சென்ற இதழ் தொடர்ச்சி...
புதன் ஹோரை
நிலம் வாங்கலாம். குறிப்பாக தென்னந் தோப்பு மற்றும் விளைநிலங்கள் சிறப்பானது. மணம்வீசும் மலர்ச்செடிகள் நிறைந்த நந்தவனம் உருவாக்கலாம். அனைத்துவித கலைகளையும் தொடங்கலாம். மாணவர்களுக்கு கல்விச்சாலை உருவாக்கலாம். மந்திரம், தந்திரம், யோகா பயிற்சிநிலையம் தொடங்கலாம். பிறருக்கு உதவி செய்ய நல்ல தருணம். ஆயுளை வளர்க்க தக்க பயிற்சி செய்யலாம். கொடுக்கல்- வாங்கல், வட்டிக்குப் பணம் தரும் கடை தொடங்குவதும் ஏற்றது. எழுத்துத் துறையில் எல்லா நற்பலனும் தரும்.
புண்ணியத்தலம் புறப்பட ஆயத்தமாகலாம். மழையை எதிர்பார்த்துச் செய்யும் விவசாயத்தில் வேலை ஆரம்பித்தால் தடையின்றி நீர்வளம் பெருகும். பச்சைக் காய்கறி பயிர்செய்ய உகந்த ஹோரை.
ஜோதிடம் கற்கலாம். பேச்சுப்பயிற்சி, மேடைப் பேச்சுக்கு முயற்சி, தெலுங்கு மொழி கற்றுக்கொள்ள முயலுதல் நற்பலன் தரும். மகாவிஷ்ணு தலங்களை தரிசிக்கலாம். பறவைகள் சரணாலயம் தொடங்கலாம். இலக்கணம் கற்கலாம். வித்வான் தேர்வு எழுதலாம்
சென்ற இதழ் தொடர்ச்சி...
புதன் ஹோரை
நிலம் வாங்கலாம். குறிப்பாக தென்னந் தோப்பு மற்றும் விளைநிலங்கள் சிறப்பானது. மணம்வீசும் மலர்ச்செடிகள் நிறைந்த நந்தவனம் உருவாக்கலாம். அனைத்துவித கலைகளையும் தொடங்கலாம். மாணவர்களுக்கு கல்விச்சாலை உருவாக்கலாம். மந்திரம், தந்திரம், யோகா பயிற்சிநிலையம் தொடங்கலாம். பிறருக்கு உதவி செய்ய நல்ல தருணம். ஆயுளை வளர்க்க தக்க பயிற்சி செய்யலாம். கொடுக்கல்- வாங்கல், வட்டிக்குப் பணம் தரும் கடை தொடங்குவதும் ஏற்றது. எழுத்துத் துறையில் எல்லா நற்பலனும் தரும்.
புண்ணியத்தலம் புறப்பட ஆயத்தமாகலாம். மழையை எதிர்பார்த்துச் செய்யும் விவசாயத்தில் வேலை ஆரம்பித்தால் தடையின்றி நீர்வளம் பெருகும். பச்சைக் காய்கறி பயிர்செய்ய உகந்த ஹோரை.
ஜோதிடம் கற்கலாம். பேச்சுப்பயிற்சி, மேடைப் பேச்சுக்கு முயற்சி, தெலுங்கு மொழி கற்றுக்கொள்ள முயலுதல் நற்பலன் தரும். மகாவிஷ்ணு தலங்களை தரிசிக்கலாம். பறவைகள் சரணாலயம் தொடங்கலாம். இலக்கணம் கற்கலாம். வித்வான் தேர்வு எழுதலாம். ரட்சைகள், தாயத்து தயாரிக்கலாம். பங்குச்சந்தை முதலீடு செய்யலாம். இவற்றுடன் மதிநுட்பமான வேலைகளும் பொருத்தமானவை.
குரு ஹோரை
கடவுளுக்கும் கோவில்களுக்குமுரிய எல்லா வேலைகளையும் ஆரம்பிக்க உத்தம மானது. காவல் துறைக்கு ஆள் எடுத்தல், நலநிதி திரட்டுதல் போன்றவற்றுக்கு உகந்த ஹோரை. மகன், பேரனுக்குரிய உதவி களைச் செய்யலாம். யானை வாங்கலாம். கதாகாலட்சேபம் செய்ய முயலலாம். நகைக்கடை ஆரம்பிக்கலாம். அரசு சார்ந்த சன்மானம் கிடைக்கும்- அதாவது மானியம் கிடைக்கும் எல்லா வேலைகளும் வெற்றியைப் பெற்றுத் தரும். புண்ணிய நதியில் நீராடல், பிறருக்கு மதபோதனை செய்தல் போன்றவற்றைத் தொடங்கலாம். வேத சாஸ்திரம் படித்தல், வேத பாடசாலை தொடங்குதல், சிவபெருமானை வழிபடுதல், பணம் சார்ந்த மாதச்சீட்டு போன்றவை செய்ய இந்த ஹோரை தடையின்றி நற்பலனைத் தரும். தன் குடும்பத்தாருக்கு- சந்ததியினருக்கு வேண்டிய நற்பலன்களைத் தொடங்கலாம். வியாபாரத்தில் மஞ்சள்நிறப் பூ, விதை போன்றவை அதிக லாபத்தைத் தரும். புதிய திரைப்படம் எடுக்க பூஜைபோடலாம்.
சுக்கிர ஹோரை
சங்கு வாங்குதல், புத்தாடைகள் வாங்குதல் நன்று. லட்சுமிகரமான வெண்குடை தயாரிக்கலாம். பெருமாளுக்கு திருமண வைபவ ஏற்பாடுகளைத் தொடங்கலாம். அந்தஸ்தை உயர்த்தும் செயல்களில் ஈடுபடலாம். மனைவியை உற்சாகப்படுத்த லாம். புளிப்புச் சுவையுள்ள பண்டங்களைத் தயாரிக்கலாம். (ஊறுகாய் போன்றவை). வாலிபர்களுக்கு வீரிய மருந்து தயாரிக்கலாம்; உட்கொள்ளலாம். வாகனம் வாங்குதல்- விற்றல் நன்மை தரும். வெள்ளி உலோகத் தயாரிப்புகளை சேமிக்கலாம். தென்கிழக்கு மூலையில் செய்யப்படுபவை சுக்கிரனின் பலனை அதிகரிக்கும். உப்புசார்ந்த பிஸ்கட் போன்றவற்றை உற்பத்தி செய்யலாம். முத்து, வைரம், ரத்தின வியாபாரம் தொடங்கலாம். நாட்டியம், நாடகம் போன்ற பயிற்சி நிலையங் கள் வெற்றியைத் தரும். சரச சல்லாபம் செய்ய உகந்த ஹோரை. வீணை, புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளை உருவாக்கலாம்; பயிற்சியும் செய்யலாம். மனதில் தோன்றும் சில ரகசியமான காரியங்களையும் செய்யலாம். நெறி தவறுவோருக்கு சுக்கிரன் உதவமாட்டார்.
சனி ஹோரை
தோல் வியாபாரம் செய்யலாம். கோவேறு கழுதை வாங்கலாம்; விற்கலாம். காடுகளைத் திருத்தி அமைக்கலாம். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு உதவலாம். அடிமைத் தொழில் செய்பவரை ஆதரிக்கலாம். கருப்பு நிறப் பொருட்களை சேமிக்கலாம். நிலக்கரி, மரக்கறி வியாபாரம் தொடங்கலாம். இரும்புப் பொருட்கள் வாங்க- விற்க ஏற்ற ஹோரை. எண்ணெய் வியாபாரம் தொடங்குதல் உகந்தது. ஆடு, எருமை போன்றவற்றை மந்தை யாக வளர்க்க ஆரம்பிக்கலாம். துப்பறியும் நிறுவனம் தொடங்கலாம். தேசவிரோதச் செயலில் ஈடுபடுவோரை நல்வழிப்படுத்த முயலலாம். செங்கல் சூளை போன்றவற்றை வாங்கலாம்; பராமரிக்கலாம். நாய் வளர்க்கத் தொடங்கலாம். உயர் இன நாய்க்குட்டிகளை வாங்கி விற்பனை செய்ய ஏற்ற தருணம்.
குறிப்பு: உங்கள் ஜாதகத்தில் சனி நன்மை தரும் நிலையிலிருந்தால் அதிக கெடுதல்கள் உண்டாகாது. பிற ஹோரைகள்போல் சனி ஹோரையில் வேகமாக செயல்படுதல் கூடாது.
கிரகங்களின் நட்பு, பகை போன்ற விவரங் களையும் அறிந்து செயல்படுதல் வேண்டும். சூரியனுக்கு சந்திரன், செவ்வாய் நட்பு கிரகங் கள். எனவே சூரியனுக்குரிய ஞாயிற்றுக்கிழமை யில் சந்திரன், செவ்வாய் ஹோரைகளைப் பயன் படுத்தலாம். சந்திரனுக்கு சூரியன் நட்பு; செவ்வாய் சமம். செவ்வாய்க்கு சூரியன், சந்திரன் நட்பு. புதனுக்கு சூரியன் நட்பு; சந்திரன் பகை; செவ்வாய் சமம். குருவுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் நட்பு. சுக்கிரனுக்கு சூரியன், சந்திரன் பகை; செவ்வாய் சமம். சனிக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் பகை. செவ்வாய்க்கிழமைகளில் வரும் புதன் ஹோரை பயன்தராது. சுக்கிரனுக்கு சூரியனும் சந்திரனும் பகை என்பதால், வெள்ளிக் கிழமையன்று சூரிய- சந்திர ஹோரைகளை கவனித்து, விலக்கத்தக்கனவற்றை விலக்க வேண்டும். சனிக்கு சூரியன் பகையென்பதை கவனிக்கவேண்டும். இதைப்போலவே பகைவரின் ஹோரைகளைப் புறந்தள்ளி, ஒவ்வொரு கிழமையிலும் கிரக நட்பு ஹோரை களை கவனித்து செயல்படவேண்டும். ஒவ்வொரு நாளும் அந்த ஊர் சூரிய உதயம் முதல் அஸ்தமனம்வரை உள்ள நேரத்தைக் கணக்கில்கொண்டு செயல்படவேண்டும்.
செல்: 93801 73464