ஜாதகம் பார்க்கவரும் பலரும் கேட்கும் கேள்வி "என் அதிர்ஷ்ட எண் எது?' என்பதுதான்.
சாதாரணமாக அவரவர் பிறந்த தேதி எண்; பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டிவரும் எண், பெயர் எண் ஆகியவற்றின் அடிப் படையில் அதிர்ஷ்ட எண்ணை நிர்ணயம் செய்வதுண்டு.
நியூமராலஜி எனப்படும் எண்சாஸ்திர அடிப்படையில் இது கணிக்கப்படுவது வழக்கம். இது சரியான முறைதான் என்பதில் எந்த ஐயமுமில்லை. இன்னொரு முறை யிலும் கணிக்கப்படுவதுண்டு. இது வொரு தனித்தன்மை வாய்ந்த முறை.
அனுபவத்தில் இணைத்துப் பயன் பெறலாம். ஜாதகமும் இணைந்தது.
லக்னத்திற்கு அதிபன், லக்னத்திற்கு 5-ஆம் வீட்டு அதிபன், 9-ஆம் வீட்டு அதிபன் ஆகிய மூவரையும் பார்த்து, அவர்களில் எவருக்கு பலம் அதிகமோ அவரின் எண்ணே ஜாதகருக்கு சிறப் பான அதிர்ஷ்ட எண்ணாகும் என முடிவுக்கு வரலாம்.
உதாரணமாக, மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அதன் அதிபன் செவ்வாய், சிம்மத்தின் அதிபனான சூரியன், தனுசு ராசி அதிபதியான குரு ஆகிய மூவரின் எண்களும் அதிர்ஷ்ட எண்ணாகும் வாய்ப்புண்டு.
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு மேற்சொன்ன மூவரில் யார் அதிக பலம் பெற்றவரோ- அவரது எண்ணை சிறப்பான அதிர்ஷ்ட எண்ணாகக் கொள்ளவேண்டும்.
ஒரு உதாரணத்தின்மூலம் பார

ஒரு உதாரணத்தின்மூலம் பார்ப்போம்.
மேஷ லக்ன ஜாதகத்தில் செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்றிருந்தால், அவரது எண் விசேட அதிர்ஷ்ட எண் ஆகும். செவ்வாய் ஆட்சி பெற்றிருந்தாலும் அவரது எண் அதிர்ஷ்ட எண்ணாக இயலும்.
லக்னேசனுக்கே முதலுரிமை தரப்பட வேண்டும்.
லக்னேசன் பலம்பெற்றிருந்தால் 5-ஆம் வீட்டோனையோ, 9-ஆம் வீட்டோனையோ ஆராய வேண்டிய கட்டாய மில்லை.
லக்னேசன் பலம் குறைந்திருந்தால் அடுத்து பார்க்கப்பட வேண்டியவர் ஐந்தாம் வீட்டோன் ஆவார். மேஷத்திற்கு ஐந்தாம் வீடு சிம்மம். இந்த சிம்மத்திற்கு அதிபன் சூரியன். ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் இவரது எண் விசேட அதிர்ஷ்ட எண்ணாவதற்கு உரிமை பெற்றதாகும்.
லக்னேசன், சூரியன் ஆகிய இருவரும் பலவீனம் பெற்று, 9-ஆம் வீட்டோனாகிய குரு அதிக பலம்பெற்றிருந்தால் இவரே அதிர்ஷ்ட எண்ணின் நாயகனாகிவிடுவார். குரு ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தால் அவருக்கும் இந்த தகுதி உண்டாகிவிடும்.
கிரகமானது ஆட்சி, உச்சம் பெறாவிட் டாலும் கேந்திர கோணங்களிலிலிருந்து, சுபர் சேர்க்கை பெற்றாலும் பலம்பெறும். அவ்வாறாக வும் எடைபோடலாம்; ஒரு முடிவுக்கு வரலாம்.
இன்னும் ஒரு விளக்கத்தையும் அறிந்து கொள்வது அவசியமாகும். லக்னேசன், 5-ஆம் வீட்டோன், 9-ஆம் வீட்டோன் ஆகிய மூவரும் ஒரே அளவில் பலம்பெற்றுக் காணப்பட்டால் முக்கியத்துவம் தரவேண்டியது லக்னேசனுக்கே. லக்னேசன் நீங்கலாக மற்ற இருவரும் (5, 9-க்குடையவர்கள்) பலம்பெற்றிருந்தால் 5-ஆம் வீட்டோனுக்கே முக்கியத்துவம் தரப்பட வேண்டும். லக்னேசன், 5-ஆம் வீட்டோன், 9-ஆம் வீட்டோன் என்கிற வரிசைப்படி முக்கியத்துவம் அமையும்.
கிரகங்களின் எண்கள்
சூரியன்- 1, 4; சந்திரன்- 2, 7; குரு- 3; புதன்- 5;
சுக்கிரன்- 6; சனி- 8; செவ்வாய்- 9. இந்த கோணத்தில் நடைமுறைப்படுத்திப் பரிசீலியுங்கள்.
எண் கணிதமும் விதி எண்ணும்
எண் கணிதம் மட்டுமல்ல; எல்லா சாஸ் திரங்களுக்கும் பல வழிமுறைகளை வகுத்துள் ளனர். அவற்றில் எளிமையானவை- சுலபமாக வழிகாட்டும். உதாரணமாக, சென்னையை அடைய பெங்களூரு வழித்தடத்தில் வரலாம்; தாம்பரம் வழித்தடத்தில் வரலாம்; மீனம்பாக் கத்தில் வந்து ஆகாயவழியாக இறங்கலாம்; கடல்வழியாக துறைமுகத்தில் இறங்கி வரலாம். ஆனால் எல்லாமே சென்னையை நோக்கிய பயணம்தான். அதுபோலவே சாஸ்திர விதி பல கோணங்களில் நம்மை நல்வழிப்படுத்தும்.
ஆங்கிலத்தில் "விதி எண்' (உங்ள்ற்ண்ய்ண் சன்ம்க்ஷங்ழ்) என்று ஒரு முறை உள்ளது. இதன்மூலமாக சுலப மாக பிறந்த தேதி, மாத எண் (ஜனவரி முதல் டிசம்பர் வரை) மற்றும் நான்கு இலக்க பிறந்த வருட எண் தெரிந்திருக்க வேண்டும்.
உதாரணமாக, நீங்கள் 15-02-1968-ல் பிறந் திருந்தால், விதி எண்- பிறந்ததேதி எண் 15; மாத எண் 2; வருட எண் 1968. இவற்றைக் கூட்டி ஒற்றை இலக்க எண்ணாக்க வேண்டும். அதாவது 1+5+2+1+9+6+8=32; 3+2=5. ஆக, உங்கள் விதி எண் ஐந்து.
காந்தி பிறந்தது அக்டோபர் 2, 1869.
= 2-10-1869
= 2, 1- 24
= 2+1+6
= 9.
இவ்வாறு விதி எண்ணைப் பார்க்கவும்.
இந்த விதி எண் பல சந்தர்பங்களில் பின் தொடரும்.
உங்களுடைய விதி எண் ஒன்று என்றா லும், அதன் சார்பு எண் 1, 10, 19, 28 என்றா லும் பொதுப்பலன் ஒன்றாகவே இருக்கும். இதுபோலவே மற்ற எண்களுக்கும்.
எனவே, ஒன்றுமுதல் ஒன்பதுவரையிலான விதி எண்ணிற்குரிய யோகமான அதிர்ஷ்ட எண்ணைத் தெரிந்து செயல்பட்டால் சுலப மான வெற்றியை எதிர்கொள்ளலாம். (அட்ட வணை காண்க)
உளவியல் அதிர்வெண் இதன் மகத்துவம் என்னவென்றால், இன்று நேர்காணல் (இன்டர்வியூ) இருக்கிறது; போக லாமா வேண்டாமா- இன்று உயரதிகாரியை சந்திக்கலாமா வேண்டாமா- கொட்டித் தீர்க்கும் மழையில் வாகனத்தை வெளியில் கொண்டு போகலாமா வேண்டாமா இப்படிப்பட்ட சூழ் நிலையில் உளவியல் அதிர்வெண்ணை உபயோ கித்தால் கெடுதல் நடைபெறாது. உதாரணமாக, உங்கள் விதி எண் ஒன்று எனில், அதன் உளவியல் அதிர்வெண் 1, 9 ஆகும். 1, 10, 19, 28 அல்லது 9, 19, 27 தேதிகள் பலன்தரும். இவ்வாறே அவரவர் விதி எண்ணுக்கு அட்டவணையில் கொடுக்கப் பட்டுள்ள எண்களைப் பயன்படுத்தவும்.
கவர்ச்சி ராசி எண்
இந்த எண் அமைந்தவர்களோடு கூட்டு வியாபாரம் செய்யலாம். ஒன்றாக நெடுந்தூரம் பயணம் செய்யலாம். வாழ்வின் லாபங்களுக்கு ஒன்றுசேர்க்கலாம். சேர்ந்து அரசியல் நடத்தலாம்.
பயனற்ற எண்
எல்லா முயற்சிகளுக்கும் ஒத்துவராத எண்கள். இதனை அதிர்ஷ்ட எண்ணாகக் கருதக்கூடாது. நடைமுறைப்படுத்தவும் கூடாது. தோல்வி ஏற்படும்.
மந்தமான நிலை
இந்த எண்களில் எதை ஆரம்பித்தாலும் கால தாமதமான பலனைத் தான் தரும். உதாரணமாக, வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்தல்; மணமகன்- மணமகளை சந்தித்து திருமணம் சார்ந்த இறுதி முடிவு தெரிந்துகொள்ளுதல்; ஆரோக்கியம் சார்ந்த உணர்வுகளை மருத்துவரிடம் கேட்கச் செல்லல்; விருப்பத்தின் பூர்த்தி குறித்து பிறரிடம் ஆலோசனை பெறுதல்; வெளிமாநிலத்தில் வேலைக்குச் செல்ல திட்டமிடல்; தங்களைத் தாங்களே உறுதிநிலைக்கு கொண்டுவர முயலு தல்; வாழ்வில் ஏற்படும் புதிரை சமாளித்து தெளிவுபெற முனைதல் போன்றவற்றுக்கு மேற்கூறிய எண் சரியான பாதை அமைக்காது. மந்த நிலையில் செயல்படும்.
எனவே, அதிர்ஷ்ட எண்ணை நடைமுறைப் படுத்துங்கள். உரிய பலன் உங்களை நாடிவரும்.
செல்: 93801 73464