ரு விசேஷ வீட்டுக்குள் பலர் நுழையும்போது, ஓரிரு நபர்கள் சத்தமாக "என்னால்தான் இந்த விழாவே நடக்கிறது' என்று தற்பெருமை பேசிக் கொள்வார்கள். ஆனால் சிந்தையில் தெளிவுபெற்றவர்கள் மிகப்பெரிய செயலைச் செய்திருந்தாலும் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்துவிட்டு வருவார்கள்.

Advertisment

அதுபோல நம் கண்களுக்குப் புலப்படாதபடி மகரிஷிகளாய்- காக்கும் தெய்வங்களாய் மூலிகை கள் இருக்கின்றன. அவை நம் உடலுக்குள் சென்றால் தங்கள் பணிகளை அமைதியாகச் செய்து வெற்றி யடையச் செய்கின்றன. அதனால்தான் மூலிகைகளை தெய்வகடாட்சம் உடையவையென்று புகழ்ந்து பேசுகின்றனர். மருந்துக்காகவும் உணவுக்காகவும் நாம் உண்ணும் இலைகள், கீரைகள் அனைத் துமே நம்மைக் காக்கும் தெய்வங்கள் என்று அறியவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் பல குடும்பங்களில் குழந்தை பாக்கியம் இல்லாமல் பலரும் அவதிப் படுகின்றனர். அனைவருக்கும் கிடைக்கவேண்டிய இந்தப் பேறு சில பெண்களுக்கு மட்டும் தடை யாவதற்குக் காரணம், அவர்கள் தங்கள் உணவில் மூலிகைகளைச் சேர்த்துக்கொள்ளாததே என்றும் அறியவேண்டும்.

மருத்துவ விதிகளை எடுத்துக்கூறும் அதர்வண வேத வாக்கியங்களில் அரக்கர், பிசாசு, யக்ஷகர், கின்னரர் என்னும் பெயர்கள் நோய்களைத் தோற்றுவிக்கும் கிருமிகளைக் குறிப்பிடுகின்றன.

Advertisment

அவை அழிக்கப்பட வேண்டுமென்று கும்பாபிஷேக காலத்திய மந்திரங்களில் விவரமாகச் சொல்லப் பட்டுள்ளன.

சூரியன் எப்போது கிழக்கே உதிக்கிறானோ அந்த நேரத்தில் நம் உடலிலுள்ள கிருமிகளை அழிக்கிறான். தனது பொன்மயமான கதிர்களை வெளியிடும்போது, உதயகாலத்தில் ராட்சஸர்கள், யாதுதானர்கள் என்னும் நோய்க் கிருமிகளைப் பூரணமாக அழித்துவிடுகிறான்.

சிவபெருமானுக்குரிய ருத்ர மந்திரத்தில் "ரோதயந்தீத்ரு ருத்ர' என்னும் வாக்கினால், ருத்ரன் என்றால் அழவைப்பவன் என்னும் பொருளோடு, நோய்களை அழிப்பவன் என்றும் வர்ணிக்கப்படுகிறார்.

Advertisment

யஜுர் வேதத்தின் கூற்றுப்படி, இந்த உலகின் எல்லா திசைகளிலும் ஆயிரக்கணக்கான கிருமிகள் பரவியிருக்கின்றன. இவற்றுக்கு ருத்ரகூட்டம் என்றே பெயர். இவை வானத்தில் திரிந்தபடியே இருக்கும். வீட்டில் முறையாக யாகம் செய்யாதவனை இவை ஆக்கிரமித்து தடைகளை உண்டாக்குகின்றன. தாமிர நிறமுடைய சிவப்பு, கோதுமை நிறம், நீலநிறக் கழுத்து, வெண்ணிறக் கழுத்துடைய ருத்ரரூபக் கிருமிகள் ஆகாயத்திலும் கடலிலும் இருக்கின்றன. மரங்கள்மீதும் பச்சையாக உள்ளன. மொட்டைத்தலைபோலவும், சடை உள்ளனவாகவும் சில வாயு மண்டலத்தில் திரிந்துகொண்டிருக்கின்றன. சுக்ல யஜுர் வேதத்தின் 16-ஆவது அத்தியாயம் இவற்றை வகைப்படுத்திக் கூறுகிறது.

நுண்கிருமிகளைப் பற்றி அதர்வண வேதம், "உலகில் வசிக்கும் மனிதர்களே, கந்தர்வ, அப்சரஸ, அராதி ராக்ஷச, பிசாசங்கள் எனும் பெயர் கொண்ட ஜீவ அணுக்கள் நம்மிடமிருந்து தூர விலகியிருக்கட்டும்' என்று குறிப்பிட்டுச் சொல்கிறது. இந்த நோய்க் கிருமிகளை அகற்றி குழந்தை பாக்கியம் தரும் தெய்வ விருட்சங்கள் நம்மிடம் கீரைகள், இலைகள் என்னும் பெயர்களில் சூழ்ந்துள்ளன. அவற்றுள் வாரிசு தரும் சக்தியுள்ள விருட்ச கற்பங்களை அறிந்து பயனடைவோம்.

ff

உடல்வினை அகற்றும் முருங்கை

இந்த மரத்தை வீட்டில் வளர்த்தால் பேய் பிசாசுகள் வந்து தங்கும் என்னும் தவறான செய்தி பலரால் பரப்பப்பட்டு வந்தது. வீட்டில் சமைக்க எதுவுமில்லாத ஒரு பெண் எதிர்வீட்டுக்குப் போய் முருங்கைக் கீரையைக் கேட்டாள்.

அவள், "தர இயலாது; இளஞ்செடியாக உள்ளது' என்று கூற, "அதை வளர்த்தால் பேய் வந்து தங்கும்' என்று இந்தப் பெண் சொல்லிவிட்டாள். இவ்வாறு பரப்பப்பட்டதே மேற்சொன்ன செய்தி. ஆனால் சிலகாலம் கழித்து இதன் மகத்துவம் தெரிந்து வளர்த்துவந்தார்கள். உடல் வலுப்பெற தினமும் உண்ணவேண்டிய கீரைகள் ஐந்து. அவை தாளி, முருங்கை, தூதுவளை, பசலை, அரைக்கீரை. இவற்றுள் ராணிபோல திகழ்வது முருங்கை. இந்த மரமே சக்தியின் அம்சமாக விளங்குவதால், அம்மனுக்குக் கூழ் வார்க்கும்போது முருங்கைக்கீரை படையலாக வைக்கப்படுவதை கவனிக்கவேண்டும்.

முருங்கைப்பூ, பிஞ்சு, பிசின் ஆகியவற்றை பொரியல் செய்து சாப்பிட்டு வர ஆண்மைபலம் பெருகி குழந்தை உண்டாக வழியேற்படும்.

"செறி மந்தம் வெப்பந் தெறிக்கும் தலைநோய்

வெறி மூர்ச்சை கண்ணோய் விலக- நல்ல

முருங்கை இலையை மொழி'

என்கிறது சித்தர் பாடல். நமது உடல் வலிமை பெற இந்த தெய்வீக மரம் பயன்பட்டாலும், அதன் தண்டு, கிளைப் பகுதிகள் வலிமையின்றியே காணப்படும். பர்மாவில் குழந்தை பெற்ற தாய்களுக்கு பத்து நாட்கள்வரை "ஹின்ஜோ' என்னும் பெயரில் முருங்கை இலை சூப் வைத்துக் கொடுக்கிறார்கள்.

நவகிரகங்களில் சந்திரனின் அம்சமுடைய மூலிகையாக முருங்கை பயனாகிறது. இதை அதிகம் பயன்படுத்திவர அழகான பெண் குழந்தை பிறக்க வாய்ப்புண்டாகும்.

புதுத் தெம்புதரும் பூவரசு

மரங்களுக்கெல்லாம் அரசனைப் போன்றது அரசமரம். "அஸ்வத்த சர்வ விருக்ஷானாம்' என்று கிருஷ்ண பரமாத்மா, "மரங்களில் நான் அரசாக இருக்கிறேன்' என்று கூறியுள்ளார். பிரயாகை முதலிய புண்ணியத் தலங்களில் கங்கையாற்றின் கரையிலுள்ள அரச மரங்களை போதிமரம், ஞானமரம் என்று போற்றி வணங்குகிறார் கள். பிப்பலாதர் என்னும் மகரிஷி இதில் வாசம் செய்வதாக உபநிடதங்க ளில் தகவல்கள் உள்ளன.

அரசமரத்தின் வகை களாக அஸ்வத்தம், க்ஷீத்ர அஸ்வத்தம் பாரிஷம், நந்தி விருட்சம் என்னும் நான்கு வகைகள் உள்ளன.

இவற்றுள் பாரிஷம் என்னும் பூவரசு, ஜீவன் குறைவாகவுள்ள ஆண் களுக்கு சக்தியூட்டும் தெய்வீக குணம்கொண்ட அருமருந்தாகப் பயன் படுகிறது. அரைத்து உண்டால் வாத- பித்தங் களை அகற்றி, விந்தனுக்களைத் தோற்றுவிக் கும் தன்மையுடையதாக விளங்குகிறது. இத்துடன், நீர் நிறைந்த வாய்க்கால்களில் வளரும் நீர்முள்ளிச் செடியின் இலை, விதை களைச் சேர்த்து பசும்பாலுடன் அருந்திவர திடமான குழந்தை பாக்கியம் கிட்ட வழி ஏற்படும். இந்த நீர் விருட்சம் குழந்தையில்லாத தம்பதிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்பது பலரும் அறியாத ரகசியம். இதன் விதைகளை சூரணம் செய்து, சர்க்கரை சேர்த்துக் காய்ச்சிய பசும்பாலுடன் கலந்து குடித்துவர ரத்தம், தாது விருத்தியாகி ஆண் சந்ததியைக் கொடுத்துவிடும்.

வம்சம் தழைக்க வரம்தரும் ஆல விருட்சம்

தட்சிணாமூர்த்தியின் வடிவம் ஆலமரமென்று சாத்திரங்கள் கூறுகின்றன. ஆலமரத்தின் கீழமர்ந்து தட்சிணாமூர்த்தி, சீடர்களுக்கு இறைவனை வணங்கி முக்தி பெறும் வழியை உபதேசம் செய்தார். பிரளய காலம் வந்தபோது, சிறு குழந்தை வடிவில் ஆல இலையில் படுத்தபடி காட்சியளித்தார் திருமால். அரசமரத்தின்கீழ் பிள்ளையார் அமர்ந்திருப்பதைப்போல, ஆலமரத்தடியி லும் அமர்ந்து அருள்பாலிப்பது குழந்தை பாக்கியம் தருவதற்கே என்பதைப் பெண்கள் அறியவேண்டும்.

ஸ்ரீமத் இராமாயண கதையில் பஞ்சவடி என்னும் ஆலமரம் மிக சக்தி வாய்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதன் தெய்வத்தன்மையையும் குழந்தைப்பேறு தரும் சக்தியையும் அறியாத தம்பதியர் பலர், மருத் துவர்களிடம் சென்று பலவித பரிசோதனைகளைச் செய்து கருப்பை மற்றும் உடல் பாகங் களின் திறனை இழந்துவிடு கின்றனர்.

ஆலமரத்தின் தன்மை களை விளக்கும் பெயர்கள்: ரக்தபலம்- சிவப்புநிறப் பழங்களைக் கொண்டது; நியக்ரோதம்- வழியைத் தடுத்துப் பரவி வளர்வது; சிருங்கி- கொம்புகள்போன்று துளிர்விடும் தன்மை கொண்டது; பகுபாதம்- பல விழுது களை அடிகளாகக் கொண்டது; க்ஷீரம்- பால் விடும் தன்மையுடையது; வநஸ்பதி- மலர்களை விடாமலே காய்களை உதிர்ப்பது; மகச்சாயம்- பரந்த நிழலைத் தரும் நற்குணம் கொண்டது.

கருவளர் ரகசியம்

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை பெறமுடியாமல் வருந்தும் பெண் மணிகள், தங்கள் வாழ்வுக்குக் கண்மணியாய் ஒரு பிள்ளையைப் பெற்றெடுக்க, பூச நட்சத்திர நாளில் ஆலமரத்திற்கு குருபூஜை செய்து, மஞ்சள் மலரால் அர்ச்சனை செய்து,

"ஓம் ஐம் க்லீம் பிருஹஸ்பதயே நம

ஓம் ப்ரூம் பிருஹஸ்பதயே நம

ஓம் ஹரீம் ஸ்ரீம் க்லீம் ஐம்

க்லௌம் க்ரஹாதிபதயே நம

பிருஹஸ்பதயே ப்ரீம் ட: ஸ்ரீம் ட:

ஐம் ட: ஸ்வாஹா'

என்னும் சக்திதரும் மூலமந்திரத்தை 16 முறை ஜெபித்து, அதன் வடக்கு அல்லது கிழக்கு திசையில் வளர்ந்திருக்கும் இரண்டு ஆல மொட்டுகளை (இலைவிடும் துளிர் களை) எடுத்துப் பாலுடன் உட்கொள்ள வேண்டும். இவ்வாறு மூன்று மாதங்கள் செய்துவரவேண்டும்.

ஆலமரத்தின் பெருங்கிளைகளில் பக்கவாட்டில் வெள்ளைநூல் சுற்றியது போன்று மெல்லியதாக இழை காணப்படும். கண்ணுக்குத் தெரியாத இந்த அபூர்வ வேருக்கு "பதனிகா' என்று பெயர். இந்த வேரை பூஜைசெய்து எடுத்துவந்து அரைத் துப் பாலுடன் சேர்த்துக் குடித்திட, பிள்ளை பெறத் தகுதியில்லாதவள் என்று கூறப்பட்ட பெண்ணும் கருவுற்றுப் பிள்ளை பெறுவாள் என்பது உறுதி.

ஆலமரத்தின் விழுதை முறைப்படி பூஜைசெய்து, ஞாயிற்றுக்கிழமைன்று திலகமாக்கி நெற்றியில் இட்டுவர, அரசாங்க அனுகூலம், பதவி உயர்வு தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும் என்பது புலிப்பாணி சித்தர் கூறிய கூடுதல் செய்தி.

"நயமாக ஆல் விழுதை அருக்க நாளில்

நீளப்பா மகாமோகி நீராகாரம்

தாளப்பா ஒரு வெட்டாய் கையிலேந்தி

தயவாக சட்டியிலே பற்பம் பண்ணே'

என்பது செய்யுள்.

குழந்தை பாக்கியத் தடை ஏன்?

திருமணமாகி ஐந்தாண்டுகள் கடந்தபிறகு, பெண்ணைக் கொடுத்தவரும் எடுத்தவரும் கேட்டுக்கொள்ளும் பரஸ்பரமான கேள்வி இது. இதற்கு சரியான காரணங்கள் மூன்றைச் சொல்லலாம்.

ஜாதகங்களைப் பொருத்துகிறபோது பத்துவிதப் பொருத்தத்தில் முக்கிய வேத வாக்கியப்படியான விதிகளைப் பார்க்காமல் முடிவுசெய்வது.

"த்ருதீயே சகலம் க்ராஹ்யம் வதவைநாசிகம் விநா'- ஆண் 7-ஆவது நட்சத்திரமாகவோ, பெண் ணுக்கு 22-ஆவது நட்சத்திரமாகவோ இருந்து விடக்கூடாது.

அடுத்து, "மாஹேந்திராத் புத்திர விருத்தி ஸ்யாத்'- தம்பதிகளுக்கு குழந்தைச் செல்வம் ஏற்பட மாகேந்திரம் அவசியம். ஜாதகங்கள் இரண்டு பேருக்கும் ஐந்து பொருந்திவிட்டாலே திருமணம் செய்துவிடுவது தவறு.

அடுத்ததாக யோனிப் பொருத்தம் பார்க்காமல் விடுவது. "யோநிகோ தம்பதி சிநேகஹ'- இவர்கள் மனதார விரும்பி வாழ்க்கை நடத்தினால்தானே கரு உண்டாகும்? அடுத்து காணவேண்டியது குழந்தைச் செல்வம் என்னும் வம்ச விருத்திக்கான, "ராசீனாம் வம்ச விருத்தி க்ருதஹ'- ராசிப் பொருத்தம். இவை முதல் காரணத்தில் வருபவை.

இரண்டாவதாக, மணமக்களை இணைக் கும்போது குடும்ப தெய்வ, இஷ்ட, குல தெய்வ வழிபாட்டைப் புறந்தள்ளி, ஆடம்பரத் துக்கு முக்கியத்துவம் கொடுத்து, வேத சாஸ்திர விதிகளை மதிக்காமல் 15 நிமிடங் களில் தாலிகட்டி திருமணத்தை நிறைவு செய்வது. இது எண்வகைத் திருமணங்களில் ஐந்தாவதாக சொல்லப்படும் ஆஸுரம் என்னும் ராட்சச வகை திருமணத்தைக் குறிக்கும். இதன் விளைவாக குழந்தைப்பேறு உண்டாகாத நிலை ஏற்பட வாய்ப்புண்டு.

மூன்றாவதாக, ஆச்சாரியன் என்னும் குரு நிந்தனைக்கு ஆளாகிவிடுதல். திருமணம் நடத்த வந்திருக்கும் வேத பண்டிதரோ புரோகிதரோ மணமேடையில் பிரகஸ்பதி என்னும் குரு வாகிறார். அவர் சொல்லும் சாஸ்திர விதிகளை மதிக்காமல் தங்கள் விருப்பப்படி பேசுவது, மந்திரங்களை மதிக்காமல் மனம்போன போக்கில் சடங்குகளை அவசரமாக முடிப்பது. இத்தகைய காரணங்களால் வம்சவிருத்தி கேள்விக்குரியதாகிறது. இந்நிலையை சரிசெய்துகொள்வது நலம் தரும்.

லக்னம் அல்லது ராசிக்கு 5-ல் பாவிகள் நிற்பது, 5-க்குடையவன் நீசமாவது, ராகு தனியாக நிற்பது குழந்தைப் பிறப்பைத் தாமதப்படுத்தும். முருங்கையும் பூவரசும் ஆலும் அரசும் வம்சம் தழைக்க நிற்கும்போது, குருவை வணங்கி அறிவுடைய மக்கள்செல்வம் பெறுவோம். பிறவி ஜாதகத்தை ஆராய்ந்து புத்திர லாபம் அடைவோம்.