"மனிதனாக பூமியில் பிறந்துவிட்டேன். வறுமை ஒரு பக்கம்... கடன் தொல்லை இன்னொரு பக்கம். எப்படி இனி வாழ்நாளை ஓட்டப்போகிறேன்!' என்று புலம்புவோர் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் அன்றாடம் பயன்படுத்துகிற ஒரு மிகச்சிறிய பொருளால் விடிவு காலம் தந்தால்- விடிவெள்ளி பிறந்தால் எப்படியிருக்கும்?
வேறொன்றுமில்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் எட்டுவகை மங்கலப் பொருட்கள் வரிசையில் இடம்பெறும் கண்ணாடிதான் அந்த சக்தி வாய்ந்த பொருள்.
சிவாகம விதியில் இறைவன் சந்நிதியில் சாயரட்சை பூஜா காலத்தில் பதினாறு உபசா ரங்கள் காட்டப்படுகிறபோது, தர்ப்பணம் என்ற பெயரில் கண்ணாடி உயர்த்திப் பிடிக்கப் பட்டு-
"சந்த்ரமா மனஸோ ஜாத:
சக்ஷோ சூர்யோ அஜாயதா
முகாதிந்த்ரஸ்ய சாக்னிஸ்ஸ
ப்ராணாத் வாயு ரஜாயத:
என்ற புருஷசூக்த மந்திரங்கள் சொல்லப் படுகின்றன.
என்ன இருக்கிறது கண்ணாடியில்?
இருபத்தெட்டு வகை ஆகம விதியில் மட்டும் கண்ணாடி 11-ஆவது உபசாரமாக வருகிறது. இதை பூஜா காலத்தில் இறைவனுக்குக் காட்டி னால் சூரியனைக் காட்டியதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. சிவபெருமானைக் கவர்கின்ற பொருள் பாதரசம். இதை இருபுறமும் தெரிகின்ற கண்ணாடியில் பூசிவிட்டால் மறுபக்கத்தில் நம் முகத்தைக் காட்டுகிறது.
அஷ்ட மங்கலப்பொருளான கண்ணாடியைப் பெண்கள் பூஜைசெய்ய வேண்டும். சுமங் கலிகளுக்கு அழுக்கு நீக்குகிற சோப்பு, தலை அழகுபெற சீப்பு, திலகமிட குங்குமச்சிமிழ், திருமகளின் தாவரமான மஞ்சள், அழகைப் பிரதிபலிக்கும் கண்ணாடி ஆகியவற்றை தானமாகக் கொடுக்க வேண்டும்.
வீட்டில் நடைபெறும் வரலட்சுமி விரதம், மங்கள கௌரி விரதம், கேதார கௌரி விரதம், ஸ்வர்ண கௌரி விரதம், ஆடிப்பூரம் ஆகிய விரத பூஜை நாட்களில் தானம் தரும்போது, அவர்கள் அதைப்பெற்று வீட்டுப் பூஜையில் சௌபாக்கிய திரவியங்களில் ஒன்றாக வைத்து வழிபடுவார்கள். இதனால் தானம் கொடுத்தவருக்கு பூஜைப்பலன் பன்மடங்கு சென்று, செல்வச் சேர்க்கை ஏற்படும் என்பது சாஸ்திர விதி. கண்ணாட
"மனிதனாக பூமியில் பிறந்துவிட்டேன். வறுமை ஒரு பக்கம்... கடன் தொல்லை இன்னொரு பக்கம். எப்படி இனி வாழ்நாளை ஓட்டப்போகிறேன்!' என்று புலம்புவோர் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் அன்றாடம் பயன்படுத்துகிற ஒரு மிகச்சிறிய பொருளால் விடிவு காலம் தந்தால்- விடிவெள்ளி பிறந்தால் எப்படியிருக்கும்?
வேறொன்றுமில்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் எட்டுவகை மங்கலப் பொருட்கள் வரிசையில் இடம்பெறும் கண்ணாடிதான் அந்த சக்தி வாய்ந்த பொருள்.
சிவாகம விதியில் இறைவன் சந்நிதியில் சாயரட்சை பூஜா காலத்தில் பதினாறு உபசா ரங்கள் காட்டப்படுகிறபோது, தர்ப்பணம் என்ற பெயரில் கண்ணாடி உயர்த்திப் பிடிக்கப் பட்டு-
"சந்த்ரமா மனஸோ ஜாத:
சக்ஷோ சூர்யோ அஜாயதா
முகாதிந்த்ரஸ்ய சாக்னிஸ்ஸ
ப்ராணாத் வாயு ரஜாயத:
என்ற புருஷசூக்த மந்திரங்கள் சொல்லப் படுகின்றன.
என்ன இருக்கிறது கண்ணாடியில்?
இருபத்தெட்டு வகை ஆகம விதியில் மட்டும் கண்ணாடி 11-ஆவது உபசாரமாக வருகிறது. இதை பூஜா காலத்தில் இறைவனுக்குக் காட்டி னால் சூரியனைக் காட்டியதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. சிவபெருமானைக் கவர்கின்ற பொருள் பாதரசம். இதை இருபுறமும் தெரிகின்ற கண்ணாடியில் பூசிவிட்டால் மறுபக்கத்தில் நம் முகத்தைக் காட்டுகிறது.
அஷ்ட மங்கலப்பொருளான கண்ணாடியைப் பெண்கள் பூஜைசெய்ய வேண்டும். சுமங் கலிகளுக்கு அழுக்கு நீக்குகிற சோப்பு, தலை அழகுபெற சீப்பு, திலகமிட குங்குமச்சிமிழ், திருமகளின் தாவரமான மஞ்சள், அழகைப் பிரதிபலிக்கும் கண்ணாடி ஆகியவற்றை தானமாகக் கொடுக்க வேண்டும்.
வீட்டில் நடைபெறும் வரலட்சுமி விரதம், மங்கள கௌரி விரதம், கேதார கௌரி விரதம், ஸ்வர்ண கௌரி விரதம், ஆடிப்பூரம் ஆகிய விரத பூஜை நாட்களில் தானம் தரும்போது, அவர்கள் அதைப்பெற்று வீட்டுப் பூஜையில் சௌபாக்கிய திரவியங்களில் ஒன்றாக வைத்து வழிபடுவார்கள். இதனால் தானம் கொடுத்தவருக்கு பூஜைப்பலன் பன்மடங்கு சென்று, செல்வச் சேர்க்கை ஏற்படும் என்பது சாஸ்திர விதி. கண்ணாடியில் அப்படி என்ன ஒரு அபூர்வ சக்தி இருக்கிறது என்று கேட்டால், இதை முறைப்படி பூஜை செய்துவந்தால் நாட்கள் செல்லச்செல்ல நமக்கு வாழ்க்கையில் பணப்புழக்கமும், கடன் தொல்லைக்குத் தீர்வும் கிடைத்துவிடும்.
கண்ணாடி சேவையில் பெருமாள்
108 திவ்யதேசங்களுக்குச் செல்பவர்கள் குறிப்பிட்ட சில பெருமாள் தலங்களில்- ஸ்ரீரங்கம், உப்பிலியப்பன் கோவில், பார்த்தசாரதி கோவில்களில் சனிக்கிழமையன்று எம்பெருமாள் கண்ணாடிகள் பதிக்கப்பட்ட அறையில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதைக் காணலாம். இறைவன் நமக்குப் பல வடிவங் களில் நின்று அருள்வதாக ஐதீகம்.
ஒரு பொருளைப் பன்மடங்காகக் காட்டும் திறனுடைய இந்த வஸ்துவில் பகவானும் தனது ஆக்வா ஹஸ்தத்தால் பலமுறை அருள்தர அழைப்பதாகப் பொருள். ஆகவே ஆலய தரிசனங்களுக்குச் செல்பவர்கள் அன்றைய தினம் கண்ணாடி சேவை இருந்தால் அவசியம் பொறுமையாக இருந்து தரிசித்து வருதல் நன்று.
வாழ்வின் பயனில் கண்ணாடி
● நாம் சௌபாக்கியங்களுடன் வாழ்வதற் குத்தான் ஆலய தரிசனத்திற்குச் செல்கிறோம்.
அந்த ஆலயத்தில் தெய்வ பிம்பம் சிலையாக அமரும்போது எட்டுவகை கிரியைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. அவை நிறைவடைந்த பிறகு முதலில் கோ தரிசனம், இரண்டாவது கன்னிப்பெண், மூன்றாவது தீபம், நான்காவது கண்ணாடி, ஐந்தாவது கஜம் என்கிற யானை- யானை கிடைக்காவிட்டால் பூரண கும்பத்தை பிம்பங்களுக்குக் காட்டி கும்பாபிஷேக காலத்துக் கண்திறத்தல் வைபவம் நடத்தப் பட்டு, சுவாமி சிலை கருவறைக்கு அனுப் பப்படுகிறது.
● வீட்டுப்பூஜையறையில் வட்டக் கண்ணாடியை வைத்து பூஜைசெய்து கூடத்தின் உட்பக்கம் மாட்டினால் வாஸ்துக் குறை இருக்காது. ஆனால் அதில் சுபகாலத் தில்- வாஸ்து பிரதிஷ்டாபன பூஜை செய்துவிட வேண்டும்.
● சுபநாளில் ஏழு சென்டிமீட்டர் அளவுள்ள கண்ணாடியை லக்ஷ்மி வசீகரண பூஜைசெய்து பர்சில் வைத்துக்கொண்டால் பணப்புழக்கம் அதிகமாகும். பணத்தட்டுப் பாடு என்பதே இருக்காது.
● பதினாறு சென்டிமீட்டர் அளவுள்ள கண்ணாடியே பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் ஒப்பனை செய்துகொள்ளும் இடத்தில் இருக்க, அதைக் கையில் எடுத்து முக அழகைக் கூட்டுகிற அழகு பாவனையைச் செய்துகொண்டார்கள்.
● வட்டக்கண்ணாடியை மன்னர்கள் காலத்தில் அதற்கொரு கைப்பிடி வைத்துச் செய்து பயன்படுத்தினர். அதன் சுற்றளவு 64 சென்டிமீட்டர். இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு அதிகமாக வாழ்நாள் இடையூறுகள், சங்கடங்கள், விவாக ரத்துக்கள் வருவதற்குக் காரணம், அலங் காரக் கண்ணாடிமுன் மேற்கத்திய இசையை போட்டுவிட்டு நடனம் ஆடிக்கொண்டே முக அழகைக் கூட்டிக் கொள்வதுதான்.
● கண்ணாடி என்பது ஒரு தெய்வ பிம்பம். மகாலட்சுமி தேவி வாசம்செய்கின்ற தளம். இதைப் பெண்கள் தங்கள் பணப் பைக்கு (பர்சுக்கு) வெளியே பதித்து வைத் திருப்பார்கள். இது தவறான முறை. ஆண்கள்- பெண்கள் இருவருமே சிறுகண்ணாடியை முறைப்படி பூஜைசெய்து பர்சின் உள்ளே வைத்துக்கொண்டால், அது பணத்தை பிரதிபலிப்பு செய்து பன்மடங்காகப் பெருக்கும்.
● உடைந்த கண்ணாடி, சாமி படத்தின் பிரேம் போன்றவற்றை வீட்டில் வைத்துக் கொண்டால் அங்கிருந்து திருமகளாம் மகாலட்சுமி அகன்றுவிடுவாள். அதேபோல உடைந்த கண்ணாடியுடன் கூடிய சாமி படத்தைக் கோவில் வளாகத்தில் வைத்து விட்டு வந்தாலும் நமக்குக் கஷ்டங்களே வரும்.
● கண்ணாடி நமது அன்றாடத் தேவைகளில் எங்கெல்லாம் பயன்படு கிறது என்று பட்டியலிட்டால், ஆன்மிக ரீதியாகவும், அறிவியல்ரீதியாகவும்- நாம் கண்விழித்ததுமுதல் இரவு உறங்கச் செல்வதுவரை அது நம்முடன் இருந்துவரு கிறது.
காலை எழுந்தவுடன் கண்ணாடியில் நம் முகத்தைப் பார்த்தபடி, "இந்த அழகு நமது வேலைகளுக்கும் சந்திக்கும் நபர்களுக்கும் ஈர்ப்பைத் தருமா?' என்று கேட்டுக்கொள்கிறோம்.
நேரத்திற்கு அடிமையாகியிருக்கும் நாம் கடிகாரத்தில்- கண்ணாடியாலான வட்டத்துண்டுக்குள் அசையும் முள்ளை அடிக்கடி பார்த்து வருகிறோம்.
குறிப்பிட்ட வயதுக்குமேல் கண்ணாடி மூலமே இந்த உலகைப் பார்க்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறோம். மூன்று வயது குழந்தைகூட இப்போது கண்ணாடி யைத் தேடுகிறது- படிப்பதற்காக.
வாழ்க்கைச் சக்கரம் சுழல அலுவலகத்திற்கு வண்டியை ஓட்டியாக வேண்டும். பின்னே வருபவர் மோதிவிடாமல் இருக்க இருபக்க மும் குவியாடிக் கண்ணாடியைப் பார்த்தபடி எச்சரிக்கையுடன் செல்லவேண்டி இருக்கிறது.
நாம் பணி செய்யும் இடத்திலும் கதவுகள், தடுப்புகள் என கண்ணாடிகள். அறிவியல் ஆய்வகத்தில் வெர்னியர் காலிப்பர், பிப்பெட், பியூரெட், ஆய்வுக்கூட கலவைக் கலப்பான் குடுவைகள் அனைத்துமே கண்ணாடியால் தயார் செய்யப்பட்டு நமக்கு உதவும் பொருட்களாக உள்ளன.
கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது, மூலஸ்தான மூர்த்தியை தரிசிக்க உயரத்தில் மாட்டப்பட்ட கண்ணாடி உதவுகிறது. ஆண்டாள் நாச்சியார் எம்பெருமாளைக் கண்ணாடியில் தினமும் தரிசித்தது குறிப்பிடத்தக்கது.
இரவில் நமக்கு ஒளி வழங்கும் விளக்குகளும் கண்ணாடியாலானவையே. கூர்ந்து கவனித்தால் கண்ணாடி என்பது, நம்மோடு எப்போதும் தொடர்பிலிருக்கும் பொருள் என்பதை உணரலாம்.
திருமணம் நடைபெற்று முடிந்தவுடன், ஒரு பெண் தனது வாழ்க்கையைக் கண வனுடன் முதன்முதலில் தொடங்கும்போது கண்ணாடி வளையலை அணிந்திருப்பாள்.
அந்த கலகல ஓசையில் இருவரின் அன்யோன் யம் தெரிவதைக் கண்டு இருபாலரின் பெற்றோர்களும் மகிழ்ச்சியடைவர்.
அடுத்துவரும் ஏழாம் மாதத்தில் பெண் கருவுற்று வளைகாப்பு நடைபெறும் போது, ஒன்பது வண்ணங்களுடன் கண்ணாடி வளையலிட்டு, குழந்தை நவகிரக தோஷங்கள் இல்லாமல் பிறக்கப் பரிகாரம்போல பூஜைகள் செய்து, பிறந்த வீட்டிற்கு மகப்பேறுக்காக அனுப்பிவைப்பார்கள். இப்படிப்பட்ட சம்பிரதாயங்கள் விடுபட்டுப்போய் உள்ள தால், குதூகலமாக இருந்த குடும்பங்கள் குழந்தைப்பேறில்லாமை, திருமணமான பிறகு வேலை இல்லாமை, வறுமை, கடன் தொல்லைகள் வந்து திருமணமான தம்பதிக்குள் பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கிறது.
திருமால் சந்நிதி அருகில் வசிப்பவர்கள் தினமும் ஒரு பாடலைக் கேட்டிருக்கலாம். "கண்ணாடி சேவைதனில் என்னை மறந் திருப்பேன்' என்ற பொருள் கூறும் பாடலில், கண்ணாடியறையில் வைக்கப்பட்ட எம்பெருமானை கண்குளிர தரிசித்தால் நம் வாழ்க்கையில் எல்லா கவலைகளும் மறந்து போகும்.
வளம் தரும் கண்ணாடி பூஜா ரகசியம் கண்ணாடியை எப்படிப் பூஜைசெய்து பயன்படுத்தினால் நமக்கு தனவரவு யோகங்கள் வருமென்று அறிவோம்.
நிறைந்த பௌர்ணமி நாள், அஷ்டமி, பூர நட்சத்திர சுபநாளில் ஏழு சென்டிமீட்டர் அளவுள்ள செவ்வகக் கண்ணாடியை சந்தனம், குங்குமமிட்டு மலர் சாற்றி, மகாலட்சுமிக்குரிய தியான மந்திரத்துடன் ஆவாஹன பூஜை செய்து, சௌபாக்கிய அஷ்டோத்திரம் சொல்லி, மூன்றுவகைப் பழங்களுடன் இனிப்பு நிவேதனம் செய்து ஆரத்தி காட்டி வழிபடவேண்டும்.
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் மகாலக்ஷ்மியை
சௌபாக்ய வர்தின்யை
கமலதாரிண்யை தர்ப்பண காந்த்யை
மம தனவிருத்திம் குருதே நம:
என்று 16 முறை சொல்லி ஆத்ம பிரதட் சணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும்.
இப்படி தொடங்கி எட்டு வெள்ளிக் கிழமைகள் செய்து லக்ஷ்மி ஹ்ருதய பாராயணம் செய்து, அந்தக் கண்ணாடியை பர்ஸ், பீரோவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
3 ஷ் 3 அளவுள்ள அல்லது 16 சென்டிமீட்டர் அளவுள்ள கண்ணாடியை செங்குத்தாக சட்டமிட்டு நிறுத்தி, அதன்வழியாக லக்ஷ்மி குபேரன், வலம்புரிச்சங்கு, சாளக்கிராமம் ஆகியவற்றில் ஒன்றைக் காலையில் வணங்கி வருவதாலும் நமக்குப் பணம் சேர்ந்து, கடன் தொல்லை தீரும்.
தொழிலகம் உயர்ந்திட வட்டக்கண்ணாடி பொதுவாக வாஸ்துக்குறைகள் இருக்கும் வீட்டிலோ, தொழிற்கூடத்திலோ வட்டக்கண்ணாடியை பூஜைசெய்து வாசற்படிக்கு முன்பாக மாட்டி வைப் பார்கள். இந்த முறையை வாஸ்து சாஸ்திரத்திலுள்ள சங்கு ஸ்தாபன விதிப்படி 32 சென்டிமீட்டர் விட்ட அளவுடைய வட்டக் கண்ணாடியை- அஷ்ட தோஷங்கள் இல்லாத சுத்தமான வலம்புரிச்சங்கை பூஜைசெய்து, நலிவடைந்த, கடன் பிரச்சினையுடைய, முன்னேற்றம் தடைப்பட்ட தொழிலகத்தில் வைத்திட விரைவில் நல்வழி பிறக்கும். லக்ஷ்மி கடாட்சம், பொருளாதாரச் சேர்க்கை உண்டாகும். அந்த தெய்வீகப் பொருளை திருமகளாக வர்ணித்து மதித்து பர்சில் வைத்து வழிபட்டால் பணச்சங்கடம், மனச் சங்கடம் தீர்ந்துவிடும்.
செல்: 91765 39026