பெண் பாலினத்திற்கான பிறந்த தேதி, நேரம், இடத்தைக் கொண்டு கிரக நிலைகளைக் கணித்துக் கூறப்படும் விவரங்கள் அடங்கிய குறிப்புகள் "ஸ்த்ரீ ஜாதகம்'- எனப்படுகிறது. ஆண் ஜாதகத்தொடர்புடைய பண்புகளை பெண் ஜாதகப் பண்புகளுடன் கருத்தில்கொள்ளவேண்டும். ஆயினும் பெண் பாலினத்திற்கான ஜாதகக் குறிப்புகளின் விதிமுறைகள், ஆண் பாலினத்திற்கான ஜாதகக் குறிப்புகளைவிட முற்றிலும் வேறுபடுவதாகும். ஏனெனில் பெண் பா−னத்தின் உள் உடலுறுப்பின் அமைப்புகள்- கருப்பை, இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் மாத சுழற்சிமுறை போன்றவை மாறுபட்டுக் காணப்படுவதேயாகும். எனவே பெண்ணின் பிறந்த ஜாதகம் துல்லியமாக, பலவித மாறுபட்ட உடலுறுப்பின் நுணுக்கங்களை அறிந்து கூர்ந்து ஆராயப்பட வேண்டியுள்ளது.

மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விவரம் யாதெனில், ஒரு பெண்ணின் பிறந்த ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலி−ருந்து 4, 5, 7, 8 மற்றும் 9-ஆம் ராசி வீடுகள் பிரத்யேகமான முறையில் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். பிரகத் பராசரா, சாராவளி, பிரகத் ஜாதகா, பலதீபிகா, ஜாதக பாரிஜாதா, சர்வார்த சிந்தாமணி, ஜெயமி சூத்ரா, பிருகத் சூத்ரா, சமத்கார சிந்தாமணி போன்ற நூல்களும் மற்றும் பல முன்னோர்கள் இயற்றிய ஜோதிட நூல்களும் "ஸ்த்ரீ ஜாதகம்' திறம்பட பகுப்பாய்வு செய்யப்பட வேண்டுமென வ−யுறுத்துகின்றன.

பெண்ணின் பிறந்த ஜாதகத்தின் பிரச்சினைகள்

பருவ வயதடைந்த பெண்ணுக்கு பெற்றோர்கள் திருமணத்திற்கான வரனைத் தேர்ந்தெடுக்கும்போது பெண்ணின் ஜாதகம் பல்வேறு கோணங்களால் ஆராயப்படும். காதல் திருமண வாழ்க்கையா, பெற்றோர் தேர்ந்தெடுக்கும் வரனா, கணவனுடன் சேர்ந்துவாழும் காலம், கணவரின் உடல் சார்ந்த தன்மைகள், மகப்பேறு, மலட்டுத்தன்மையின்மை, விதவையாகும் தன்மை மற்றும் மறுவாழ்வு, இரட்டைத் தாரமாக வரன் அமையுமா, கணவனின் பிற தொடர்புகள் ஏதேனும் துன்புறுத்துமா, கணவன் வீட்டில் எப்பேற்பட்ட இடையூறுகளை சந்திக்க நேரிடும், ஏதாவது காரணங்களால் தன் பெண் நிராகரிக்கப்படுவாளா, திருமணத்திற்குப் பின் ஏதேனும் வியாதிகளால் பீடிக்கப்படுவாளா போன்ற பல்வேறு கேள்விகளை பெண்ணைப் பெற்றவர்கள் கேட்பார்கள். திறனுள்ள ஜோதிடர்கள் கூறும் முறையினைப் பின்பற்றி பெண்ணுக்கு வரனைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

Advertisment

பெண் ஜாதகத்ததில் 4-ஆம் வீடான சுகஸ்தானம்- சரீரம்

பெண் ஜாதகத்தில் முதலிலில் லக்னத்திலிலிருந்து 4-ஆம் வீடான சுகஸ்தானத்தை ஆராயவேண்டும். கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சினைகளால் பெண் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதைத் தெளிவுபடுத்திய பின்னரே பிற விஷயங்களைப் பற்றி விவாதம் செய்யவேண்டும்.

பெண் பூப்பெய்தும் நேரத்தைக் கணக்கிட்டு, அந்நேரத்தைக் கணித்துத் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் சில சமூகத்தினரிடையே இன்றும் தமிழகத்தில் உள்ளது. ஒரு பெண் 10 வயதுக்குமேல் 12 வயதுக்குள்ளாக பூப்பெய்துவதே சரியான பருவ வயதடைவதைக் குறிக்கும்.

Advertisment

13 வயதுக்குமேல் பூப்பெய்தாத பெண்ணை, வெண்பட்டுடுத்தி, பூப்பெய்திய பெண்ணைப் போலவே சடங்குகள் செய்தால் அப்பெண் விரைவில் பூப்பெய்துவாள் என்பது திண்ணம். இத்தகைய பரிகார முறை பழைய குறிப்பேடுகளில் கூறப்பட்டுள்ளது. 13 வயதுக்குமேல் பூப்பெய்தாத பெண்ணுக்கு திருமணத்திற்குப் பின் மகப்பேறு காலங்களில் கருப்பை மற்றும் மாத சுழற்சி நோய்கள் தோன்றி மகப்பேறு தாமதமாகலாம் அல்லது மகப்பேறு பாக்கியம் இல்லாமலும் போகலாம்.

சுகஸ்தானமான 4-ஆம் வீடு மற்றும் நோய்க்கான 6-ஆம் வீடு ரோகஸ்தான கிரகத்துடன் தொடர்பு ஏற்படுமானால் நீர்க்கட்டிகள் (ஓவரியன் சிஸ்டு), வலுவிழந்த சினை முட்டைகள் (எம்பிரியோஸ்), மாதசுழற்சிக் கோளாறு (எண்டோமெட்ரியேசிஸ்), பால்வினைத் தொற்றுநோய்கள் (கோனோரியா), கருப்பை நீக்கம் (ஹைஸ்டரிடமி), அடிவயிற்றுவலிலி (பெல்விக் இன்பலமென்ரி), கருப்பைப் புற்றுநோய் (யுட்ரைன் கேன்சர்), கருப்பை சீர்குலைவு (ஓவரின் டிஸ்ஆர்டர்) போன்ற கோளாறுகள் ஏற்படலாம். இதை முன்கூட்டியே அறிய 4-ஆம் வீடு பெரிதும் உதவுகிறது.

இக்காலத்தில் நவீன சிகிச்சைகளால் மேலே குறிப்பிட்ட நோய்களுக்கு விரைவில் தீர்வு காணப்படுகிறது.

பெண் ஜாதகத்ததில் 4-ஆம் வீடு மற்றும் 6-ஆம் வீடுகள் முறையே சூரியன் மற்றும் சுக்கிரன், சனி; செவ்வாய், சனி; சூரியன், சனி; சந்திரன், சூரியன் போன்ற பகை கிரகச் சேர்க்கையாலும், ராகு- கேது போன்ற நிழல் கிரகச் சேர்க்கையாலும், இரண்டுக்கு மேற்பட்ட பகை கிரகச் சேர்க்கைகளாலும் மகப்பேறுகாலச் சிக்கல்கள் ஏற்படும். சனிக்கு மேஷம், சுக்கிரனுக்கு கன்னி, குருவுக்கு மகரம், புதனுக்கு மீனம், செவ்வாய்க்கு கடகம், சூரியனுக்கு துலாம், சந்திரனுக்கு விருச்சிகம் போன்ற நீச வீடுகளாக பெண் ஜாதகத்தில் 4-ஆம் வீடு அமைந்தால் மகப்பேறு காலச் சிக்கல்கள் ஏற்படும். ஜாதகத்தில் சந்திரனின் அமைப்பு, நட்சத்திரப் பொருத்தத்தை மட்டுமே பார்த்துத் திருமணம் செய்வது போன்ற காரணங்களால் திருமணத்திற்குப்பின் மகப்பேறின்றி பெண்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

5-ஆம் வீடான புத்திரஸ்தானம்- மகப்பேறு

ஒரு பருவமடைந்த பெண் திருமணத்திற்குப் பிறகு மகப்பேறு அடையும் காலங்களில் கருச்சிதைவு ஏற்படுமா, குறைமாதப் பிரசவக் குழந்தையா (பிரீமெச்சுர் பேபி), செயற்கைமுறை கருத்தரிப்பா (ஐ.வி.எப்/யூ.வி.எப்), மரபணுமூலம் செயற்கை கருத்தரிப்பா (ஜெனிடிக் முறை) போன்றவற்றைக் கணிக்க லக்னத்திலிலிருந்து 5-ஆம் வீடு, மிகவும் ஆராயப்படுகிறது. 5-ஆம் வீட்டில் அமையும் கிரகங்களைப் பொருத்து குழந்தைகளைக் கணக்கிட்டாலும், மகப்பேறு காலம் எவ்வாறு அமையும் என்பதை கணவன் மற்றும் மனைவியின் தசாபுக்திகள், கோட்சார முறைப்படி சனி, குருவின் கிரக சஞ்சார அமைப்புகள் தெளிவுபடுத்துகின்றன. மேலும் 4-ஆம் வீட்டிற்குக் கூறிய காரணங்களாலேயே மகப்பேறு சிக்கலாகிறது.

பெண்ணின் மகப்பேறு பற்றிய துல்லிய கணிப்பிற்கு, வேத ஜோதிடத்தில் 16 வர்க்க சக்கரத்தில் சப்தாம்ச சக்கரத்தின் தன்மைகளை ஆராய்வதன் மூலமாகவும், சர்வ அஷ்டகவர்க்கத்தின் பிந்துகளின் எண்ணிக்கை மூலமாகவும், சுதர்சன சக்கர அடிப்படையாகக் கொண்டு நாராயண தசா மூலமும் சுகப்பிரசவம் ஏற்படுமா என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். இரு பாலிலின (ஆண் லவ செல்கள், பெண் லல செல்கள்) வளர்ச்சியைக் குறைபாடின்றி வழிநடத்திச்செல்ல சுக்கிரனின் அமைப்பு, ஆதிக்கம் பெண்ணின் ஜாதகத்தில் மிகவும் இன்றியமையாததாகும். எனவே சுக்கிரன் ஸ்த்ரீ ஜாதகத்தில் நீசஸ்தான அமைப்பு, மறைவுஸ்தான ராசி வீட்டில் அமர்வது போன்ற தன்மைகளில் குறைபாடு ஏற்படுமேயானால், ஆண் மற்றும் பெண் தன்மையுடைய மூன்றாம் பாலினம் தோன்றுகிறது. பெண் கருவுற்ற காலத்திலேயே இத்தகைய நோய்களை நவீன மருத்துவ விஞ்ஞான முறையிலும், துல்லிலியமான ஜோதிட பகுப்பாய்வுக் கணிப்பின் மூலமாகவும் கண்டறிந்து உரிய சிகிச்சையளிக்கலாம்.

ஜோதிடத்தில் "ஜரா புத்திர யோகம்' என விவரிக்கப்படும் கிரகச் சேர்க்கை, தற்கால நவீன சிகிச்சைகளால் ஏற்படும் மகப்பேறு (ஜெனிடிக் முறை) அக்காலத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மகாபாரத்தில் பீஷ்மரால் சிறைபிடிக்கப்பட்ட இளவரசிகள் அம்பை, அம்பிகை மற்றும் பணிப்பெண்ணுக்கு, வியாசரின் தவ வலிமையினால் கரு உருவாக்கப்பட்டு திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் என மூன்று புதல்வர்கள் பிறந்தனர்.

அக்காலத்தில் வாரிசு இல்லாத அரச பரம்பரைக்காகவும், குரு வம்சம் தழைக்கவும் இத்தகைய முறை கையாளப்பட்டது. தத்து புத்திர யோகம்- நெருங்கிய சொந்தத்தில் சுவீகாரம் எடுத்துக்கொள்வது, பஹுபுத்திர யோகம்- இரண்டுக்கு மேற்பட்ட குழந்தை பாக்கியம் ஏற்படும் வாய்ப்பு, ஏகபுத்திர யோகம்- குருவுடன் மேலும் பல கிரகங்கள் பஞ்சம ஸ்தானத்தில் இணைந்தால் ஒரு ஆண் வாரிசு மட்டுமே பிறக்கும் என்பது போன்ற குறிப்புகள் ஜோதிடத்தில் உள்ளன. 1-ஆம் அதிபதி மற்றும் வித்யாகாரகனான புதன் கேந்திரஸ்தானமான 4, 7, 10-ல் அமைவது, 5-ல் சூரியன், 8-ல் சனி அமைவது நிரந்தரக் குழந்தையின்மையைக் குறிக்கும். மேலும் 4 மற்றும் 6-ல் சனி மற்றும் செவ்வாய் அமைவது, சூரியன், சனி சமசப்தமமாக அமைவது, 5-ஆம் வீட்டில் சனி மற்றும் சந்திரன், ராகு, செவ்வாய் பார்வை, குரு அசுபருடன் 5 மற்றும் 9-ஆம் வீட்டில் அமைவது, 5-ல் நீச சந்திரன், 5 மற்றும் 6-ஆம் ராசிநாதர்கள் 12-ஆம் வீட்டில் அமைவது போன்ற கிரக நிலைகள் ஆண் குழந்தைகள் பிறக்கத் தடை ஏற்படுத்தும்.

krishnan

7-ஆம் வீடான களத்திர ஸ்தானம் (கணவன்)

ஒரு பெண் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 7-ஆம் வீடான சப்தம ஸ்தானம் கணவனைப் பற்றிய தகவல்களை தெரியப்படுத்துகிறது. 7-ஆவது வீட்டில் ஒரு நன்மை தரும் கிரகம் அமைய திருமணம் மகிழ்ச்சியைத் தரும்.

கணவன், அறிவு, புகழ், பூரணத் தோற்றம், பெருமை, மரியாதை, ஆறுதல், நடத்தை, உடல்நலம், கௌரவம், உயர்கல்வி போன்றவை பெண் ஜாதகத்தில் இன்றியமையாதவைகளாகும். பெண் ஜாதகத்தில் கன்னி நவாம்சத்தில் பிறந்து புதன் அமையப்பெற்றால் கணவர் புத்திசாலிலியாகவும் கற்றறிந்தவராகவும் அமைவார். தனுசு மற்றும் மீன நவாம்சம் அமையப்பெற்றால் கணவர் அனைத்து தகுதி பெற்று, எல்லா உடைமைகளும் கணவனின் ஆளுமையின்கீழ் இருக்கும். சனி 7-ஆம் வீட்டில் அமையப்பெற்றால் திருமணம் நடக்க 32 முதல் 35 வயதுக்கு மேலாகும். மேலும் நவாம்சம் மேஷம் மற்றும் விருச்சிகமாக அமையுமானால், கணவனுக்கு மோசமான அடையாளங்களுடன், பிற மாதர்களின் தொடர்பும் ஏற்படும். சனி, புதன் 7-ஆம் வீட்டில் அமைந்தால் கணவன்- மனைவியிடையே குறைபாடுகள் ஏற்படும். பெண் ஜாதகத்தில் 7-ஆம் வீட்டில் சூரியன் அமையுமானால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்திற்கான வாய்ப்புகள் கூடும். சனி மற்றும் சந்திரன் பார்வையோ சேர்க்கையோ இருந்தால் பிற ஆடவர் துணை ஏற்பட்டு, முறையற்ற திருமணத்திற்குப் (விஷ கன்யா தோஷம்) பின் உறவு தொடரும்.

பெண் ஜாதகத்தில் பல வகையான தோஷங்கள்

களத்திர தோஷம்: முதல் கணவனை குறுகிய காலத்திலேயே இழந்து இரண்டாவது திருமணம் வாய்க்கும்.

ஜீவ களத்ர யோகம்: முதல் கணவனை விவாகரத்து செய்து அவன் உயிருடனிருக்க மற்றோர் திருமணம் நடைபெறும்.

செவ்வாய் தோஷத் திருமணம்: பெண் ஜாதகத்தில் லக்னம் (அ) ராசியிலிருந்து 1, 2, 4, 7, 8 மற்றும் 12-ஆம் வீட்டில் செவ்வாய் அமைவது. 15 முதல் 20 வரையிலான செவ்வாய் தோஷ நிவர்த்தி கொண்ட ஜாதகம் சுத்த ஜாதகமாகவே கருதப்படுகிறது. எனவே சுத்த செவ்வாய் தோஷமற்ற ஆண் ஜாதகத்தையே பொருத்தம் பார்த்து திருமணம் செய்யவேண்டும். ராகு மற்றும் கேதுவைப் பின்பற்றித் தோன்றும் காலசர்ப்ப தோஷமும் பெண் திருமணத்தை பாதிக்கும். கண்டாந்தம், உஷ்ண கடிகை மற்றும் விஷ கடிகை போன்ற வேளைகளில் பிறக்கும் பெண் குழந்தைகள் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவுகளுக்கு திருமண காலகட்டங்களில் அதிக தோஷத்தை உண்டாகும். அத்தகைய நிலையில் பெயர் சூட்டல் தினத்தின்போது பெண் குழந்தைக்குப் பரிகாரம் செய்துகொள்ளலாம்.

அசத்களத்திர யோகம்: முறைதவறிய திருமண கிரகநிலைகள்- முறையே சூரியன், சுக்கிரன் 7, 8-ஆம் வீட்டில் அமைவது, சந்திரனுக்கு 10-ல் சுக்கிரன் அமைவது, சுக்கிரன் மற்றும் சனி 7-ல் அமைவது, சூரியன் 7-ல் அமைவது, சந்திரன், சனி மற்றும் செவ்வாய் கூடியிருத்தல் போன்ற பல காரணங்களாகும். எண்வகை திருமணங்களில் ராட்சஸம் மற்றும் பைசாசம் போன்ற முறையற்ற வகை திருமணமாக அமையும்.

காதல் திருமண கிரகநிலைகள்: 1 மற்றும் 5-ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை, சந்திரன், சுக்கிரன் மற்றும் செவ்வாய் 5-ஆம் வீட்டில் அமைவது, சுக்கிரன் 2 மற்றும் 7-ல் வலுப்பெற்றிருத்தல், 9-ஆம் வீடு நீசம்- பாவ கிரகங்கள் சேர்க்கை, கேது மற்றும் புதன் 2, 7, 9-ஆம் வீடுகளில் அமைவதாகும்.

பெண் தாமதத் திருமணம்: 2 மற்றும் 6-ஆம் அதிபதிகள் சப்தம ஸ்தானத்தில் அமைவது, 7-ல் சனி அமைந்து மிதுனம், சிம்மம் களத்திர ஸ்தானமாக அமைவது, சூரியன், சுக்கிரன் 7-ல் அமைய சந்தோஷமில்லா இல்வாழ்க்கை அமையும். சனி, செவ்வாய் 7-ல் அமர தாமதத் திருமணம் அல்லது 2-ஆவது மனைவியாகும் அமைப்பு உருவாகும். இத்தகைய சிக்கல்களுக்கு ஈடாக ஆண் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பின் (லக்னத்திலிலிருந்து குரு 2, 5, 7, 9, 11-ல் அமையுமாயின்) பெண் ஜாதகத்திற்குப் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்தால் ஓரளவு பெண்ணின் திருமணப் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

8-ஆம் வீடான மாங்கல்ய ஸ்தானம் (விதவை மற்றும் மறுவாழ்வு)

பெண் ஜாதகத்தில் 8-ஆம் வீட்டில் அமையும் கிரகத்தைப் பொருத்தே கணவனின் வளம் தெரியவரும். 7-ஆவது வீட்டிலிலிருந்து 8-ஆம் வீடு, இரண்டாம் வீடாகவும், 8-ஆம் வீடு கணவரின் மரணத்தைக் குறிப்பதாக உள்ளபடியால், கணவனின் ஆயுள் பலத்தை நிர்ணயிக்க பெண் ஜாதகத்தில் 8-ஆம் வீட்டில் சுப கிரகமாக அமைதல் வேண்டும். 8-ஆம் வீட்டில் பாவ கிரகங்கள் அமையுமானால் விதவைத்தன்மை மற்றும் திருமண மறுவாழ்வு பற்றி நன்கு பகுப்பாய்வு செய்யவேண்டும். பெண்ணின் ஜாதகத்தில் அசுபர் 6 மற்றும் 8-ல் அமைவது, 8-ஆம் அதிபதி 7-ல் அமைய அசுபர் பார்வை ஏற்படுவது, சனி, ராகு மற்றும் செவ்வாய் 7-ல் அமைவது, 9-ல் அசுபர் பார்க்க, சந்திரன் மற்றும் ராகு- கேது பார்வை 8-ல் அமைவது, 7-ஆம் அதிபதி சனியுடன் அமைந்து சந்திரன், செவ்வாய் பார்வை பெறுவது போன்ற மேலும் பல காரணங்களால் பெண் கணவனை இழந்து விதவையாக நேரிடுகிறது. ஆண் ஜாதகத்தில் குருவின் அமைப்பைப் பொருத்தும் பெண்ணின் விதவை நிலையறியலாம்.

9-ஆம் வீடான பாக்யஸ்தானம்

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 9-ஆம் வீடானபாக்யஸ்தானம் அனைத்துவித வளங்களையும் குறிக்கும். 9-ஆம் வீட்டில் அமைந்த சுபகிரகங்கள் திருமணத்திற்குப் பின் பெண்ணின் அமைதியான வாழ்க்கையைக் குறிக்கும். 9-ஆம் வீடு 16 செல்வங்களைக் குறிக்கும். 9-ஆம் வீட்டின் அமைப்பால் மனைவியால் கணவனுக்கு ஏற்படும் ஏற்றமான வாழ்க்கை, செல்வ வளம், குழந்தைகள் பிறப்பு, வளர்க்கும் முறை முதலியன அறியப்படுகின்றன. பெண் ஜாதகத்தில் அமையும் 9-ஆம் வீடு 7-ஆம் வீட்டிற்குச் சமமான வீடாகும்.

எனவே, ஒரு பெண்ணின் பிறந்த ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலிலிருந்து 4, 5, 7, 8 மற்றும் 9-ஆம் வீடுகளை பிரத்யேகமான முறையில் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். அத்தகைய பகுப்பாய்வு முறை திருமணத்திற்குப் பின் வரும் தீய விளைவுகளைக் களைய இன்றியமையாத ஒன்றாகும்.

செல்: 98401 96422