Advertisment

ஐஸ்வர்யம் பெருக்கும் ஐராவத பூஜை ரகசியம்!

/idhalgal/balajothidam/secret-ashwarayam-puja-secret

யற்கையைக் கடவுளாக வழிபடுவது நம் மரபு. அவ்வாறே உயிரினங்களும் வணங்கப்படுகின்றன.

Advertisment

அவற்றில் ஒன்றுதான் அஷ்டமங்கள வரிசையில் இடம்பெறும் விநாயகரின் மறுவடிவான யானை.

தாமரை, சந்தனம், ஸ்வஸ்திகம், கண்ணாடி, தீபம், வலம்புரிச்சங்கு, தாம்பூலம் வரிசையில் மரச்சீப்பு அல்லது யானையின் வடிவத்தையும் வைக்கலாம் என்று வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன. தேவாலய பூஜாக்ரம விதிகளில் தாம்பூலத்திற்கு பதில் த்வஜம் என்ற கொடி மங்களப் பொருளாக வைக்கப்படுவது சற்று மாறுபட்ட ஒன்று.

மிகப்பெரிய உருவமாக உள்ள யானைக்குள் என்ன இருக்கிறது? கேரளத்து அரசு சின்னங்களில் வலம்புரிச்சங்கு, யானையின் துதிக்கைகள் பயன்படுத்தப்படுகிற ரகசியம்தான் என்ன? யானையை விலங்காகவும், அரிய பெரிய உருவமாகவும் பார்க்காமல், அதை தெய்வத்தன்மை பொருந்திய மங்கலச் சின்னமாகப் பார்த்து வழிபட்டால் நிதி மற்றும் கடன் பிரச்சினைகள் தீர்ந்து வியாபார விருத்திகள் உண்டாகும்.

Advertisment

குமரேச சதகம் எடுத்துரைக்கும் பாடலை கவனித்தால், மகாலட்சுமி சாம்ராஜ்ய சுகத்தைத் தருகிற திருமகளாக பசுவின் தொழுவத்திலும், மன்னர்களின் தோள்களிலும், வலம்புரிச்சங்கிலும், யானையின் மேலும், யானை வடிவங்களிலும் வீற்றிருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறது.

தேவேந்திரனின் வாகனச் சிறப்பு தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் சகலபோக பாக்கியங்களுக்கும் அதிதேவ

தேவேந்திரனின் வாகனச் சிறப்பு தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் சகலபோக பாக்கியங்களுக்கும் அதிதேவதையாக விளங்குபவன். அவனை போகப்ரியன், போகி என்றுதான் அழைப்பார்கள். இந்திரனது அழகுக்கும் புஜவலிமைக்கும் நிர்வாகத்திறமைக்கும் அவனுக்குப் பரிசாகக் கிடைத்ததே ஐராவதம் என்ற ஐஸ்வர்யம்தான். இதன்மேல் அவன் அமர்ந்திருக்கும்போது மிகவும் அழகாகவும் தெய்வத்தன்மை பொருந்தியவனாகவும்- அதேசமயத்தில் ஆணவம் மிக்கவனாகவும் காட்சி தருவான்.

 Ashwarayam

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது ஐராவதம் என்னும் ஐஸ்வர்யம் மிக்க யானை தோன்றி, பொறுமையுடன் காத்துக்கொண்டிருந்த இயற்கையைக் கடவுளாக வழிபடுவது நம் மரபு. அவ்வாறே உயிரினங்களும் வணங்கப்படுகின்றன.

அவற்றில் ஒன்றுதான் அஷ்டமங்கள வரிசையில் இடம்பெறும் விநாயகரின் மறுவடிவான யானை.

தாமரை, சந்தனம், ஸ்வஸ்திகம், கண்ணாடி, தீபம், வலம்புரிச்சங்கு, தாம்பூலம் வரிசையில் மரச்சீப்பு அல்லது யானையின் வடிவத்தையும் வைக்கலாம் என்று வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன. தேவாலய பூஜாக்ரம விதிகளில் தாம்பூலத்திற்கு பதில் த்வஜம் என்ற கொடி மங்களப் பொருளாக வைக்கப்படுவது சற்று மாறுபட்ட ஒன்று.

மிகப்பெரிய உருவமாக உள்ள யானைக்குள் என்ன இருக்கிறது? கேரளத்து அரசு சின்னங்களில் வலம்புரிச்சங்கு, யானையின் துதிக்கைகள் பயன்படுத்தப்படுகிற ரகசியம்தான் என்ன? யானையை விலங்காகவும், அரிய பெரிய உருவமாகவும் பார்க்காமல், அதை தெய்வத்தன்மை பொருந்திய மங்கலச் சின்னமாகப் பார்த்து வழிபட்டால் நிதி மற்றும் கடன் பிரச்சினைகள் தீர்ந்து வியாபார விருத்திகள் உண்டாகும்.

குமரேச சதகம் எடுத்துரைக்கும் பாடலை கவனித்தால், மகாலட்சுமி சாம்ராஜ்ய சுகத்தைத் தருகிற திருமகளாக பசுவின் தொழுவத்திலும், மன்னர்களின் தோள்களிலும், வலம்புரிச்சங்கிலும், யானையின் மேலும், யானை வடிவங்களிலும் வீற்றிருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறது.

தேவேந்திரனின் வாகனச் சிறப்பு

தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் சகலபோக பாக்கியங்களுக்கும் அதிதேவதையாக விளங்குபவன். அவனை போகப்ரியன், போகி என்றுதான் அழைப்பார்கள். இந்திரனது அழகுக்கும் புஜவலிமைக்கும் நிர்வாகத்திறமைக்கும் அவனுக்குப் பரிசாகக் கிடைத்ததே ஐராவதம் என்ற ஐஸ்வர்யம்தான். இதன்மேல் அவன் அமர்ந்திருக்கும்போது மிகவும் அழகாகவும் தெய்வத்தன்மை பொருந்தியவனாகவும்- அதேசமயத்தில் ஆணவம் மிக்கவனாகவும் காட்சி தருவான்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது ஐராவதம் என்னும் ஐஸ்வர்யம்மிக்க யானை தோன்றி, பொறுமையுடன் காத்துக்கொண்டிருந்த இந்திரனிடம் சென்று அவனைத் தன்மீது ஏறும்படி பணித்தது. அவன் ஏறியமர்ந்தபோது தேவர்கள் மிகவும் பொருத்தமான இடத்தில்தான் ஐஸ்வர்யம் வந்து சேர்ந்திருக்கிறது என்றுகூறி பூமாரி பொழிந்தார்கள். இந்திரனை ஐராவதத்துடன் பூஜை செய்பவர்களுக்கும் தன் வீட்டில் காட்சிப்படுத்தி வணங்குபவர்களுக்கும் திடீரென்று அரசு, அரசியல் தொடர்பான பதவிகளும் ஐஸ்வர்யங்களும் கிடைத்துவிடும் என்பது நிதர்சனமான உண்மை.

வீடுகளிலும் மிகப்பெரிய தொழிற் சாலைகளிலும் யாகபூஜைகள் தொடங்குகிறபோது, இரண்டு மந்திர வாக்கியங்களால் இந்த மங்களகரமான கஜம் என்னும் ஐராவத யானை பூஜை செய்யப்படுகிறது என்பது பலரும் அறியாத ரகசியம். அந்த மந்திரவாசகத்தில்-

"ககுத தவளவர்ணம்

பூர்ணலக்ஷ்மீ ப்ரசன்னம்

மதகஜ முகமீட்யம்

சஞ்சலத் கர்ண யுக்மம்'

என்று சொல்லப்படுகிறது. இந்த மந்திரத்தை கணபதி பூஜை செய்யும்போது துதியாகக் கூறியபின், எல்லா பூஜைகளிலும் அஷ்டதிக் பாலகர்கனை முதன்முதலாக வணங்குவார்கள். அப்போது இந்திரனையே முதலில் பூஜித்து-

"ஓம் ஐராவத கஜாரூடம்

சுவர்ணவர்ணம் கிரீடினம்

சகஸ்ர நயநம் சக்ரம்

வஜ்ரபாணிம் விபாவயேத்'

என்று ஐராவத கஜத்தையும் (யானையையும்) வழிபடுவார்கள். அதேபோன்று குரு பகவானின் அதிதேவதையாக இந்திரனே விளங்குகிறான் என்று சிவாகமத் தியானங்களில் வருகிறது. ப்ருஹஸ்பதி என்னும் குருவின் அதிதேவதா இந்திரனது பூஜையில்-

சதுர்தந்த கஜாரூடோ/

வஜ்ராங்குச வசத்கர://

ப்ராசீபதி: ப்ரகர்த்தவ்ய/

நாநாபரண பூஷித://

என்று தியானிக்கப்படுகிறது. இதன் உட்கருத்து- கிழக்கு திசைக்கு அதிபதியாக விளங்கும் இந்திரனை நான்கு தந்தங்கள் கொண்ட ஐராவதம் என்னும் யானைமீது அமர்ந்து, வஜ்ரம், பாசம் பெற்று விளங்குபவராகவும், பலவிதமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவராகவும் மனதில் தியானித்து வணங்கவேண்டும்.

இந்த உதாரணங்களிலிருந்து யானை என்பது ஐஸ்வர்யத்தின் வடிவம் என்று உணர்ந்து கொள்ளலாம். புதிதாக வீடு கட்டுபவர்கள் ஐஸ்வர்யம் நிலையாகத் தங்கிட இருபுறமும் யானைகளைக்கொண்ட கஜலட்சுமியைத்தான் வாசல் முகப்புகளில் வைப்பார்கள்.

"சுவர்ண கலசோபேத

கஜயுக்மே ந பார்ச்வயோ'

என்னும் சிவாகமத் தியான நூல் மூலம், ஐராவதத்தின் ஆன்மிக சக்தியை அறிந்துகொள்ள முடிகிறது.

சௌபாக்கியங்களை அருளும் திருமகளை பதினாறு வகை லட்சுமி ரூபங்களாகத் தியானிக்கும்போது எட்டாவது வடிவமாக வர்ணிக்கும் அழகைப் பாருங்கள்.

"சதுர்புஜாம் மகாலக்ஷ்மீம்

கஜயுக்ம ஸுபூஜிதாம்

பங்கஜ ஸ்பர்தி நேத்ராம்தாம்

வராபய கரோஜ்வலாம்'

சௌபாக்கியங்களைத் தன்னிடம் கொண்டிருக்கிற லட்சுமிதேவி நான்கு கைகளை உடையவளாகவும், இரண்டு பக்கங்களிலும் நிற்கும் யானைகளால் மலர்கள் கொண்டு பூஜை செய்யப்படுபவளும், செந்தாமரைபோல அழகான கண்களை உடையவளும், வரதம், அபயம் என்னும் இரண்டு முத்திரைகளை உடையவளும், வெண்ணிற ஆடை உடுத்தி இரண்டு தாமரை மலர்களைக் கைகளில் ஏந்தி பத்மாசனத்தில் வீற்றிருக்கின்ற சர்வமங்கள ரூபிணியான சௌபாக்கிய லட்சுமியை வணங்குகிறேன் என்று பொருள் சொல்லப்படுகிறது. அழகுத் தமிழில் இந்த லட்சுமியை வர்ணிக்கும்போதும் அங்கே கஜம் என்னும் யானை வடிவம் சேர்கிறது.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 91765 39026

bala051018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe