேங்காயே முன்னால் நிற்கிறது.

அற்புதமான இந்த தெய்வீகப் பொருளை மஞ்சள் தேங்காயாகப் பயன்படுத்தியபிறகு, திருமணம் உறுதியான பின்னும் வைத்திருந்து, சுபநாளில் ஒரு கோவில் தீர்த்தக் குளத்தில் விட்டுவிட வேண்டும்.

கோள்நிலையால் திருமணத் தடையா?

ஒருவரின் ஜனன ஜாதகத்திலுள்ள சுக்கிரன், 7-ஆம் வீட்டு அதிபதி, சர்வாஷ்ட வர்க்கம் போன்றவற்றை வைத்து ஆண்- பெண் திருமணக் காலத்தை நிர்ணயம் செய்துவிடலாம்.

லக்னத்திற்கு பதிலாக சந்திரனை- ஒரு பெண் ஜாதகத்தை வைத்து ஸ்புடம் போட்டால் திருமணக் காலத்தைக் கண்டுபிடிக்க முடியும். லக்னம், லக்னத்திலிருந்து 7-ஆம் வீட்டு அதிபதி ஸ்புடமும் கூட்டினால் திருமணக் காலம் தெரிந்துவிடும். குரு திருமண சமயத்தில் சாரமாகும்போது அல்லது அதன் திரிகோண ராசிகளில் குரு வரும்போது திருமணம் நடந்துவிடும்.

இரண்டாம் வீட்டு அதிபதி அல்லது அவர் நவாம்சத்தில் நின்ற ராசியின் அதிபதி தசையில் திருமணக் காலத்தைத் தரக்கூடியவர்கள்.

சுக்கிரன், 7-ஆவது வீட்டு அதிபதி மற்றும் சந்திரன் ஆகியோரும் திருமணத்தை நடத்திவைக்கக் கூடியவர்களே. இவர்களில் யார் பலமுடையவர்களோ அவர்கள் தசையில் திருமணம் உறுதியாக நடைபெறும்.

புகழ்பெற்ற ஜோதிட வல்லுனர் குழு ஒன்று மும்பையில் கூடி 160-க்கும் மேற்பட்ட ஜாதகங்களை ஆராய்ந்து, ராசி, நவாம்சம், திரிசாம்சம் போன்ற சக்கரங்களையும் ஆய்வுசெய்து தெளிவான முடிவைக் கூறினர்.

முதலில் திருமணமாகும் காலம் என இரண்டு ஆண்டுகளைப் பிரிக்கின்றனர்.

அதற்கு சனி, குரு ஆகியோரின் 1/7 அச்சை வைத்தும், பின்னர் குருவின் கோட்சாரத்தை வைத்தும் இரண்டு ஆண்டு காலத்தை ஒரு ஆண்டாகக் குறைத்தனர். குருவின் கோட்சாரத்தை வைத்துத் திருமணமாகும் ஆண்டைக் கணக்கிட கீழ்வரும் நிலைகள் உதவுகின்றன.

சுக்கிரன் மற்றும் ஐந்தாம் வீடு; சுக்கிரன்+ 5-ஆமிடத்தின் அதிபதி; 5-ஆம் வீடு+ 5-ன் அதிபதி; 5-ஆம் வீடு+ 5-ன் அதிபதி+ 9-ஆம் வீடு+ 9-ன் அதிபதி.

இவற்றின் சாரம் அறிவோமானால் ஒரு ஆண்- பெண் வாழ்க்கையில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் 5-ஆம் வீடு அல்லது 5-ஆமதிபதி, 9, 9-ன் அதிபதிகளின் தொடர்பு நிச்சயமாக இருக்கும் என்பதுதான்.

ஒரு ஆண் ஜாதகத்தில் சுக்கிரன்மீது 1, 3, 5, 7, 9, 11-ஆமிடங்களுக்கு கோட்சார குரு வரும்போது திருமணம் நடக்கும். பெண் ஜாதகத்தில் செவ்வாய்மீது மேற்சொன்னபடி கோட்சார குரு வரும்போது திருமணம் நடைபெற்றுவிடும்.

சுக்கிரனும் 7-ஆமதிபதியும் ஒரே ராசியில் நின்று அங்கு கோட்சார குரு சேரும்போதும் திருமணம் உறுதியாக நடக்கும். 7-ஆவது வீட்டில் சுக்கிரன், சந்திரன், சனி இருந்தால் 30 வயதிற்குமுன் திருமணம் நடக்காது. 35 வயதுவரை போகலாம்.

7-ல் சூரியனும், 7-ஆவது அதிபதி கேந்திரத்தில் சுக்கிரனுடனும் இருந்தால் 23 முதல் 25 வயதிலும்; 7-ஆமதிபன் அல்லது சுக்கிரன் ராசி, நவாம்சத்தில் கெட்டிருந்தால் 30 முதல் 33 வயதுக்குள்ளும் திருமணம் நடக்கும்.

ஜெய்மினி ஜோதிட விதிகள், 12-ஆவது ஆரூட பாதம், இரண்டாம் பாதம், லக்னத் திற்கு இரண்டாவது ராசி அல்லது அதன் திரிகோண ராசியை குரு பார்க்கும்போதும், தசாநாதன் நவாம்ச லக்னம் அல்லது அதன் திரிகோண ராசியைப் பார்வை செய்யும்போதும் திருமணம் நடந்துவிடும் என்று கூறுகிறது. திருமண தீபிகையிலும் 600 கிரக அம்சங்கள் இதுபற்றிக் கூறப் பட்டுள்ளன.

தமிழகத்திலும் மற்ற மாநிலங்களிலும் தலா 46,000 ஆண்களும், 42,000 பெண்களும் முப்பத்தைந்து வயதாகியும் திருமணத்திற்கு வரன் தேடிக்கொண்டிருக்கும் கவலை தரும் தகவலோடு இந்தக் கட்டுரை புனையப்பட்டிருக்கிறது. "சுப விவாக சீக்கிரஸ்து' என்னும் வாக்கியப்படி, மஞ்சள் தேங்காய் வழிபாட்டை முறையோடு செய்து, நல்ல வரன் அமைந்து வாழ்க்கையைத் தொடங்க நல்லாசிகள்.

செல்: 95511 84326

bala170622
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe