Advertisment

ஐஸ்வர்யங்களைப் பெருக்கும் லட்சுமி குபேர பூஜை ரகசியம்! -ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்

/idhalgal/balajothidam/secret-lakshmi-kubera-puja-enhances-auspiciousness

பொருளில் லாருக்கு இவ்வுலக மில்லை என்பது முதுமொழி. செல்வம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது என்பது அனைவரும் அறிந்ததே. அனைத்துவிதமான மகிழ்ச்சியையும் தரும் செல்வத்தையடையும் வழியை, ஜோதிடத்தின்மூலம் அறிந்து பயனடையலாம்.

தன யோகம்

Advertisment

kuberer

ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் வீடு தன ஸ்தானமாகும். 9-ஆம் வீடு பாக்கிய ஸ்தானமாகும். 10-ஆம் வீடு ஜீவன ஸ்தானமாகும். 11-ஆம் வீடு லாப ஸ்தானமாகும். பொதுவாக வீடு, வாகன யோகத்தையும், அசையா சொத்து யோகத்தையும் உண்டாக்குவதற்கு வழிவகுக்கக்கூடிய ஸ்தானமாக 4-ஆம் வீடு அமைகிறது. அதுபோல 5-ஆம் வீடு பலம்பெற்றிருந்தால் பூர்வபுண்ணிய வகையில் பொருளாதார ரீதியாக யோகத்தினை அடையமுடியும்.

2, 9, 10, 11-க்கு அதிபதிகள் ஒருவருக் கொருவர் பரிவர்த்தனை பெற்றிருப் பதும், ஆட்சி பெற்று பலமாக அமைவ தும் வலிமையான தன யோகத்தை உண்டாக்கும் இரண்டாம் வீட்டு அதிபதி நான்காம் வீட்டு அதிபதியுடன் சேர்ந்தாலோ அல்லது பார்க்கப் பட்டாலோ தாயின் உதவியால் பண உதவியைப் பெறுவர்.மாத்ரு தன யோகம் உண்டாகும்..

Advertisment

இரண்டாம் வீட்டு அதிபதி 5-ஆம் வீட்டு அதிபதியுடன் சேர்ந்திருந்தாலோ பார்க்கப்பட் டாலோ புத்திரர்மூலம் தன யோக மாகும்.

இரண்டாம் வீட்டு அதிபதி, 7-ஆம் வீட்டு அதிபதிய

பொருளில் லாருக்கு இவ்வுலக மில்லை என்பது முதுமொழி. செல்வம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது என்பது அனைவரும் அறிந்ததே. அனைத்துவிதமான மகிழ்ச்சியையும் தரும் செல்வத்தையடையும் வழியை, ஜோதிடத்தின்மூலம் அறிந்து பயனடையலாம்.

தன யோகம்

Advertisment

kuberer

ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் வீடு தன ஸ்தானமாகும். 9-ஆம் வீடு பாக்கிய ஸ்தானமாகும். 10-ஆம் வீடு ஜீவன ஸ்தானமாகும். 11-ஆம் வீடு லாப ஸ்தானமாகும். பொதுவாக வீடு, வாகன யோகத்தையும், அசையா சொத்து யோகத்தையும் உண்டாக்குவதற்கு வழிவகுக்கக்கூடிய ஸ்தானமாக 4-ஆம் வீடு அமைகிறது. அதுபோல 5-ஆம் வீடு பலம்பெற்றிருந்தால் பூர்வபுண்ணிய வகையில் பொருளாதார ரீதியாக யோகத்தினை அடையமுடியும்.

2, 9, 10, 11-க்கு அதிபதிகள் ஒருவருக் கொருவர் பரிவர்த்தனை பெற்றிருப் பதும், ஆட்சி பெற்று பலமாக அமைவ தும் வலிமையான தன யோகத்தை உண்டாக்கும் இரண்டாம் வீட்டு அதிபதி நான்காம் வீட்டு அதிபதியுடன் சேர்ந்தாலோ அல்லது பார்க்கப் பட்டாலோ தாயின் உதவியால் பண உதவியைப் பெறுவர்.மாத்ரு தன யோகம் உண்டாகும்..

Advertisment

இரண்டாம் வீட்டு அதிபதி 5-ஆம் வீட்டு அதிபதியுடன் சேர்ந்திருந்தாலோ பார்க்கப்பட் டாலோ புத்திரர்மூலம் தன யோக மாகும்.

இரண்டாம் வீட்டு அதிபதி, 7-ஆம் வீட்டு அதிபதியுடனும், களத்திரக்காரகனான சுக்கிரனுடனும் சேர்ந்தோ பார்க்கப்பட்டோ இருந்தால், அது களத்திரம் மூலம் தன யோகம்.

நான்காம் வீட்டு அதிபதி கேந்திர ஸ்தானத்திலோ திரிகோண ஸ்தானத் திலோ இருக்கவேண்டும். அத்துடன் சுப கிரகத்துடன் சேர்ந்திருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் ஸ்திர சொத்து அமையும். அது உத்தம கிரக யோகம்.

2, 9, 11-ஆம் அதிபதிகள் வலுப்பெற்றிருந் தால் பெரும் செல்வத்தைத் தரும் மகா தன யோகம்.

இது போன்ற ஜாதக அமைப்புகள் எல்லாருக்கும் அமைவதில்லை. ஆனா லும். சில பரிகாரங்களைச்செய்து செல்வச் செழிப்பை அடையலாம்.

தன யோகம் தரும் பரிகாரம்

யாரிடமிருந்து பணம் வாங்கினாலும் வலது கையால் கொடுக்கச் சொல்லி வலது கையால் வாங்கிக்கொள்ள வேண்டும். நீங்கள் பிறருக்குக் கொடுத்தாலும் அப்படியே செய்யவும்.

வரவு- செலவு கணக்குப் பார்க்கும் புத்தகங்களில் எழுதத் துவங்கும்போது, முதல் பக்கத்தின்மேல் மஞ்சளைக் கொண்டு "ஸ்ரீ' என்று எழுதவேண்டும்.

உபயோகப்படுத்தாத பழைய பர்ஸ் அல்லது பணப் பெட்டி காலியாக, பணமில்லாமல் இருக்கக்கூடாது. அதில் ஒரு ரூபாய் நாணயத்தையாவது போட்டு வைக்கவேண்டும்.

கடை அல்லது அலுவலகத்தின் பணப் பெட்டியின்மீது மஞ்சள், குங்குமப்பொட்டு வைப்பதால் செல்வம் பெருகும்.

சட்டைப் பையில் தலைவாரும் சீப்பை வைக்கக் கூடாது. தலைமுடி தரித்திரத்தைத் தரும்.

வியாழக்கிழமை மாலை 5.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை குபேர காலமாகும். இந்த நேரத்தில் லட்சுமி குபேர பூஜையை விரதமிருந்து செய்தால், அளவுகடந்த செல்வத்தைப் பெறலாம்.

வேதாந்த தேசிகர் இயற்றிய ஸ்ரீஸ்துதியை, வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்து வர, ஆலமா மரங்கள்போல அழிவிலாச் செல்வம் கிடைக்கும்.

பௌர்ணமியில் மகாலட்சுமிக்கு வில்வத் தால் அர்ச்சனை செய்துவர, செல்வம் பெருகும்.

வளர்பிறை திரிதியையில் கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி நெல்லிக்காயை நிவேதனம் செய்தால் பொன்னும் பொருளும் பெருகும்.

லட்சுமி குபேர பூஜை செய்ய தீபாவளித் திருநாள் சிறந்தது. மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங் களில், பூராட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வதும் செல்வத்தை வாரி வழங்கும்.

லட்சுமி குபேர பூஜை (தீபாவளி)

குபேரன் தனது செல்வம் அனைத்தையும் இழந்து நின்றபோது லட்சுமி தேவியை வணங்கி யந்திரத்தைப் பெற்றான். அந்த எளிய குபேர பூஜையை விரதமிருந்து செய்தால் நலம் விளையும். இதைச் செய்வதால் கடன்கள் தீரும். செல்வம் பெருகும். வட இந்தியாவில், தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து வழிபடும் பழக்கம் உள்ளது. இந்த பூஜைக்கு ஒரே மாதிரியான 81 நாணயங்கள் தேவை. உங்களுடைய வசதிக்கேற்ப ஒரு ரூபாய் நாணயமோ பத்து ரூபாய் நாணயமோ எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் 81 நாணயங்களும் ஒரே மதிப்பிலான நாணயங்களாக இருக்கவேண்டும்.

kuberer

ஐப்பசி மாதத்தின் அமாவாசை நாளில், மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள், பூஜை யறையில் குலதெய்வத்தை மனதார வேண்டி தீபமேற்ற வேண்டும். இந்த பூஜை தடைப்படாமல் இருக்க மகாகணபதியை மனதார வேண்டியபிறகு, ஒரு பலகையில் திருமகளைக் குறிக்கும் எழுத்தாகிய "ஸ்ரீ' எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதி அதில், லட்சுமி குபேரயந்திரத்தை, கிழக்கு அல்லது மேற்கு திசையை நோக்கியபடி வைத்து, அதைச்சுற்றி 81 நாணயங்களை வட்டவடிவமாக அமைத்துவிட்டு மகாலட்சுமியை மனதார வேண்டினால், அந்த யந்திரத்தில் திருமகள் எழுந்தருளுவாள்.

ஒரு பலகையின்மீது சிவப்புத் துணியை விரித்து, அதில் ஒரு கைப்பிடியளவு தானியங்களைப் பரப்பி வைத்திடுங்கள். ஒரு செம்புக் குடம் அல்லது பித்தளைக் குடத்தை எடுத்து அதை நன்றாகக் கழுவி சுத்தம் செய்யுங்கள். நூலில் மஞ்சள் தடவி அந்த குடத்தில் சுற்றுங்கள். அதனுள் தண்ணீர் நிரப்பி, ஒரு வெற்றிலை, ஒரு சாமந்திப்பூ, ஒரு நாணயம், கொஞ்சம் அரிசி போட்டு வைக்கவும். கலசத்தின்மேல் தேங்காயை வைத்து, அதைச் சுற்றி மாவிலைகளை வையுங்கள். கலசத்திற்கு சந்தனம், பொட்டு வைத்து பூச்சூட்டுங்கள். கலசம் லட்சுமிதேவியின் வடிவமாகக் கொள்ளப்படுகிறது.

கலசத்தின் வலது பக்கத்தில் ஒரு தட்டை வைத்து, அதில் கொஞ்சம் மஞ்சள்தூள் கலந்த அரிசியைப் பரப்பி, அதன் நடுவில் லிங்க வடிவில் மஞ்சள் பிள்ளையாரை செய்து கொள்ளவும். உதிரிப்பூக்களால் விநாயகரைப் பூஜை செய்தபின் கலச பூஜையும், லட்சுமி குபேர யந்திர பூஜையும் செய்யவேண்டும். லட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யலாம். கனகதாரா ஸ்தோத் திரத்தை சொல்வதால், கூடுதல் பயனுண்டு.

கலசத்திற்கும், யந்திரத்திற்கும் பால் பாயசத்தை, நிவேதனம் செய்துவிட்டு ஆரத்தி எடுக்க வேண்டும். பின்பு பெருமாள் கோவிலுக்குச் சென்று தாயாரை தரிசியுங்கள். அடுத்தநாள், குபேர யந்திரத்தில் வைத்த நாணயங்களை எடுத்து பத்திரமாகப் பணப் பெட்டியில் வைக்கவேண்டும்.

இந்த பூஜை செய்வதால் உங்கள் வீட்டில் பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் பெருகும். ஸ்ரீ தீபலட்சுமி தேவியின் அருள் உங்களுக்கு சந்தோஷத்தையும் செழிப்பையும் வழங்கும். வறுமையின் இருள் நீங்கி வளமையான ஒளி பெருகும். பூஜை முடிந்தபிறகு, ஏழைகளுக்கு அன்னதானம் கொடுத்தால் உங்கள் வீட்டிலும் தங்கமழை பொழியும்.

செல்: 77080 20714

bala131120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe