Advertisment

அச்சமூட்டும் கிரக நிகழ்வுகள்!

/idhalgal/balajothidam/scary-planetary-events

திருக்கணிதப்படி, 2025 மார்ச் மாதம், நிறைய கிரகங்கள் ஒரே ராசியில் குவிந்துள்ளனர். இவர்கள் அம்சத்திலும் பெரும்பாலும் ஒன்றுசேர்ந்து நிற்கின்றனர்.

திருக்கணிதப்படி மார்ச் 29-ல் சனி- மீன ராசிக்கு செல்கிறார். சனி பூரட்டாதி 4-ஆம் பாதத்தில் நிற்பார்.

அங்கு ஏற்கெனவே நிற்கும் ராகு- மார்ச் 29-ல் பூரட்டாதி 4-ல் அமருவார்.

Advertisment

சுக்கிரன் மார்ச் 31-ல், பூரட்டாதி 4-ல் நிற்க நகர்வார்

திருக்கணிதப்படி, 2025 மார்ச் மாதம், நிறைய கிரகங்கள் ஒரே ராசியில் குவிந்துள்ளனர். இவர்கள் அம்சத்திலும் பெரும்பாலும் ஒன்றுசேர்ந்து நிற்கின்றனர்.

திருக்கணிதப்படி மார்ச் 29-ல் சனி- மீன ராசிக்கு செல்கிறார். சனி பூரட்டாதி 4-ஆம் பாதத்தில் நிற்பார்.

அங்கு ஏற்கெனவே நிற்கும் ராகு- மார்ச் 29-ல் பூரட்டாதி 4-ல் அமருவார்.

Advertisment

சுக்கிரன் மார்ச் 31-ல், பூரட்டாதி 4-ல் நிற்க நகர்வார்.

புதன் ஏப்ரல் 3-ஆம் தேதி பூரட்டாதி 4-ல் அமர ஆரம்பித்து விடுவார்.

இதில் சந்திரன் மார்ச் 28, 29, 30-ஆம் தேதிகளில் மீன ராசியில் மேற்கண்ட கிரகங்களுடன் செல்வார்.

Advertisment

இதனால் மீன ராசியில் சனி, சூரியன், ராகு, சுக்கிரன், புதன், சந்திரன் என ஆறு கிரக கூட்டணி அமையும். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், கடக அம்சத்தில் ராகு, சனி, சுக்கிரன், புதன் இவர்கள் நிற்கிறார்கள். மார்ச் 28 அன்று சந்திரனும் பூரட்டாதி நட்சத்திரம் பெறுவார். அப்போது அவரும் கடக அம்சத்தில் நிற்கும் நேரமுண்டு.

இதில் ஏப்ரல் 2-ஆம் தேதி, செவ்வாய் புனர்பூசம் 4-ஆம் பாதம் நகர்வார்.

அப்போது செவ்வாயும் கடக அம்சத்தில் நீசம் பெறுவார்.

குரு, ஏப்ரல் 10 வரை, ரோகிணி 4-ஆ பாதம் பெறுவதால், அவரும் கடக அம்சத்தில் நிற்கிறார்.

ஆக கடக அம்சத்தில் சனி, குரு, செவ்வாய், ராகு, சுக்கிரன், புதன், சந்திரன் இவர்கள் கூட்டமாக நிற்கிறார்கள்.

எனவே மார்ச் 28 முதல் ஏப்ரல் 13 வரை, மிக கடினமான காலகட்டமாக இருக்கப் போகிறது. இவ்விதம் கிரக கூட்டணி ஏற்படும்போது, உலகம் அழிந்துவிடும் என்று கூறுவதுண்டு.

உலகம் அழிந்துவிடுமா என்று நிச்சயமாக கூற இயலாது. எனினும் அதற்கு ஈடான, இணையான நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது.

முக்கியமாக, இந்த கொடுமையான அழிவு நீர் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். ஏனெனில் ராசியில், கடல் ராசியான மீனத்திலும், அம்சத்தில் நீர் அம்சமான கடகத்திலும், அனைத்து கிரகங்களும் உள்ளனர்.

இவ்வித கிரக கூட்ட இணைவு, பெரிய அரசியல் தலைவரின் இழப்பு, மதத்தலைவரின் பிரிவு, கூட்டு மரணம், சுனாமி, நிலநடுக்கம் என அதற்கு என்ன இஷ்டமோ அதனை கொடுக்கும்.

இவ்வித கிரக இணைப்பு களுக்கு, மகாபெரியவர், கோளறு பதிகம் பாராயணத்தை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார்.

-ஆர்.மகா

bala140325
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe