மாபெரும் யோகம் தரும் அஷ்டகந்த எந்திர ரகசியம்! -கே. குமார சிவாச்சாரியார்

/idhalgal/balajothidam/secret-ashtakanda-machine-gives-great-yoga-k-kumara-sivacharya

றைவனின் இருப்பிடமே நமது உடல். இதையே திருமூல நாயனார், "உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பே ஆலயம்' என்று சொன்னார். உள்ளம் நற்செயல்களுக்குத் தூண்டப்பட்டால் உடலுக்குக் கேடு வராது.

நூறு ரூபாய் கையில் கிடைத்தால், அதைக்கொண்டு லாகிரி வஸ்துகளை வாங்கி உண்ணவேண்டுமென்று நினைத்து செய்தால் உடல்நலத்திற்குக் கேடு வருகிறது. அதற்கு பதில் பழங்களை வாங்கி உண்டால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது.

அதுபோல நம் உடலுக்குள் ஒளிந்திருக்கும் சக்கரங்களுக்கு வலுவூட்ட தியானம், ஜெபம், மந்திரம், உச்சாடனம், எந்திரப் பிரதிஷ்டானம், பவித்ரம் அணிதல் போன்ற வழிபாட்டு விதிகளைக் கையாள்கிறோம். ஆனால் சிலருக்கு மட்டுமே இவை வெற்றிதருகின்றன. எல்லாருக்கும் அந்த சாதனை கைகூட என்ன செய்யவேண்டும்?

பெரிய விழாக் காலங்கள் நிறைவு பெறும்போது,

"மந்த்ரஹீனம் பக்திஹீனம் க்ரியாஹீனம்

ஹுதாசந: யத்து தந்து மயாதேவா

பரிபூர்ணம் ததஸ்துதே'

என்னும் வேத மந்திரம் சொல்லி,

நீரெடுத்து இறைவனின் பாதங்களில் சமர்ப்பிப்பார்கள். இதன் உண்மையான பொருள்- "இங்கே நாங்கள் சொல்லப் பட்ட மந்திரங்களில் அட்சர பேதங்கள், குற்றங்குறைகள் இருந்தாலும், செய்யப் பட்ட பூஜை முறைகளில் குறைகள் இருந்தாலும் பொறுத்தருள்க' என்று வேண்டப்படுவதாகும்.

இவையனைத்தும் களையப்பட்டு அஷ்டகந்த பூச்சு செய்துவிட்டால், ஒரு தெய்வ எந்திரம் வீட்டில் அமானுஷ்ய சக்திபெற்று சுபப் பலன் களைத் தரும். அஷ்டகந்தத்தைத் தயாரிப்பதும் பூசுவதும் எளிதான செயலல்ல. அதை மந்திரப்பூர்வமாக விதிமுறையோடு செய்வது அவசியம்.

தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை கள் நடத்துவதுபோல, அஷ்டகந்தம் இடும்போதும் மந்திர உபசாரங்கள் செய்து எந்திரத்திற்கு சக்தியூட்டவேண்டும்.

மெருகூட்டும் சர்வோபசார விதி

ஆலயங்களில் தெய்வ பிம்பங்கள் சாந்நித்தியத்துடன் திகழ்ந்து அருள்பொழிய, ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி, அமாவாசை, கார்த்திகை போன்ற நாட்களில் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டுவருகிறது. அத்தகைய உபசாரங்கள் 69 வகையென்று தேவி பாகவதம் என்னும் சக்திமகிமை நூல் கூறுகிறது. இந்த முறைகளிலிருந்து வேறுபட்டது அஷ்டகந்தப் பூச்சு.

அபிஷேகக் காலங்களில் தூய்மையான நல்லெண்ணெய் தொடங்கி, மஞ்சள்பொடி, மாவுப்பொடி, திரவியப்பொடி, எலுமிச்சை, பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், ஸ்வர்ணம், பஸ்மம், பஞ்சகவ்வியம், ஸ்ந

றைவனின் இருப்பிடமே நமது உடல். இதையே திருமூல நாயனார், "உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பே ஆலயம்' என்று சொன்னார். உள்ளம் நற்செயல்களுக்குத் தூண்டப்பட்டால் உடலுக்குக் கேடு வராது.

நூறு ரூபாய் கையில் கிடைத்தால், அதைக்கொண்டு லாகிரி வஸ்துகளை வாங்கி உண்ணவேண்டுமென்று நினைத்து செய்தால் உடல்நலத்திற்குக் கேடு வருகிறது. அதற்கு பதில் பழங்களை வாங்கி உண்டால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது.

அதுபோல நம் உடலுக்குள் ஒளிந்திருக்கும் சக்கரங்களுக்கு வலுவூட்ட தியானம், ஜெபம், மந்திரம், உச்சாடனம், எந்திரப் பிரதிஷ்டானம், பவித்ரம் அணிதல் போன்ற வழிபாட்டு விதிகளைக் கையாள்கிறோம். ஆனால் சிலருக்கு மட்டுமே இவை வெற்றிதருகின்றன. எல்லாருக்கும் அந்த சாதனை கைகூட என்ன செய்யவேண்டும்?

பெரிய விழாக் காலங்கள் நிறைவு பெறும்போது,

"மந்த்ரஹீனம் பக்திஹீனம் க்ரியாஹீனம்

ஹுதாசந: யத்து தந்து மயாதேவா

பரிபூர்ணம் ததஸ்துதே'

என்னும் வேத மந்திரம் சொல்லி,

நீரெடுத்து இறைவனின் பாதங்களில் சமர்ப்பிப்பார்கள். இதன் உண்மையான பொருள்- "இங்கே நாங்கள் சொல்லப் பட்ட மந்திரங்களில் அட்சர பேதங்கள், குற்றங்குறைகள் இருந்தாலும், செய்யப் பட்ட பூஜை முறைகளில் குறைகள் இருந்தாலும் பொறுத்தருள்க' என்று வேண்டப்படுவதாகும்.

இவையனைத்தும் களையப்பட்டு அஷ்டகந்த பூச்சு செய்துவிட்டால், ஒரு தெய்வ எந்திரம் வீட்டில் அமானுஷ்ய சக்திபெற்று சுபப் பலன் களைத் தரும். அஷ்டகந்தத்தைத் தயாரிப்பதும் பூசுவதும் எளிதான செயலல்ல. அதை மந்திரப்பூர்வமாக விதிமுறையோடு செய்வது அவசியம்.

தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை கள் நடத்துவதுபோல, அஷ்டகந்தம் இடும்போதும் மந்திர உபசாரங்கள் செய்து எந்திரத்திற்கு சக்தியூட்டவேண்டும்.

மெருகூட்டும் சர்வோபசார விதி

ஆலயங்களில் தெய்வ பிம்பங்கள் சாந்நித்தியத்துடன் திகழ்ந்து அருள்பொழிய, ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி, அமாவாசை, கார்த்திகை போன்ற நாட்களில் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டுவருகிறது. அத்தகைய உபசாரங்கள் 69 வகையென்று தேவி பாகவதம் என்னும் சக்திமகிமை நூல் கூறுகிறது. இந்த முறைகளிலிருந்து வேறுபட்டது அஷ்டகந்தப் பூச்சு.

அபிஷேகக் காலங்களில் தூய்மையான நல்லெண்ணெய் தொடங்கி, மஞ்சள்பொடி, மாவுப்பொடி, திரவியப்பொடி, எலுமிச்சை, பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், ஸ்வர்ணம், பஸ்மம், பஞ்சகவ்வியம், ஸ்நபனம், பன்னீர் என்று 16 வகை அபிஷேகம் செய்வார்கள். இது ஆகமவிதிப்படி சிவன், விஷ்ணு மூர்த்திகளுக்கேற்றபடி மாறுபடும். இங்கு சொல்லப்பட்ட அபிஷேகங்கள் தெய்வ பிம்பங்களினுள்ளே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள எந்திரங்களுக்குச் செய்யப்படுபவை.

அதேபோன்ற எந்திரங்களை நம்வீட்டுப் பூஜையறையில் வேத தந்திர விதியின்படி ஸ்தாபனம் செய்து, அதற்கு அஷ்டகந்தப் பூச்சு நடத்திவிடவேண்டும்.

கையடக்கமாக உள்ள செல்போனில் எத்தனை மென்தகடுகள் பொருத்தப்பட்டிருந்தாலும், அவற்றுக்கு உயிர்தந்து இயக்குவது சுட்டுவிரலின் நுனியளவுகூட இல்லாத செப்புத்தகடு (சிம்) மட்டும்தான் என்பதை அறியவேண்டும். நம் இல்லமும் சக்தியோடு விளங்கி, பணவரவும் அதிகரித்து, அதிர்ஷ்டம் நிறைந்ததாக விளங்க நமது நட்சத்திரப்படி 3ஷ்3, 6ஷ்6 அளவுடைய தெய்வ எந்திரங்களைப் பிரதிஷ்டைசெய்து, எண்வகை சந்தனம் (அஷ்டகந்தப் பூச்சு) செய்து பயன்படுத்தினால் மிகப்பெரிய நன்மை காணலாம். இந்த ரகசியங்கள் சித்தர்களால் கடைப்பிடிக்கப்பட்ட தெய்வ வழிபாட்டு நுணுக்கங்களாகும்.

விருப்பத்தை நிறைவேற்றும் அஷ்டகந்தம்

சுகந்தம், கந்தம், திரவியம், பரிமளம் போன்ற சொற்களுக்கு நறுமணம் தரும் பொருள் என்று பெயர். ஒரு ஜாதகத்தில் 4-ஆமிடமான சுக ஸ்தானத்திலும், 9-ஆமிடமான பாக்கிய ஸ்தானத் திலும் சுக்கிரன், சந்திரன், குரு அமையப் பெற்றவர்கள் பரிமளப் பிரியர்கள் என்று பெயரெடுப்பார்கள். வாசனை திரவியங்களைப் பூசிக்கொண்டு பொதுநிகழ்ச்சிகளுக்குச் சென்று எல்லாரையும் வரவேற்பார்கள்.

நறுமணப் பொருட்களைப் பூசிக்கொண்டு செல்வதால் ஒருவர் மற்றவரை வசீகரிக்கலாம். விரும்பிய காரியங்களை சாதித்துக்கொள்ளலாம். குறிப்பாக அத்தர், புனுகு, ஜவ்வாது, கோரோஜனை, செஞ்சந்தனம் ஆகிய கலவைகளை உள்ளங்கால், உள்ளங்கைகளில் பூசி, நெற்றியிலும் திலகமாக இட்டுக்கொள்வோருக்கு வியாபார வசியம், மக்களை ஈர்க்கும் சக்தி உண்டாகும். ஆனால் தெய்வ எந்திரங்களுக்கு சக்தியூட்டப் பயன்படும் அஷ்ட கந்தங்கள் வேறுவகைப் பொருட்களால் கலந்து செய்தல்வேண்டும். இவற்றில் வெண் சந்தனம் அபூர்வ சக்தியுடையது.

சர்வ கந்தம்

பச்சைக் கற்பூரம், வெண் சந்தனம், கஸ்தூரி, குங்குமப்பூ உள்ளிட்டவை கலந்த கலவையே சர்வ கந்தம் எனப்படும். இது எல்லா தேவதைகளுக்கும் விருப்பமானது. இதை உபாசனா மார்க்கத்தில் உள்ளவர்கள் பூசிக்கொண்டு சாதனைகள் செய்யலாம்.

பிரதிஷ்டா கால அஷ்டகந்தம்

தெய்வ பிம்பங்கள் சக்தியோடு விளங்கவும், எந்திரங்கள் வீரியத்தை வெளியிடவும் முதல் வகை அஷ்ட கந்தமென்று கலந்து பயன்படுத்தப்படுகிறது. கோரோஜனை, வெண் சந்தனம், தேவதாரு, பச்சை, கற்பூரம், அகில், கஸ்தூரி, குங்குமப்பூ ஆகிய எட்டுவகை திரவியங்களையும், பஞ்ச கவ்வி யங்களுக்கு மந்திரம் கூறிக் கலப்பதுபோல, வரிசை யாகத் தட்டில் வைத்துக்கொண்டு கலக்கவேண்டும். இல்லையெனில் அஷ்டகந்தம் பலன் தராது.

ஜபகால அஷ்டகந்தம்

இவ்வகை அஷ்டகந்தம் பெண் தெய்வங்களான தேவியர்களுக்கும், அவர்களுக்கான எந்திர வரைவுகளுக்கும் பூசி, சக்தி உண்டாக்குவதற்குப் பயன்படுகிறது. குங்குமப்பூ, கார் அகில், பச்சை, கற்பூரம், யானை மதநீர், வெண் சந்தனம், கோரோஜனை, செஞ்சந்தனம் ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. இந்த அஷ்ட கந்தத்தைத் தயாரித்து கடைகளில் விற்பனை செய்கிறார்கள். ஆனால் அவை கலப்பட மில்லாதவையா என்று கவனித்து வாங்கவேண்டியது நமது கடமை. எனவே எட்டு கந்தங்களையும் தனித்தனியாக வாங்கி நாமே மந்திரப் பூர்வமாகக் கலந்து எந்திரங்களில் பூசுவதால் நற்பலன்களைப் பெறலாம்.

ஜன வசியம் தரும் நாக சிந்தூரம்

அம்பிகையின் குங்குமத்திற்கு ஒருவகை வசியசக்தி உண்டென்பதை குங்கும மகிமைத் துதியிலிருந்து அறியலாம். இதையே ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமாவளியில், ஸ்ரீநகர வர்ணனை செய்யும்போது 25-ஆவது துதியில் ஆதிசங்கரர் எடுத்துக் கூறுகிறார். "ஸம்பத்கரீ ஸமாரூட சிந்துர வ்ரஜ சேவிதாயை நம' என்று அம்பிகையை வர்ணிக்கிறார். இதேபோல பல இடங்களில் நறுமணம் தரும் பொருட்களில் பிரியமுள்ளவள் என்று பரமேஸ்வரியைப் புகழ்கிறார். அஷ்டகந்தத்தைப்போலவே நாக சிந்தூரம் என்னும் விசேடமான குங்குமத்தை பூஜைசெய்து திலகமிட்டுக்கொண்டால், சில காலங்கள் கழித்து வியாபாரத் தலம் வைத்திருப்போருக்கு ஜனவசியம் ஏற்படுமென்பது அனுபவப்பூர்வமான உண்மை.

அனுமன் கோவில்களுக்குச் செல்லும்போது மஞ்சள், சிவப்புப் பொடி கலந்த செந்தூரம் என்னும் பொடியை சாந்துபோல தயாரித்து, குங்குமம், துளசி தீர்த்தத்துடன் பக்தர்களுக்குத் தருவார்கள். அதேபோல மகாவிஷ்ணு கோவில்களிலும் செந்தூரப் பொட்டு வைத்துக்கொள்வது கடைப்பிடிக்கப்படு கிறது. நெற்றியில் நாக சிந்தூரத்தைத் திலகமாக இட்டுக்கொள்வது வடநாட்டுக் கோவில்களில் முக்கியப் பிரசாதமாகக் கையாளப்படுகிறது. பயனற்ற வண்ணங்களையும் ரசாயனப் பொடிகளையும் சேர்த்து சிந்தூரம் இடுவதால் பலன்கிட்டாது என்பதை அறியவேண்டும்.

அஷ்டகந்த பூச்சால் உயிர்பெறும் எந்திரங்கள்

பல வீடுகளில் பூஜையறைகளில் எந்திரங்கள் வைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். சில ஆண்டுகளுக்குமுன் பத்திரிகைகளும் எந்திரங்களைத் தந்தன. அவையெல்லாம் கோவில் உண்டியல்களில் குப்பைகள்போல் கொட்டப்பட்டன. சுற்றுலா செல்பவர்கள் புகழ்பெற்ற தலங்களில் இறங்கியவுடன், "ஐயா, இந்த எந்திரத்தை வைத்துக்கொள்ளுங்கள்; முருகன் உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடுவார்' என்று சொல்லி கையில் திணிப்பார்கள். எல்லாரிடமும் இதையேதான் சொல்லி விற்றிருப்பார்கள். ஆனால் அவையெல்லாம் முறையாக உருவேற்றப்பட்டவையா என்பதை நாம் யோசிக்கவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் கடை, தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குத் தேவை ஜனவசியம் என்னும் மக்களை ஈர்க்கும் திறன். அடுத்ததாக வியாபாரிகள் மற்றும் குடும்பத் தலைவர்களுக்குத் தேவை தனா கர்ஷணம் என்னும் செல்வங்களை ஈர்க்கும் சக்தி. இரண்டையும் ஒருங்கே பெறுவதற்கு குறிப்பிட்ட தெய்வங்களின் எந்திரம் தேவைப்படுகிறது.

தெய்வங்களின் பெயர், அவர்களுக்கான கந்த வகை, மூலமந்திரம், கிட்டும் பலன்கள் இங்கு வரிசைக்கிரமமாகத் தரப்பட்டுள்ளன.

வாஞ்சா கல்ப கணபதி: அறுகுடன் அஷ்ட கந்தம்; கணேச திரிசதி. மனவிருப்பங்கள் நிறைவேறும்; தடைகள் அகலும்.

காமேஸ்வரி ஸ்வயம்வரா: தேவி கந்தம்; காமேஸ்வரப் பிரயோகம். திருமணத்தடை விலகும்; சுப நாளில் மாங்கல்ய தாரணம் நிகழும்.

ஐஸ்வர்ய லட்சுமி எனும் கமலாத்மிகா: சக்தி கந்தம்; லட்சுமி மூலம். தனவரவு அதிகரிக்கும்.

அமிர்த மிருத்தியுஞ்ஜயர்: சிவ கந்தம்; மிருத்யுஞ்ஜய ஜெபம். நோய்வாய்ப்பட்டவர்கள் குணமடைவர்.

ஆயுர்தேவி: தேவி கந்தம்; ஆயுர் தேவி கவசம். வைரஸ் முதலிய கொடிய நோய்கள் விலகி ஆயுள் கூடும்.

கருடபகவான்: பஞ்ச கந்தம்; காரூடப் பிரயோகம். விஷ ஜுரம், விஷத்தீண்டலும் அகலும்.

ஸ்ரீவித்யா: அஷ்ட கந்தம்; கலைவாணி மந்திரம். கல்வியறிவு, படிப்பில் வல்லமை பெறுதல்.

அன்னபூர்ணா: சக்தி கந்தம்; தேவி கவசம். உணவுக்கூடத் தொழில் உயரும்; உணவுப் பஞ்சம் தீரும்.

ரதி மன்மத ராஜன்: அஷ்டகந்தம்; மன்மத ரதி கல்பம். பிரிந்தவர் கூடுவர்; கணவன்- மனைவி நல்லுறவு உண்டாகும்.

இந்திரன்: சிவ கந்தம்; ஐந்திர மந்திரம். கௌரவப் பதவி, அரசியலில் வெற்றி, அரசுப்பணியில் உயர்வடைதல்.

ஜாதகர்களின் வாழ்வில் ஏற்படும் பிரச்சினையைத் தீர்க்க சில எந்திர மார்க்கங்கள் மேலே சொல்லப்பட்டன. இவையன்றி இன்னும் பல எந்திர வடிவங்களும் தந்திர சாஸ்திரங்களில் உள்ளன. அவற்றுக்குரிய சக்தியூட்டக்கூடிய அஷ்டகந்தப் பூச்சு விதிகளும் உள்ளன.

இலகு முறையில் திலகமிடல்

அஷ்ட கந்தங்களைத் தயாரித்து, வேண்டும் எந்திரங்களில் பூசி பூஜைசெய்து, 32, 54, 64, 108 நாட்கள் ஜெபம் செய்துவந்தால், தொடர்ந்து பலன் கிடைக்கத் தொடங்கும். இந்த முறையில் எந்திரங்களை வழிபட்டுப் பயன்பெற விரும்புபவர்கள் மிகப்பெரிய தொழிலதிபர்களானாலும், நடுத்தரமான வியாபாரம் செய்பவராக இருந்தாலும் அவர்கள் எளியமுறையில் திலகங்கள் இட்டுக்கொள்ளலாம்.

அம்பர், கோரோஜனை, கஸ்தூரி, புனுகு, ஜவ்வாது, பச்சை, கற்பூரம் ஆகியவற்றைத் தூய்மையான தேனில் அரைத்து விநாயகரை வணங்கித் திலகமிடவேண்டும்.

கோரோஜனை, மச்சக்கால், சிறு தேன் குழைத்து சிமிழில் அடைத்துவைத்து, நெற்றி, உள்ளங்கை, உள்ளங்காலில் தடவலாம்.

கோரோஜனையை வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேனிலும்; திங்கள், வியாழக் கிழமைகளில் நெய்யிலும்; செவ்வாய், புதன் கிழமைகளில் பசுவின் பாலிலும் கலந்து நெற்றியில் திலகமிடலாம்.

lingam

செம்முள்ளி, சிவந்த கஞ்சம், செங்கழுநீர், பொன்னாங்கண்ணி ஆகியவற்றைச் சேர்த்து, அரிதாரம், கந்தகம் கலந்து, குங்குமப்பூ, புனுகு, ஜவ்வாது, பன்னீர் விட்டு அரைத்து, அந்தக் கலவையைத் திலகமிட்டால் வாலிப மெருகும், ராஜவசியமும் ஏற்படுமென்பது ஒரு தேவ ரகசியம்.

சித்தர்கள் பாடல்களில் முக்கியமான இருபது ராஜவசிய மூலிகைகள் சொல்லப் பட்டுள்ளன. இவையெல்லாம் தாவர வடிவில் கிடைக்கக்கூடியவைதான். இதனால் ஆபத்து விளையுமென்று யாரும் அஞ்சத் தேவையில்லை. எல்லாம் தெய்வசக்தி பெற்றவையே. வெள்ளெருக்கு, வெண்குன்றிமணி, கையாந்தரை, செங்கழுநீர், நில ஊமத்தை, வெள்ளை விஷ்ணு கிரந்தி, கருஞ்செம்பை, செந்நாயுருவி, வெள்ளறுகு, தொழுகண்ணி, நாகமல்லி, தொட்டால் சுருங்கி, நத்தைச்சூரி, கோரக்கர் மூலி, பெருவாகை, ஆகாச கருடன் மூலி, ஆனை வணங்கி, குப்பைமேனி, பொன் முகட்டை, தும்பை ஆகியவற்றை முறையாகக் காப்புக்கட்டி எடுத்துப் பயன்படுத்தினால் எல்லா யோகங்களும் பாக்கியங்களும் கிடைக்கும். அஷ்டகந்தப் பூச்சுமுறையும் திலகமிடலும் பயன்படுத்தினால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

bala260221
இதையும் படியுங்கள்
Subscribe