Advertisment

17.01.2023-ல் கும்ப ராசிக்கு மாறும் சனிப்பெயர்ச்சி பலன்கள்! -திருக்கோவிலூர் பரணிதரன் (சென்ற இதழ் தொடர்ச்சி...)

/idhalgal/balajothidam/saturn-transit-benefits-aquarius-17012023-thirukovilur-paranidharan-continued

துலாம்

இதுவரையில் உங்கள் ராசிக்கு மாதுர் மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சஞ்சரித்துவந்த சனிபகவான் உங்களுக்கு நிறையவே சங்கடங்களை வழங்கி வந்தார். சோதனைக்குமேல் சோதனைகளை உண்டாக்கிவந்தார். அவருடைய பத்தாம் பார்வை ராசியைப் பார்த்ததால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு சங்கடங்களை அனுபவிக்க வேண்டிய நிலை உண்டானது. உங்கள் ராசிக்குள்ளாகவே கேதுவும் அமர்ந்திருப் பதால் சமீபகாலத்தில் அதிகபட்சமான சோதனைகளுக்கு ஆளானவராக இருந்திருப்பீர்கள். எந்த நன்மைக்கும் வழியில்லாமல், உடல்நல பாதிப்பு, மருத்துவச் செல வென்று சிரமத்திற்குமேல் சிரமத்திற்கு ஆளாகியிருப்பீர்கள். ஒருசிலரின் தாயாரின் உடல்நிலை பாதிக்கப் பட்டிருக்கும். நிம்மதியற்ற நிலை நீடித்திருக்கும். குடும்பத்தில் வீண் விரோதம், ஊர்விட்டு ஊர்செல்லும் நிலை, கல்வித் தடை, தொழிலில் முன்னேற் றமின்மை வாகனத்தில் பிரச்சினை, சுகத்திற்கு பாதிப்பு, நிலங்களில் வருவாயின்மை என்று உங்களை பாடாய்ப்படுத்தி யிருப்பார் சனி பகவான். கிரகங்களில் அசுப கிரகம் என்று பெயரெடுத்த சனிபகவான் நான்கில் சஞ்ச ரித்தபோது விரோதத்தை உண்டாக்கி எதிர்ப்பை அதிகரித்திருப்பார். உடலில் பிணியை உண்டாக்கி நலிவை ஏற்படுத்தியிருப்பார். இந்த நிலையில் 17-1-2023 முதல் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வபுண்ணிய, புத்திர ஸ்தானமான கும்ப ராசியில் பிரவேசம் செய்கிறார். கும்ப ராசி சனிபகவானுக்கு ஆட்சி வீடாகும். உங்கள் ராசியில்தான் சனி பகவான் உச்சமடைகிறார். அத்துடன், அவர் சஞ்சரிக்கப்போகும் கும்பத்தில் ஆட்சி யாகிறார். பொதுவாக ஐந்தாமிட சனியின் காலமென்பது இடையூறுகள், இன்னல்கள், குடும்பத்தில் பிரச்சினைகள், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு, பிரிவு, செய்துவரும் தொழிலில் நஷ்டம், தடங்கல், மேலதிகாரிகளின் விரோதம், நண்பர்கள், உறவினர்களிடம் கருத்து வேறுபாடு, வரவைவிட செலவு அதிகம், கடன் தொல்லைகள், வழக்குகளில் எதிரிடை யான பலன், பிள்ளைகளால் மனம் வருந்தவேண்டிய நிலை, கல்வியில் தடங்கல், மேற் படிப்பு முயற்சியையும் கடுமை யான சிரமத்தின்மீது தொடர வேண்டிய நிலை, விவசாயத் திலும் செலவு அதிகம்- வரவு குறைவென்ற நிலை, பொன், பொருளை விற்று நிலைமைகளை சமாளிக்க வேண்டிய நிலை, குலதெய்வம், குடும்ப தெய்வம் என்று நாடிச் செல்லவேண்டிய வழியும், நிலையான எண்ணமும் இல்லாத நிலையில் இருப்பீர்கள். இது துலா ராசிக்கு பொது வான பலன்தான். சுய ஜாதகம் பலம்பெற்றவர்களுக்கும், நட்பான தசாபுக்தி நடப்பவர் களுக்கும் இப்பலன்கள் மாறுபடும் என்பதுடன், மற்ற கிரகங்களின் பார்வைகளாலும் சேர்க்கைகளாலும் இக்காலத் தில் நன்மைகளும் நிகழக்கூடும். எனவே ஐந்தில் சனி வீற்றிருக்கும் இரண்டரை ஆண்டு காலமும் ஒரே மாதிரியான பலன்தான் நடக்குமென்று பயந்து விடாதீர்கள். உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில், அங்கிருந்து உங்கள் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தையும், களத்திர ஸ்தானமான ஏழாமிடத்தையும், லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தையும் பார்வையிடுகிறார். இக்காலத்தில் சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்கள் களத்திர ஸ்தானத்தில் பதிவதால் வாழ்க்கைத் துணை வழியே பிரச்சினைகள் உருவாகலாம். வாய்ப்பேச்சும் வில்லங்கத்தை உருவாக்கலாம். கூட்டுத்தொழில் புரிபவர்கள் கூட்டாளிகளிடம் மனக்கசப்பைக் காணலாம். நண்பர்களாக இருந்தவர்களும் எதிரிகளாக மாறும் சூழ்நிலை உண்டாகும். கூட்டுத் தொழிலில் சிக்கல்கள் உண்டாகலாம். காதல் விவகாரங்களும் எதிர்பார்த்த நன்மையை அளிக்காமல் தகராறு, வம்பு தும்பு என்று மாறலா

துலாம்

இதுவரையில் உங்கள் ராசிக்கு மாதுர் மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சஞ்சரித்துவந்த சனிபகவான் உங்களுக்கு நிறையவே சங்கடங்களை வழங்கி வந்தார். சோதனைக்குமேல் சோதனைகளை உண்டாக்கிவந்தார். அவருடைய பத்தாம் பார்வை ராசியைப் பார்த்ததால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு சங்கடங்களை அனுபவிக்க வேண்டிய நிலை உண்டானது. உங்கள் ராசிக்குள்ளாகவே கேதுவும் அமர்ந்திருப் பதால் சமீபகாலத்தில் அதிகபட்சமான சோதனைகளுக்கு ஆளானவராக இருந்திருப்பீர்கள். எந்த நன்மைக்கும் வழியில்லாமல், உடல்நல பாதிப்பு, மருத்துவச் செல வென்று சிரமத்திற்குமேல் சிரமத்திற்கு ஆளாகியிருப்பீர்கள். ஒருசிலரின் தாயாரின் உடல்நிலை பாதிக்கப் பட்டிருக்கும். நிம்மதியற்ற நிலை நீடித்திருக்கும். குடும்பத்தில் வீண் விரோதம், ஊர்விட்டு ஊர்செல்லும் நிலை, கல்வித் தடை, தொழிலில் முன்னேற் றமின்மை வாகனத்தில் பிரச்சினை, சுகத்திற்கு பாதிப்பு, நிலங்களில் வருவாயின்மை என்று உங்களை பாடாய்ப்படுத்தி யிருப்பார் சனி பகவான். கிரகங்களில் அசுப கிரகம் என்று பெயரெடுத்த சனிபகவான் நான்கில் சஞ்ச ரித்தபோது விரோதத்தை உண்டாக்கி எதிர்ப்பை அதிகரித்திருப்பார். உடலில் பிணியை உண்டாக்கி நலிவை ஏற்படுத்தியிருப்பார். இந்த நிலையில் 17-1-2023 முதல் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வபுண்ணிய, புத்திர ஸ்தானமான கும்ப ராசியில் பிரவேசம் செய்கிறார். கும்ப ராசி சனிபகவானுக்கு ஆட்சி வீடாகும். உங்கள் ராசியில்தான் சனி பகவான் உச்சமடைகிறார். அத்துடன், அவர் சஞ்சரிக்கப்போகும் கும்பத்தில் ஆட்சி யாகிறார். பொதுவாக ஐந்தாமிட சனியின் காலமென்பது இடையூறுகள், இன்னல்கள், குடும்பத்தில் பிரச்சினைகள், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு, பிரிவு, செய்துவரும் தொழிலில் நஷ்டம், தடங்கல், மேலதிகாரிகளின் விரோதம், நண்பர்கள், உறவினர்களிடம் கருத்து வேறுபாடு, வரவைவிட செலவு அதிகம், கடன் தொல்லைகள், வழக்குகளில் எதிரிடை யான பலன், பிள்ளைகளால் மனம் வருந்தவேண்டிய நிலை, கல்வியில் தடங்கல், மேற் படிப்பு முயற்சியையும் கடுமை யான சிரமத்தின்மீது தொடர வேண்டிய நிலை, விவசாயத் திலும் செலவு அதிகம்- வரவு குறைவென்ற நிலை, பொன், பொருளை விற்று நிலைமைகளை சமாளிக்க வேண்டிய நிலை, குலதெய்வம், குடும்ப தெய்வம் என்று நாடிச் செல்லவேண்டிய வழியும், நிலையான எண்ணமும் இல்லாத நிலையில் இருப்பீர்கள். இது துலா ராசிக்கு பொது வான பலன்தான். சுய ஜாதகம் பலம்பெற்றவர்களுக்கும், நட்பான தசாபுக்தி நடப்பவர் களுக்கும் இப்பலன்கள் மாறுபடும் என்பதுடன், மற்ற கிரகங்களின் பார்வைகளாலும் சேர்க்கைகளாலும் இக்காலத் தில் நன்மைகளும் நிகழக்கூடும். எனவே ஐந்தில் சனி வீற்றிருக்கும் இரண்டரை ஆண்டு காலமும் ஒரே மாதிரியான பலன்தான் நடக்குமென்று பயந்து விடாதீர்கள். உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில், அங்கிருந்து உங்கள் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தையும், களத்திர ஸ்தானமான ஏழாமிடத்தையும், லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தையும் பார்வையிடுகிறார். இக்காலத்தில் சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்கள் களத்திர ஸ்தானத்தில் பதிவதால் வாழ்க்கைத் துணை வழியே பிரச்சினைகள் உருவாகலாம். வாய்ப்பேச்சும் வில்லங்கத்தை உருவாக்கலாம். கூட்டுத்தொழில் புரிபவர்கள் கூட்டாளிகளிடம் மனக்கசப்பைக் காணலாம். நண்பர்களாக இருந்தவர்களும் எதிரிகளாக மாறும் சூழ்நிலை உண்டாகும். கூட்டுத் தொழிலில் சிக்கல்கள் உண்டாகலாம். காதல் விவகாரங்களும் எதிர்பார்த்த நன்மையை அளிக்காமல் தகராறு, வம்பு தும்பு என்று மாறலாம். சிறுசிறு விபத்துகள் நடக்கவும் வாய்ப்புள்ளதால் இக்காலத்தில் நிதானம் மிகமிக அவசியம். திருமணம் நடக்காமல் இருப்பவர்களுக்கு இக்காலத்தில் திருமணம் நடத்தாமல் இருப்பது நல்லது. எதிர்பாலினரிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நன்மையை உண்டாக்கும். சனிபகவானின் ஏழாம் பார்வை உங்கள் லாப ஸ்தானத்தில் பதிவதால், தடைப்பட்டிருந்த வருவாய் வரத்தொடங்கும். லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் லாபமாகும். மூத்த சகோதரர்களின் ஆதரவு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைக்கும் அப்பால் ஒரு உறவு உண்டாகும். மனம் பல வழிகளிலும் செல்லும். அதன் காரணமாக குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகலாம். ஒருசிலர் இருக்குமிடம் விட்டு வேறிடத்திற்குப் பெயரக்கூடிய நிலை உண்டாகும். இக்காலத் தில் மகிழ்ச்சியை மட்டுமே மனம் எதிர்பார்த்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். அதனால் உடல்நிலையில் சில சங்கடங்கள் தோன்றலாம். எனவே நோய் வந்தவுடன் மருத்துவரை சந்தித்து சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். சனிபகவானின் பத்தாம் பார்வை உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானத் தில் பதிவதால், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகும். பண விவகாரங்கள் இழுபறியாக இருப்பதுடன் நெருக்கடியையும் உண்டாக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியாமல் தடுமாறுவீர் கள். அதனால் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவீர்கள். கண்பார்வை பாதிக் கும் வாய்ப்பிருப்பதால் கண்ணில் பிரச்சினை வந்ததும் அதற்குரிய மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். சனிபகவான் ஒரு வீட்டில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்தாலும், அவர் தொடர்ந்து ஒரே இடத்தில் ஒரே சாரத்தில் இருப்பதில்லை. சாரம் மாறுவதும் பின்னோக்கிச் செல்வதுமாக இருப் பார். சனிபகவான் இருக்குமிடத் திற்கு ஐந்து, ஆறு, ஏழு, எட்டாம் வீடுகளில் சூரியன் சஞ்சரிக்கும் நான்கு மாதங் களில் சனிபகவான் வக்ரகதியடை வார். இத்தகைய காலகட்டங்களில் நாம் மேலே சொன்ன பலன்கள் மாறுபடும். அத்துடன் குருபகவா னின் சஞ்சாரம், ராகு- கேது சஞ்சார நிலைகளாலும், சுய ஜாதக பலத் தாலும், தசா புக்திகளுக்கேற்பவும் பலன்கள் வேறுபட்டு நன்மை கள் நடைபெறும்.

Advertisment

பரிகாரம்

சனிபகவான் உங்கள் ராசியில் உச்சம்பெறு கிறார் என்பதால், ஒருமுறை திருநள்ளாறு சென்று அங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி சனிபகவானுக்கு அர்ச்சனைசெய்து வழிபட்டுவருவதுடன், சனிக்கிழமைதோறும் ஆஞ்சனேயரை வணங்கிவாருங்கள். முடிந்தவரையில் வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு, உடை தானம்செய்து வாருங்கள்.

Advertisment

sat

விருச்சிகம்

இதுவரையில் உங்கள் விருச்சிக ராசிக்கு சகோதர, தைரிய, வீரிய, கீர்த்தி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சஞ்சரித்துவந்த சனிபகவான் பலவழிகளிலும் உங்களுக்கு நன்மைகளை வழங்கிவந்தார். அசாதாரண துணிச்சலையும், அதனால் நீங்கள் ஈடுபட்ட செயல்களில் வெற்றிகளையும் காண முடிந்தது. பொருளாதாரரீதியாகவும் முன்னேற்றம் அடைந்திருப்பீர்கள். வேலையிலும் தொழிலிலும் நினைத்தது நடந்திருக்கும். ஒருசிலருக்கு பதவி உயர்வு கிடைத்திருக்கும். அரசால் சலுகைகள் கிடைக்கப் பெற்றிருப்பீர்கள். குடும்பத்தில் செழிப்பும் சந்தோஷமும், சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டாகியிருக்கும். சனிபகவான் மூன்று, ஆறு, பதினொன் றாம் வீடுகளில் சஞ்சரிக்கும் காலங்களில் ஜாதகருக்கு அபரிமிதமான பலன்களை வழங்குவார் என்பது பொதுவிதி. பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும்போது மிதமான பலன்களை வழங்குவார். அதே போல் சனிபகவானின் பார்வைகள் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும், மூன்று, ஆறு, பதினொன்றாம் வீடுகளில் அவருடைய பார்வைகள் பதியும்போது அந்த இடங்களுக்கு சனிபகவான் நன்மை களை வழங்குவார் என்பதும் பொதுவிதி. இந்த நிலையில் கடந்த இரண்டரை வருடமும் மூன்றாம் வீட்டிலிருந்து உங்களுக்கு யோகப் பலன்களை வழங்கிய சனிபகவான் 17-1-2023 முதல் உங்கள் ராசிக்கு நான்காமிடமான மாதுர் மற்றும் சுக ஸ்தானமான கும்ப ராசியில் பிரவேசம் செய்கிறார். நான்காம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலத்தை அர்த்தாஷ்டமச் சனியின் காலமென சொல்வோம். அஷ்டமச்சனியாக இருந்து சனிபகவான் வழங்கும் பலன்களில் ஐம்பது சதவிகிதப் பலன்களை இந்த அர்த்தாஷ்டமச் சனியின் காலம் வழங்கும். உங்கள் ராசிநாதனுக்கு சனிபகவான் பாதகமானவர் என்பதுடன், அவர் இக்காலத் தில் ஆட்சி பலத்துடன் சஞ்சரிக்கவுள்ளார். உங்களின் சகோதர, தைரிய ஸ்தானத் திற்கும், மாதூர் மற்றும் சுக ஸ்தானத்திற்கும் அதிபதியான சனிபகவான் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் இடையூறுகள், அலைக்கழிப்பு, குடும்பத்தில் வீண் விரோதம், ஊர்விட்டு ஊர்சென்று வசிக்கவேண்டிய நிலை, பெற்ற தாயின் உடல்நலத்திற்கு பாதிப்பு, ஒருசிலருக்கு தாயுடனும், தாய்வழி உறவு களுடனும் விரோதம் ஏற்பட்டு அவர்களை விட்டு விலகவும் நேரலம். வீடு, சொத்து, வாகனத்தால் தொல்லைகளும், உற்றார்- உறவினர்களுடன் பகையும் ஏற்படுவதுடன், செய்துவரும் தொழிலிலும், பார்க்கும் உத்தி யோகத்திலும் சங்கடங்கள், நஷ்டம், பிரச்சினை கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஒருசிலருக்கு நோய்த் தாக்கம் ஏற்பட்டு சுகத்திற்கு பாதிப்புண்டாகும். விருச்சிக ராசிக்காரரான உங்களுக்கு நான்கில் சனிபகவான் சஞ்சரிக்கும் இக்காலத் தில் இத்தகைய பலன்கள் விளையுமென்பது பொதுவிதி. சுய ஜாதகம் பலம்பெற்றவர்களுக் கும், நட்பான தசாபுக்தி நடப்பவர்களுக்கும் இப்பலன் மாறுபடும் என்பதுடன், மற்ற கிரகங் களின் பார்வைகளாலும் சேர்க்கைகளாலும் ஸ்தான பலத்தாலும் நன்மைகளும் நிகழக் கூடும். உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் சனிபகவான் அங்கிருந்து உங்கள் சத்ரு ஸ்தானத்தையும், ஜீவனஸ்தானத்தையும், ஜென்ம ராசியையும் பார்வையிடுகிறார். சனிபகவான் பார்க்கும் இடங்கள் பாதிப் பிற்குள்ளாகும் என்பது பொதுவிதி. "கண்டங்கள் நான்கே ழெட்டில் கருதிய சனி- சேய் வந்தால் தெண்டங்கள் மிகவுண்டாகும்; திரவியம் நாசமாகும்; கொண்டதொரு மனைவி வேறாம்; குறித்திடுஞ் செட்டு நட்டம்; பண்டுள நாடு விட்டுப் பரதேசம் போவான் பாரே...' என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சனிபகவானும், செவ்வாய் பகவானும் நான்கு, ஏழு, எட்டாம் இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் வீண்செலவு, கையிலுள்ள பொருட்கள் தவறான வழியில் அழிந்து போகுதல், கணவன்- மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிவினை ஏற்படக்கூடும்; இருந்த இடத்தைவிட்டு வேறு ஊருக்கு சென்று வசிக்கவேண்டிய நிலை வரும். செல்வாக்கில் சரிவுண்டாகும். சொல்வாக்கு தவறும். நல்லதோர் நிலையும் மாறிப்போகும் என்று சொல்லி வைத்துள்ளனர் ஞானிகள். நான்கில் சனிபகவான் அமரும் காலத்தில் மூன் றாம் பார்வையாக உங்கள் சத்ரு ஸ்தானத்தைப் பார்ப்பதால் மறைமுக விரோதிகளின் தொல்லை கள் விலகும் அவர்களை மிக சுலபமாக எதிர்த்து வெற்றிகாண்பீர்கள். கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். தொழிலை விருத்திசெய்ய திட்டமிட்டு செயல்படுவீர்கள். வேலையில்லாமல் இருப்பவர்கள் கடுமையான முயற்சிக்குப்பின் வேலை வாய்ப்பை அடைவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கலாம். எதிர்பாராத பண வரவு எங்கிருந்தாவது வரும். நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வீர்கள். என்றா லும் எதிலும் நிதானத்துடன் செயல்படவேண்டும். சனிபகவானின் ஏழாம் பார்வை உங்கள் ஜீவன ஸ்தானத்தில் பதிவதால் நீங்கள் செய்துவரும் தொழிலில் கவனம்செலுத்தவேண்டும், கவனக் குறை வினாலும் அசட்டைத் தனத்தாலும் முக்கியமான காரியங்களில் தோல்வி உண்டாகலாம். பதவி உயர்வை இக்காலத்தில் உங்களால் எதிர்பார்க்க முடியாமல் போகும். உங்கள் மதிப்பிற்கும் கௌரவத்திற்கும் பல வகைகளிலும் சோதனை உண்டாகும். ஜீவனத் திற்கும் இக்காலத்தில் சிரமம் உண்டாகலாம். அதனால் மனச் சோர்வு, உடல் சோர்வு, டென்ஷன் என்ற நிலை உருவாகலாம். சனிபகவானின் பத்தாம் பார்வை ஜென்ம ராசியில் பதிவதால் அலைச்சல் அதிகரிக்கும். வேலைப் பளு கூடும். உறவினர்களிடம் பகையும், வேலைகள் காரணமாக வெளியூர் வாசம் செய்யவேண்டிய நிலையும், குடும்பத்தைவிட்டுப் பிரிந்து செல்லவேண்டிய நிலையும் உண்டாகும். உடல்நிலையில் பாதிப் புண்டாகி உங்களை அச்சுறுத்தக் கூடும். எனவே செய்துவரும் தொழிலில் மிக மிக கவனம் இக்காலத்தில் தேவை. சனிபகவான் ஒரு வீட்டில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்தாலும், அவர் தொடர்ந்து ஒரே வீட்டில் ஒரே நிலையில் சஞ்சரிப்பதில்லை. இருக்குமிடத்தில் வக்ரகதி அடைவதும், பின்னோக்கிச் செல்வதுமாக இருப்பார். இத்த கைய காலகட்டங்களில் நாம் மேலே சொன்ன பலன்கள் மாறு பட்டு நன்மைகள் உண்டாகும். அத்துடன் மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளாலும், ஸ்தான பலத்தா லும் பலன்கள் மாறுபடும்.

பரிகாரம்

திருக்கொள்ளிக்காட்டிற்கு ஒரு முறை சென்று சனி பகவானை தரிசித்து அர்ச்சனை செய்துவிட்டு வருவதுடன், நவகிரகங்களிலுள்ள சனி பகவானுக்கு சனிக்கிழமை சனி ஹோரையில் நல்லெண் ணெய் தீபமேற்றி வழிபட்டு வாருங்கள். உடல் பிணிகள் தீரும். உள்ளச்சுமைகள் குறையும்.

தனுசு

இதுவரையில் உங்கள் தனுசு ராசிக்கு தனம், குடும்பம், வாக்கு ஸ்தானமான இரண் டாம் வீட்டில் ஏழரைச்சனியின் கடைசி பகுதியாய், பாதச்சனியாய் சஞ்சரித்து வந்த சனிபகவான் உங்களுக்குப் பலவழிகளிலும் சங்கடத்தை வழங்கிவந்தார். நீங்கள் தொட் டதெல்லாம் நினைத்ததற்கு மாறாகவே முடிந்தது. விரயத்திற்குமேல் விரயம் உண்டானது. குடும்பத்திலும் பிரச்சினைகள் தலைதூக்கியதுடன் சிலருக்கு குடும்பத்தைவிட்டுப் பிரிந்துசெல்லும் நிலையும் ஏற்பட்டது. கிரகங்களில் அசுப கிரகம் என்று பெயரெடுத்த சனி பகவான் உங்கள் ராசிநாதனுக்கு நட்பானவராவார். உங்களுக்கு குடும்பாதிபதியும், சகோதர, தைரிய, வீரிய ஸ்தானாதிபதியும் சனி பகவான் என்பதால், உங்களுக்கு யோகம் கொடுப்பவராகவே சனி பகவான் உள்ளார். எனவே பெருமளவில் அவர் உங்களுக்குக் கெடுதல் செய்திருக்கமாட்டார் என்றா லும், நீதிவானான சனிபகவான் அவரவர் செய்த பாவ- புண்ணியங்களுக்கேற்ப பலன் வழங்கிடக் கூடியவர் என்பதால், உங்களு டைய கர்மவினைகளுக்கேற்ப இக்காலத் தில் பலன்களை வழங்கி வந்திருப்பார். பலருக்கு அதிகபட்சமான சங்கடங் களையும் வழங்கியிருப்பார். அதற்குக் காரணம் அவர் பார்த்த இடங்கள் அப்படி. உங்களுடைய சுக ஸ்தானம், ஆயுள் ஸ்தானம், பெண்களாக இருப்பின் மாங்கல்ய ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானத்தின்மீதும் அவரு டைய பார்வைகள் பதிந்த காரணத்தினால் பல்வேறு சங்கடங்களைக் கடந்த இரண்டரை ஆண்டுகளில் நீங்கள் அடைந்திருப்பீர்கள். இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத் தில் சஞ்சரித்து பாதகமான பலன்களை வழங்கி வந்த சனி பகவான் 17-1-2023 முதல் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான கும்ப ராசியில், தைரிய, வீரிய, சகோதர ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இக்காலத்தில் ஏழரைச்சனியின் பிடியிலிருந்து நீங்கள் முழுமையாக விடுபடுகிறீர்கள். சனிபகவான் கோட்சாரரீதியாக மூன்று, ஆறு, பதினொன்றாம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் ஜாதகருக்கு அபரிமிதமான பலன்களை வழங்குவார் என்பது பொதுவிதி. 17-1-2023 முதல் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனிபகவான் இனி வரும் காலத்தில் உங்களுக்குப் பல்வேறு நன்மைகளை வழங்கப் போகிறார். இதுவரை நீங்கள் அடைந்துவந்த சங்கடங்களிலிருந்து உங்களை விடுவிக்கப் போகிறார். முதலில் உங்கள் மனதிலும் உடலிலும் முன்னேற்றத்தை உண்டாக்குவார். எதையோ இழந்ததுபோல் அவதிப்பட்டு மூலைக்குள் அடங்கிக் கிடந்த உங்களுக்கு உற்சாகத்தையும், எல்லாவற்றையும் எதிர்கொண்டு நடைபோடும் சக்தியையும் உண்டாக்குவார். வழக்குகள் சாதகமாகக்கூடிய நிலையும், பொருளாதார நிலையில் முன்னேற்றமும், எடுத்த காரியங்கள் யாவற்றிலும் வெற்றி என்ற நிலையையும் சனி பகவான் வழங்கிடப் போகிறார். உங்கள் தொழிலும் இக்காலத்தில் சிறப்படையும், ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், குடும்பத்தில் சந்தோஷமும் செழிப்பும் உண்டாகும். உங்களுக்குத் தொல்லை கொடுத்த எதிரிகளை அடக்கி வெற்றிகொள்ளும் ஆற்றல் உண்டாகும். சுய ஜாதகம் பலம்பெற்றவர்களுக்கும், நட்பான தசாபுக்தி நடப்பவர்களுக்கும், கடந்த ஜென்மங்களில் புண்ணியம் செய்தவர்களுக்கும் இப்பலன் பலமடங்கு அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் இக்காலத்தில் உங்கள் ராசிக்கு ஐந்து, ஒன்பது, பன்னிரண்டாம் இடங்களில் அவருடைய பார்வையை செலுத்துகிறார். இதனால் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானமும், பித்ரு சகாய ஸ்தானமும், விரய ஸ்தானமும் சனி பகவானின் பார்வைக்கு ஆட்படுகிறது. பொதுவாக சனிபகவானின் பார்வை எதிர்மறையான பலன்களை வழங்குமென்பது விதி. அவர் அமர்ந்த இடம் சிறப்படையும் என்பது பொதுவிதி. இக்காலத்தில் சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்கள் பூர்வ புண்ணிய புத்திரஸ்தானத்தில் பதிவதால், புத்திர- புத்திரர்களால் சில நெருக்கடி களையும் சங்கடங்களையும் அனுபவிக்க நேரும். அவர்களின் செயல் உங்களை மன வருத்தத்திற்கு ஆளாக்கும். குடும்பத்திலும் அவர்களால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். கணவன்- மனைவிக்குள் சச்சரவுகள் உண்டாகலாம். குழப்பமான நிலை உண்டாகி மனம் பெரிதும் அவதியுறுமென்பதால் இக்காலத்தில் நிதானம் மிகமிக முக்கியம். சனிபகவானின் ஏழாம் பார்வை உங்களின் பித்ரு, காரிய, சகாய ஸ்தானத்தில் பதிவதால் கணவன்- மனைவியிடையே மோதல், கருத்து வேறுபாடு உண்டாகும். ஒருசிலர் குடும்பத்தைவிட்டுப் பிரிய நேர்வதுடன் தீயவர் சேர்க்கைக்கும் ஆளாவீர்கள். வருமானம் குறையும். பணக்கஷ்டம், தீய பழக்க வழக்கங்கள் என உண்டாவதுடன், வெளியூர் வாசமும் ஒருசிலருக்கு உண்டாகும். அவப்பெயருக்கும் ஆளாகவேண்டி வரும். எனவே பின்விளைவுகளை எண்ணிப் பார்த்து சிந்தித்து செயல்படுவது இக்காலத்தில் நன்மையாகும். சனிபகவானின் பத்தாம் பார்வை உங்கள் விரய ஸ்தானத்தில் பதிவதால் பலவழிகளிலும் பணம் விரயமாகும். திடீர் செலவுகள் ஏற்படும். உங்கள் மகிழ்ச்சிக்காக சில செயல்களில் ஈடுபடுவீர்கள். அதனால் கையிருப்புகள் கரையும். வீண் அலைச்சல், காரியம் கை கூடாமை, மன உளைச்சல், எதிரிகளால் இடையூறு, மதிப்பிற்கும் கௌரவத்திற்கும் பங்கம் என்ற நிலையை ஏற்படுத்துவார் என்பதால், செயல்கள் யாவற்றிலும் சிந்தித்து செயல்பட வேண்டும்.

பரிகாரம்

சனிக்கிழமைதோறும் நவகிரகத்திலுள்ள சனிபகவானுக்கு வன்னி புஷ்பத்தையும், நீலோற்பவ மலரையும் சாற்றி வழிபடுவதுடன், ஊனமுற்றவர்களுக்கு உணவும், உடையும் வழங்கி வாருங்கள். சனிபகவானின் நற்பார்வை உங்கள்மீது பதியும். அவரால் உண் டாகும் சங்கடங்கள் மாறும்.

(தொடர்ச்சி அடுத்த இதழில்)

செல்: 94443 93717

bala301222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe