சனி தரும் பேரதிர்ஷ்டம் யாருக்கு? எப்போது? - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/saturns-disaster-anyone-when-prasanna-astrologer-i-ananthi

பிறப்புமுதல் இறப்புவரை அனைத்து நிகழ்வுகளும் காலத்தால் நிர்ணயிக்கப் பட்டவையே! அப்படியிருக்க, உழைப்பு உழைப்பென்று உண்ண, உறங்க நேரமின்றி உழைப்பவர்களையும் பார்க்கிறோம்; அதிர்ஷ்டம் அதிர்ஷ்டமென, உழைக்காமல் அதிர்ஷ்டக் குதிரையை நம்பி வாழ்வைத் தொலைப்பவர்களையும் பார்க் கிறோம். உழைத்தவர்களெல்லாம் உயர்ந்துவிடவுமில்லை; அதிர்ஷ்டத்தை நம்பி வாழ் பவர்களெல்லாம் அதைத் துரத்து வதை ஆயுள்முழுவதும் நிறுத்தப் போவதுமில்லை.

மனிதராகப் பிறந்த அனைவருக்கும் அதிர்ஷ்டத்தின்மேல் தனி ஆர்வமுண்டு. மாடமாளிகையில் வாழ்பவர்கள்முதல் நடைபாதையில் வசிப்பவர்கள்வரை அனைவருக்கும் அதிர்ஷ்டத்தின்மேல் தனி விருப்பம்... தனி மரியாதை... தனி கவனம் உண்டு.

‘"என் உழைப்பிற்கேற்ற ஊதிய மில்லை' என்று கூறுபவர்கள் உழைத்து உழைத்து நொந்தவர்கள். ‘"எனக்கு உதவிசெய்ய யாருமில்லை, ‘என் வாழ்வின் வளர்ச்சிக்கு உதவிட யாருமில்லை'’ என கூறுபவர்களும், ‘"தா'’என கேட்டுப் பெறுபவர்களும் வாழ்நாள் முழுவதும் அதிர்ஷ்டத்தைத் துரத்துபவர்கள்தான்.

ஒரு மனிதனை வாழ்நாள் முழுவதும

ஒரு மனிதனை வாழ்நாள் முழுவதும் உழைக்கவும், அதிர்ஷ்டத்தை நம்பி வாழவும் வைப்பவர் கர்மகாரகர் சனி பகவானே. ஒரு மனிதனை கோபுரத்தில் தூக்கி உட்காரவைப்பவரும் அவரே. குப்பை மேட்டில் தூக்கி வீசுபவரும் அவரே.

ஜனனகால ஜாதகத்தில் 1, 7, 11-ஆமிடத்தில் சனி பகவான் நின்றால் மட்டுமே லக்னத்துடன் சம்பந்தம் பெறுவார். லக்னம், லக்னாதி பதியுடன் சம்பந்தம் பெறும் சனி பகவான் சோம்பலை மிகுதிப்படுத்தி, அதிர்ஷ்டத்தின்மேல் நம்பிக்கையை ஏற்படுத்துவார். இவர்களுக்கு கோபம் மிகுதியாக வருவதுடன், தான் செய்யும் தவறுகளைப் புரிந்துகொள்ளாமல் அனைவரின் வெறுப்புக்கும் ஆளாவார்கள். புகழ்ச்சியை விரும்புவார்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் வேலைக்குச் செல்லும் நாட்டமிருக்காது. அடிமைத் தொழில் என்னும் பேச்சுக்கே இடம் தராதவர்கள். வேலைக்குச் செல்லமாட்டார்கள்.

saturn

சென்றாலும் உடன் வேலை பார்ப்பவர்கள் அல்லது உயரதிகாரிகளிடம் சண்டையிட்டு பத்து நாட்களில் வீட்டுக்கு வந்துவிடு வார்கள். சுயதொழிலில் நாட்டம் மிகுந்தவர்கள்.

பத்து ரூபாய் சம்பாதிக்க நூறு ரூபாய் செலவு செய்வார்கள். நித்திய கண்டம்; பூரண ஆயுள். "நொண்டிக் குதிரைக்கு சறுக்கியதுதான் சந்தர்ப்பம்' என அடிக்கடி விபத்து, கண்டத்தை சந்தித்து, அதைக் காரணம் காட்டி உழைக்காமல் வாழ்வார்கள். முதலாளியாகவும், தொழிலாளியாகவும் மாறி மாறி வாழ்க்கையைக் கழிப்பார்கள். பூர்வீகத்திலும், பூர்வீகத்தொழில் செய்வதிலும் விருப்பம் மிக அதிகம் உள்ளவர்கள்.

திருமணத்திற்கு முன்பு தந்தையைக் குறைகூறி தந்தையின் வருமானத்தில் வாழ விரும்புவார்கள். ஆண்களாக இருந்தால் திருமணத்திற்குப்பிறகு மனைவியின் பொருளாதாரத்தில் வாழ விரும்புவார்கள். செய்யும் தொழிலில் வேலை பார்ப்பவர்களிடம் அன்பு, இரக்கம் காட்டி பொருளாதாரத்தில் பெரும் இழப்பை சந்திப்பார்கள். எவ்வளவு வசதி, செல்வம் பெற்றவர்களாக இருந்தாலும், தன் தயாள குணத்தால் பொருள் இழப்பை சந்திக்காதவர்களே இல்லை எனலாம். எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் யாரையும், எதையையும் பொருட்படுத்தாமல் இருப்பார்கள்.

கைகால் வலி, நரம்பு தொடர்பான பிரச்சினை அதிகம் இருக்கும். இவர்களுக்கு 2, 5, 11-ஆம் அதிபதிகளின் தசை நடந்தால், அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும். திடீர் அதிர்ஷ்டம், புதையல், உயில் சொத்து, தொழில் என பல்வேறுவழிகளில் பொருள் குவியும். தொட்டதெல்லாம் துலங்கும். எந்த வழியிலாவது இவர்களின் தேவைக்கேற்ற பொருளாதாரம் கிடைக்கும். கிடைக்கும் பொருளைப் பன்மடங் காகப் பெருக்க குறுக்குவழியில் நாட்டம் மிகும்.

"சதுரங்க வேட்டை'’ படத்தில் மண் பாம்பை வைத்துப் பணம் சம்பாதித்தது போல, பேராசை இவர்களுக்கு அவயோகத் தைத் தரும். புதனுடன் சனி சம்பந்தம் பெற்ற வர்கள் இதற்கும் ஒருபடிமேலே. புதன் என்ற புத்தி கிரகம், சனி என்ற மந்த கிரகத்துடன் கேந்திர- திரிகோணம், பார்வை என எந்த வழியில் சம்பந்தம் பெற்றாலும் புத்தி தடுமாற்றத்தை ஏற்படுத்தும். இவர்கள், இலவச ஆபர் கொடுப்பவர்கள், முதலீட்டை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறுபவர்கள், ஆன் லைன் வணிகம், ஷேர் மார்க்கெட், காலிமனை விற்பவர்கள் ஆகியோரிடமும், தவறான வாடிக்கையாளரையும் தேர்வு செய்து பெரும் முதலீட்டை இழப்பார்கள். அத்துடன் ஜாமின் கையெழுத்திட்டு அதற்குப் பொறுப்பேற்று ஏமாறு வார்கள்.

புதன்- சனி சம்பந்தம் இருப்பவர்கள் காதலன், காதலியால் வாழ்வு, பொருளை இழக்கிறார்கள். புதன், சனியுடன் ராகு சம்பந்தம் பெறுபவர்கள் லாபத்திற்காக- வெற்றிக்காக சட்டத்திற்குப் புறம்பான செயலையும் செய்யத் தயங்குவதில்லை. அன் றாட நடைமுறையில் சிறிய செயலுக்குக்கூட அடுத்தவர்களை நம்பியிருப்பதுடன் தொடர் ஏமாற்றத்தையும் சந்திக்கிறார்கள். அதிர்ஷ்ட தசை முடியும்பொழுது, சனி பகவான் கொடுத்ததையெல்லாம் பறித்து நடுரோட்டில் நிற்கவைப்பார். உழைக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டு உழைக்கத் துவங்கும்வரை விடாமல் விரட்டி உழைப்பின் அவசியத்தைப் புரியவைப்பார்.

ஜனனகால ஜாதகத்தில் 1, 7, 11-ஆமிடத்துடன் லக்ன சுபர் அல்லது குருவின் சம்பந்தம் பெற்றவர்கள் பிறந்தது முதல் கடும் உழைப்பாளிகள். சுயதொழில் புரிபவர்கள். தன் உழைப்பால் பலரின் வாழ்க்கையை உயர்த்துபவர்கள். உழைப்பால் உயர்ந்த உத்தமர்கள். குலப்பெருமையை நிலைநாட்டுபவர்கள்.

சனி பகவான், உழைப்பவர்களை ஊக்குவிப்பவர். உழைக்காதவர்களுக்கு உழைப்பின் அவசியத்தைப் புரியவைப்பவர். உழைக்காத பணம் நிலைக்காது.

செல்: 98652 20406

bala061219
இதையும் படியுங்கள்
Subscribe