17.01.2023-ல் கும்ப ராசிக்கு மாறும் சனிப்பெயர்ச்சி பலன்கள்! -திருக்கோவிலூர் பரணிதரன் (சென்ற இதழ் தொடர்ச்சி....)

/idhalgal/balajothidam/saturn-transit-benefits-aquarius-17012023-thirukovilur-paranidharan-0

மகரம்

இதுவரையில் உங்கள் மகர ராசிக்கு ஜென்ம ஸ்தானமான உங்கள் ராசியில் ஜென்மச்சனியாக சஞ்சரித்துவந்த சனி பகவான் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பார். பல வழி யிலும் தட்டுப்பாட்டை அதிகரித்திருப் பார். உடலில் நோய்த் தொல்லைகளை அதிகரித்து சிரமத்திற்கு ஆளாக்கியிருப் பார். நல்லமுறையில் பழகிவந்தவர் களையும் உங்களைவிட்டு விலக வைத்திருப்பார். செய்துவரும் தொழிலில் பாதிப்பையும், அதனால் வருமானக் குறை வையும் ஏற்படுத்தியிருப்பார். கூட்டாளி கள் பிரிந்துசென்று தனித்து செயல்பட ஆரம்பித்ததால் உங்கள் மனதில் இனம் புரியாத பயம் உண்டாகியிருக்கும்.

அளவுக்குமீறிய சங்கடங்களை அனுபவித் தும், நண்பர்கள், உறவினர்கள் பகையாளி யாக மாறியும், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகி மனதில் மரணபயமும் சேர்ந்திருக்கும்.

கல்வி கற்போருக்கு கல்வியில் தடையும், மந்தநிலையும் ஏற்பட்டிருக்கும். பொன், பொருட்களில் குறைவு, சேமிப்பில் சரிவு என்று ஜென்மச்சனி உங்களை எழ முடியாத அளவுக்குக் கட்டிப்போட்டி ருக்கும். உங்கள் ஜென்மத்திற்கும், குடும்பம், வாக்கு ஸ்தானத்திற்கும் சனிபகவானே அதிபதியாகிறார் என்றாலும், அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை யும், அங்கிருந்து அவர் பார்க்கும் இடங் களுக்குமுரிய பலன்களையும் அவர் வழங்க வேண்டியவராகிறார்.

இந்த நிலையில் 17-1-2023 முதல் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான கும்ப ராசியில், குடும்பம், தனம், வாக்கு ஸ்தானத்தில் பாதச்சனியாக இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்யவிருக்கிறார் சனிபகவான்.

இக்காலத்தில் நீங்கள் கொடுத்த வார்த்தைகளை நிறைவேற்றுவீர்கள். தடுமாற்றங்களை சரிசெய்வீர்கள். எதிர்பாலினர் விஷயத்தில் எச்சரிக்கை யடைவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட தேவையற்ற சங்கடங்களை விலக்குவீர்கள். உடலில் ஏற்பட்ட ஆரோக்கியக் குறைகளிலிருந்து விடுபடுவீர்கள். வரவு- செலவில் ஏற்பட்ட குழப்பம் விலகும். பொருளாதார சங்கடங்கள் விலகும். குடும்பத்திற்கும் உங்களுக்கும் உண்டான இடைவெளி விலகும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதாரநிலை அதிகரிக்கும். உற்றார்- உறவினர்களிடம் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சநிலை மாறும்.

இரண்டாமிடத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் அவர் பார்க்கும் பார்வைகளுக்குரிய இடங்களுக்கு சங்கடம் ஏற்படும் என்பது பொதுவிதி. ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் அங்கிருந்து உங்கள் சுக ஸ்தானத்தையும், ஆயுள் ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.

இக்காலத்தில் சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்கள் மாதுர் மற்றும் சுக ஸ்தானத்தில் பதிவதால், பெற்ற தாய் இருப்பின், அவருடைய ஆரோக்கியத்திற்குக் கேடு உண்டாகும். அல்லது தாயுடன் பகைமை உண்டாகும். தாய்வழி உறவினர் களால் சச்சரவு, சங்கடம் ஏற்படும். வீடு, சொத்து, வாகனம் இருந்தால் அவற்றால் தொல்லைகள் உண்டாகும்.

அலைச்சல், திரிச்சல், நேரத்திற்கு உணவுண்ண முடியாமல், உறங்கமுடியாமல் போகும். மொத்தத்தில் உங்கள் நிம்மதி கெடும். சுகத்திற்கு சங்கடம் உண்டாகுமென்று சொல்லலாம்.

சனிபகவானின் ஏழாம் பார்வை உங்கள் ஆயுள் ஸ்தானத்தில் பதிவதால் பல்வேறு இடர்ப்பாடுகளை நீங்கள் சந்திக்கநேரும். உடல்நிலையில் ஏதேனுமொரு சங்கடம் தொடர்ந்துகொண்டே இருக்கும். சிலநேரத்தில் நினைத்திருந்த வேலைகளையும் நடத்தமுடியாமல் போ

மகரம்

இதுவரையில் உங்கள் மகர ராசிக்கு ஜென்ம ஸ்தானமான உங்கள் ராசியில் ஜென்மச்சனியாக சஞ்சரித்துவந்த சனி பகவான் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பார். பல வழி யிலும் தட்டுப்பாட்டை அதிகரித்திருப் பார். உடலில் நோய்த் தொல்லைகளை அதிகரித்து சிரமத்திற்கு ஆளாக்கியிருப் பார். நல்லமுறையில் பழகிவந்தவர் களையும் உங்களைவிட்டு விலக வைத்திருப்பார். செய்துவரும் தொழிலில் பாதிப்பையும், அதனால் வருமானக் குறை வையும் ஏற்படுத்தியிருப்பார். கூட்டாளி கள் பிரிந்துசென்று தனித்து செயல்பட ஆரம்பித்ததால் உங்கள் மனதில் இனம் புரியாத பயம் உண்டாகியிருக்கும்.

அளவுக்குமீறிய சங்கடங்களை அனுபவித் தும், நண்பர்கள், உறவினர்கள் பகையாளி யாக மாறியும், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகி மனதில் மரணபயமும் சேர்ந்திருக்கும்.

கல்வி கற்போருக்கு கல்வியில் தடையும், மந்தநிலையும் ஏற்பட்டிருக்கும். பொன், பொருட்களில் குறைவு, சேமிப்பில் சரிவு என்று ஜென்மச்சனி உங்களை எழ முடியாத அளவுக்குக் கட்டிப்போட்டி ருக்கும். உங்கள் ஜென்மத்திற்கும், குடும்பம், வாக்கு ஸ்தானத்திற்கும் சனிபகவானே அதிபதியாகிறார் என்றாலும், அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை யும், அங்கிருந்து அவர் பார்க்கும் இடங் களுக்குமுரிய பலன்களையும் அவர் வழங்க வேண்டியவராகிறார்.

இந்த நிலையில் 17-1-2023 முதல் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான கும்ப ராசியில், குடும்பம், தனம், வாக்கு ஸ்தானத்தில் பாதச்சனியாக இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்யவிருக்கிறார் சனிபகவான்.

இக்காலத்தில் நீங்கள் கொடுத்த வார்த்தைகளை நிறைவேற்றுவீர்கள். தடுமாற்றங்களை சரிசெய்வீர்கள். எதிர்பாலினர் விஷயத்தில் எச்சரிக்கை யடைவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட தேவையற்ற சங்கடங்களை விலக்குவீர்கள். உடலில் ஏற்பட்ட ஆரோக்கியக் குறைகளிலிருந்து விடுபடுவீர்கள். வரவு- செலவில் ஏற்பட்ட குழப்பம் விலகும். பொருளாதார சங்கடங்கள் விலகும். குடும்பத்திற்கும் உங்களுக்கும் உண்டான இடைவெளி விலகும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதாரநிலை அதிகரிக்கும். உற்றார்- உறவினர்களிடம் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சநிலை மாறும்.

இரண்டாமிடத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் அவர் பார்க்கும் பார்வைகளுக்குரிய இடங்களுக்கு சங்கடம் ஏற்படும் என்பது பொதுவிதி. ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் அங்கிருந்து உங்கள் சுக ஸ்தானத்தையும், ஆயுள் ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.

இக்காலத்தில் சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்கள் மாதுர் மற்றும் சுக ஸ்தானத்தில் பதிவதால், பெற்ற தாய் இருப்பின், அவருடைய ஆரோக்கியத்திற்குக் கேடு உண்டாகும். அல்லது தாயுடன் பகைமை உண்டாகும். தாய்வழி உறவினர் களால் சச்சரவு, சங்கடம் ஏற்படும். வீடு, சொத்து, வாகனம் இருந்தால் அவற்றால் தொல்லைகள் உண்டாகும்.

அலைச்சல், திரிச்சல், நேரத்திற்கு உணவுண்ண முடியாமல், உறங்கமுடியாமல் போகும். மொத்தத்தில் உங்கள் நிம்மதி கெடும். சுகத்திற்கு சங்கடம் உண்டாகுமென்று சொல்லலாம்.

சனிபகவானின் ஏழாம் பார்வை உங்கள் ஆயுள் ஸ்தானத்தில் பதிவதால் பல்வேறு இடர்ப்பாடுகளை நீங்கள் சந்திக்கநேரும். உடல்நிலையில் ஏதேனுமொரு சங்கடம் தொடர்ந்துகொண்டே இருக்கும். சிலநேரத்தில் நினைத்திருந்த வேலைகளையும் நடத்தமுடியாமல் போகும். வருமானத்தில் தடை, சங்கடம், திடீர் நெருக்கடி என்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற சங்கடம், தம்பதியரிடையே கருத்து வேறுபாடு, உறவினர்களிடம் மனக்கசப்பு, முயற்சிகளில் தடை. ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை, வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திற்குக் கேடு, அந்நிய நபர்களுடன் தொடர்பு, நெருங்கிய உறவினர்களின் பிரிவு என்ற நிலை உருவாகும். சமூகத்தினரின் அவமதிப்பிற்கும் ஆளாக நேரும். தொழிலிலும் எதிர்பாராத சிரமங்களை சந்திக்கவேண்டிவரும்.

சனிபகவானின் பத்தாம் பார்வை உங்கள் லாப ஸ்தானத்தில் பதிவதால் பலவழியிலும் நன்மைகள் உண்டாகும். வரவு அதிகரிக்கும். அதிர்ஷ்டம் கைகொடுக்கும். எதிர்பாலினனரால் உங்கள் வசதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். அரசுவழி முயற்சிகளில் நன்மையுண்டாகும். வீட்டில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் ஏற்படும். தொழிலில் மாற்றம், இடமாற்றம் போன்றவை நிகழக்கூடும் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரு வீட்டில் இரண்டரை ஆண்டுகள் சனிபகவான் சஞ்சாரம் செய்தாலும், அவர் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகளும் ஒரே இடத்தில், ஒரே சாரத்தில் இருப்பதில்லை. அவர் சஞ்சரிக்கும் இடத்தில் வக்ரகதி அடைவதும் பின்னோக்கிச் செல்வதுமாய் இருப்பார். இத்தகைய காலகட்டங்களில் நாம் மேலே சொன்ன பலன்கள் மாறுபடும். அத்துடன் குருபகவானின் பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சிகளாலும் பலன்கள் மாறுபடும். தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும். அதேபோல், பூர்வபுண்ணிய பலமுடையவர்களுக்கும், நல்ல தசாபுக்திகள் நடப்பவர்களுக்கும் பெருமளவில் பாதிப்புகள் ஏற்படாது.

பரிகாரம்

விழுப்புரம் அருகில், சென்னை- கும்பகோணம் நெடுஞ்சாலையிலுள்ள கோலியனூரில், வாலியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலம் உள்ளது. அம்மன் கோவிலின் நுழைவு வாயிலில் வாலி லிங்கத்தை வைத்து பூஜிப்பதுபோலுள்ள இச்சந்நிதி உலகப் பிரசித்திபெற்றது. இங்கு ஒருமுறை சென்று வாலீஸ்வரரையும், பெரியநாயகி அம்மையையும் வணங்கி அர்ச்சனைசெய்துவாருங்கள்.சனி பகவானுக்கு இத்தலம் விசேஷமானதாகும்.

dd

கும்பம்

இதுவரையில் உங்கள் கும்ப ராசிக்கு 12-ஆமிடமான விரய ஸ்தானத்தில் விரயச்சனியாக சஞ்சரித்த சனிபகவான், வீண் விரயங்களுக்கும் தரித்திரத்திற்கும் உங்களை ஆளாக்கினார். பணம் பலவழிகளிலும் பறந் தோடியிருக்கும். கையிருப்பு பெருமளவில் கரைந்திருக்கும். காரியத்தில் தேக்கம் ஏற்பட்டிருக்கும். வருமானமும் எதிர்பார்த்த அளவில் இருந்திருக்காது. கௌரவத்திற்கு சோதனை ஏற்படக்கூடிய சம்பவங்களும் சில நடந்திருக்கும்.

குடும்பத்தில் சண்டை, சச்சரவு, எதிலும் பற்றில்லாத, சாதகமில்லாத நிலையை உருவாக்கியிருக்கும். தேவையற்ற பிரச்சினைகள், வேலைப்பளு அதிகரிப்பு, தகுதிக்கும் திறமைக்கும் மதிப்பில்லாத நிலை, மனைவி, மக்களால் கவலை, வீண் அலைச்சல், மரண பயம் என்ற நிலையை உருவாக்கியிருப்பார். ஆனாலும் நண்பர்கள், உறவினர்கள் ஆதரவால் மனதிற்கு ஒருவித நிம்மதி உண்டாகியிருக்கும். தெய்வ வழிபாட்டால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிருக்கும்.

இதற்கெல்லாம் காரணம், பன்னிரண்டா மிட சனி பாதகம் செய்வார் என்பதுடன், அவர் பார்த்த குடும்ப ஸ்தானமும், பாக்கிய ஸ்தானமும் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதுதான். இந்த நிலையில், கடந்த இரண்டரை வருடம் 12-ஆம் வீட்டில் சஞ்சரித்த சனி பகவான் 17-1-2023 முதல் உங்கள் ஜென்ம ராசியில் ஜென்மச்சனியாக சஞ்சரிக்கப் போகிறார். இது ஏழரைச்சனியின் மத்திய பகுதியாகும்.

ஒரு ஜாதகருக்கு ஏழரைச்சனி நடை பெற்றாலும் முதல் சுற்றில் மட்டுமே சோதனைகளையும் வேதனைகளையும் உண்டாக்குவார். இரண்டாம் சுற்றில் ஜாதகருக்கு நன்மைகளையே வழங்குவார்.

முதன்முதலாக ஒருவருக்கு ஏழரைச்சனி வரும்போது ஜாதகருக்கு கஷ்டப் பலன்களும் ஜாதகருடைய தந்தைக்கு சுபப் பலன்களும் நடைபெறும். இரண்டாவது சுற்றில் சனி ஏழரைச்சனியாக வரும்போது அந்த ஜாதகருக்கு சுபப் பலன்களும், அவருடைய தந்தைக்கு கஷ்டப் பலன்களும் நடைபெறும். மூன்றாவது சுற்றாக வரும்போது ஜாதகருக்கு மரணத்தையோ மரணத்திற்கு ஒப்பான கஷ்டங்களையோ சனிபகவான் வழங்குவார்.

இதனை நாம் பொதுவிதியாக எடுத்துக்கொண்டாலும், ஜென்ம ராசியில் சனிபகவான் சஞ்சரிக்கும்போது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவார். பெண்களுக்கு கர்ப்பப்பையில் சங்கடத்தை உண்டாக்குவார். பணத் தட்டுப்பாடு அதிகமாகும். செயல்படமுடியாத அளவுக்கு மனதில் சங்கடங்களை உண்டாக்குவார். நல்லமுறையில் பழகி வந்தவர்களையும் விலகவைப்பார். செய்துவரும் தொழிலில் பாதிப்பும் அதன் காரணமாக வருமானத்தில் குறைவையும் ஏற்படுத்துவார். கூட்டாளிகள் பிரிந்துசென்று தனித்து செயல்படும் நிலையின் காரணமாக மனதில் இனம்புரியாத பயமுண்டாகும். அளவிற்குமீறிய சங்கடங்களை அனுபவிக்கவைப்பார். நண்பர்கள், உறவினர்கள் பகையாளியாக மாறுவார்கள். குடும்பத்தில் துக்ககரமான சம்பவங்கள் நிகழ்வதுடன், மனதில் மரணபயம் இருந்து வரும். கல்வி கற்பவருக்கு கல்வியில் தடையும், மந்த நிலையும் ஏற்படும். பொன், பொருட்களில் குறைவு ஏற்படும். பொதுவாக அசுப கிரகங்கள் அவர்கள் அமரும் ஸ்தானத்தின் நிலையில் பாதிப்பை வழங்குவார்கள். அந்தரீதியில் சனிபகவான் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்க வேண்டியவராகிறார். என்றாலும் சனிபகவானே உங்கள் ராசியாதிபதி என்பதால், அவர் பெருமளவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தமாட்டார்.

ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவான் அங்கிருந்து உங்கள் தைரிய, வீரிய, சகோதர ஸ்தானத்தையும், களத்திர ஸ்தானத்தையும், ஜீவன ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.

சனிபகவான் பார்க்குமிடங்கள் பாதிப் படையும் என்பது ஜாதக விதி. ஆனால், மூன்று, ஆறு, பதினொன்றாம் இடங்களில் அமரும் போதும், அந்த இடங்களைப் பார்க்கும் போதும் அந்த இடங்களுக்குரிய பலன் களை நற்பலன்களாகவே வழங்குவார்.

மூன்றாம் பார்வையாக உங்கள் சகோதர, தைரிய, வீரிய ஸ்தானத்தைப் பார்க்கும் சனிபகவான் உங்கள் தன்னம் பிக்கையை அதிகரிப்பார். மனதில் உற்சாகத்தை உண்டாக்குவார். பலவித சாதனைகளை நிகழ்த்த வைப்பார். சமூகப் பணிகளில் ஆர்வத்தை அதிகப்படுத்துவார். பொறுப்புள்ள பதவிகளில் அமரவைப்பார். அரசியலில் ஈடுபாடு உடையவர்களுக்கு நல்ல பதவிகளையும் பொறுப்புகளையும் அடையவைப்பார். வாகனம் வாங்கும் யோகத்தை வழங்குவார். கட்டடப் பணிகளில் இருந்து வந்த குறைபாட்டை அகற்றுவார். சகோதரவழியில் பல்வேறு நன்மைகளை வழங்குவார். எடுத்த காரியத்தில் வெற்றியையும், தொழிலில் முன்னேற்றத்தையும் அளிப்பார். உங்கள் அறிவும் வீரமும் இக்காலத்தில் பளிச்சிடும். எழுத்தாற்றல் மிக்கவர்களாக இருந்தால் அவர்களுக்கு சிறப்பும் புகழும் உண்டாகும். செழிப்பும் சந்தோஷமும் தோன்றும்.

ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தைப் பார்க்கும் சனிபகவான், தீயோர் சேர்க்கைக்கு ஆளாக்குவார். கெட்ட நடத்தை உடையவருடன் தொடர்புகொள்ள வைப்பார். கெட்ட நடத்தையுடைய பெண்களின் சேர்க்கையும், அதனால் தொல்லை, நோய், அவமானம், பொருள் சேதம், வீண்கவலை என்ற நிலையையும் ஏற்படுத்துவார். குடும்பத்தில் கணவன்- மனைவிக்கிடையே பிரச்சினைகளையும் பிரிவையும் உண்டாக்குவார்.

குடும்பத்தில் உள்ளவர்களின் உடல் நிலையில் கவலையளிப்பார். ஒருசிலர் குடும்பத்தைவிட்டு விலகவேண்டிய நிலையையும் உண்டாக்குவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கவனம்செலுத்த முடியாமல் பல்வேறு நெருக்கடிகளை அளிப்பார். அடிக்கடி வெளியூர்ப் பயணம் ஏற்படும். வயிறு, மார்பு சம்பந்தமான நோய்கள் உண்டாகும்.

பத்தாம் பார்வையாக உங்கள் தொழில் மற்றும் ஜீவன ஸ்தானத்தைப் பார்க்கும் சனிபகவான் தொழிலில் மந்தநிலையை ஏற்படுத்துவார். செல்வாக்கு, கௌரவம் போன்றவற்றுக்கு பங்கத்தை உண்டாக்குவார். உடல் உபாதையை ஏற்படுத்துவார். பிரச் சினைகளை அதிகரிக்கச் செய்வார். ஜீவனவகையில் சிரமத்தை உண்டாக்குவர். இடமாற்றத்தை ஏற்படுத்துவார். பொதுவில் இக்காலத்தில் மகிழ்ச்சியும் வருத்தமும் கலந்த பலன்களையே அளிப்பார்.

ஜென்ம ராசியில் சனிபகவான் சஞ்சரித் தாலும் இரண்டரை ஆண்டு காலமும் அவர் ஒரே நிலையில், ஒரே சாரத்தில் சஞ்சரிக்கப்போவதில்லை. வக்ர நிலையடைவார், சாரம் மாறுவார் என்பதால் அதற்கேற்ப பலன்கள் மாறும். நன்மைகள் நடைபெறும்.

பரிகாரம்

சனிக்கிழமை காலையில் நவகிரகத்தை 108 முறை சுற்றிவந்து வணங்குவதுடன், அகத்திக்கீரை வாங்கி பசுமாட்டிற்கு தானம் வழங்குங்கள். தயிர்சாதத்தில் எள் கலந்து காக்கைகளுக்கு வழங்குங்கள். வயோதிகர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் அன்னதானம், உடைதானம் வழங்கி அவர்களின் ஆசியைப் பெறுங்கள்; சங்கடங்கள் குறையும்.

மீனம்

இதுவரையில் உங்கள் மீன ராசிக்கு லாப ஸ்தானம் என்னும் பதினொன்றாம் வீட்டில் சஞ்சரித்துவந்த சனிபகவான் உங்கள் கர்மவினைகளுக்கேற்ப பல வகை யிலும் நன்மைகளை வழங்கிவந்தார். தொழில் முன்னேற்றம், எதிர்பாராத வருமானம், வீட்டில் மகிழ்ச்சி, ஆனந்தம் என்ற நிலையுடன் பொன், பொருள் சேர்க்கையும், புதியவர்களால் முன்னேற்றம், சந்தோஷம் என்றும் கண்டிருப்பீர்கள். விலகிச்சென்ற நண்பர்கள் மீண்டும் உங்கள் தொடர்பில் வந்திருப்பார்கள். உங்களில் ஒருசிலருக்கு தொழில் மாற்றம், இடமாற்றம், வீடு மாற்றம், ஊர்மாற்றம் என்று மாற்றங் கள் ஏற்பட்டிருக்கும். அதனால் லாபமும் உண்டாகியிருக்கும். பணம் பல வழிகளிலும் வந்திருக்கும்.

இந்த நிலையில் 17-1-2023 அன்று உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் வீடான விரய ஸ்தானத்தில், கும்ப ராசியில் ஏழரைச்சனியாக சஞ்சரிக்க இருக்கிறார் சனிபகவான்.

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கும் விரய ஸ்தானத்திற்கும் சனி பகவானே அதிபதியாகிறார். உங்கள் ராசிநாதனான குரு பகவானுக்கு சனி பகவான் நட்பானவர்.

உங்கள் ராசிக்கு சனிபகவான் நட்பானவராக இருந்தாலும் நியாயம் தவறாத நீதிபதி என்று பெயர்பெற்றவர்.

பாவங்கள் புரிபவர்களுக்கு கடுமையானவராகவும், புண்ணியம் புரிபவர்களுக்கு மென்மையானவராகவும் விளங்குவார் சனிபகவான்.

அதன்காரணமாகத்தான் அவர் ஜாதகரைப் பிடிக்கும் காலத்தில் அதற் கேற்ப நடந்துகொண்டு, ஒரே ராசியினராக இருந்தாலும் ஒருவருக்கு கடுமையான சோதனைகளையும், மற்றவருக்கு அவர் சமாளித்திடக்கூடிய அளவுக்கு சாதாரண பிரச்சினைகளையும் வழங்குகிறார்.

இவையெல்லாம் சரி; உங்கள் ராசிக்கு பதினொன்றில் லாபச் சனியாக கடந்த இரண்டரை ஆண்டுகாலம் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையில் வளத்தைச் சேர்த்த சனிபகவான், இப்போது உங்களுக்கு ஏழரைச்சனியின் விரயச்சனியாக சஞ்சரிக்கும் நிலையில் எப்படிப்பட்ட பலன்களை வழங்கப் போகிறார்?

ஏழரைச்சனியின் ஆரம்பப் பகுதியான இக்காலத்தில் காரியத்தில் தேக்கமும், வருமானத்தில் குறைவும் உண்டாகும். பொருள் விரயமாகும். வீண் அலைச்சல், மன உளைச்சல் ஏற்படும். மதிப்பு, கௌரவத்திற்கு பங்கம் உண்டாகும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள், பிரிவு ஏற்படும். எதிரிகளால் இடையூறும், தீய வழியில் செல்வதற்கு சந்தர்ப்பமும் அமையும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

பொதுவாக சனிபகவானின் பார்வை படும் இடங்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் என்பது விதி. உங்கள் ராசிக்கு பன்னிரண் டாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனிபகவான் அங்கிருந்து உங்கள் தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்தையும், ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தையும், பாக்கிய ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.

குடும்ப ஸ்தானத்தைப் பார்க்கும் சனிபகவானால் குடும்பத்தில் பிரச்சினைகள் தலைதூக்கும். ஒருசிலருக்கு குடும்பத்தைவிட்டே பிரிந்துசெல்லும் நிலையும் உருவாகும். பேச்சில் நிலையற்ற தன்மை உண்டாகும். வாக்குத் தவறநேரும். வார்த்தைகளால் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரும். சந்தோஷமும் நிம்மதியும் இல்லாமல் போகும். பொருட்கள் களவு போகவும் வாய்ப்புகள் ஏற்படும். பொருளாதாரத்தில் இழப்புகளை சந்திக்கவேண்டியதாக இருக்கும். எதிர்பார்த்த வருமானத்தில் தடை உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினரின் நடவடிக்கையால் மனம் துன்புறும். உங்கள் பேச்சில் அதிகபட்சமான கோபம் தென்படும். அதுவே உங்களுக்கு எதிர்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

சத்ரு ஸ்தானத்தைப் பார்க்கும் சனிபகவான், இதுவரையில் பாதிப்பிற்கு ஆளாகியுள்ள உங்கள் உடல் நிலையில் மாற்றத்தை உண்டாக்குவார். ஆரோக்கிய நிலையை அடைந்து நீங்கள் சுகமாக நடமாடும் நிலையை உண்டாக்குவார். உங்கள் எதிரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் இருக்குமிடம் தெரியாமல் செய்யும் சக்தியை உங்களுக்கு வழங்குவார். அபார ஆற்றலை ஏற்படுத்துவார். மனதில் துணிச்சலை வழங்குவார் என்பதால் எந்த சூழ்நிலையிலும் வாழ்ந்திடக்கூடிய சக்திகளை இக்காலத்தில் அடைவீர்கள்.

பாக்கியஸ்தானத்தைப் பார்க்கும் சனி பகவான் உங்கள் தந்தையின் ஆரோக்கியத்திற்கு கேட்டினை ஏற்படுத்துவார். ஒருசிலர் தந்தையை இழக்கவேண்டிய நிலைக்கும் ஆளாவார்கள். தம்மைவிட மூத்தவர் மற்றும் நெருங்கியவர்களின் வெறுப்புக்கும் பகைக்கும் ஆளாக நேரும். தொழிலில் தடையும் வருமானத் தில் முடக்கத்தையும் உண்டாக்குவார். உறவினர்களின் வெறுப்பிற்கும் ஆளாவார்.

உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனிபகவான் இரண்டரை ஆண்டு காலத்திற்கும் இத்தகைய பலன் களையே வழங்குவார் என்று நினைத்து பயந்துவிடாதீர்கள். காரணம், இரண்டரை ஆண்டுகளும் ஒரே கதியில் ஒரே சாரத்தில் அவர் சஞ்சரிப்பதில்லை. இருக்கிற இடத்தில் வக்ரகதி அடைவதும், பின்னோக்கி செல்வதுமாய் இருப்பார். அத்தகைய காலகட்டங்களில் மேலே சொன்ன பலன்கள் மாறுபடும். அவரால் பாதகம் செய்ய முடியாமல் போகும்.

பரிகாரம்

ஏழரைச்சனியின் தாக்குதலில் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஒருமுறை தேனிக்கு அருகிலுள்ள குச்சனூர் சென்று நல்லெண்ணெய் தேய்த்து நீராடி, அர்ச்சனைசெய்து, குச்சனூரானை வணங்கிவாருங்கள். சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள சிவாலயம் சென்று சனீஸ்வர பகவானையும் கால பைரவரையும் நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்கிவாருங்கள்.

செல்: 94443 93717

bala060323
இதையும் படியுங்கள்
Subscribe