திருமணம் செய்துகொள்ளத் தகாத மாதங்களாக ஜோதிட சாஸ்திரம் சொல்வது, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி மற்றும் பங்குனி மாதத்தின் 15-ஆம் தேதிக்குப் பின் வருகின்ற 15 நாட்கள், இவ்விதம் நான்கரை மாதங்கள் திருமணம் செய்துகொள்ளத் தகாத மாதங்கள் என்று சொல்லப் பட்டுள்ளது அவ்வாறு திருமணத்திற்கு உகந்த நட்சத்திரமாக 11 நட்சத்திரங்கள் மட்டுமே வரையறுக் கப்பட்டுள்ளது. அவைமூலம், ரேவதி, மகம், சுவாதி, மிருகசீரிடம், ரோகிணி, அனுஷம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்தம் என்பவை ஆகும். மேலும் சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி, திரையோதசி போன்ற திதிகளில் திருமண மூர்த்தம் செய்வது நலமன்று. மேலும் மாதத்தின் கடைசி நாள் (தமிழ் மாதத்தின்), திதிகளின் சந்திப்பில், நட்சத்திர சந்திப்பில், திருமணம் செய்யாதிருப்பதுவே நலம். இவை எல்லாம் கடுமையான தோஷத்தைத் தரும் என்று சாஸ்திரங் கள் சொல்லுகின்றன.
அவை எத

அவை எத்தகைய தோஷம் என்பதனை இங்கே வெளிப்படையாகக்கூறி அச்ச மூட்டுவதற்கு நான் தயாரில்லை. எனவே திதி சந்தியில், நட்சத்திர சந்தியில், முகூர்த்தம் நடை பெறாது இருப்பதற்கு துல்லியமான நாள்காட்டியும்' பஞ்சாங்கமும் தேவை என்பதனை மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். மேலும் குறிப்பிட்ட நட்சத்திரங் களில் எந்த சுபகாரியமும் செய்யலாகாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. அந்த நட்சத்திரங்களிலும் முகூர்த்தம் வைக்காமல் இருப்பது நலம். அவை பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி இந்த நட்சத்திரங்களிலும் நாம் திருமணம் சம்பந்தமான எந்த சுபகாரியங்களையும் செய்தல் கூடாது என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள் .அஷ்டமி என்னும் திதியைப் பொருத்தமட்டில் தேய்பிறையில் வருகின்ற அஷ்டமியில் திருமணம் மட்டும் செய்துகொள்ள லாம் என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. அதேவேளையில் வளர்பிறை அஷ்டமி யில் திருமணம் செய்துகொள்வதை சாஸ்திரங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி திருமணத்தைத் தவிர அஷ்டமியில் மற்ற எந்த சுபகாரியங் களையும் செய்வது நலமன்று. பொதுவாக வளர்பிறையில்தான் முகூர்த்தங்களை வைப்பார்கள் .அவ்வாறு என்றால் தேய் பிறையில் முகூர்த்தம் வைக்கக்கூடாது என்பது பொருளன்று. வளர்பிறையில் முகூர்த்தம் கிடைக்காதபோது தீமை தராத நாட்களை, நட்சத்திரங் களை மற்றும் திதிகளை' முகூர்த்த விதிகளை நன்கு அறிந்து, உணர்ந்து தேய்பிறையிலும் முகூர்த்தம் வைத்துக்கொள்ளலாம் என்பதே உண்மை. எனினும் பொதுவாக தேய்பிறையில் முகூர்த்தம் வைக்கமாட்டார்கள். வளர்பிறை- தேய்பிறை மட்டுமே முகூர்த்தமன்று' எண்ணற்ற முகூர்த்த விதிகள் இருக்கின்றன.
எண்ணற்ற தீமை தருகின்ற நேரங்கள் இருக்கின்றன, இவற்றையெல்லாம் விலக்கித்தான் நாம் மூர்த்தங்களைத் தேர்வுசெய்யவேண்டும். திருமண வேளையிலே அந்த காலத்தில் கோட்சாரப்படி பெண் அல்லது ஆணின் ராசிக்கு ஏழில் பாவகிரகங்கள் இருப்பது நலமன்று. அதிலும் செவ்வாய் இருந்தது என்றால் அந்த காலத்தில் முகூர்த்தங்கள் வைக்காமல் இருப்பதுதான் சிறப்பு. பாவக்கிரங்களின் வாரங்களில் திருமணம் செய்துகொள்ளகூடாது என தமிழ்ப் பாடலொன்று சொல்கின்றது. ஆனால் பெரும்பான்மை நூல்கள் எல்லா வாரங்களிலும் சுபமுகூர்த்தம் வைப்பதை ஒப்புகொள்கின்றன. தற்போதெல்லாம் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தம் என்று முகூர்த்தங்களை வைக்கின்றார்கள் அந்த பிரம்ம முகூர்த்தத்திற்கும் சுப முகூர்த்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதேவேளையில் அதிகாலையில் முகூர்த்தம் வைக்கும்போது நாம் மிக்க கவனமாக இருக்கவேண்டும். காரணம் இப்போதெல்லாம் பெரும்பான்மையான ஜோதிடர்களும் புரோகிதர்களும் அதிகாலையில் முகூர்த்தம் வைக்கிறார்கள் அவ்வாறு முகூர்த்தம் வைக்கின்ற வேளையில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது ஞாயிறு- துவாதசி திதி, திங்கள்- ஏகாதசி திதி, செவ்வாய்- பஞ்சமி, புதன்- துவிதியை, வியாழன்- சஷ்டி திதியாகவும் வெள்ளி- அஷ்டமி திதியாகவும் இணைந்து கொண்டபோது இவற்றிற்கு தத்த யோகம் என்று சொல்லுவார்கள்.
இவ்வாறு வருகின்ற வேளை நீங்கள் அதிகாலையில் முகூர்த்தம் வைத்தீர்கள் என்றால் கடுமையான தோஷங்கள் ஏற்படும் என்பதனை உணருங்கள். அதுபோன்று விஷ்டி கரணம் என்னும் பத்திரை கரணத்தில் முகூர்த்தம் வைப்பது கடுமையான விளைவுகளைத் தரும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றது. அவ்வாறே அஸ்வினி, மகம், மூல நட்சத்திரங்களின் முதல் பாதத்திலும், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்களின் கடைப்பாதத்திலும் முகூர்த்தங்கள் வைக்காமல் இருப்பது சிறப்பு. அதுபோன்று மணமகளின் ஜென்ம நட்சத்திரத்தில் முகூர்த்தம் வைக்கலாம். எனவே நாம் வளமோடு வாழ்வதற்கு முகூர்த்தம் மிக முக்கிய மாகிறது.
செல்: 94438 08596