Advertisment

எண்ணியலை எல்லாம் தரும் இஷ்ட தெய்வ வழிபாட்டு ரகசியம்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/secret-ishta-deity-worship-gives-all-numbers-melmaruvathur-s-kalaivani

னிதனின் வாழ்க்கை பயணத்தில் போட்டிகளும், போராட்டங்களும், நிறைந்து காணப்படுகின்றது என்பது அனைவரும் அறிந்ததே, இந்த பந்தயத்தில் அவரவர் சூழ-ல் இருந்து முன்னேற்றம் காண துடிக்கும் தாகமும், நியாயமானதே, அப்படி முன்னேற்றத்தின் பாதையில் செல்லும் ஜீவன்களுக்கு சில பலம் தூண்டுகோலாகவும், துணையாகவும் திகழ்கின்றது. அவை ஆன்ம பலம், மனோ பலம், தெய்வபலம் என்று வரையறுக்கப்படுகின்றது. இந்த தெய்வபலத்தில் தென்புலத்தார் என்று அழைக் கப்படும். முன்னோர் பலமும் அடங்கும்.

Advertisment

தெய்வபலம் என்னும் பொழுது அங்கு குல தெய்வமும், இஷ்ட தெய்வ மும், காவல் தெய்வங்களும், உபாசனா தெய்வங்களும் அணிவகுத்து நிற்கும்.

சரி; ஒருவருக்கு இஷ்ட தெய்வம் என்று ஒன்று வேண்டுமா என்றால் அவசியம் இருக்கவேண்டும் என்பது இல்லை. இயல் பாகவே நம் மனம் எந்தக் கடவுளின் உருவத்தில் பிரம்மாண்டத்தில் ஆசுவாசப்பட்டு லயிக்கின்றதோ அதுவே இஷ்ட தெய்வமாகும்.

ss

Advertisment

நமக்கு சில மலரை காணும்பொழுதும், அவற்றின் நறுமணத்தை நுகரும் பொழுதும், மனமானது லயித்து ஒரு கணம் அடங்கும் நிலை ஏற்படும். அதே போன்று சில உணவின் சுவை நம்மை இலகுவாக்கி நிலை நிறுத்தும். இவை எல்லாம் நம் உருவாக்கத்தின் ஒரு பகுதியே. அதனால் தான் நம்மை லயிக்க செய்கின்றது. இது போலவே இஷ்ட தெய்வமும் நம் உருவாக்க சக்தியின் மூலக்கூ

னிதனின் வாழ்க்கை பயணத்தில் போட்டிகளும், போராட்டங்களும், நிறைந்து காணப்படுகின்றது என்பது அனைவரும் அறிந்ததே, இந்த பந்தயத்தில் அவரவர் சூழ-ல் இருந்து முன்னேற்றம் காண துடிக்கும் தாகமும், நியாயமானதே, அப்படி முன்னேற்றத்தின் பாதையில் செல்லும் ஜீவன்களுக்கு சில பலம் தூண்டுகோலாகவும், துணையாகவும் திகழ்கின்றது. அவை ஆன்ம பலம், மனோ பலம், தெய்வபலம் என்று வரையறுக்கப்படுகின்றது. இந்த தெய்வபலத்தில் தென்புலத்தார் என்று அழைக் கப்படும். முன்னோர் பலமும் அடங்கும்.

Advertisment

தெய்வபலம் என்னும் பொழுது அங்கு குல தெய்வமும், இஷ்ட தெய்வ மும், காவல் தெய்வங்களும், உபாசனா தெய்வங்களும் அணிவகுத்து நிற்கும்.

சரி; ஒருவருக்கு இஷ்ட தெய்வம் என்று ஒன்று வேண்டுமா என்றால் அவசியம் இருக்கவேண்டும் என்பது இல்லை. இயல் பாகவே நம் மனம் எந்தக் கடவுளின் உருவத்தில் பிரம்மாண்டத்தில் ஆசுவாசப்பட்டு லயிக்கின்றதோ அதுவே இஷ்ட தெய்வமாகும்.

ss

Advertisment

நமக்கு சில மலரை காணும்பொழுதும், அவற்றின் நறுமணத்தை நுகரும் பொழுதும், மனமானது லயித்து ஒரு கணம் அடங்கும் நிலை ஏற்படும். அதே போன்று சில உணவின் சுவை நம்மை இலகுவாக்கி நிலை நிறுத்தும். இவை எல்லாம் நம் உருவாக்கத்தின் ஒரு பகுதியே. அதனால் தான் நம்மை லயிக்க செய்கின்றது. இது போலவே இஷ்ட தெய்வமும் நம் உருவாக்க சக்தியின் மூலக்கூறினை கொண்டிருக்கும்பொழுது அங்கும் நம் மனம் ஒடுங்கி, அடங்கி, அமைதியாகி நிற்கும்.

அப்படி அடங்கிய மனதில் சிந்தனை தெளிவு பிறக்கும். தெளிவி-ருந்து ஊற்றெடுக்கும் கருத்துகள் நம் வாழ்வின் வளர்ச்சியில் நல்வழியினை வகுத்துக் கொடுக்கும்.

இதனை அனுபவத்தில் கண்ட நம்முன் சந்ததியினர் குலதெய்வத்தையே மறந்து தங்களின் இஷ்ட தெய்வங்களையே தனக்கு அடுத்த சந்ததியினருக்கு அறிமுகம் செய்துவைத்துள்ளனர். இதற்கு சான்றுதான் தற்பொழுது குலதெய்வம் பெருமாள், சிவன், முருகன் என்று கூறுவது எல்லாம்.

இவர்களின் முன்னோர்கள் இஷ்ட தெய்வத்தையே, குலதெய்வமாக மாற்றி உள்ளனர்.

அந்த இஷ்ட தெய்வமும் தான் ஏற்றுக்கொண்ட பணியினை செவ்வனே சீரும் சிறப்புமாக செய்து அந்த குடும்பத்தின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்திருப்பதை நிதர்சனத்தில் அறியமுடிகின்றது.

வெற்றிவாகை பல சூடிய இராஜராஜ சோழனின் இஷ்ட தெய்வம் வாராகி. இதற்கு ஒரு சான்று நம் உட-ல் இருக்கும் ஆறு ஆதார சக்திகளில் ஆக்ன சக்திக்கு சொந்தக்காரி இந்த வாராகி ஆகும்.

இப்படி தங்களின் இஷ்ட தெய்வங்களை தேர்ந்தெடுத்து ஆராதிப்பது சிறப்பினை நல்கும்.

ஒருவரின் கஷ்டங்களை தீர்க்கும் இஷ்ட தெய்வத்தை தெரிந்துகொள்வதற்கும் அதன் பலத்தை கூட்டிக்கொள்வதற்கும் நமது ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கின்றது என்பதை பார்க்கலாம்.

ஜாதகத்தில் அவருடைய பூர்வபுண்ணிய பலத்தையும் தனது ஆசைகளையும், அதிர்ஷ்டத்தையும், அறியக்கூடிய இடமாக ஐந்தாமிடம் வருகின்றது. இந்த இடமும் இதன் அதிபதியும் என்ன பலம் பலவீனத் துடன் அமைந்துள்ளார்கள் என்று காண வேண்டும்.

நமது ஜோதிடவியலை நமக்கு அளித்த முன்னோர்கள் நவகிரகங்களுக்கு உரிய அதி தேவதைகளை நமக்கு வழங்கியுள்ளனர்.

மக்கள் சராசரி வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்கள், நெருடல்கள், தோல்விகள் போன்றவற்றை முறையடிக்கவும் வெற்றி யினை தன் பால் தழுவி கொள்ளவும் அதிதேவதைகளின் அருளும் ஆசீர்வாதமும் வேண்டும் என்பது மிகையல்ல.

சூரியன்- சிவன்

சந்திரன்- பார்வதி

செவ்வாய்- சுப்பிரமணி

புதன்- மகாவிஷ்ணு

குரு- தட்சிணாமூர்த்தி

சனி- சாஸ்தா, ஆஞ்சனேயர்

ராகு- காளி

கேது- விநாயகர்

என்று நவகிரகங்களுக்கு அதிதேவதைகள் வழங்கப்பட்டுள்ளது இனி ஒவ்வொரு ராசிக்கும் அதிதேவதை யார் என்பதை கீழ் வருமாறு காணலாம்.

மேஷ ராசி

மேஷ ராசியினருக்கு ஐந்தாமிடம் சிம்மமாக வரும். இதன் அதிபதி சூரியன் ஆவார். இந்த சூரியன் ஆட்சி அல்லது உச்சம்பெற்றோ அல்லது சிம்மத்தை பார்த்த நிலையில் இருந்தாலும் இவர்கள் சிவனை இஷ்ட தெய்வமாக எடுத்துக் கொள்ளலாம்.

ரிஷப ராசி

ரிஷப ராசியினர் இவர்களுக்கு ஐந்தாமிடம் கன்னியாக வரும். கன்னியின் ராசிநாதன் புதன் என்பதனால் இந்த புதன் பலமடைந்த நிலையில் இருக்கும் ரிஷப ராசி என மகாவிஷ்ணுவை இஷ்ட தெய்வமாக ஏற்றுக்கொள்ளலாம்.

மிதுன ராசி

மிதுன ராசியினர் தங்களின் ஐந்தாமிட மான துலாத்தின் ராசிநாதன் சுக்கிரனாக வருவதால் சுக்கிரன் அவர்களின் ஜாதகத்தில் பலமான நிலையில் இருந்தால் இவர்கள் மகாலட்சுமியினை இஷ்ட தெய்வமாக ஏற்றுக்கொள்ளலாம்.

கடக ராசி

கடக ராசியினர் தங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானமாக விருச்சிகம் அமையப் பெறுவதால் செவ்வாய் ஏற்றுள்ள பலத்தைப் பொறுத்து சுப்பிரமணியரை இஷ்ட தெய்வமாக ஏற்றுக்கொள்ளலாம்.

சிம்ம ராசி

சிம்ம ராசியினர் தங்களின் ஐந்தாம் பாவகமாக தனுசு அமையப்பெறுகின்றது. இதன் ராசிநாதன் குருவாக வருவதனால் தட்சிணாமூர்த்தியினை இஷ்ட தெய்வமாக ஏற்றுக்கொள்வது சிறப்பினை தரும்.

கன்னி ராசி

கன்னி ராசியினர் ஐந்தாம் பாவகாதிபதி யாக மகரத்தின் சனிபகவான் அமைவதால் சாஸ்தா மற்றும் ஆஞ்சனேயர் வழிபாடு சிறப் பினை நல்கும்.

துலா ராசி

துலா ராசியினர் தங்களின் ஐந்தாம் பாவகமாக கும்பம் அமையப்பெறுகின்றது. இதன் ராசிநாதன் சனிபகவானாக வருவதால் இவர்களும் சாஸ்தா மற்றும் ஆஞ்சநேயரின் வழிபாட்டினை மேற்கொள்வது சிறப்பு.

விருச்சிக ராசி

விருச்சக ராசியினர் தங்களின் ஐந்தாம் பாவகமாக மீனம் அமையப்பெறுகின்றது. இதன் ராசி அதிபதி குரு பொறுப்பேற்றுள்ள பாவங்கள் சுப பாவகமாக அமைந்தால் இவர்களும் குரு தட்சிணாமூர்த்தியினை இஷ்ட தெய்வமாக ஏற்றுக்கொள்ள லாம்.

தனுசு ராசி

தனுசு ராசியினர் இவர்களின் பூர்வ புண்ணிய ஸ்தானமாக மேஷமும் ராசி அதிபதியாக செவ்வாயும் அமையப் பெறுவதனால் இவர்களின் ஜாதகத்தில் செவ்வாய் பெற்றுள்ள பலம் பலவீனத்தைப் பொறுத்து இவர்கள் சுப்பிரமணியரை இஷ்ட தெய்வமாக ஏற்றுக்கொள்ளலாம்

மகர ராசி

மகர ராசியினர் இவர்களின் ஐந்தாம் பாவகமாக ரிஷபம் அமையப்பெற்று அதன் நாதனாக சுக்கிரன் அமையப்பெறுவதால் இவர்களும் மகாலட்சுமியினை இஷ்ட தெய்வமாக ஏற்பது சிறப்பு.

கும்ப ராசி

கும்ப ராசியினர் இவர்களின் பூர்வ புண்ணிய ஸ்தானமாக மிதுனமும் அதிபதி புதனாகவும் அமைவதனால் புதன் ஏற்றுள்ள பாவகங்கள் சுபமாக இருந்தால் இவர்கள் மகாவிஷ்ணுவை இஷ்ட தெய்வமாக வழிபடலாம்.

மீன ராசி

மீன ராசியினர் இவர்களுக்கு ஐந்தாம் பாவகமாக கடகம் அமையப்பெறுகின்றது. இதன் அதிபதி சந்திரனாகவும் இருப்பதால் சந்திரன் ஏற்றுள்ள சாதக பாதகங்களை கணக்கிட்டு சாதகங்கள் நிறைந்திருக்கும் பட்சத்தில் இவர்கள் பார்வதிதேவியினை இஷ்ட தெய்வமாக ஏற்றுக் கொள்வது சிறப்பினை அளிக்கும்.

மேலும் ஒருவரின் ஜாதகத்தில் லக்னத் திற்கு பதினோராமிடத்தில் அமையப் பெற்றுள்ள மூன்று நட்சத்திரங்களில் நடு நட்சத்திரமாக எந்த நட்சத்திரம் அமையப்பெறுகிறதோ, அந்த நட்சத் திரத்தின் அதிதேவதையினை உபாசனை தெய்வமாகவும் இஷ்ட தெய்வமாகவும் எடுத்துக்கொண்டு வழிபட்டால் வாழ்வில் பல சிறப்புகளை அடையமுடியும்.

செல்: 80563 79988

bala180823
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe