சனிப்பெயர்ச்சிப் பலன்கள்!

/idhalgal/balajothidam/saturn-peyarchi

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 03065.

இந்த வார கிரக பாதசாரம்:

சூரியன்: மூலம்- 4, பூராடம்- 1.

செவ்வாய்: அஸ்வினி- 2, 3.

புதன்: பூராடம்- 4, உத்திராடம்- 1, 2, 3.

குரு: உத்திராடம்- 4.

சுக்கிரன்: கேட்டை- 1, 2, 3, 4.

சனி: உத்திராடம்- 2.

ராகு: மிருகசீரிடம்- 1.

கேது: கேட்டை- 3.

கிரக மாற்றம்:

30-12-2020- மகர புதன்.

இந்த வார சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- ரிஷபம்.

29-12-2020- மிதுனம்.

31-12-2020- கடகம்.

2-1-2021- சிம்பம்.

இந்த வார ராசிபலன் பகுதியை சனிப்பெயர்ச்சிப் பலன்களாக எழுதியுள்ளேன்.

வாக்கியக் கணிதப்படி 26-12-2020 அன்று சனி தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறுகிறார்.

- ஜோதிடபானு

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

இதுவரை உங்கள் ராசிக்கு 9-ல் இருந்த சனி இப்போது 10-ஆமிடத்துக்கு மாறியிருக்கிறார். பத்தாம் இடத்துச்சனி பதிகுலையச் செய்யும் என்பது விதி. மேஷ ராசிக்கு சனி 10, 11-க்குடையவர். எனவே, 10-க்குடையவர் 10-ல் ஆட்சியாக இருப்பதால் பதி மாற்றமோ அல்லது பதவி மாற்றமோ ஏற்பட்டாலும், அது ஒருவகையில் நன்மையானதாகவே அமையும் என்று எதிர்பார்க்கலாம். 10-ஆமிடம் என்பது தொழில், வாழ்க்கை, ஜீவிதம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். லாபஸ் தானாதிபதி (11-க்குடைய வரும்) 10-ல் இருப்பதால் தொழில் யோகம், பாக்கியம், லாபம் உண்டாகும். மகரச் சனி 3-ஆம் பார்வையாக 12-ஆமிடத்தைப் பார்க்கிறார். 7-ஆம் பார்வையாக 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். 10-ஆம் பார்வையாக 7-ஆமிடத்தைப் பார்க்கிறார். 12-ஆமிடம் விரயஸ்தானம். 4-ஆமிடம் என்பது பூமி, வீடு, மனை, வாகன ஸ்தானம். அதனால் பூமி, வீடு, இடம் ஆகியவற்றை விற்று அதன்மூலம் பழைய கடன்களை அடைத்துவிட்டு, மீதமிருக்கும் கையிருப்பைக்கொண்டு புதிய தொழில் செய்து நிரந்தர வருவாய்க்கு வழிவகை தேடலாம். 4-ஆமிடத்தை சனி பார்ப்பதால் அவ்வப்போது சிறுசிறு வைத்தியச் செலவுகள் ஏற்பட்டாலும், குருவும் அந்த இடத்தைப் பார்ப்பதால் பாதிப்புகள் ஏற்படாது. சுகமும் உண்டாகும். 7-ஆமிடத்தைப் பார்க்கும் சனியால் கணவன்- மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக வாய்ப்புண்டு. யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. திருமணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆண்- பெண்களுக்கு ஜாதக தசாபுக்தி யோகமாக இருந்தால் திருமணம் நடைபெறும். பாதகமாக இருந்தால் தாமத திருமணம் ஏற்படும்.

பரிகாரம்: ராமேஸ்வரம் சென்று ஸ்ரீ ராமநாதசுவாமியை வழிபடவும்.

sa

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

இதுவரை அட்டமத் துச்சனியாக உங்களை ஆட்டிப்படைத்த சனி இப்போது 9-ஆமிடத்துக்கு மாறியிருக்கிறார். 9-ஆமிட மான மகரத்தில் சனி ஆட்சி. ரிஷப ராசிக்கு சனி யோகாதிபதி என்றாலும், அட்ட மத்துச்சனியில் பெரிய நல்ல மாற்றங்கள் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். பொதுவாக சனிக்கு 3, 6, 11-ஆமிடங்கள்தான் யோகமான இடங்களென்றாலும் அதற்கு சமமாக யோகம் செய்யுமிடம் 9-ஆமிடம் ஆகும். சனி அங்கு ஆட்சி என்பதே அதற்கு ஒரு காரணம். ஒரு கிரகத்திற்கு கேந்திராதி பத்தியமும் திரகோணாதிபத்தியமும் கிடைத்தால் அந்த கிரகம் ராஜயோகாதி பதியாகிறது. அந்த வகையில் ரிஷப ராசிக்கு சனி 9, 10-க்குடையவராகிறார். ரிஷப ராசிக்கு 9-ல் நிற்கும் சனி 3-ஆம் பார்வையாக 11-ஆமிடத்தையும், 7-ஆம் பார்வையாக 3-ஆமிடத்தையும், 10-ஆம் பார்வையாக 6-ஆமிடத்தையும் பார்க்கிறார். பாக்கியஸ்தானத்தில் இருக்கும் சனியால் உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும். ஆரோக்கியம் உண்டாகும். 3-ஆமிடத்தைப் பார்க்கும் சனி தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் உண்டாக்குவார். தைரியம், தன்னம்பிக்கை இருந்தால் இழந்த செல்வங்களையும் மீண்டும் பெற்றுவிடலாம். 11-ஆமிடம் லாபம், வெற்றி ஸ்தானம்! எனவே, தொழில்துறையில் அடைபட்டக் கதவுகள் திறக்கப்படும். நஷ்டங்கள் லாபமாக மாற வழிவகைகள் பிறக்கும். உங்கள் விடாமுயற்சியும் உழைப்பும் யோகத்தையும் முன்னேற்றத்தையும் வெற்றியையும் தரும். 6-ஆமிடத்தை சனி பார்ப்பதால் தொழில் முதலீட்டுக்காக கடன் கிடைக்கும். சத்ருஜெயம் உண்டாகும். நோய்நொடி நிவர்த்தியாகும். வங்கிமூலம் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். உயர்ந்த நிலைக்கு உங்களின் முயற்சிகள் கொண்டு செல்லும்.

பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிசநல்லூரில் ஸ்ரீசிவயோகிநாதர் ஆலயம் சென்று வழிபடவு

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 03065.

இந்த வார கிரக பாதசாரம்:

சூரியன்: மூலம்- 4, பூராடம்- 1.

செவ்வாய்: அஸ்வினி- 2, 3.

புதன்: பூராடம்- 4, உத்திராடம்- 1, 2, 3.

குரு: உத்திராடம்- 4.

சுக்கிரன்: கேட்டை- 1, 2, 3, 4.

சனி: உத்திராடம்- 2.

ராகு: மிருகசீரிடம்- 1.

கேது: கேட்டை- 3.

கிரக மாற்றம்:

30-12-2020- மகர புதன்.

இந்த வார சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- ரிஷபம்.

29-12-2020- மிதுனம்.

31-12-2020- கடகம்.

2-1-2021- சிம்பம்.

இந்த வார ராசிபலன் பகுதியை சனிப்பெயர்ச்சிப் பலன்களாக எழுதியுள்ளேன்.

வாக்கியக் கணிதப்படி 26-12-2020 அன்று சனி தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறுகிறார்.

- ஜோதிடபானு

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

இதுவரை உங்கள் ராசிக்கு 9-ல் இருந்த சனி இப்போது 10-ஆமிடத்துக்கு மாறியிருக்கிறார். பத்தாம் இடத்துச்சனி பதிகுலையச் செய்யும் என்பது விதி. மேஷ ராசிக்கு சனி 10, 11-க்குடையவர். எனவே, 10-க்குடையவர் 10-ல் ஆட்சியாக இருப்பதால் பதி மாற்றமோ அல்லது பதவி மாற்றமோ ஏற்பட்டாலும், அது ஒருவகையில் நன்மையானதாகவே அமையும் என்று எதிர்பார்க்கலாம். 10-ஆமிடம் என்பது தொழில், வாழ்க்கை, ஜீவிதம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். லாபஸ் தானாதிபதி (11-க்குடைய வரும்) 10-ல் இருப்பதால் தொழில் யோகம், பாக்கியம், லாபம் உண்டாகும். மகரச் சனி 3-ஆம் பார்வையாக 12-ஆமிடத்தைப் பார்க்கிறார். 7-ஆம் பார்வையாக 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். 10-ஆம் பார்வையாக 7-ஆமிடத்தைப் பார்க்கிறார். 12-ஆமிடம் விரயஸ்தானம். 4-ஆமிடம் என்பது பூமி, வீடு, மனை, வாகன ஸ்தானம். அதனால் பூமி, வீடு, இடம் ஆகியவற்றை விற்று அதன்மூலம் பழைய கடன்களை அடைத்துவிட்டு, மீதமிருக்கும் கையிருப்பைக்கொண்டு புதிய தொழில் செய்து நிரந்தர வருவாய்க்கு வழிவகை தேடலாம். 4-ஆமிடத்தை சனி பார்ப்பதால் அவ்வப்போது சிறுசிறு வைத்தியச் செலவுகள் ஏற்பட்டாலும், குருவும் அந்த இடத்தைப் பார்ப்பதால் பாதிப்புகள் ஏற்படாது. சுகமும் உண்டாகும். 7-ஆமிடத்தைப் பார்க்கும் சனியால் கணவன்- மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக வாய்ப்புண்டு. யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. திருமணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆண்- பெண்களுக்கு ஜாதக தசாபுக்தி யோகமாக இருந்தால் திருமணம் நடைபெறும். பாதகமாக இருந்தால் தாமத திருமணம் ஏற்படும்.

பரிகாரம்: ராமேஸ்வரம் சென்று ஸ்ரீ ராமநாதசுவாமியை வழிபடவும்.

sa

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

இதுவரை அட்டமத் துச்சனியாக உங்களை ஆட்டிப்படைத்த சனி இப்போது 9-ஆமிடத்துக்கு மாறியிருக்கிறார். 9-ஆமிட மான மகரத்தில் சனி ஆட்சி. ரிஷப ராசிக்கு சனி யோகாதிபதி என்றாலும், அட்ட மத்துச்சனியில் பெரிய நல்ல மாற்றங்கள் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். பொதுவாக சனிக்கு 3, 6, 11-ஆமிடங்கள்தான் யோகமான இடங்களென்றாலும் அதற்கு சமமாக யோகம் செய்யுமிடம் 9-ஆமிடம் ஆகும். சனி அங்கு ஆட்சி என்பதே அதற்கு ஒரு காரணம். ஒரு கிரகத்திற்கு கேந்திராதி பத்தியமும் திரகோணாதிபத்தியமும் கிடைத்தால் அந்த கிரகம் ராஜயோகாதி பதியாகிறது. அந்த வகையில் ரிஷப ராசிக்கு சனி 9, 10-க்குடையவராகிறார். ரிஷப ராசிக்கு 9-ல் நிற்கும் சனி 3-ஆம் பார்வையாக 11-ஆமிடத்தையும், 7-ஆம் பார்வையாக 3-ஆமிடத்தையும், 10-ஆம் பார்வையாக 6-ஆமிடத்தையும் பார்க்கிறார். பாக்கியஸ்தானத்தில் இருக்கும் சனியால் உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும். ஆரோக்கியம் உண்டாகும். 3-ஆமிடத்தைப் பார்க்கும் சனி தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் உண்டாக்குவார். தைரியம், தன்னம்பிக்கை இருந்தால் இழந்த செல்வங்களையும் மீண்டும் பெற்றுவிடலாம். 11-ஆமிடம் லாபம், வெற்றி ஸ்தானம்! எனவே, தொழில்துறையில் அடைபட்டக் கதவுகள் திறக்கப்படும். நஷ்டங்கள் லாபமாக மாற வழிவகைகள் பிறக்கும். உங்கள் விடாமுயற்சியும் உழைப்பும் யோகத்தையும் முன்னேற்றத்தையும் வெற்றியையும் தரும். 6-ஆமிடத்தை சனி பார்ப்பதால் தொழில் முதலீட்டுக்காக கடன் கிடைக்கும். சத்ருஜெயம் உண்டாகும். நோய்நொடி நிவர்த்தியாகும். வங்கிமூலம் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். உயர்ந்த நிலைக்கு உங்களின் முயற்சிகள் கொண்டு செல்லும்.

பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிசநல்லூரில் ஸ்ரீசிவயோகிநாதர் ஆலயம் சென்று வழிபடவும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

இதுவரை உங்கள் ராசிக்கு 7-ல் இருந்த சனி இப்போது 8-ஆமிடத்துக்கு மாறியிருக்கிறார். அதனால் உங்களுக்கு அட்டமச்சனி ஆரம்பம். பொதுவாக அட்டமத்துச்சனி தொட்டது துலங்காது என்றும், அகப்பட்டவனுக்கு அட்டமச்சனி என்றும், கெட்டானைத் தொட்டானும் கெட்டான் என்றும் சொல்வதுண்டு. சனி என்றாலே ஒரு அலர்ஜி. அதிலும் ஏழரைச்சனி அல்லது அட்டமச்சனி என்றாலே ஒரு கிலிதான்! 7-ல் சனி இருந்தபோது கணவன் அல்லது மனைவிக்கு தேக ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். இப்போது சனி 8-ல் ஆட்சி என்பதால் 7-ல் செய்யத் தவறிய பலனை 8-ல் மாறியபிறகு செய்வார் என்று எதிர்பார்க்கலாம். பொதுவாக அட்டமத்துச்சனி இடமாற்றத்தை அல்லது ஊர்மாற்றத்தை ஏற்படுத்துவார் என்பது விதி. அதன்படி உங்களுக்கு குடியிருப்பு மாற்றம் வரலாம். பழைய வீட்டை இடித்துப் புதிய வீட்டுக்குப் போகலாம். அல்லது வேலையில் இடமாற்றம் ஏற்படலாம். மகரச்சனி 10-ஆமிடத்தையும், 2-ஆமிடத்தையும், 5-ஆமிடத்தையும் பார்க்கிறார். 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில் இயக்கம் இருக்கும். அரசு அல்லது தனியார் வேலையில் இருப்போருக்கு பதவி உயர்வும் இடமாறுதலும் ஏற்படும். எனினும் முழு அளவில் திருப்தி இருக்காது. 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் எதிர்பாராதவகையில் தன சம்பாத்தியத் தைத் தருவார். பொருளாதாரத்தில் கஷ்டம் ஏற்படாது. பணப்புழக்கம் இருக்கும் என்றாலும், அழுத பிள்ளை பால் குடிக்கும் என்பதுபோல, தேவைகளுக்குத் தக்கபடி பணத்தைத் தேடித்தான் பெறவேண்டும். 5-ஆமிடத்தைப் பார்க்கும் சனி பிள்ளைகள்வகையில் நல்ல காரியங்களை நடத்தித் தருவார். சிலருக்கு சங்கடத்தைக் கொடுத்தாலும் பெரிய அளவில் பிரச்சினைகளுக்கு இடமிருக்காது. பிள்ளைகள்வகையில் சுபச்செலவுகளுக்காகக் கடன் வாங்கவும் நேரிடும்.

பரிகாரம்: பழனிமலையிலுள்ள தண்டாயுதபாணியை வழிபடவும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் இருந்த சனி இப்போது 7-ஆமிடமான மகர ராசிக்கு மாறுகிறார். ஏற்கெனவே சனி இருந்த இடம் மிக நல்ல இடம்தான். 3, 6, 11- உபஜெய ஸ்தானங்கள். யோகமான இடங்கள். 6-ல் இருந்த சனி உங்களுக்கு நன்மையைச் செய்தாரா என்று பார்த்தால் சில நன்மைகள்தான் நடந்திருக்கும். பல நன்மைகள் நடக்காமல் போய்விட்டன என்று தெரியவரும். மகரச்சனி 3-ஆம் பார்வையாக 9-ஆமிடத்தையும், 7-ஆம் பார்வையாக ஜென்ம ராசியையும், 10-ஆம் பார்வையாக 4-ஆமிடத்தையும் பார்க்கிறார். 9-ஆமிடம் தகப்பனார், பூர்வீகச் சொத்து, பாக்கியஸ்தானம். எனவே, பாக்கியமும் நன்மையும் உண்டாகும். தகப்பனார் அல்லது பூர்வீகச் சொத்துகளினால் லாபம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வில்லங்கம், விவகாரம் இருந்தால் அதில் சுமுகமான தீர்வுக்கு வழிகிடைக்கும். பழைய கடன்களையும் சிக்கல்களையும் தீர்க்கும் நிலையும் உருவாகும். ஜென்மராசியை சனியும் பார்க்கிறார். 7-ல் மாறிய குருவும் பார்க்கிறார். அதனால் ஏற்கெனவே உங்கள் பேர் ரிப்பேர் ஆனது மாறிவிடும். நாணய விஷயத்தில் கெட்டுப்போன உங்கள் மரியாதையை நாணயமாக நடந்து காப்பாற்றி நல்லபெயர் எடுக்கும் காலமாக அமையும். 7-க்குடைய சனி 7-ல் ஆட்சி பெறுவதால் மேற்படி நற்பலன் அமையும். 4-ஆமிடம் சுகஸ்தானம்! நோய்நிவர்த்தி- ஆரோக்கிய விருத்தி. இனி முழுத் தெம்பாகவும் தெளிவாகவும் பாடுபடுவீர்கள். உடல்நலமும் மனநலமும் உங்களுக்கு தனிபலமாக செயல்படும்! தைரியம் வரும். உங்கள் வாழ்க்கைத்துணைவி அல்லது துணைவருக்கும் தைரியம் வரும்!

பரிகாரம்: கும்பகோணம் அருகில் திருந்துதேவன்குடியில் கற்கடகேஸ்வரர் கோவில் சென்று வழிபடவும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

இதுவரை உங்கள் ராசிக்கு 5-ல் இருந்த சனி இப்போது 6-ஆமிடத்துக்கு மாறியிருக்கிறார். "ஆறு பன்னொன்பான் மூன்றில் அந்தகன் வரும்போது கூறுபொன் பொருளுண்டாம்; குறைவிலாச் செல்வம் உண்டாம்;ஏறு பல்லக்குண்டாம்; இடம் பொருள் ஏவலுண்டாம்; காறுபாலாஷ்டலெட்சுமி கடாட்சமும் உண்டாகும் தானே' என்பது பாடல். இந்தப் பாடலுக்குப் பொருத்தமான வகையில் உங்களுக்கு அஷ்டலட்சுமியின் அருள் கடாட்சமும் கிடைக்கும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் உண்டாகும். மகரச்சனி 3-ஆம் பார்வையாக, 8-ஆமிடத்தையும், 7-ஆம் பார்வையாக 12-ஆமிடத்தையும், 10-ஆம் பார்வையாக 3-ஆமிடத்தையும் பார்க்கிறார். 3-ஆமிடம் சகோதர- தைரிய- சகாய- வீரிய- பராக்கிரம ஸ்தானம். தெம்பு குறைந்த உங்களுக்கு இனி நம்பிக்கையும் பலமும் தைரியமும் உண்டாகும். நமக்கும் எதிர்காலம் உண்டு; வாழ்வும் உண்டு என்று நம்பிக்கை ஏற்படும். 8-ஆமிடமும், 12-ஆமிடமும் துர்ஸ்தானங்கள் என்றாலும், அதிர்ஷ்ட ஸ்தானமும் சுபவிரய ஸ்தானமும்கூட! 8 என்பது சஞ்சலம், விபத்து, பீடை, கண்டம், அபகீர்த்தி, ஆயுள், அதிர்ஷ்டம் ஆகியவற்றைக் குறிக்கும். 6-க்குடையவர் 8-ஐப் பார்ப்பதால் இந்த இடத்திற்குரிய கெடுதலைப் போக்கி நன்மையைத் தருவார். ஆயுள் தீர்க்கம் உண்டாகும். ஏமாற்றம் இருக்காது. விபத்து விலகும். 12-ஆமிடம் என்பது நஷ்டம், விரயம், அலைச்சல், வெளியூர்ப் பயணம், மாற்றம், இடப்பெயர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கும் இடம். 6-ஆமிடத்துகு வரும் சனி நோய் நொடியை விலக்குவார். பகை மறையும். எதிரி உதிரிகளாகி விடுவர். நல்ல மாற்றம் ஏற்படலாம். இடப்பெயர்ச்சியும் முன்னேற்றத் தைத் தரும்!

பரிகாரம்: திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாதர் ஆலயம் சென்று வழிபடவும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

இதுவரை சனி உங்கள் ராசிக்கு 4-ல் அர்த்தாஷ்டமச்சனியாக இருந்து இப்போது 5-ஆமிடத்துக்கு மாறியிருக்கிறார். 5-ல் திரிகோணம் பெறுகிறார். அதிலும் 5-ஆமிடம் சனிக்கு சொந்தவீடு. எனவே அவர் அங்கு ஆட்சி. 4-ஆமிடத்து சனி உங்களை சாகவும்விடாமல் வாழவும்விடாமல் வாட்டி வதைத்துவிட்டார். கடன் பிரச்சினை, வாழ்க்கைப் பிரச்சினை என்று பலரை வாட்டியதுண்டு. சிலரை வேலையைவிட்டு அனுப்பியும் வருத்தத்தை உண்டாக்கியது. 5-ல் ஆட்சிபெறும் சனி 3-ஆம் பார்வையாக 7-ஆமிடத்தையும், 7-ஆம் பார்வையாக 11-ஆமிடத்தையும். 10-ஆம் பார்வையாக 2-ஆமிடத்தையும் பார்க்கிறார். 7-ஆமிடம் களஸ்திர ஸ்தானம். திருமணத்தைக் குறிக்கும். திரிகோணாதிபதி கேந்திரத்தைப் பார்ப்பதால் திருமணத்துக்காகக் காத்திருக்கும் ஆண்- பெண்களுக்குத் திருமண வய்ப்புகள் கைகூடும். ஏற்கெனவே திருமணம் பேசி நிச்சயம் செய்யும்போது நின்றுபோன திருமணங்கள் தடைநீங்கி செயலுக்கு வரும். திருமணமான கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு விலகும். 11-ஆமிடத்தைப் பார்க்கும் சனி தொழில்துறையில் லாபத்தைத் தருவார். வீடு, நிலம் முதலியவற்றை விற்று பெரும் லாபம்தேடி வேறுவகையில் சுப முதலீடு செய்யலாம். அல்லது சொத்துப் பரிவர்த்தனை செய்யலாம். உடன்பிறந்த வகையில் அபிப்பிராய பேதங்கள் மாறி அன்யோன்யமும் நட்புறவும் உண்டாகும். 2-ஆமிடத்தை சனி பார்ப்பதால் பேச்சுக்கும் சொல்லுக்கும் முக்கியத்துவம் உண்டாகும். வாக்குவண்மையும் ஏற்படும். உங்கள் பேச்சில் நிதானமும் பொறுமையும் அவசியம் கடைப்பிடிக்கவேண்டும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் சென்று ஸ்ரீவேதகிரீஸ்வரரை வழிபடவும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

இதுவரை உங்கள் ராசிக்கு 3-ஆமிடத்தில் இருந்த சனி இப்போது 4-ஆமிடமான மகரத்திற்கு மாறியிருக்கிறார். இதற்கு அர்த்தாஷ்டமச்சனி என்று பெயர். ஏற்கெனவே சனி இருந்த 3-ஆமிடம் மிக நல்ல இடம். இப்போது சனி 4-ல் மாறினாலும், துலா ராசிக்கு சனி ராஜயோகாதிபதியாவதால் கெடுதல் செய்யமாட்டார் என்று நம்பலாம். மகரச் சனி 3-ஆம் பார்வையாக 6-ஆமிடத்தையும், 7-ஆம் பார்வையாக 10-ஆமிடத்தையும், 10-ஆம் பார்வையாக ஜென்ம ராசியையும் பார்க்கிறார். 6-ஆமிடம் என்பது கடன், போட்டி, எதிரி, வைத்தியச்செலவு, சங்கடம் ஆகியவற்றைக் குறிக்கும். தொழில் ஸ்தானமான 10-ஆமிடத்துக்கு பாக்கியஸ்தானம் 9-ஆமிடம். அந்த இடத்தைப் பார்ப்பதால் தொழில்துறையில் பாக்கியம், மேன்மை உண்டாகும். அதேசமயம் 6-ஆமிடத்துக்குரிய மேற்கண்ட பலன்கள் அடிப்பட்டுப்போகும். புதிய தொழில் வாய்ப்பு அமையலாம். 10-ஆமிடத்தைப் பார்க்கும் சனியால் தொழில்துறையில் இதுவரையில் நிலவிய கஷ்டங்களும் பிரச்சினைகளும் பொருளாதாரத் தடைகளும் நெருக்கடி நிலையும் மாறும். தொழில் ஸ்தானத்துக்கு, நம்பிக்கையும் நன்றியுமுடைய உண்மையான வேலையாட்கள் அமைவார்கள். சனி ஜென்ம ராசியைப் பார்க்கிறார். ஏற்கெனவே கூறியபடி துலா ராசிக்கு யோகாதிபதியான சனி மேன்மைகள் அடையவும், உங்களுடைய எல்லாப் பிரச்சினைகளை சமாளிக்கவும் ஆற்றலும் திறமையும் தருவார். தன்னம்பிக்கையும் வளரும். கும்பகோணம் வட்டம், குடவாசல் அருகில் சேங்காலிபுரம் தத்தாத்ரேயர் கோவிலில் கார்த்தவீர்யார்ஜுன யந்திர பூஜை செய்தால் நல்லவேலையாட்கள் அமைவது நிச்சயம்.

பரிகாரம்: திருத்தணி மலையிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் சென்று வணங்கவும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

இதுவரை உங்கள் ராசிக்கு 2-ல் இருந்த சனி இப்போது 3-ஆமிடத்துக்கு மாறியிருக்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் இதுவரை உங்களுக்கு எட்டு வருடகாலமாக நடந்த ஏழரைச்சனி முழுமையாக விலகிவிட்டது. இதுவே பெரிய யோகம். சனி மாறியுள்ள இடம் 3-ஆமிடம். "ஆறு பன்னொன்பான் மூன்றில் அந்தகன் நிற்கும்போது கூறுபொன் பொருளுண்டாம்; குறைவிலாச் செல்வமுண்டாம்; ஏறு பல்லக்குண்டாம்; இடம் பொருள் ஏவலுண் டாம்; காறு பாலாஷ்டலட்சுமி கடாட்சமும் உண்டாகும்தானே' என்பது பாடல். 3-ஆம் இடம் சகோதர- தைரிய ஸ்தானம்; சகாய ஸ்தானம். அதில் 3-க்குடையவரே அமர்ந்து ஆட்சிபெறுவதால், உங்களுக்கு எதிர்கால வாழ்வைப் பொருத்தவகையில் தைரியமும் நம்பிக்கையும் புதுத்தெம்பும் உருவாகும். மகரச் சனி 3-ஆம் பார்வையாக 5-ஆமிடத்தையும், 7-ஆம் பார்வையாக 9-ஆமிடத்தையும், 10-ஆம் பார்வையாக 12-ஆமிடத்தையும் பார்க்கிறார். 3-ல் வரும் சனி தன்னம்பிக்கை, தைரியம் தருவார் என்று ஏற்கனெவே பார்த்தோம். நல்லயோகமும் நன்மைகளும் கிடைக்கும். 5-ஆமிடம் பூர்வபுண்ணிய ஸ்தானம் புத்திர ஸ்தானம். 9-ஆமிடமும் பூர்வபுண்ணிய ஸ்தானம். எனவே, பூர்வீகச் சொத்தில் சில பிரச்சினைகளும் வில்லங்கங்களும் சிலருக்கு உண்டாகும். குழந்தை யோகம் உண்டாகும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். 9-ஆமிடத்தைப் பார்க்கும் சனி பூர்வீகச் சொத்துகளில் வில்லங்கத்தை உண்டாக்கினாலும், வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக அமையும். 12-ஆமிடத்தைப் பார்க்கும் சனி விரயத்தை ஏற்படுத்தினாலும் அதை சுபவிரயமாகவே மாற்றுவார். புதிய வீட்டிற்குக் குடிபோகலாம். சொந்த வீடு அமைப்பும் உருவாகும்.

பரிகாரம்: பெரம்பலூர் செட்டிக்குளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில் சென்று வழிபடவும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

இதுவரை ஜென்ம ராசியில் நின்ற சனி இப்போது 2-ஆமிடத்துக்கு மாறியிருக்கிறார். உங்களுக்கு ஏற்கெனவே ஏழரைச்சனி நடக்கிறது. அதில் ஐந்து வருடம் முடிந்தது. நியாயமாக ஆறு வருடம் முடிந்தது எனலாம். இப்போது 2-ஆமிடத்திற்கு வரும் சனி பாதச்சனி எனப்படும். இதனால் பெரிய நன்மை என்று சொல்லமுடியாவிட்டாலும், பெரிய கெடுதலும் நேராது என்று கூறலாம். 2-ஆமிடம் சனிக்கு சொந்தவீடு. அங்கு ஆட்சிபெறுகிறார். தனுசு ராசிநாதன் குரு, சனி வீட்டில் இருக்கிறார். எனவே ராசிநாதன் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். மகரச் சனி 2-ஆமிடத்திலிருந்து 3-ஆம் பார்வையாக 4-ஆமிடத்தையும், 7-ஆம் பார்வையாக 8-ஆமிடத்தையும், 10-ஆம் பார்வையாக 11-ஆமிடத்தையும் பார்ப்பார். 4-ஆமிடம் பூமி, வீடு, வாகனம், சுகம் ஆகியவற்றைக் குறிக்கும். முதல்சுற்று மங்குச்சனி; இரண்டாம் சுற்று பொங்குசனி; மூன்றாம் சுற்று மரணச் சனியாகவும் செயல்படும். உங்கள் உடல்நலத்தில் இருந்துவந்த சௌகரியக் குறைவுகள் நீங்கி ஆரோக்கியம் தென்படும். வீடு, மனை, பாக்கியம், வாகனயோகம் ஆகிய மேன்மைகளை அடையலாம். 8-ஆமிடம் என்பது விபத்து, விசனம், ஆயுள், கவலை ஆகிய பலனைக் குறிக்கும். ஆயுள்காரகன் சனி ஆயுள் ஸ்தானத்தைப் பாப்பதால் ஆயுள் தீர்க்கமும் உண்டு; விருத்தியும் உண்டு. மூன்றா வது சுற்று நடப்பவர்களுக்கு ஆயுள்பயத்தை உண்டாக்கும். இந்த ஏழரைச்சனியில் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடப்பவர்கள் மட்டும் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவேண்டும். 11-ஆமிடம் என்பது லாபம், வெற்றி ஸ்தானமாகும். மகரத்தில் நிற்கும் இக்காலம் வில்லங்கம், விவகாரம், வியாஜ்ஜியத்தில் வெற்றியும் காரிய ஜெயமும் உண்டாகும்.

பரிகாரம்: நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் மயூரநாதர் கோவில் சென்று வழிபடவும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

இதுவரை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் இருந்த சனி இப்போது ஜென்ம ராசிக்கு மாறியிருக்கிறார். மகரம் சனிக்கு சொந்த வீடு. அங்கு அவர் ஆட்சியாக அமர்கிறார். 2017 முதல் ஏழரைச்சனியில் விரயச் சனி நடந்தது. இப்போது ஜென்மச்சனி (டிசம்பர் 26 முதல்) ஆரம்பம். ஜென்மச்சனியின் இக்காலம் கெடுதல்தான் செய்யுமென்பது இல்லை. நல்லது செய்யும் அமைப்பும் உண்டு. அதுவும் சனி மகர ராசிநாதன் என்பதால் சொந்தவீட்டை அவர் கெடுக்கமாட்டார் என்று நம்பலாம். சனி ஜென்மத்தில் அமர்ந்து 3-ஆமிடம், 7-ஆமிடம், 10-ஆமிடம் ஆகியவற்றைப் பார்க்கிறார். 3-ஆமிடம் சகோதர ஸ்தானம்; சகாயம், தைரியம் ஆகியவற்றையும் குறிக்கும். சகோதரவகையில் நிலவிய பகையும் வருத்தமும் மாறும். அனுகூலமும் லாபமும் ஏற்படலாம். அவரவர் ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து நன்மையும் தீமையும் நடக்கும். 7-ஆமிடம் என்பது மனைவி ஸ்தானம்; அதை சனி பார்ப்பதால் காலதாமதமான திருமணம் என்றும் சொல்லலாம். களஸ்திரதோஷம் அல்லது களஸ்திரசோகம் என்றும் சொல்ல லாம். எனினும் குரு ராசியில் அமர்ந்து 7-ஆமிடத்தைப் பார்க்கும்வரை தடையும் விலகும்; தோஷமும் விலகும். 10-ஆமிடம் என்பது தொழில் ஸ்தானம்; வேலை, உத்தியோகம், முயற்சி, வாழ்க்கை ஆகியவற்றையும் குறிக்கும். சனி, 2-க்குடையவராதலால், அவர் ராசியில் நின்று 10-ஆமிடத்தைப் பார்ப்பதால், வாக்கு, தனம், பொருளாதாரம் எல்லாம் நன்றாக அமையும். சிலருக்கு தொழில் அல்லது குடியிருப்பு வகையில் மாற்றம் ஏற்படலாம். அந்த மாற்றம் முன்னேற்றகரமானதாகவும் அமையும். புதிய முயற்சிகளை சற்றுத் தள்ளிப்போடவும். இருப்பதை சிறப் பாக செயல்படுத்த ஆவண செய்தல் நல்லது!

பரிகாரம்: சிதம்பரத்தில் உள்ள தில்லை நடராஜர் ஆலயம் சென்று வழிபடலாம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய

இதுவரை உங்கள் ராசிக்கு 11-ல் இருந்த சனி இந்த டிசம்பர் 26 முதல் 12-ஆம் இடத்திற்கு மாறியிருக்கிறார். உங்களுக்கு இப்போதுதான் ஏழரைச்சனி ஆரம்பம். கும்பத்திற்கு சனி ராசிநாதன். அவர் 12-ல் மறைவது ஒரு வகையில் குற்றம் என்றா லும், மகரமும் அவருக்கு சொந்த வீடு; அங்கு அவர் ஆட்சி. எழரைச்சனியில் சந்திர தசையோ அல்லது சந்திர புக்தியோ நடந்தால் விபரீத விளைவுகளும் வீழ்ச்சிகளும் ஏற்பட இடமுண்டு. அதனால் திங்கட்கிழமை தோறும் சிவலிங்கத்திற்குப் பாலாபிஷேகம் செய்யவேண்டும். மகரச்சனி 3-ஆம் பார்வையாக 2-ஆமிடத்தையும், 7-ஆம் பார்வையாக 6-ஆமிடத்தையும், 10-ஆம் பார்வையாக 9-ஆமிடத்தையும் பார்க்கிறார். 2-ஆமிடம் வாக்கு தனம், குடும்பம், வித்தை, கண்கள் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். உங்கள் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அதற்காக கடனும் வாங்கநேரிடும். அதை சுபக்கடனாக மாற்றியமைப்பது நல்லது. பழைய கடனை அடைக்கவும் புதுக்கடன் வாங்குவீர்கள். ஜாதக தசாபுக்தி சரியில்லையென்றால் சிலருக்கு கண் ஆப்ரேஷன் வரலாம். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். 6-ஆமிடத்தைப் பார்ப்பதால் மேற்கூறியவாறு அத்தியாவசியத் தேவைக்குகூட சிலர் கடன் வாங்கலாம். சிலர் வாகனத் தேவைக்குக் கடன்படலாம். எதிரிவகையிலுள்ள தொல்லைகள் விலகி நன்மை ஏற்படும். சிறுசிறு வைத்தியச்செலவு ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகளுக்கு இடமிருக்காது. 9-ஆமிடத்தைப் பார்க்கும் சனி தந்தைக்கு உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் மருத்துவ விரயமும் உண்டாகும். தந்தையிடம் கருத்து வேறுபாடு தோன்றி மறையும்.

பரிகாரம்: ராமநாதபுரம் அருகில் தேவிபட்டிணம் திலகேஸ்வரர் கோவில் சென்று வழிபடவும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

இதுவரை உங்கள் ராசிக்கு 10-ல் இருந்த சனி இப்போது 11-ஆம் இடத்துக்கு மாறுகிறார். சனிக்கு யோகம் தரும் இடங்களே 3, 6, 11-ஆம் இடங்கள்தான். ஆகவே சனிப்பெயர்ச்சி உங்களுக்கு யோகப்பெயர்ச்சியாக விளங்கப்போகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கடந்த மூன்றாண்டு காலமாக 10-ல் இருந்த சனி எல்லாரையும் கெடுக்கவில்லை. ஒருசிலருக்கு பிரபலமான யோகங்களைச் செய்திருக்கிறது. பலருக்கு பாதகங்களைச் செய்தியிருக்கிறது. 11-ஆமிடத்து சனி பாக்கியத்தையும் லாபத்தையும் வெற்றியையும் உண்டாக்குவார். உங்களுடைய திறமையும் ஆற்றலும் வெளிப்படும். 11-ல் நிற்கும் மகரச்சனி 3-ஆம் பார்வையாக ஜென்ம ராசியையும், 7-ஆம் பார்வையாக 5-ஆமிடத்தையும், 10-ஆம் பார்வையாக 8-ஆமிடத்தையும் பார்க்கிறார். 11-ல் நின்று ராசியைப் பார்ப்பதால் உங்கள் திறமை, செயல்பாடு, கீர்த்தி, புகழ் எல்லாம் சிறப்பாக அமையும். போட்டி, பொறாமைகள் இடையூறுகளைச் சந்தித்தாலும் இறுதியில் வெற்றிபெறுவீர்கள். 5-ஆமிடத்தை சனி பார்க்கிறார். உங்கள் நீண்டகாலத் திட்டங்கள் வெற்றியடையும். பிள்ளைகளுக்கு நல்ல காரியங்களை நடத்தி முடிக்கலாம். பிள்ளைகளால் பெற்றவர்கள் பெருமையடையலாம். 8-ஆமிடத்தை சனி பார்க்கும் காரணத்தால் தந்தை அல்லது பிதுரார்ஜித சொத்துகளுக்கு எதிர்பாராத சில சங்கடங்களை சந்திப்பதன்மூலம் சஞ்சலமும் கவலையும் ஏற்படலாம். 8-ஆமிடம் 9-ஆமிடத்துக்கு 12-ஆமிடம்; 7-ஆமிடத்துக்கு 2-ஆமிடம். எனவே மனைவிவகையில் சிலருக்கு ஆதாயமும் நன்மையும் உண்டாகலாம். காரணகாரியமில்லாத கவலையும் ஏற்படலாம்!

பரிகாரம்: மயிலாடுதுறை அருகில் வைத்தீஸ்வரன் கோவில் சென்று வைத்தியநாத சுவாமியை வழிபடவும்.

bala010121
இதையும் படியுங்கள்
Subscribe