சனி தசை 19 ஆண்டுகள் நடக்கும். சனி தசையில் நல்ல பலன்களை அடைய இடையூறாக இருப்பது பிரம்மஹத்தி தோஷம். எனவே திருவிடைமருதூரில் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். சனி புக்தி நடப்பவர்கள் எல்லாம் ஒருமுறை யாவது மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள திருவாதவூர் சென்று அங்குள்ள சிவனுக்கு அர்ச் சனைசெய்து பின்பு அங்குள்ள சனீஸ்வரருக்கு அர்ச்சனைசெய்து வேண்டிவர வேண்டியது நடக்கும். இனி சனி தசையில் வரும் ஒன்பது புக்திகளுக்கான பொதுப்பலன்களைக் காணலாம்.
1. சனி தசையில் சனி புக்தி
உடலில் நோய், வேலைக்காரர், மக்கள் செல்வத்தில் குறைவு, உறவினர் கலகம் ஆகியவை உண்டாகும். மேற்கண்ட பலன்கள் பிறப்பு ஜாதகத்தில் சனி பகை, நீசத்தில் இருந்தால் மட்டும் நடைபெறும். தேடிய பொருள் நஷ்டம், ஆடு, மாடு சேதம், பெண்களால் கலகம், எதிரியினால் துன்பம், அரசாங்க பயம், பொன், பூமி நஷ்டம் போன்ற துர்பலன்களைத் தரும். சனி நட்பு, உச்சத்திலிருந்தால் அரசாங்க ஆதரவும் செல்வமும் கிட்டும். மரணத்தை ஏற்படுத்தும் நோயைக்கூட வெல்பவராகவும், ஆயுள் விருத்தி உள்ளவராகவும், பூமி லாபம் உடையவராகவும், தனதானிய செல்வம் உடையவராகவும் இருப்பார்.
2. சனி தசையில் புதன் புக்தி
குறிப்பறிதலும், கல்வியும், ஞானமும் விருத்தியடையும். பொருளும் செல்வமும் கிட்டும். பெண்கள் வந்தணைவர். பிள்ளைகளின் பாசம், அரசாங் கத்தால் புகழ் கிட்டும்.
3. சனி தசையில் கேது புக்தி
வலது காலில் வாத நோயும், பித்தம் சம்பந்தமான நோயும், மகன்மூலம் தரித்திரமும், விஷபயமும், பொருள் நாசமும், பெண்களால் துன்பமும், கோளினால் கலகமும் உண்டாகும். பிறப்பு ஜாதகத்தில் கேது பகை, நீசத்திலிருந்தால் மட்டுமே இவ்வாறு நடைபெறும். ஆட்சி, உச்சம், நட்பு பெற்றிருப்பின் நன்மையே செய்யும்.
4. சனி தசையில் சுக்கிர புக்தி
இனிமை பொருந்திய நற்காரியம் செய்வர். நல்லோரின் நட்பு, எதிலும் வெற்றி, பெண்ணின் சேர்க்கை, லாபம், மகன், உறவினர் சேர்க்கை நடைபெறும். தனித்தொரு பகையும் உண்டாகும். ஆனால் அந்தப் பகையையும் வென்றிடலாம்.
5. சனி தசையில் சூரிய புக்தி
ரத்த மேக நோயும், வயிற்றில் சூளையும், கண்களில் வியாதியும் ஏற்படும். திடகாத்திரமான மனைவி, மக்களும் வியாதியினால் பாதிப்படைவர். புக்தி முடியும்வரை கடுமையான வலியுள்ள வாத நோயும் உண்டாகும். மேற்கண்ட பலன்கள் பிறப்பு ஜாதகத்தில் சூரியன் நீசம், பகையில் இருந்தால் மட்டுமே உண்டாகும். ஆட்சி, உச்சம், நட்பில் இருந்தால் சூரிய புக்தியில் நல்ல பலன்களை அடை வார்கள்.
6. சனி தசையில் சந்திர புக்தி
கலகம், பீடை, வீட்டில் சண்டை ஏற்படும். வேலை, ஆபரணம், வளம் தரும் பொருள் ஆகியவற்றில் சேதம் உண்டாகும். துன்பம் காரணமாய் இருப்பிடத்தைவிட்டு விலகுதலும் நடைபெறும். இந்தப் பலன்கள் பிறப்பு ஜாதகத்தில் சந்திரன் பகை, நீசத் திலிருந்தால் மட்டுமே நடைபெறும். குடும்பத்தில் கண்டம், தொழில் செய்யும் இடத்தில் நஷ்டம், மனைவியின் குடும்பத்திற்கு தீங்கு, நல்லோரைப் பகைத்தல், பெண் நோய் போன்ற பலன்கள் உண்டாகலாம். பிறப்பு ஜாதகத்தில் சந்திரன் நட்பு, ஆட்சி, உச்சத் திலிருந்தால் தாய்க்கு சுகமுண்டு. புத்திர விருத்தியுண்டு. சுகமான உணவுண்டு. கைவிட்டுப்போன பொருள் வந்துசேரும். பெரியோர் நேசம், வித்தை, பூமி, ஆடை, சுபகாரியம், வெற்றி, புகழ், ஞானம் கொண்டு வாழ்வர்.
7. சனி தசையில் செவ்வாய் புக்தி
குடும்பத்தில் ஈனம், கொடிய பகை, தேசம் முழுவதும் அலைதல், அனைவரும் விரோதமாதல், நகை திருட்டுப் போதல், இடம் மாறுதலும் நடைபெறும். பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய் பகை, நீசம் பெற்றிருந்தால் மட்டுமே மேற்கண்ட பலன்கள் நடைபெறும். ஆட்சி, உச்சம், நட்பிலிருந்தால் நல்லவை நடைபெறும்.
8. சனி தசையில் ராகு புக்தி
தங்க நகை நாசம், பாம்பு கடித்தல், சரீரம் முழுவதும் பல வியாதி உண்டாதல், அன்னியர் பகை- அதனால் பலவித துன்பம் போன்றவை நடைபெறும். பிறப்பு ஜாதகத்தில் ராகுவானது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகியவற்றில் ஏதாவதொரு வீட்டிலிருந்தாலும், வர்க்கோத்தமம் ஆகியிருந் தாலும் மேற்கண்ட தீய பலன்கள் நடைபெறாது. நல்ல பலன்களே நடக்கும். மேற்கண்டவாறு அமையப் பெறாதவர்கள் மட்டுமே ராகுக்கான பரிகாரத்தைச் செய்துகொள்ள வேண்டும்.
9. சனி தசையில் குரு புக்தி
அன்பு நிறைந்த அடியார்களின் சேர்க்கை, ஆடை, ஆபரணம், அரசாங்கத் தால் நன்மை, எதிர்பார்த்த காரியம் கைகூடுதல், உறவினர் சேர்க்கை உண்டாகும்.
பரிகாரம்
"சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவன்றி சாகா நெறியில்
இச்செகம் வாழ இன்னருள் தாதா'
என்று தினசரி சொல்லி வணங்க, வாழ்வில் வளம்பெறலாம்.
செல் 94871 68174