எண்ணியதை ஈடேற்றித் தரும் ஹோரை சாஸ்திர ரகசியங்கள்! -பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை

/idhalgal/balajothidam/scientific-secrets-horoscope-will-fulfill-thought-pandit-map-child

"சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்' -குறள் (200)

அந்தவகையில் ஹோரை என்னும் சொல் மிகவும் பயனுள்ளது. இங்கு வெற்றிதரும் கால ஹோரைகளைப் பற்றி சுருக்கமாகக் காண்போம். முகூர்த்தம், வியாபாரம், இன்னும் பயன்தரும் பல காரியங்களில் ஈடுபடும்போது ஹோரை அறிந்து செயல்பட்டால், வேதனையில்லா நல்ல செய்திகளை நாம் எதிர்பார்க்கலாம்.

"அர்ஜுனா, படைப்புகளின் ஆரம்பமாகவும் முடிவாகவும் நடுவாகவும் நானே இருக்கிறேன். வித்தைகளில் ஆத்ம வித்தையாகவும், தர்க்கம் செய்பவர்களின் தத்துவத்தைத் தீர்மானம் செய்யும் வாதமாகவும் நானே இருக்கிறேன்' என பகவத் கீதையில் கண்ண பரமாத்மா கூறுகிறார்.

அதுபோல நல்ல ஆரம்பம் மிகநல்ல முடிவைத் தந்தே தீரும்.

ஹோரை என்பது மணி என்பதுதான். ஒரு நாளைக்கு 24 மணி நேரம் உண்டு. அதுபோல ஒரு நாள் 24 ஹோரைகள் அடங்கியது. ஒவ்வொரு ஹோரையிலும் ஒவ்வொரு கிரகம் ஆட்சி செய்யும். ராகு- கேது தவிர மற்ற ஏழு கிரகங்கள் ஹோரையின் நாயகராகி வழிநடத்துவார்கள்.

அந்தந்த கிழமை உதயகால ஆரம்பத்தி லிருந்து ஒரு மணி நேரம், அந்தக் கிழமையின் அதிபதி கிரகம் எதுவோ அவரே ஹோரையில் அதிபதியாவார். உதாரணமாக, ஞாயிறு சூரியனுடைய கிழமை. எனவே, அன்று காலை சூரிய உதயத்திலிருந்து ஒரு மணி நேரம் சூரிய ஹோரை நடக்கும். இதைப்போலவே ஒவ்வொரு கிழமைக்கும் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்ற முறையில் ஆரம்பமாகும்.

எந்தெந்த கிழமைகளில் என்ன காரியங்கள் செய்யலாம் என சாஸ்திரம் கூறுவதை முதலில் காண்போம்.

ஞாயிறு

செம்பு, தங்கம் போன்ற உலோகம் சார்ந்த வேலைகள் செய்யலாம். பந்தயக் குதிரைகள் வாங்கலாம். கற்சிலைகள் செய்யலாம். பூஞ்செடிகள், சூரியகாந்தி விதை தூவலாம்; நடலாம். மரங்கள் வளர்க்க ஆரம்பிக்கலாம். ஆயுதங்கள் உற்பத்தி செய்யலாம்; வாங்கலாம். அரசு உயரதிகாரிகளின் உதவி கேட்கலாம். மருந்து உட்கொள்ளலாம். மகுடம் சூடலாம். பசு வளர்க்கத் த

"சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்' -குறள் (200)

அந்தவகையில் ஹோரை என்னும் சொல் மிகவும் பயனுள்ளது. இங்கு வெற்றிதரும் கால ஹோரைகளைப் பற்றி சுருக்கமாகக் காண்போம். முகூர்த்தம், வியாபாரம், இன்னும் பயன்தரும் பல காரியங்களில் ஈடுபடும்போது ஹோரை அறிந்து செயல்பட்டால், வேதனையில்லா நல்ல செய்திகளை நாம் எதிர்பார்க்கலாம்.

"அர்ஜுனா, படைப்புகளின் ஆரம்பமாகவும் முடிவாகவும் நடுவாகவும் நானே இருக்கிறேன். வித்தைகளில் ஆத்ம வித்தையாகவும், தர்க்கம் செய்பவர்களின் தத்துவத்தைத் தீர்மானம் செய்யும் வாதமாகவும் நானே இருக்கிறேன்' என பகவத் கீதையில் கண்ண பரமாத்மா கூறுகிறார்.

அதுபோல நல்ல ஆரம்பம் மிகநல்ல முடிவைத் தந்தே தீரும்.

ஹோரை என்பது மணி என்பதுதான். ஒரு நாளைக்கு 24 மணி நேரம் உண்டு. அதுபோல ஒரு நாள் 24 ஹோரைகள் அடங்கியது. ஒவ்வொரு ஹோரையிலும் ஒவ்வொரு கிரகம் ஆட்சி செய்யும். ராகு- கேது தவிர மற்ற ஏழு கிரகங்கள் ஹோரையின் நாயகராகி வழிநடத்துவார்கள்.

அந்தந்த கிழமை உதயகால ஆரம்பத்தி லிருந்து ஒரு மணி நேரம், அந்தக் கிழமையின் அதிபதி கிரகம் எதுவோ அவரே ஹோரையில் அதிபதியாவார். உதாரணமாக, ஞாயிறு சூரியனுடைய கிழமை. எனவே, அன்று காலை சூரிய உதயத்திலிருந்து ஒரு மணி நேரம் சூரிய ஹோரை நடக்கும். இதைப்போலவே ஒவ்வொரு கிழமைக்கும் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்ற முறையில் ஆரம்பமாகும்.

எந்தெந்த கிழமைகளில் என்ன காரியங்கள் செய்யலாம் என சாஸ்திரம் கூறுவதை முதலில் காண்போம்.

ஞாயிறு

செம்பு, தங்கம் போன்ற உலோகம் சார்ந்த வேலைகள் செய்யலாம். பந்தயக் குதிரைகள் வாங்கலாம். கற்சிலைகள் செய்யலாம். பூஞ்செடிகள், சூரியகாந்தி விதை தூவலாம்; நடலாம். மரங்கள் வளர்க்க ஆரம்பிக்கலாம். ஆயுதங்கள் உற்பத்தி செய்யலாம்; வாங்கலாம். அரசு உயரதிகாரிகளின் உதவி கேட்கலாம். மருந்து உட்கொள்ளலாம். மகுடம் சூடலாம். பசு வளர்க்கத் தொடங்கலாம். அகழி அமைக்கலாம். தெய்வீகக் காரியங்கள் செய்யலாம். நமக்குப் புகழ்வரும் வகையில் நற்காரியங்கள் செய்யலாம். வண்டி, காளைமாடுகள் வாங்கலாம். இவையெல்லாம் நற்பலன் தரும்.

திங்கள்

நகைகள் செய்யத் தொடங்கலாம். வெண்சங்கு, முத்து, தாமிரம், வெள்ளி ஆபரணங்களைச் செய்யலாம். தண்ணீர் சார்ந்த வேலைகள்- ஆழ்கிணறு தோண்டுவது போன்றவை செய்யலாம். கரும்பு நடலாம். கால்நடை தீவனம் தயாரிப்பு சிறப்பானது. பெண்கள் சார்ந்த ஆடை தயாரித்தல், பால் வியாபாரம், முந்திரிப் பருப்பு உற்பத்தி- வியாபாரம் ஆரம்பிக்கலாம். நன்செய் பயிருக்கான விதை சேகரிக்கலாம். அந்தணர் களுக்கு உதவலாம். கொம்புள்ள நாற்கால் விலங்குகளை வாங்கலாம். அரசு சார்ந்த கோரிக்கைகளை முறையாக முறையிடலாம். மலர்த் தோட்டம் அமைக்கலாம். யானை வாங்கலாம். நெசவுத் தொழிலில் புதுத் தறி அமைக்கலாம். ஆயத்த ஆடைகள் தயாரிக்கலாம். இரவுகள்கூட நன்மைதரும் விதமாகவே செயல்படும்.

ss

செவ்வாய்

சுரங்கங்களில் தாதுப்பொருள் எடுக்க உகந்த நாள். பொன்னாபரணம் செய்யலாம். செங்கல் சூளைக்குத் தீயிடலாம். புதிய அடுப்பில் சமையல் ஆரம்பிக்கலாம். பவள மோதிரம் செய்யலாம்; பவள ஆபரணங்கள் அணியலாம். வாசனை திரவியங்கள் தயாரிக்கலாம். காவல்துறையில் சேர்ந்து பணியாற்றலாம். சிவப்புநிறப் பொருட்கள் வாங்கலாம்; விற்கலாம். வீரிய மருந்துகள் தயாரிக்கலாம். ஊறுகாய் தயாரிக்கலாம். பிறரை பாதிக்காத திருட்டு வேலைகள் செய்யலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. எனினும் தவிர்ப்பது நன்று. பட்டுப் பீதாம்பரம் தயாரிக்கலாம்.

புதன்

மரகதப் பச்சை ராசிக்கல் வாங்கலாம். எமரால்ட் மோதிரம் அணியலாம். நிலம்சார்ந்த எல்லா வேலைகளையும் தொடரலாம். விலைக்கு வாங்கலாம்; விற்கலாம். வாசனைப் பொருட்கள் தயாரிக்கலாம். சென்ட் விற்பனை செய்யலாம். நவீன ஆடைகள் தயாரிக்கலாம். நாடகம் நடத்தலாம்; நடிக்க ஆரம்பிக்கலாம். இயல், இசை கற்கலாம். ஓவியங்கள் வரையலாம். புதிய திரைப்படம் தயாரிக்க பூஜைபோடலாம். பிறருக்கு உதவும் புண்ணிய காரியங்கள் செய்யலாம். மற்றவர்களுக்குத் தூது அனுப்பலாம். ஆயுளை வளர்க்க ஹோமங்கள் செய்யலாம். எழுத்தாளர்கள் புதிய கதைகள், கட்டுரைகள் எழுதலாம். புண்ணியத் தலங்களுக்குச் சென்றுவரலாம். பிறரை அனுசரித்து வேலைகளை முடித்துக் கொள்ளலாம். விவசாயத்தில் பச்சைப்பயறு போன்ற விதைகளை விதைக்கலாம். ஆடிட்டிங் தொடங்கலாம்.

வியாழன்

வெள்ளிப் பாத்திரங்கள், தங்க நகைகள் செய்யலாம். குதிரை, மாடு போன்ற கால்நடைகளை வாங்கலாம். மருந்துகள் தயாரிக்கத் தொடங்கலாம். நகரத்தில் உள்ளோர் அதிகாரம் செலுத்தும் காரியங்களைச் செய்யலாம். ஆடம்பர- அலங்கார உபகரணங்கள் வாங்கலாம். பள்ளி, டுட்டோரியல், டியூஷன் சென்டர் தொடங்கலாம். அரசு மற்றும் உயரதிகாரி களைப் பார்த்து கோரிக்கைகளைக் கூறலாம். சாஸ்திர ஆராய்ச்சிகளில் ஈடுபடலாம். உடலுக்கு வலுவூட்டும் மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம். விரதம், நோன்பு அனுசரிக்க நல்ல தினம். ஓவியர்கள், சிற்பக் கலைஞர்கள் புதிதாக முயற்சிசெய்ய ஏற்ற தினம்.

வெள்ளி

புதுவகையான ஆடைகள் தயாரிக்கலாம். பெண்களைக் கவரும் புதிய பொருட்களை உற்பத்தி செய்யலாம். விளையாட்டு, நகைச்சுவைக் கார்ட்டூன் படம் தயாரித்தல், புண்ணியத் தலங்கள் சார்ந்த நூல்கள் தயாரித்தல் போன்றவை செய்யலாம். வாகனம் வாங்கலாம். புன்செய்நிலப் பயிர் வேலைகளைத் தொடங்கலாம். நன்செய் பயிர் வேலையும் செய்யலாம். தாமரைமலர் வியாபாரம், பிறருக்குக் கடன்கொடுத்தல் போன்றவை தவிர்க்கப்படவேண்டும். தெற்கு நோக்கிய தலைவாயிலுள்ள வீட்டில் வசிப்போர், வெள்ளிக்கிழமையன்று வாசலின் முற்பகுதியில் வெண்ணிறப் பூந்தோரணம் கட்டுவதால் கெடுதல்கள் அகலும்.

சனி

எருமை, ஆடு, ஒட்டகம் ஆகியவற்றை வாங்கலாம்; விற்கலாம். புதிதாக பணியாட் களை நியமிக்கலாம். வயது முதிர்ந்தவரைப் பராமரிக்கலாம். பழமையான- உடைந்த பாத்திரங்களை சீர்செய்யலாம்; விற்பனை செய்யலாம். இரும்புப் பொருட்கள் வியாபாரம் செய்வோர் புதியகிளை தொடங்கலாம். கருமைநிறப் பொருட்கள் உற்பத்தி, வியாபாரம் ஆரம்பிக்கலாம்.

"பலம் வாரஸ்ய சம்பூர்ணம் ஸ்வ ஹோராயாம் ஜகுப்புதா.'

அதாவது வாரத்தில் செய்யத்தக்கனவற்றை அந்தந்த கிரகங்களின் ஹோரையில் செய்தால் முழுப்பலன் அடையலாமென்பது சாஸ்திர உண்மை.

ஒவ்வொரு ஹோரையிலும் எந்தக் காரியம் செய்தால் முழுப்பலன் தருமென்பதைக் காண்போம்.

சூரிய ஹோரை

நம் ஆன்மாவுக்கு அதிக பலம்தரும் காரியங்களில் ஈடுபடலாம். கடுமையான வேலைகளையும் செய்துமுடிக்கலாம். மருந்துண்ண நல்ல ஹோரை. ஆண்டவனை வழிபட்டு காரியங்களை சாதிக்கலாம். அரசு சார்ந்த வேலைகள் செய்யலாம். கால்நடைகளுக்கு தொழுவம் அமைத்தல், சர்வதேசரீதியான கடிதத் தொடர்பு போன்றவை வெற்றிதரும். விடாமுயற்சிக்கு ஏற்ற காரியங்களை தைரியமாக ஆரம்பிக்கலாம். மலையேறி சாதனைபடைக்கலாம். பிறர் துணையை நாடலாம். பொதுமக்கள் சேவை புரியலாம். உடல்நலம் தரும் யோகா போன்றவை செய்யலாம். பாகப்பிரிவினை, உயில், சாசனம் எழுதுதல், கூட்டுவியாபாரம் செய்ய ஒப்பந்தம் போடலாம்.

குறிப்பு: இரவில் சூரிய ஹோரையில் செய்யும் காரியங்கள் சிறப்பான பலனைத் தராது. சூரிய ஹோரையில் அதன் முற்பாதியில் செய்யும் காரியங்கள் மிக வேகமான பலன் தரும்.

சந்திர ஹோரை

வியாபாரம், பெண்கள் சார்ந்த காரியங்களைப் பேசி முடிவெடுப்பது, நேர்முகத்தேர்வு போன்றவை செய்யலாம். நீண்ட பயணத்திற்கு முயற்சி செய்வது, ஆயத்த வேலை, பாஸ்போர்ட் போன்றவற்றுக்கு முயல்வது, அவை சார்ந்த அரசு அலுவலர்களை நாடுவது, தாயார் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது போன்றவற்றைச் செய்துமுடிக்கலாம். தேய்பிறைச் சந்திரனின் கால அளவில் சிறப்புப் பலனை எதிர்பார்க்க இயலாது. வளர்பிறையில் சாதுர்யமாகப் பேசி வேலைகளை முடிக்கலாம். பூ வியாபாரம் செய்யலாம். மலர்ச் செடி, கொடிகள் நடலாம். வாசனைப் பொருட்கள் தயாரிக்கலாம். வேடிக்கையான விளையாட்டுகள் நல்லபலன் தரும். புளிப்பான ஊறுகாய் போன்றவை தயாரிக்கலாம். வெள்ளி உலோகப் பொருள் வாங்கலாம். குளம் வெட்டுதல், கிணறு வெட்டுதல், கரும்புத் தோட்டம் அமைத்தல் போன்றவை சிறப்புதரும். வெண்கலப் பாத்திரங்கள் தயாரிக்கலாம்; விற்கலாம். பிறருக்கு நல்ல அறிவுரை கூறல் நன்று. அழகு நிலையத்துக்கு வேண்டிய பொருட்களைத் தயாரிக்கலாம். உப்பு, வைர வியாபாரம் செய்யலாம். பராசக்தியைத் தொழுது தீபலட்சுமி பூஜைசெய்ய ஏற்றது. தேன் வாங்குவது, சேமிப்பது நல்லது. மனதுக்கு இனியவர்களுடன் மனம்விட்டுப் பேசலாம். தயிரில் செய்யப்படும் உணவுகளை உண்டுமகிழலாம். பண்டிதர்கள், புலவர்களை சந்தித்து ஆலோசனை பெறுதல் நற்பலன் தரும்.

செவ்வாய் ஹோரை

மனதில் தோன்றும் எண்ணங்களை மறைமுகமாக வைத்து கவனமாக பேசிப் பழகுதல் நன்று. வீரச்செயல்களில் ஈடுபடலாம். பூமி, அசையா சொத்து, நிலசீர்திருத்தம் ஆகியவை நன்மை தரும். உடலுக்கு வலிமை தரும் செயல்கள் செய்யலாம். போருக்கான ஆயுதங்கள் தயாரிக்கலாம். அமைச்சர்கள் மற்றும் அரசு சார்ந்தோருக்கு உதவிசெய்வது நல்லது. அயல்நாட்டு வேலைக்கு முயற்சிக்கலாம். உயரதிகாரிகளுக்கு உதவியாளர் வேலை நற்பலன் தரும். கசப்புச் சுவையுள்ள பொருட்களைத் தயாரிக்கலாம். உளவு பார்ப்பது, வில்வித்தை, வீர விளையாட்டு, சிவப்புநிற ஆடைகள் தயாரிப்பு, தென்திசை நோக்கிய பயணம் நன்று. சண்டைகள் நிரம்பிய திரைப்படம் தயாரிக்கலாம். சகோதர- சகோதரிகள் வேலைகளை மேற்பார்வையிடலாம். காட்டு மிருகங்களைப் பழக்கலாம். குதிரைப் பந்தயத்திற்கு "ஜாக்கி'களைத் தேர்வுசெய்யலாம். விடாமுயற்சிக்கேற்ற எந்த செயலும் தொடங்கலாம். குறிப்பு: செவ்வாய் ஹோரையில் மிகவும் கவனமுடன் செயல்படவேண்டும். எதையும் யோசித்து பிறரிடம் கூறவேண்டும். மனதில் தோன்றுவதை அப்படியே அடுத்தவரிடம் பேசுதல் கூடாது. ரகசியம் காப்பதற்கு முதலிடம் தருதல் வேண்டும்.

(தொடர்ச்சி அடுத்த இதழில்)

செல்: 93801 73464

bala190321
இதையும் படியுங்கள்
Subscribe